Friday, August 24, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 21

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், ஒரு இடத்தில், நாடியில் வந்து, நம் குருநாதர் அகத்தியப் பெருமான் இவ்வாறு உரைத்தார்.

"இந்த லோகமானது மிக மிக சிரமமான நேரத்துக்குள் மாட்டிக்கொண்டுள்ளது. பூமியும் அதில் ஒன்று. இறைவன் அருளால், அனைவரின் பிரார்த்தனையும் அதனுடன் சேர்ந்தால், மிகப் பெரிய சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே, என் சேய்களிடம், எந்நேரமும் பிரார்த்திக்கச்சொல். இறைவன் சன்னதியில் விளக்கேற்றி, இந்த லோகமும், எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாக காப்பாற்றப்பட்டு, கரை ஏற்றி விடவேண்டும் என வேண்டிக் கொள்ள சொல்" என்றார்.

அகத்தியர் அடியவர்களே! இதற்கு முன் ஒருமுறை எல்லோரும் வேண்டிக்கொண்டு விளக்கு போட்டது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அதற்கு பலன் இருந்ததால்தான், இம்முறையும், நம்மை அகத்தியர் அழைத்து செய்யச் சொல்கிறார் எனவும் நினைக்கிறன். வாருங்கள்! அவரவர், வீட்டருகில் உள்ள கோவிலில், லோக ஷேமத்துக்காக ஏதேனும் ஒரு நாளில், மாலை நேரத்தில் விளக்கேற்றுவோம், வேண்டிக்கொள்வோம். இயற்கை சீற்றங்கள் மிக மிக வேகம் கொள்கிற இந்த காலத்தில், சித்தர்கள் துணையுடன், இறை அருளை பெற்று, இந்த லோகம், இப்படிப்பட்ட, சோதனை காலத்திலிருந்து விடுபட வேண்டும், என எல்லோரும் பிரார்த்திப்போம்.

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

[சித்தமார்கத்தின் எளிய அறிவுரைகள் .......... அடுத்த வாரம் தருகிறேன்]

சித்தன் அருள்............. தொடரும்!

Wednesday, August 22, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 20

உண்ணும் உணவு வழி இத்தனை பாபத்தை மனிதன் சேர்த்துக் கொள்வது கூட யாருக்கும் புரியவில்லை, என்பதே உண்மை. இன்னொன்று தெரியுமோ, மனிதர்களை ஆட்டிப்படைக்கவே இறைவன் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை உருவாக்கினான். இதற்குள் மனிதன் அடைபட்டு கிடந்தால், நவகிரகங்களுக்கு தன் வேலையை முடிப்பது எளிதாகும். அதனால், உணவில் எவனொருவன் கவனமாக, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறானோ, அவன் நவகிரகங்கள் தன் அருகில் வராமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் என்று பொருள். அவனிடம் எந்த கெடுதலும் அண்டாது. உடலில் நவகிரகங்கள் பாதிப்புக்கும் அனைத்து வியாதிக்கும் காரணம், உணவு வழியாக உள் செல்லும் பாபங்கள் தான். சரி இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.

எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் தெளிப்பதால் நிச்சயமாக உணவின் தோஷங்கள் விலகும்.

உண்ணும் முன் இறைவனை அழைத்து, நீயே என்னுள் அமர்ந்து இந்த உணவை உனக்கு படைக்கும் நிவேதனமாக ஏற்றுக்கொள் என பிரார்த்தித்துவிட்டு, முழு சரணாகதி தன்மையுடன் உண்டால், அந்த உணவின் தாத்பர்யம், இறைவனை சென்று சேர்ந்துவிடும். இவனை/இவளை எந்த உணவு தோஷமும்  அண்டாது.

மிக எளிதாக செய்ய விருப்பப்பட்டால், உணவை வாய்க்குள் இடும்பொழுது, "சர்வம் கிருஷ்ணார்ப்பணம், அல்லது சர்வம் சிவார்ப்பணம்" என்று முழு மனதாக நினைத்து உண்ணுவது கூட மிகச் சிறந்த பயனை கொடுக்கும்.

ஒருவன் உண்ணும் சூழ்நிலை அமைதியாக இருக்க வேண்டும். மிக சப்தம் நிறைந்த சூழ்நிலை, வேண்டத்தகாத வார்த்தைகளை பேசுகிற சூழ்நிலைகள் அன்னதோஷத்தை உருவாக்கும். மிக மிக அமைதியாக சூழ்நிலை கிடைத்தால், அது இறைவன் அருளியது என்று உணரவேண்டும்.

சமைப்பவர்கள், சுத்தமாக, நல்ல எண்ணங்களுடன், முடிந்தால் தனக்கு தெரிந்த நன் மந்திரங்களை கூறியபடி சமைத்தால், தெரியாமலேயே உணவில் உள்புகும் தோஷங்கள் விலகிவிடும். இன்றைய காலகட்டத்தில், இங்குதான் அத்தனை அன்னதோஷமும் ஒன்று கூடுகிறது.

உண்ணும் முன் ஒருபிடி உணவெடுத்து, அத்தனை குருவையும், பித்ருக்களையும் நினைத்து பிரார்த்தித்து, அதை பிற உயிரினங்கள் உண்ணக் கொடுத்து, பின் தான் உண்டால், அவனுக்கு அனைவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். பிற உயிரினங்கள் உண்டாலும், அவன் யாரை எல்லாம் நினைத்து அதை படைத்தானோ, அவர்களை, எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும், அந்த தாத்பர்யம் சென்று சேரும். அவனுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

பசிக்கிறவனுக்கு, புசிக்க அன்னம் கொடுப்பவன், தன் பிணியை அறுக்கிறான். அதை இறை சிந்தனையோடு செய்கிறவன், இறைவனாகவே ஆகிறான், அந்த ஒரு நிமிடத்தில். தன் பசியை புசித்து போக்கிக்கொண்டால், கிடைக்கும் திருப்தியை விட மேலானது பிறர் பசியை போக்கி கிடைக்கும் நிம்மதி. அதை செய்து உணரவேண்டும், இந்த மனித குலம்.

ஒரே ஒரு சிறு இலையை உண்டால் நீண்ட காலங்களுக்கு பசியே வராது. அப்படியும் இறைவன் இங்கு படைத்து வைத்திருக்கிறார். ஒரு இலையால், எந்த வியாதியையும் மாற்றவும் முடியும், ஒரு இலையால் எந்த உலோகத்தையும், தங்கமாகவும் மாற்றமுடியும், என்றபடியும் இறைவன் படைத்திருக்கிறான். விஷயம் தெரிந்த தவசிகள் காட்டில் ஆனந்தமாக பாபத்தை சேர்த்துக்கொள்ளாமல், த்யானத்தில் இருக்க காரணமும் அதுதான். இவைகளில், அவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதே காரணம். தவசிகள், ஆனந்தமாக இருக்கவும், இவைகளே காரணம்.

"அனைத்து சித்தர்களும், தவசிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சித்த வித்யார்த்திகளும், தங்கள் தியானத்தின் முடிவில், மனிதர்களும் இவ்வளவு சிறப்பாக வாழ இறைவன் அருளியத்திற்கு, நன்றியை, அகத்தியப் பெருமானிடம் தான் சமர்ப்பிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? எந்த குருவிடம் சமர்ப்பித்தாலும், அந்த விண்ணப்பம், குருவழி அகத்தியப்பெருமானிடம்தான் சென்று சேரும். அவர் காணாத எந்த பிரார்த்தனையையும், இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே உண்மை, என்று உனக்குத் தெரியுமா?" என்று அவர் கூறவும், மனத்தால், இரு கரம் கூப்பி அகத்தியரின் உயர்ந்த நிலையை நினைத்து வணங்கினேன்.

"அடடா! இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு சித்தரைப் பற்றி தெரிந்து கொள்ள, அவர் வழி நடக்க நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரமாக இந்த வாழ்க்கை அமைந்துள்ளதே" என்று பூரித்துப் போனேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 19

"மன்னிக்கவும், அடியேனின் கேள்வியில் தவறிருந்தால். இத்தனை வளர்ந்து போய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூரம் இதை பார்த்து நடப்பது. சரி! அப்படியே ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் சேர்ந்த உணவா, இல்லையா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் சொல்கிற சாத்வீக வழி, நடைமுறையில் சாத்தியமா?" என்றேன், நிதானமாக.

"நடைமுறைக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

என்னென்னவோ நல்ல வழிகளை ஆராய்ச்சி செய்து நடை முறைப்படுத்தி அனுபவம் பெற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தனை திடமாக, கேள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்தேன்.

"சரி! நம்புகிறேன்! ஆனால் அதை தெளிவு படுத்துங்களேன்!" என்றேன்.

"சித்தர்கள் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. "கருவாட்டைக்கூட, கத்திரிக்காயாக மாற்றத் தெரிந்தவன், சித்தன்" என்று. அது மாயாஜாலத்தை குறிப்பதல்ல. அதை பற்றி முடிந்தால் பிறகு பார்ப்போம். "ஆசாரம்" என்கிற ஒரு வழக்கத்தை மேன்மை பொருந்திய மனிதர்கள் தொடர்வதை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார்.

"ஆம்! இறை வழியில் செல்பவர்கள், ஒரு பொழுதும் நிலை தடுமாறாதிருப்பவர்கள் ஒரு சில முறைகளை தொடர்ந்து செல்வதை "ஆசாரமான மனிதர்கள்" என்று கூறக்கேட்டிருக்கிறேன்" என்றேன்.

"ஆ" என்றால் இறைவனை குறிக்கும். "சாரம்" என்பது "சார்ந்திருத்தலை" குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே "ஆசார முறை" ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும் செய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசார முறைதான், இல்லையா."

"ஆமாம்!"

"உண்பவன், வாங்குபவன் இருந்தால் தானே, தவறு செய்பவன்/கொடுப்பவன் வளர்ந்து கொண்டே இருப்பான். உண்பவனே, தன்னை திருத்திக் கொண்டுவிட்டால், தவறு செய்பவன், திருந்தத்தானே வேண்டும்? மனிதர்கள் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில், தீர்மானித்து, தன்னை திருத்திக் கொள்ளாதவரை, சைவம் என்று உண்பவர்கள் கூட, தவறு செய்பவரிடமிருந்து தெரிந்தோ/தெரியாமலோ பாபத்தை பங்கு போட்டுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையா?" என்று நிறுத்தினார்.

"சமூகத்தை திருத்த முடியாது! தனிப்பட்ட மனிதர் திருந்தினால் அன்றி, ஒரு சமூகம் சுத்தமடையாது. சுத்தமில்லாத சமூகம், அடுத்த நல்ல தலைமுறையை எப்படி கொடுக்கும்?" என்றேன்.

"இப்பொழுது புரிந்ததா? மனிதருடன், கை சேர்த்து வாழ்ந்த சித்தர்கள் ஏன் திடீரென அவர்களை விட்டு விலகினார்கள் என்று? மனிதருடன் சேர்ந்தாலே பாவம் என்று அவர்கள் தீர்மானித்ததினால். ஆனாலும், என்றும் நம்பிக்கையை கைவிடாமல், மனிதன் என்றேனும் ஒரு நாள் உணர்ந்து திருந்துவான் என காத்திருக்கிறார்கள்" என்றார்.

சித்தன் அருள்........................ தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 18

"முதலில் கர்மா என்பது ஒருவன் செய்கிற செயலினால் விளைவது. அது நல்ல செயலினாலும் உருவாகும், கெட்ட செயலினாலும் உருவாகும். பின்னர், அந்த கர்மாவின் பலனை, எப்பொழுது, எந்த ஜென்மத்தில், எப்படி அந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிவரும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறார். ஒரு ஆத்மாவின் கர்மாவானது இரு விதங்களில் கரையும். ஒன்று கர்ம பரிபாலனம். இரண்டாவது கர்ம பரிவர்த்தனம்."

"கர்மபரிபாலனம் என்பது அந்த ஆத்மாவே கர்ம பலனை அனுபவித்து தீர்ப்பது. அனுபவித்து தீர்ப்பதால் கர்மா குறைகிறது. கர்ம பரிவர்த்தனம் என்பது ஒரு ஆத்மாவின் கர்மாவை இன்னொரு ஆத்மா ஏற்றுக்கொண்டு அனுபவிப்பது. இங்கும், ஒரு ஆத்மாவின் கர்மா கரைகிறது. தானே அனுபவிப்பதற்கு, உதாரணம் தேவை இல்லை. எல்லோருக்கும் சந்தேகம் வருவது இரண்டாவது முறையில். அதெப்படி முடியும்! என்கிற எண்ணம் வரும். உனக்குத் தெரிந்த எந்த பெரியவர்களின் வாழ்க்கையை பார்த்தாலும், அது புரியும். உதாரணமாக, ஒரு சிலரை கூறுவதென்றால், இராமலிங்க அடிகளார், ரமண மகரிஷி, ராம்  சூரத்குமார் போன்ற பெரியவர்களை கூறலாம். இவர்கள் இந்த மனித குலத்துக்கு என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியாது. இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த கர்மபூமியில். அதனால்தான் மனிதகுலம் எத்தனையோ பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது, என்பது உண்மை" என்று நிறுத்தினார்.

"சரி! விஷயத்துக்கு வருவோம். கர்மாவின் இரண்டு வகை கரைதலை பார்த்தோம்.ஒரு மனிதனின் மொத்த கர்மாவில் 95 சதவிகிதம் பிறருக்கு கொடுப்பதினால், பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதினால் வருகிறது என்று முன்னரே பார்த்தோம்.  இந்த 95இல் பாதிக்குப் பாதி உணவினால் வருகிறது. மீதி அவன் செயல்களினால். செயலும், உணவும் சிறந்தால், அவன் சிறப்படையலாம். உணவை சமைக்கிற சூழ்நிலை, உணவு பொருட்களை தருவிக்கிற சூழ்நிலை, உணவை அளிக்கும் சூழ்நிலை, உண்பவன் மனநிலை, இப்படி எத்தனையோ சூழ்நிலைகளில் உருவகப்படுகிற கர்மாவானது, உணவு வழி ஒருவனுக்கு சென்று, அவன் செயல்களை/எதிர்காலத்தை/ அவனின் புண்ணிய/பாவக் கணக்கை  தீர்மானிக்கிறது. தவறான உணவு, உதாரணமாக, அசைவ உணவு, மிருகத்தன்மையைத்தான் ஒருவனுக்கு வளர்த்தும். ஏன் எனில், எந்த உடல் சமைக்கப் பட்டதோ, அதனுள்ளும் ஒரு ஆத்மா இருந்து, தன்னால் இயன்றவரை தன்னை காத்துக்கொள்ள கடைசிவரை போராடியிருக்கும். அந்த போராட்டத்தின்/திணறலின் வீச்சத்தை அந்த உடல் பதிவு செய்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவை ஒருவன் உண்பானேனில், அவனுக்கு சாத்வீக உணர்வு எப்படி வரும். முதலில் சாத்வீகத்தை அடைந்து, அங்கேயே நின்றால்தானே, தெய்வம், தெய்வீக உணர்வை அவனுள் புகுத்தும். பிறகுதானே அவனுக்கு வாழ்வில் முன் செல்ல இயலும்? இன்னொன்றை புரிந்து கொள்! நீ  சாப்பிடுகிற உணவானது சைவமாக இருந்தாலும், அதை சமைத்தவன் அல்லது பரிமாறுகிறவர், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்கள் அசைவம் சாப்பிட்ட தோஷத்தின் பங்கு, அவர்கள் தயார் செய்து, சைவ உணவை மட்டும் சாப்பிடுகிற உனக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இங்கு நடப்பது கர்ம பரிபாலனம்" என்றார்.

இதைக் கேட்ட அடியேன் ஒரு நொடி அதிர்ந்து போனேன். எங்கெங்கோ பயணம் செய்து, சைவ உணவை தேடிப்போய் உண்டு, புண்ணிய தல யாத்திரைகளை செய்த வேளை, தெரியாமலேயே பாபங்களை சேர்த்துக் கொண்டிருக்கலாம். அதெப்படி அவ்வளவு நுணுக்கமாக பார்த்து, இந்த காலத்தில் வாழ முடியும்? எனத்தோன்றியது. அதை கேள்வியாக்கினேன்.

"மன்னிக்கவும், அடியேனின் கேள்வியில் தவறிருந்தால். இத்தனை வளர்ந்து போய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூரம் இதை பார்த்து நடப்பது. சரி! அப்படியே ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் சேர்ந்த உணவா, இல்லையா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் சொல்கிற சாத்வீக வழி, நடைமுறையில் சாத்தியமா?" என்றேன், நிதானமாக.

"நடைமுறைக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

என்னென்னவோ நல்ல வழிகளை ஆராய்ச்சி செய்து நடை முறைப்படுத்தி அனுபவம் பெற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தனை திடமாக, கேள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்தேன்.

Sunday, July 22, 2018

அகத்தீசா என்றால்

அகத்தீசா என்றால் :
புண்ணியவான்களுக்குத்தான் உண்மைப்பொருள் அறிந்தவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும், தன்னை நாட்டிற்கு அர்ப்பணிக்கக்கூ
டிய சாது சங்க தொடர்பு கிடைக்கும்.
பாவிகளுக்கு பொருள் பற்று உள்ளவனாகவும், காமுகனாகவும், ஜாதி, மத, துவேசம் உள்ளவனாகவும், யான் என்ற கர்வம் உள்ளவனாகவும், யாரேனும் இடரிப் பேசினால் கொலையும் செய்யக்கூடிய பாவிகளான மகாபாவிகளின் நட்பு அமையும். போலியான ஆன்மீகத்தில் உள்ளவன் பொருள் பற்று உள்ளவனாக இருப்பான். பொருள் பற்று உள்ளவன் நிச்சயம் காமுகனாக இருப்பான். அவன் நிச்சயம் ஆன்மீக துரோகி. அவனால் நாளுக்கு நாள் மூடத்தனம் நாட்டில் மிகுதியாகும், பருவமழை தவறும், இயற்கை சீற்றங்கள் உருவாகும். இயற்கை சீற்றங்களாலும் பருவமழை தவறுவதாலும் விளைச்சல் குன்றி விவசாயம் அழிந்துபோய் உணவிற்கே பஞ்சம் ஏற்பட்டு வறுமை நாடெங்கும் தாண்டவமாடும்.
மக்கள் வளம் குன்றினால் அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குன்றிவிடும். போலி ஆன்மீகவாதிகளால் அரசு பலமிழந்துவிடும் என்பதை அறிந்து அகத்தீசனை வணங்க வணங்க உண்மை ஆன்மீகம் வளர்ந்து போலி ஆன்மீகவாதிகள் மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு விலக்கப்படுவார்
கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முற்றுப்பெற்ற ஞானிகளை முன்னிறுத்தி ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைவனாக உள்ள ஞானியர் வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உண்மை ஆன்மீகம் பரவினால் நாடெங்கும் புண்ணியச் செயல்களும், ஞானியர் ஆசிகளும் வெகுவாக பெருகி இயற்கை சீராக இயங்கும், பருவமழை தவறாது, இயற்கை சீற்றங்கள் ஏற்படாது, தீடீரென ஏற்படும் பேரழிவுகள் ஏற்படாது, நல்லபடியாக விவசாயம் நல்ல விளைச்சலோடு நடைபெறும், மக்கள் நன்னெறி செல்வார்கள், மக்களிடத்து துவேசங்கள் குறைந்து காணப்படும், செல்வ வளம் பெருகும், விவசாயம் சிறக்கும், நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவும், அரசு செம்மையாக ஆட்சி புரியும், அரசிற்கு வருவாய் மிகுந்து காணப்படுவதினால் நலத்திட்டங்கள் ஏராளமாய் செயல்பட்டு நாடெங்கும் சுபிட்சநிலை பெருகி நாடே சொர்க்கம் போல் காட்சி தரும் என்பதை அறிந்து அகத்தீசனை ஒவ்வொரு தனி மனிதனும் வணங்க வணங்க அந்த நாடே சுபிட்சமாகும் என்பதை அறியலாம்.
-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Friday, July 20, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 17

அமைதியாக இருந்த சூழ்நிலையை மனம் உற்று நோக்கத் தொடங்கியது! நகரத்தின் இரைச்சலான சப்தத்தில் வாழ்ந்துவரும் எனக்கு, அந்த இடத்தின் சூழ்நிலை, சன்னமான குளிர்ந்த காற்று, சுற்றிலும் இருக்கும் காடு போன்ற அமைப்பு, பறவைகளின் சப்தம்,  தூரத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்லும் மாட்டு மந்தைகள், நேர் எதிரே உயர்ந்து வளர்ந்திருந்த மலை, இவை அனைத்தும் ஓர் அமைதியை உள்ளே நுழைத்தது. எதுவும் யோசிக்கவோ, பேசவோ தோன்றவில்லை. இயற்கையின் இயல்பே இதுதான் என்றால், மலையை தவிர மற்ற அனைத்தும் நான் வசிக்கும் இடத்தருகில் இருந்தும், ஏன் இந்த அமைதி வருவதில்லை? இரைச்சலான சூழ்நிலைதான் காரணமா?" என்று யோசித்தபின், சிறிது நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். எங்கோ இழுத்துச் சென்றது. நினைவு மழுங்கிப்போனது.

யாரோ தூரத்திலிருந்து "நமச்சிவாய" என்று கூப்பிடுவதை கேட்டு உணர்வு வந்து விழித்தெழ, நான்கு பேரும், என் முன்னே அமர்ந்திருந்தனர்.

"என்ன! த்யானத்துல ரொம்ப தூரம் போயிட்டேங்க போல? ஒரு நாழிகை என்றுவிட்டு, 45 நிமிடமாயிற்று நாங்கள் வர. மேலும் 15 நிமிடங்கள் பொறுத்து பார்த்துவிட்டுத்தான், உன்னை கலைத்தோம்!" என்றார்.

"எப்படி இருந்தது, த்யான சூழ்நிலை?" என்றார்.

"மிக அமைதியாக இருந்தது" என்றேன்.

"ஏன் நகரத்தில் இது அமைவதில்லை என்று தோன்றியிருக்குமே!" என்று அவரே கொக்கி போட்டார்.

"ஆமாம்!"

"மனித உடலில் இருக்கும் ஒரு ஆத்மா உணர்ந்தால்தான் உண்மை புரியும். இயற்கை என்று ஒன்று இருப்பினும், அதை இறைவனாகவே பாவித்து, தினமும் சில நேரம் த்யானத்தில், நல்ல எண்ணங்களை கதிர்வீச்சாக மனிதன் கொடுத்தால் தான், அதை வாங்கி பன் மடங்காக்கி, கேட்பவருக்கெல்லாம் அது கொடுக்கும். அதை உணர்ந்து வாங்கிக்கொள்கிறவன், தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும், தன் அருகே இருக்கும் அனைத்து ஆத்மாக்களையும் சுத்தம் செய்கிறான். இறைவனை அடைய நாங்கள் செய்கிற பயிற்சியாகட்டும், த்யானமாகட்டும், அனைத்தையும் இயற்கைக்கே தானம் செய்துவிடுகிறோம். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அனைவருக்கும் போய் சேரவேண்டும் என பிரார்தித்துக் கொள்வோம். நகரத்தில் வாழும் மனிதருக்கு, வாழ்க்கையின் இரைச்சல் நிறைந்த அவசரத்துக்கு, இந்த உண்மையெல்லாம் உணர்வதே கடினம். பின்னர் எப்படி தானம் செய்ய மனம் வரும். இந்த சூழ்நிலையை வித்யாசமாக, மனதுக்கு இதமாக நீ உணரக்காரணமே, இயற்கை தான். ஒவ்வொரு ஆத்மாவும், தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், தன் அமைதியை, எங்கிருந்து எடுத்துக் கொள்வது, என்று தீர்மானிப்பதில்தான், மிகப் பெரிய தவறு நடக்கிறது. அதில் மாட்டிக்கொள்வது, பிற ஆத்மாக்களும், பஞ்ச பூதங்களும். இவைகளை தோண்டித் துருவுவதை விட்டு, அவன் உள்ளே சென்று தோண்டித்துருவினால், உள்வெளிச்சம் கிடைக்குமே. நிறைய உண்மைகளை புரிந்து கொள்ளலாமே!" என்றார்.

"உண்மைதான்! ஆனால், மனிதன் வாழவேண்டிய வாழ்க்கைக்கான, தேடலில், இதை மறந்து விடுகிறான் போலும், எனக் கொள்ளலாமே" என்று கூறவும்,

"தேடுகிற பொருள் என்ன என்பதை அவன் தானே தேர்ந்தெடுக்கிறான். தேடுவது அனைத்தும், பௌதீக பொருளாக இருப்பதால், அவன் இந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொள்ள வைக்கிறது.  பசிக்கு இட்லி  சாப்பிட்டு பசியடக்குபவனும் இங்குதான் இருக்கிறான். காற்றை மட்டும் உண்டு உயிர் வாழ்கிற தவசியும் இந்த பூமியில் இருக்கிறான். இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்யாசம் என்னவென்றால், உணவு உண்டு வாழ்பவன், நிறைய பாப கர்மாக்களை சேர்த்துக் கொள்கிறான். தவசி, காற்றை உண்டு, வெறும் நீரை குடித்து இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையை சுத்தம் செய்கிறான்" என்றார்.

"இது என்ன! புது தகவலாக இருக்கிறதே! உயிர் வாழ இயற்கை கொடுக்கிற உணவை உண்கிறவன் பாபகர்மாவை சேர்த்துக் கொள்கிறானா? ஆச்சரியமாக இருக்கிறதே! சற்று விளக்குங்களேன்" என்றேன்.

"சொல்கிறேன்! நிதானமாக கேட்டு புரிந்து கொள்!" என்றார்.

சித்தன் அருள்............. தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 16

[அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் வணக்கம். குருநாதனை இழந்த நேரத்தில் ஆறுதலாக வார்த்தைகளை கூறி மனதை ஒன்று படுத்த உதவியமைக்கு கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி அடியேனுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பிரிவால் வந்த வெறுமை மட்டுமல்ல, பிறகு வந்த சடங்குகளில் பங்கு கொண்டு, கடமைகளை நிறைவேற்ற வேண்டி வந்ததால், நேரமின்மை ஏற்பட்டது. அவரது ஆத்மாவை வழிஅனுப்புகிற 10வது நாள் அன்று நமஸ்காரம் செய்து, லோகம் க்ஷேமமாக இருக்க எப்போதும் போல் அருகில் இருந்து வழி நடத்துங்கள், என மட்டும் வேண்டிக்கொண்டேன். அடியேனின் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இனி "எளிய அறிவுரைகளுக்கு" செல்வோம்.]

"இந்த கலந்துரையாடலை, இங்கே நிறுத்திக்கொள்வோம். மீண்டும் நாளை தொடரலாம். ரொம்பவே இருட்டிவிட்டது. உனக்கான எளிய உணவு வழங்கப்படும். உண்டுவிட்டு, சற்று சயனித்திரு!" என்று கூறி நிறுத்தினார்.

அதுவே, அவர்களுடனேயே இரவு தங்குவதற்கான, அனுமதியாக எடுத்துக்கொண்டு, அவர்களுடன் அமர்ந்து உணவை உண்ணலாம் என்றால், ஆச்சரியம் காத்திருந்தது. அடியேனுக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது. அவர்கள், ஒரு டீயை பருகி முடித்துக் கொண்டனர். ஏன் இப்படி? என்ற கேள்வியை எழுப்ப மனம் வரவில்லை. எதோ ஒரு உணவு முறையை கடைப்பிடித்து, தவத்தில் ஆழ்பவர்கள் இருக்கிறார்கள். எது அவர்களுக்கு நல்லது என்று தெரியும், என்பதால், வேறு எதுவும் கேட்காமல், அமைதியாக எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தலை சாய்த்தேன். மனதுள், அன்றைய தினம் நடந்த கலந்துரையாடலின் சத்தான விஷயங்களை அசைபோட்டு, அடுக்கத் தொடங்கினேன். சற்று நேரத்தில் உறங்கிப்போனேன்.

காலை கண் விழித்த பொழுது மணி 7 ஆகிவிட்டது. மிக அமைதியான உறக்கம் கிடைத்தது என உடல் உரைத்தது. எங்கே அனைவரும் என்று வெளியே வந்து பார்க்க, அனைவரும் வாசி யோகத்தின் பயிற்சியில் இருந்தனர். பெரியவர் மட்டும் த்யானத்தில் அமர்ந்திருந்தார்.

மெதுவாக அருகில் சென்று நிற்க, கண் திறந்தார்.

"நமஸ்காரம்" என்றேன்.

"திருச்சிற்றம்பலம்" என்றார்.

"நீ போய் காலை கடன் கழித்து, குளித்துவிட்டு வா!" என்று வழி காட்டினார்.

கிணற்று நீர்! அப்படி சில்லென்று இருந்தது. பாதத்தில் தொடங்கி தலை வரை விட்டதும், மிகுந்த புத்துணர்வு!

குளித்து முடித்து அவர் முன் வந்ததும், ஒரு சிறு துணிப் பையை தந்து, "இதில் விபூதி உள்ளது. நெற்றிக்கு பூசிக்கொள்ளும் பழக்கம் இருந்தால் எடுத்துக்கொள்!" என்றார்.

சிறிது விபூதியை எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, பையை அவரிடம் கொடுத்துவிட்டு, மறுபடியும் கிணற்றின்கரை வந்து, நீர் விட்டு குழைத்து, நெற்றியிலும், உடலிலும் பூசிக்கொண்டேன். மிகுந்த மணம் பரவியது. இது ஏதோ ஒரு கோவிலில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த விபூதியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

"எம் குருநாதன் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த விபூதி அது! உனக்கும் அவர் அருள் இருக்கிறது என்று பொருள்!" என்று கூறி, "அதெப்படி, விபூதியை தந்ததும், நீரில் குழைத்து பூசிக்கொள்ளத்தோன்றியது?" என்றார்.

"அய்யா! முதலிலிருந்தே, குளித்தவுடன், நெற்றிக்கு இட்டுக்கொள்வதென்றால், நீரில் குழைத்துத்தான் பழக்கம்! பலரும், அப்படியே இட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். நீரில் கரைத்து இட்டுக்கொண்டால், நீண்ட நேரம் அழியாமல் இருக்கும் என்று தோன்றுவது உண்டு" என்றேன்.

மற்ற மூவரும், இதற்குள் பயிற்சியை முடித்து வர, அதில் இளையவரை நோக்கி பெரியவர் "போய்வா" என்பது போல் தலையசைத்தார். அவரும் எங்கோ இறங்கிப்போனார்.

"பொதுவாக, சித்த மார்கத்தில் நடந்து செல்பவர்கள், திருநீறை குழைத்துத்தான் இட்டுக் கொள்வார்கள். உனக்கு இது யார் வழியினும் தீக்ஷையாக கிடைத்ததோ, எனத் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்" என்றார்.

"தினமும் நெற்றிக்கு பூசிக்கொள்ளும் பொழுது, மனதுள் ஓம் நமச்சிவாயா! என்றுரைத்து, நான் இதுவாகத்தான் போகிறேன், என் அகந்தையை அழித்துவிடு, உள்ளே நீ குடியிரு! உணரவை!" என்று வேண்டிக்கொள்" என்றார்.

 "மிக்க நன்றிங்க! தினமும் செய்கிறேன்!" என்றேன்.

"சற்று நேரம் இங்கேயே இரு. ஒரு நாழிகைக்குள் வருகிறேன்" என்று கூறி மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கோ வெளியில் சென்றார்.இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்...... 

Tuesday, July 17, 2018

மஸ்தான் சாகிப் ஜீவசமாதி


குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கட்டிடத்தில் சில பூச்சு வேலை நடைபெற வேண்டியுள்ளது. அதற்கு தேவையான பொருட்களை வழங்குமாறு அங்கிருந்த ஹாஜியார் எங்கள் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்கள்.பணமாக தர வேண்டாம் ஐயா பொருளாக கொடுத்தால் நன்று என்று கூறியுள்ளார் .குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கோவிலுக்கு இயன்ற உதவிகளை செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .இந்த பதிவை பகிர்ந்து கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.ஜீவசமாதி கோயில் கட்டிட வேலைக்கு பங்களிப்பது திருக்கோயில் கட்டுவதற்கு சமமாகும். உங்கள் வம்சத்திற்கு மகான்களின் அருள் கிடைக்கும் .ஆசீர்வாதம் கிடைக்கும் உங்கள் கர்மவினைகளை அவர்கள் எளிதாக கழித்து விட வழிவகுப்பார். ஜோதிட ரீதியாக பார்த்தோம் என்றால் இது ஒரு ராகு கேது பரிகாரமாகும்.  குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கோயில் ஹாஜியார் செல்லிடபேசி எண் 9566150784 அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வேண்டுவன செய்யுங்கள் அன்பர்களே சகோதர சகோதரிகளே .

குணங்குடி மஸ்தான் சாகிபு
குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாம் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்

குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்' என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.
பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு 'தைக்காசாஹிபு' என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.
இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்' என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு)
ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள 'மஸ்ஜிதே மஃமூர்' என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.
குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இசுலாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.

Saturday, July 14, 2018

அரங்கர் மகிமை

முருகா ! அரங்கா ! நன்றி ! அரங்கரின் ஆசி பெற்ற சேலம் தொண்டரின் பதிவு !!!!!! ஓம் அகத்தீசாய நம.....
" * * *அரங்கரின் மகிமை* * * "
இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் அந்த நொடிபொழுது முதல் பயபக்தியுடன் செல்வோம் தானே..
அன்றும் இரண்டு அன்பர்கள் அரங்கரை தரிசிக்க சென்றார்கள்....வாகனத்தை இயக்கிவந்த அன்பர் ஆசான் பெருமையை பேசிய படி வந்தவர் சட்டென அமைதியாக வந்துள்ளார்,..
அருகில் அமர்ந்து வந்த மற்றொரு நபர் ஏன் இவர் அமைதியாக வருகிறார் என குழப்பமாக இருந்தும் அரங்கரின் புகழ்மாலை கேட்டு கொண்டே செல்கிறார்கள்....அன்பர் ஏன் இந்த அமைதி என்ன காரணம் என வினவ!!??
அன்பரே, இதோ இந்த சாலையில் நடுவில் எத்தனை அழகாக மலர்கள் மலர்ந்து உள்ளதை பாருங்கள்
இவை அனைத்தும் " அரங்கரின் திருமலரடியை" சென்று அடைய வேண்டும் என மனதில் நினைத்து பூஜித்துகொண்டே செல்வது எனது வழக்கம் என கூறி இருக்கிறார்....
.....அட !!. என்னப்பா இப்படி ஒரு பூஜையா , இவ்வளவு எளிமையாக !!??? ஆசான் இதை ஏற்றுக்கொள்வாரா!!?? என மனதில் பல கேள்வியோடு இவரை பார்க்க...
குடிலும் வந்தது , ஆசானை தரிசிக்க சென்றார்கள்....
ஆசான் இருவரையும் பார்த்து சிரிப்புடன் , நாங்களும் அந்தரங்கத்தில் கூடை கூடையாக மலர்களை மலைபோல் குவித்து அகத்தீசருக்கு பூஜை செய்வோம் ப்பா என கூற!!! இருவரும் மெய்சிலிர்த்து ஆசான் திருவடிகளை வணங்கி ஆசி பெற்றோம் என்றனர்.........ஆம் உண்மை எப்போதும் எளிமையாக இருக்கும்!!!!!
தூய பக்தி என்பது இதுபோல தான், அரங்கா முருகா ....
நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க முடியாது என்று நினைத்த பல செயல்களை குருநாதரை சந்தித்த பிறகு மிகவும் எளிமையாக, நடக்கிறது என்பது அன்பர்கள் அனைவரும் உணர்ந்துதானே.....
குருவே வாழ்க வாழ்க...
திருவடிகள் சரணம் சரணம்.

Thursday, July 12, 2018

கொல்லா நெறி

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி கொல்லோ நெறியே குவலயம் எங்கும் ஓங்குக. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல். துஞ்சலெனும் இன்னலகற்ற இலங்கு. ஓம் இராமலிங்க சாமிகள் திருவடிகள் போற்றி. 

Wednesday, July 11, 2018

ஜீவ தயவே

முருகா என்றால் :

சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.

இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.

ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான்.

என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.

அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை. 

ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு, ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல். ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் ஜீவதயவின் முதல் எதிரியான உயிர்க்கொலையை கண்டிப்பாக இனி அவனது வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திடல் ஆகாது.

ஞானம்பெற விரும்புகின்ற ஒருவன் ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலை தொலைத்துவிட்டு ஞானம்பெற விழைவது எப்படி சாத்தியம்.

உயிர்க்கொலை செய்பவனுக்கு எப்படி ஜீவதயவு வரும்? ஜீவதயவை தொலைத்தவனுக்கு ஞானம் எப்படி வரும்?

ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் முதன்முதலில் ஜீவதயவை பெற ஏதுவாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஞானிகள் திருவடியைப் பற்றினால் தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவை தலைவன் முருகன் அருளால் பெறலாம்.

தாவரங்களும் உயிர்தானே அது உயிர் கொலையில்லையா என்பார் அறிவாளி சிலர். ஓரறிவு உயிர்தனை கொன்றால் பாவம்தான், அதுவும் உயிர்தான். ஆயின் மனித முயற்சியால் ஒருபடி நெல்லை உண்ட மனிதன். அதே தனது சுய முயற்சியால் அதன் முளைக்கா வித்தை அது முளைப்பதற்கு ஏதுவாக நிலம்தனை பண்படுத்தி பதப்படுத்தி நீர்விட்டு, உரமிட்டு அந்த ஒரு உயிருக்கு பதிலாக உபகாரமாக ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களை அவனது முயற்சியால் தோற்றுவிக்க இயலும். இயற்கை மனிதன் கடைத்தேற்றுவதற்காகவே சைவ உணவையும், அந்த உயிர் பாவம் நீங்க அவனுக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவின் மூலம் அந்த ஓரறிவின் கொலை பாவம் நீங்க அந்த ஓரறிவு உயிரை உண்டாக்கி பெரும் புண்ணியத்தையும் இணைத்தே தருவித்து தோற்றுவித்தது. ஆனால் ஐந்தறிவு உடைய விலங்கை கொன்றால் மீண்டும் மனிதனால் தோற்றுவிக்கலாகாது.

ஆதலின் உடம்பினின்று உயிர் பிரித்து மகிழ்ந்து சுவை கொட்டி சாப்பிடும் அசைவ உணவினை விட்டு விலகினால் அன்றி உயிர்க்கொலை பாவம் நீங்கினாலன்றி அவனது ஞான முயற்சியில் எத்துணை எத்துணை புண்ணியம் செய்தாலும் கடைத்தேற இயலாது என்பதையும் இறையருள் பெற முடியாது என்பதையும் முருகனது திருஅருள் கொடையால் உணர்வார்கள்.

முருகா! முருகா! முருகா! என்போம் ஜீவதயவின் தலைவன் ஜீவதயாசோதி முருகன் அருளைப் பெறுவோம். ஜீவதயவுடையவராய் ஆகியே ஞானம் பெறுவோம். முருகன் அருளே சிறப்பறிவாய் மாறி ஜீவதயவை நம்முள் தோற்றுவிக்கும்.
.............. 

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Tuesday, July 10, 2018

சித்தன் அருள்

ஓம் அகத்தீசாய நம அகத்தியன் அருள் வலைத்தளத்தை வாசிக்கும் அன்பர்களுக்கு அடியேனின் வணக்கம். நமது பிறப்பு நம்முடைய கர்ம வினை மூலமாக தான் நமக்கு அமைகிறது. நம்முடை தாய் தந்தை சகோதரன் சகோதரி உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைத்தும் நமக்கு அமைகிறது. இதை மாற்ற என்ன வழி சித்தர் வழிபாடுதான் அனைத்திற்கும் தீர்வு அகத்திய பெருமானை குருவாக ஏற்று அவன் திருவடி தொழுதால் நம்முடைய கர்மவினை நீங்க நமக்கு உபாயம் சொல்லி நம்மை ஆட்கொள்வான். கர்ம வினை தீர ஒரே வழி புண்ணியம் செய்வதுதான். அன்னதானம் செய்வது தொண்டு செய்வது எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது இவை அனைத்தும் நம்முடைய கர்மவினை நீங்க வழிகளாகும் என்று அகத்திய பெருமான் நமக்கு சொல்லும் அறிவுரைகள் ஆகும். நாம் எல்லோரும் இவற்றை கைபிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கோவோம். இன்றைய  அனைவருக்கும் நன்மை நடைபெற எல்லா வல்ல அகத்திய பெருமானை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் ஓம் அகத்தீசாய நம. நற்பவி 

Friday, July 6, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 15

[தவத்திரு தங்கராசன் அடிகளார், இறைவனுடன் ஒன்று கலந்துவிட்டார் என கேள்விப்பட்டேன். அகத்தியருக்கும், அவர் அடியவர்களுக்கும், இறைவனுக்கும் எத்தனையோ உயர்ந்த தொண்டினை செய்து வந்தவர். அந்த புண்ணிய ஆத்மா இறைவனுடன் கலந்து மோக்ஷமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! இவ்வுலகில் அந்த ஆத்மாவுக்கு இனி ஒரு பிறவியை கொடுக்காதீர் இறைவா என அடியேன் மனம் வேண்டிக்கொள்கிறது! இனி எளிய அறிவுரைகளுக்கு செல்வோம்.]

அவர் மேலும் தொடர்ந்தார்.

இலக்கணமே, குறளாயிற்று!

தன் பசி, தன் வேதனை உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு பசிக்கும், வலிக்கும் என்று உணர முடியும்.

தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும்.

உணர்வை கட்டிப்போட்டு, உயர்ந்த நிலைக்கு வழிமாற்று. ஆனால் எதையும் கட்டிப்போட்டு வளர்க்காதே! அது உனக்கு நீயே சேர்த்துக்கொள்ளும் எதிர்கால சிறைவாசம்!

சேர்த்துக் கொண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம் வெளிப்படுவது போல், இறைவன் உன்னுள்ளே தோன்றுவான்.

அன்னம் தானமாயினும், அது நாராயண சேவை! ஆத்மா நீங்கிய உடல் அக்னிக்கு கொடுக்கினும், அது சிவபெருமான் சேவை.

இவ்வுலகில், நிலையானது என ஒன்றில்லை, இறைவதனைத்தவிர.

எண்ணம் இலை மறை காயாய் இருந்தாலும், இறை வாசம் இருந்தால்தான், கனியும்.

பஞ்சதாயன பூசையில் சுப்ரமணியன் எங்கு போனான் என்று தேடுபவனுக்கு, "பராபரம்" எளிதில் காட்டப்படும்!

சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்கை, ஒன்று சேரும்!

நெல்மணியாய் விளைந்து நில், பவ்யமாய் வளைந்து நில். உன்னுள்ளே "அரிசிவமாய்" இறைவன் இருப்பான்.

எங்கும், இனிப்பே கசப்பானது, காரமே, புளிப்பானது.

வியாதிக்குள் கர்மா மறைந்திருப்பதுபோல், பசிக்குள் கர்மா தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.

இப்படி அவர் கூறிக்கொண்டே செல்லச்செல்ல, கேட்ட நானே அசந்து போனேன். அத்தனையும் ஞாபகத்தில் வைக்க முடியுமா என்ற  எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்டாற்போல், சிரித்தபடியே நிறுத்தினார்.

"சரி! "தலை கீழ் லிங்கத்தைப்" பற்றி பார்ப்போம்!"  என்றார்.

"சிவயோகிகள், த்யானத்தில் அமர்ந்து, தங்கள் சஹஸ்ராரத்தில் இறைவன் திருவடியை தியானித்து இருப்பர். தியானத்தின் உச்சநிலையில், திருவடி மறைந்து ஒரு லிங்க ரூபமாக மாறும். மேலும் தொடர்ந்து த்யானத்தில் அமர்ந்திருக்க, அந்த லிங்கமானது, அவரின் உள் பாகத்தை நோக்கி, மெதுவாக திரும்பும். இதை "விளைதல்" என்றும் கூறலாம். பயிர் விளைந்து நெல் மணி தோன்றும் பொழுதுதானே தலை சாய்க்கத் தொடங்கும். அதுபோல் தவத்தின் வலிமை கூடக்கூட, இறைவனே மனம் கனிந்து, தன்னை தவசியின் பக்கம் திருப்பிக்கொள்கிறார் எனலாம். ஒரு காலத்தில், அந்த லிங்கம் "தலை கீழ் லிங்கமாக" முழுமையாக மாறியபின், அதிலிருந்து ஒரு நாழிகைக்கு, ஒரு சொட்டு என ஒரு அமிர்தம் அந்த உடலுக்குள் மழைத்துளி போல் வீழும். அந்த அமிர்தம் வீழ்ந்து, வீழ்ந்து, அந்த உடல் மிக மிக சுத்தமாகும். உடல் முழுவதும் அந்த அமிர்தம் பரவிவிட்டால், பின்னர் அவனுக்கு, சுவாசிக்க, காற்று கூட தேவை இல்லை. இதை முடிந்தால் முயற்சி செய்துபார் என சொல்லாமல், சொல்வதுதான் நீ பார்த்த ஸ்தூல "தலைகீழ் லிங்கம்". உன்னால் முடிந்தால் த்யானத்தில், சூக்ஷுமத்தில் "தலை கீழ் லிங்கத்தை" பார்க்க முயற்சி செய்து பார்" என மிகப் பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக, எளிதாகக் கூறினார்.

எத்தனையோ விஷயங்களை இத்தனை நேரம் கூறியிருந்தாலும், இது ஒன்றுதான் நடைமுறைப்படுத்துவது, மிக கடினமான ஒன்றாக இருக்கும் என என் மனம் கூறியது. இந்த வழிகளில் எல்லாம் நடந்து சென்று, விடாப்பிடியாக, திட மனதுடன் இருந்த மனிதர்கள் தான் பிற்காலத்தில் "சித்தர்களாக" மாறியிருக்கிறார்கள் என பல பெரியவர்கள் கூறியதை அப்போது நினைவு கூர்ந்தேன்.

[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! அடியேனுடைய குருநாதர் "முருகா" என்பவர், கடந்த சனிக்கிழமை அன்று இறைவனுடன் ஒன்றிக் கலந்துவிட்டார். அவரது இழப்பு, என்னுள் ஒரு வெறுமையை உருவாக்கிவிட்டது. எத்தனையோ நல்ல வழிகளை காட்டி, "நடந்து செல்! நான் இருக்கிறேன் கூட!" என்று வாழ்வை செம்மையாக்க வழிகாட்டியவர். மனம், உணர்வுகள் அனைத்தும் வெறுமை அடைந்துவிட்டது. ஒரு சில காலம் தனிமையாக இருக்க விரும்புகிறது. மனம் ஒன்று படும் போது, "சித்தன் அருளில்" தொடர்கிறேன். அதுவரை, சற்று விடை கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்!]

சித்தன் அருள்................... நிச்சயமாகத் தொடரும்!


Tuesday, July 3, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 14

நான்காவதாக, இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?

இல்லை என்ற வார்த்தை எங்கள் அகராதியில், இல்லை என்பதே உண்மை. அத்தனை வாரி வழங்கித்தான், இவ்வுலகை, சித்தர்கள் கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் கொடுக்கப்பட்டதெல்லாம், உனக்காக மட்டும் என்று நினையாதே. அங்கு ஒரு சோதனையை இறைவன் உன் முன் வைக்கிறான் என்பதை கவனி.

உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள். அதே சித்தர்கள் நிறைய கோவில்களை கட்டி, இறைவனை உருவத்தில் பிரதிஷ்டை செய்ததும் உண்மை. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு தேவையான பாட புத்தகங்கள், அது வளர்ந்து மேல் படிப்பு படிக்கும் பொழுது காணாமல் போய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம் கோவில்களில் தொடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும் பொழுது, கோவில்கள், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும், வளர்ந்த உனக்கு  தேவை இல்லை என்பதே உண்மை.

உள்ளவனிடம் இருப்பதெல்லாம், இறையே அவன் பாவ புண்ணியத்தை நோக்கி கொடுத்ததாகினும், அங்கும் ஒரு சோதனைதான் நடக்கிறது. உள்ளவன், இல்லாதவனை கைதூக்கி விடுகிறானா என, இறைவன் பார்க்கிறான்.

தெரியாதவன் செய்த தவறை இறைவன் மன்னிக்கலாம், எல்லாம் அறிந்தவன் செய்தால், மன்னிப்பே கிடையாது, தண்டனை உடனேயே.

உனக்குள்ளேயே, உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு. தேடு, அவை கிடைக்கும், தொலைந்து போகமாட்டீர்கள்.

அந்த பெரியவர், வேகமாக அறிவுரைகளை அடுக்கி கொண்டு போகவே, ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

சுருக்கமாக சொல்வதில் எல்லாம், மிக உயர்ந்த, விரிவான சித்த மார்க அறிவுரைகள் இருந்ததுதான், என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

அதை உணர்ந்த பெரியவர், "கடுகு சிறுத்தால் ; காரம் போகுமோ" என்று புன்னகைத்தபடியே ஒரு இடைவேளை விட்டார்.

சித்தன் அருள்................. தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 13

தலைகீழ் லிங்கத்தை பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நடந்த கலந்துரையாடலை நீ வெளியிடும்பொழுது, வாசிக்கிற அனைவரும், இனி கூறப்போகிற விஷயத்தை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்கவே அனுமதியளித்தோம். முதலில், விரிவாக எதையும் கூற வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். இருப்பினும், இந்த விஷயங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு மதிப்பளித்து, இத்தனை விரிவாக கூறினோம். சரி விஷயத்துக்கு வருவோம்.

சித்த மார்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அனைவரையும் "சித்த வித்யார்த்திகள்" எனத்தான் அழைப்பார்கள். இத்தனை தகவலை உன்னுடன் பகிர்ந்து கொண்டாலும், இன்னமும், நானும் ஒரு "வித்யார்த்திதான்". அப்படிப்பட்ட எண்ணம்தான் உயர்வை தரும். சாதாரண மனித வாழ்விலிருந்து, விலகி நின்று, சித்த மார்க்கத்தின் பாதையில், பயிற்சி செய்து, எண்ணங்களை தூய்மையாக்கி, ஒரு புள்ளியில் நின்று, தவத்தில் இருப்பவர்களை, பிறரின் எண்ண அலைகள் நிறையவே பாதிக்கும். அவர்கள் தவத்திற்கு, இடையூறாக இருக்கும். எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவில், எப்பொழுதேனும் ஒரு பெரியவரை சந்திக்க நேரலாம். அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்களை பகிர்ந்து கொண்டது, நிறையவே மனதுக்கு இதமாக இருக்கும். தன்னையே மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பின், கிடைத்த வெளிச்சத்தை/ஞானத்தை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்லித்தந்தவரையே, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு, அவர்கள் தவத்துக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் செல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும், அவர்களை பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காரணத்தினால்தான், சித்த மார்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள், எதுவும் பேசாமல், எல்லோரையும் விட்டு விலகியே இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களை அறவே விலக்குகிற ஒரு வழி. பிற உயிர்களுக்கு/எந்த ஜீவனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய மனநிலை உடையவர்கள் யாரும், தாங்களாக நிரந்தரமாக திருந்தும் முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாரணமாக, அசைவ உணவு உண்பவர்களை கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பொழுதும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், விமோசனம் கிடையாது. மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குருவின் சாபத்தை இறைவன் ஜாதகம் வழி காட்டிக் கொடுத்துவிடுவான். சித்தர்கள் சாபத்தை மறைத்துவிடுவான். இறைவனுக்கு தெரியும் இருந்தும், இன்னொரு சித்தனால்தான் அதை கண்டு பிடிக்க முடியும். ஒருவழியிலும் கண்டு பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்தை, சாதாரண மனிதன் ஏன் பெறவேண்டும்? குருவை குளிரவைத்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத சித்தனை எப்படி குளிர வைக்க முடியும்? என்று விடுதலை கிடைக்கும்?

மூன்றாவதாக, சித்தர்கள், வாமாசாரத்தை (அதர்வண வேதத்தை) மருத்துவத்துக்காக மட்டும் உபயோகப்படுத்துவார்கள். அவர்களுக்கு எல்லா பிரயோகமும் கைவந்த கலை. எங்கு எப்பொழுது எதை செய்யவேண்டும் என்றாலும் கூட, இறைவனின் அனுமதியுடன்தான் செய்வார்கள். அவர்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள் மட்டுமல்ல, இறைவனின் அபிமான கரங்கள். அவர்கள் வழிதான், இறைவன் இன்றும் பல அரிய திருவிளையாடல்களை,  நடத்துகிறான். மந்திரவாதம், செய்வினை இவைகள் அவர்கள் முன் காணாமல் போய்விடும். மனிதர்கள், ஒரு பொழுதும் அந்த பாதைகளில் சஞ்சரிக்கவே கூடாது. இன்று வாமாசாரம் இத்தனை வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காரணம். ஒருவன் கர்மாவில் அது எழுதப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்து போராடி வாழவேண்டும், இறை அருளை பெறவேண்டுமே தவிர, எந்த ஒரு ஜீவனுக்கும் எதிராக அதை பிரயோகிக்கக்கூடாது.

Thursday, June 21, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 12

"இதை, காலத்தின் கட்டாயம் என்று கூறலாமே" என்றேன்.

 "இல்லை! ஒருவனுக்கு என்ன தெரியவில்லை என்றுணர்ந்து, அதை இன்னொருவன் வியாபாரம் செய்கிறான்! அதை விடு! தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். ஒரு மனிதனின் மார்பு பாகத்தை "ஹ்ருதய கமலம்" என்பார்கள். த்யானத்தில், எவனொருவன், இறைவனை, தான் விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்சை உள்வாங்குகிறானோ, அவனுக்கு, ஒரு சில காலத்திலேயே, அவன் இருத்திய ரூபத்திலேயே இறைவன் அமர்ந்து இருப்பதை உணர்த்துவார், என்பது தெரியுமா? முடிந்தால், இறைவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திலேயே" முயற்சி செய்து பார். மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து வெளியே அழுத்துவது போன்று ஒரு சில காலத்திலேயே உணரலாம். சுழிமுனை வழி சஹஸ்ராரம் சென்று பார்த்த பெரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம் தலைகீழாக அமர்ந்து, ஆத்மாவை கரை ஏற்ற காத்திருப்பதை உணர்ந்தனர். அப்படின்னா! சிவபெருமானே, ஒவ்வொரு மனிதனையும் கரையேற்றி, தன்னையே வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்லையா?" என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

சற்று நேரம் அமைதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் பின்னர் கேட்பதற்காக விலக்கி வைத்திருந்த கேள்விகளில் ஒன்று "தலை கீழ் லிங்கம்". இதை ஒரு சித்தர் கோவிலில் பார்த்திருக்கிறேன். ஆவுடை மட்டும் தான் மண்ணுக்கு மேலே தெரியும். பாணம், பூமிக்குள், புதைந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்தை, அந்த விதமாக அமைத்ததே, ஒரு சித்தர்தான். அதை கண்டவுடன், இதன் அமைப்பே வித்யாசமாக இருக்கிறதே. இதன் வழி சித்த பெருமான் எதோ ஒரு செய்தி சொல்கிறாரே, என பல முறை யோசித்ததுண்டு. அந்த கேள்வியை அடியேன் இவரிடம் கேட்க்காமலேயே, கலந்துரையாடல் வழி மெதுவாக அந்த பெரியவர் விளக்கலானார். [அந்த சித்தர் கோவிலை பற்றி இன்னொரு நேரத்தில் தனி தொகுப்பாக, விளக்குகிறேன்!].

"என்ன? அப்படி ஒரு லிங்கத்தை கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்து சென்ற உனக்கு விடை கிடைத்தது. ஆனால், உன் உண்மையான கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை! அல்லவா?" என்று கூறி என்னை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சித்தன் அருள்................ தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 11

சித்தம் நிலைத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரையேரத் தொடங்கிவிடும். அங்குதான் சித்த நிலையின் முதல் விதை விதைக்கப்படுகிறது. இதற்காக, ஒரு மனிதன், வெளியுலக தேடலை குறைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே ஏன்? எது? எப்படி? என்று கேள்விகளை எழுப்பி அமைதியாக, பொறுமையாக காத்திருந்தால் அனைத்தும் சரியானபடி விளங்கும். இவ்வுலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும், காரண காரியங்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஜென்மத்தில் ஏதேனும் ஒரு நிமிடத்தில், சித்தர்களுடன் தொடர்பிருந்தால் தான், இந்த பாதையில் நடத்து செல்லவும் முடியும். ஒரு உண்மை தெரியுமா? இறைவனும், சித்தர்களும், தன் சேய்களிடம் பேச, தகவல் பரிமாற, அந்த ஒருவனை நேர்வழிப்படுத்த மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், நேரம் இல்லை. ஏன் என்றால், வாழ்க்கையில், அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தின் திசை வேறு வேறு புறமாக இருப்பதால்தான். எவனொருவன், தன் மனதை கட்டுப்படுத்தி, ஒரே நேர் கோடில் கொண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது நம் புருவங்களுக்கிடையில் சுழுமுனையில் உள்ளது) நிறுத்துகிறானோ, அவனுக்கு அவர்கள் வாக்கு கேட்க்கும். அந்த வாக்கும் உண்மை என்று கண் முன் நடக்கும் பொழுது உணரலாம். நம்பிக்கை, நிறைய தனிமை தான் இதற்கு தேவை. தவம் செய்பவர்கள், காடு மலை, குகை என்று தனிமையான இடங்களை தேடிப்போவது, இதனால் தான். எத்தனையோ விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசலை நோக்கித்தான் அழைத்துச் செல்லும்" என்று நிறுத்தினார்.

"இந்த தசவாசலை நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்" என்றேன்.

"ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"

"ஆமாம்!"

"ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"

'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"

"எப்படி இருக்கும் என்று கூறேன்?"

"தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.

"உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த தசவாசல் வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும். அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு. இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும். இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் "மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி" என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார். 

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 10

​​"முகம் மறக்க வேண்டும்" அட! நல்ல வார்த்தைகளாக இருக்கிறதே, இதுவரை  கேள்விப்பட்டதே இல்லையே! அதை சற்று தெளிவு படுத்துங்களேன்" என்றேன்.

தமிழில் அனைத்துமே நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. அவற்றை எப்படி தொடுத்து மாலை ஆக்குகிறோம் என்பதில்தான், மனிதன் தன் கவனத்தை செலுத்தவேண்டும். எளிமையாக, அழகாக வார்த்தைகளை பேசினாலே, இறை சாந்நித்தியம் எங்கும் நிறைந்து நிற்கும். அதை பற்றி பின்னர் உரைக்கிறேன்.

"முகம் மறக்க வேண்டும்" என்பது ஒரு தவம். அதை எத்தனை எளிதாக விளக்க முடியுமோ, அப்படி கூறுகிறேன். முதலில், என் கேள்விக்கு பதில் கூறு. ஒரு மனிதனுக்கு எத்தனை முகம் இருக்கிறது? என்று நிறுத்தினார்.

மனிதனுக்கு ஒரு முகம் தானே இருக்கும், என்றேன்.

முகம் என்பது பௌதீகமாக பார்த்தால், மூக்கு, வாய், கன்னம், கண்கள், இரு செவி, நெற்றி, போன்றவைகள் சேர்ந்து இருக்குமிடம் என்று கூறலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு, நிறைய முகங்கள் இருக்கிறது. அவன் மனது, எண்ணங்கள், அவன் இருக்கும் நிலை, இவைகள் பல முகங்களை கொடுக்கும். இவற்றின் உந்துதலால், எதிரொலிக்கும் விதமாக அவன் தன் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்கிறான். உதாரணமாக, அவன் சேய் "அப்பா" என்றழைத்தால், தகப்பனாக, மனைவி அழைத்தால், கணவனாக, தாய் தந்தை அழைத்தால் மகனாக, சகோதர, சகோதரிகள் அழைத்தால், சகோதரனாக, இன்னும் மாமனாக, சித்தப்பானாக, தாத்தாவாக, இப்படி எத்தனையோ முகங்களை அவன் பல சந்தர்ப்பங்களில் அணிய வேண்டி உள்ளது.

"முகம் மறப்பதென்பது" இந்த முகங்களை மட்டும் மறக்க வேண்டுமென்பதல்ல. அனைத்து வித, அவன் அணிந்து கொள்கிற முகங்களை மறக்க வேண்டும். முகமறியாதவர்கள் முன் கூட ஒரு முகத்தை (பாவத்தை) ஒருவன் அணிகிறான். அதையும் மறக்க வேண்டும். சுருங்கக்கூறின், அனைத்து ஆத்மாக்களையும் ஒரே பாவத்தில் பார்க்க வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். ஒருவனுக்கு உள்ள அனைத்து உணர்வுகளும், அனைத்திற்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதன் கூட, அனைத்தும் இறை தீர்மானத்தால் நடக்கிறது என்று உணர்ந்து, அமைதி காத்து, தேவையான பொழுது, யாரேனும் கேட்டால் நல்வழி காட்டி, நல்லதை செய்து, பலன் எதிர்பார்க்காமல், போய்க்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்காகவும், ஒருவன் வாழவேண்டும். வெற்றி, தோல்வி, லாபம், இழப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல், நடப்பதை அதன் படியே ஏற்றுக்கொண்டு, முன்னேறவேண்டும். இப்படிப் பட்ட அனைத்து சூழ்நிலைகளிலும், தன்னை பரிசோதித்துக் கொண்டு, அதையே ஒரு தவமாக ஏற்று செய்பவனுக்கு, மனம் வசப்படும், சித்தம் கலங்காது, சித்த மார்க்கத்தின் தொடக்க நிலைகள், மிக எளிதாக மாறும். இதை கடந்து செல்பவர்களுக்கு, அடுத்த நிலைகளை, சித்த பெருமக்களே, கூட இருந்து காட்டுவார்கள். இப்போது கூறியதை, தூரத்திலிருந்து  பார்த்து, எங்கு நம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்று, ஒருவன் சரியாக  தீர்மானிக்கிறானோ, அவனுக்கு "முகம் மறப்பதென்பது" மிக எளிதாகும். அந்த ஒருவனுக்குள் ப்ரம்மத்துவம் உருவாகும். அவனே "ப்ராமணனாகிறான்".

ஆத்மாவுடன், உணர்ந்து, சேர்ந்து இருப்பவனுக்கு, உயர்ந்த நிலையை தவிர வேறு எதுவும் இவ்வுலகில் கிடைப்பதற்கில்லை. உடலோடு சேர்ந்து விழைபவனுக்கு, அத்தனை கர்மாவும், வாசனையும் கடை வரை கூட வரும். அடுத்த ஜென்மத்திலும் தொடரும்.

"நீங்கள் கூறுவது உண்மை! ஆனால், உலக வாழ்க்கையில் சிறைப்பட்டு கிடக்கும் மனிதருக்கு, அதன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறத்தான் வேண்டியுள்ளது! அப்போது, நீங்கள் மேற் கூறிய விஷயம் சாத்தியமா?" என்றேன்.

"ஏன் முடியாது? உலகியல் விஷயங்களை, கடமைகளை செய்ய வேண்டாம் என்று யாரும் கூறவில்லையே. அதற்கான முயற்சிகளும் தவறில்லையே. முயற்சி என்பது தர்மத்துக்கு  உட்பட்டதாயின், பெரியவர்கள் ஆசிர்வாதம் எப்பொழுதுமே கூட நின்று கரை ஏற்றும். அதர்ம வழி கூடாது என்று தான், மனிதர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அதர்மத்தின் வழி சென்றால், வெற்றி நிச்சயம் என்று நினைக்கிற மனித மனதுக்கு, மிகப் பெரிய பாபத்தை சம்பாதித்துக்கொள்கிறோமே! நிறைய ஆத்மாக்களின் மனதை வருத்துகிறோமே, என்ற எண்ணம் கூட வருவதில்லையே.

இன்றும், தன் கடமையை சரிவர செய்து கொண்டு, நடப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, இறை வழியில், சித்தர் வழியில் நின்று விலகாமல், குடும்ப வாழ்க்கையையும் சுமந்து கொண்டு, வாழ்கிற எத்தனையோ நல்ல ஆத்மாக்கள், இங்குள்ளனர். அவர்கள் விகிதம் மிகக் குறைவு என்பதே உண்மை. அதற்காக இல்லை என்று ஆகிவிடுவதில்லை.

இவைகளிலிருந்து விடுபட, சித்தம் நிலைக்க வேண்டும். சித்தம் நிலைத்தால், எது சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலையுடன் இருந்து, கர்மாவை சேர்த்துக்கொள்ளாமல் இருக்கலாம். முகம் மறக்கலாம்.

சித்தன் அருள்.................. தொடரும்.

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 9

"அடியேன் அதற்கெல்லாம் இல்லை. உங்கள் விருப்பமே போதும்" என்றேன்.

'சிரித்துக் கொண்டே "பயந்துட்டயா!" என்றார்.

"உண்மை சொல்வதானால், ஆம்!" என்றேன்.

சட்டென்று "கண் மூடி தியானித்தால், உள்ளே பார்க்கலாம் என்றேனே, அதைத்தான் சித்தர்கள் "உள்பூசை" என்பார்கள். உள்ளே த்யானத்தில் பூசை செய்து, கோவில் கட்டி வாழ்ந்தவரை பெருமை படுத்தவே, தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று இறை உணர்த்தவே, ஒரு அரசனுக்கு பாடம் புகட்டவே, அந்த முனிவருக்கு முதல் மரியாதை செய்தார், இறைவன். அந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.

"ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால் அதில் பூடகமாக நாம் அறிந்ததை விட உயர்வான ஏதோ ஒரு செய்தி, இருப்பதாக அடிக்கடி தோன்றும். ஆனால் அது என்ன என்று இதுவரை உணர முடியவில்லை" என்றேன்.

"ஆம் அது உயர்ந்த செய்திதான். அதை பார்க்க வேண்டுமானால், சற்று தள்ளி நின்று அந்த விஷயத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அது புரியும்" என்றார்.

"இதுதான் உண்மையை உணரவேண்டிய காலம் போலும். அதையும், தாங்கள் தெளிவாக உரைக்கலாமே" என்றேன்.

"த்யானத்தில் இருக்கும் ஒருவன், ஒரு நிலையில் தன்னை மறக்கிறான், தான் இருக்கும் சூழலை இழக்கிறான், எதை த்யானிக்கிறானோ, அதிலேயே ஒன்றி, அதுவாக மாறிவிடுகிறான். அவனை சுற்றி நடப்பவை எதுவுமே அவனை பாதிப்பதில்லை. அவன் கவனம் முழுவதும் அந்த ஒரு புள்ளியிலேயே. அந்த நேரத்தில், அவனுக்கு உடல் பற்றிய சிந்தனையே இல்லை. இந்த நிலையைத்தான் ஒரு மனிதன் அடையவேண்டும் என்பதே இறைவன் எண்ணம்.

உடல் பற்றி சிந்தனை இருப்பவனுக்கு, எல்லா அதிர்வுகளும் இருக்கும், அவை அவன் கவனத்தை பாதிக்கும். சற்று முன் அரவத்தை கண்டு நீ இருந்த நிலை. ஒரு நொடியில், உடலை பற்றிய சிந்தனை வந்த பொழுது, எத்தனை பெரிய ஆபத்தின் அருகில் அமர்ந்திருந்தேன் என்று சிந்தனை செய்தாய். மற்றவர்கள் அனைவரும், சகஜ நிலையில் இருந்தார்கள். எதுவுமே ஆபத்தாகவோ, அனுபவமாகவோ தோன்றவில்லை. ஏன்?" என்று கேள்வியை போட்டு நிறுத்தினார்.

"உங்கள் அனுபவம், ஒரே நிலையில் அதிராமல் தொடர்ந்து இருக்கும் மனநிலை காரணமாக இருக்கும்" என்றேன்.

"ஓரளவுக்கு நீ கூறியது உண்மையாயினும், நிரந்தர உணர்ந்த உண்மை என்பது, "அனைத்தும் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது என்பதனால்". அவன் எண்ணத்தை மீறி ஒரு அணுவும், இங்கு அசைவதில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என்கிற, திட நம்பிக்கை தான் காரணம். அந்த நிலை எய்தவனுக்கு மனம் ஒரே நிலையில் வசப்படும். பின்னர் எல்லாம் இயல்பாகவே தோன்றும்." என்றார்.

"அசையாத திட நம்பிக்கையை, அந்த திட நிலையை அடைய ஒரு சாதாரண மனிதன் எங்கு தொடங்க வேண்டும்! எதை பயிற்சி செய்ய வேண்டும்?" எனக் கேட்டேன்.

"ஏற்கனவே, நீ கேள்விப்பட்டதுதான். சித்த மார்கத்தில் முதல் பாடம் "முகம் மறக்க வேண்டும்" என்று கூறி நிறுத்தினார்.

சித்தன் அருள்...... தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 8

"ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றால், வேலை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இல்லையா. அது போல் இறைவனிடம் வேண்டிக்கொண்டு சூக்ஷ்ம உடல்களை அவனிடமே, தாரை வார்த்துக் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்கிற தீர்மானத்தை இறைவன்தான் எடுப்பார். எப்படி அந்தந்த கர்மாவை மன்னித்து கரைக்க வேண்டும், அல்லது எத்தனை ஜென்மத்தை குறைத்துக் கொடுக்கலாம், எந்தெந்த ஜென்மத்தில் எந்தெந்த கழிக்காத கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் பல நிலைகள் உண்டு. அத்தனை சூக்ஷ்ம உடல்களையும் ஏற்றுக்கொண்டுவிட்டாலும், இந்த ஜென்மத்தில் இருக்கும் மிச்ச கர்மாவை அனுபவிக்க வைத்துவிடுவார். இருப்பினும், கரைக்க முடியாத கெட்ட கர்மாவை, இந்த ஜென்மத்தில் அனுபவித்து விடட்டும் என்று சேர்த்துவிட தீர்மானித்தால், மிகப் பெரிய நோய்களும், பிரச்சினைகளும் வரலாம். ஆகவே, சூக்ஷ்ம உடல்களை ஒப்படைப்பவர், என்ன வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சூக்ஷ்ம உடல்களை ஒப்படைத்துவிட்டு, சறுக்கு மரத்தில் வழுகிச் செல்வது போல் இந்த ஜென்மாவை கடந்து போய்விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு சிறு துளி "கடன்" போலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், மோக்ஷத்திற்கு வாய்ப்பே. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர் யார் என்று நீ தேடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார். புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்கே எட்டாத கடன் என இன்னொன்றும் உண்டு. சுருக்கமாக சொன்னால், ஒரு தூசு அளவுக்கு கூட கர்மா ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனத்தான், மனிதர்கள் விரும்ப வேண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு.

ஒரு மனிதனானவன் தினமும், ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டும். அதுதான் அவன் விதி. இந்த கொடுக்கும், வாங்கும் நிகழ்ச்சிதான் அவனுக்கு சேர்கிற கர்மாவில் பெரும் பங்கு வகிக்கிறது. இது போக, அவன் எண்ணம். ஆசை. அவன் பார்வை போன்றவை, பலவித கர்மாக்களை ஒன்று சேர வைக்கிறது. அதையும் மீறி ஒருவன், நான் நேர்மையாகத்தான் வாழ்வேன் என்று தீர்மானித்து, நடந்து சென்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தலை மீது அத்தனை குப்பை கர்மாவையும் கொண்டு கொட்டுவார்கள். கொட்டிவிட்டு போகட்டும், கொட்டப்படுவது, என்னுள் உறையும் இறை மீது என்று நடந்து சென்றால், கொட்டியவர்களே, திட்டி தீர்த்து, அவன் கெட்ட கர்மாவை வாங்கிக் கொள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால்  வெகு எளிதில் சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்பை கொட்டியவர்களாலேயே! என்ன விசித்திரமான தண்டனை என்று பார், என்று நிறுத்தினார்.

"எதையும் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், எதையும் வாங்கும்போது "நாராயணார்ப்பணம்" என்று மனதுள் நினைத்துக்கொள்! எதையும் கொடுக்கும் பொழுது "சிவார்ப்பணம்" என்று கொடுத்துவிடு. எதுவும் உன்னை பற்றாது" என்றார்.

சட்டென்று "அட! மிக எளிதாக இருக்கிறதே, நல்ல வழிதான்!" என்று மனதுள் நினைத்தேன்.

இருப்பினும், "இதன் தாத்பர்யம் என்னவோ?" என்றேன்.

"வாழ்ந்து முடிக்கும் வரை அனைத்தும் நாராயணனுக்கு சொந்தம், அதனால், பெற்றுக்கொள்கிற பொழுது நாராயணார்ப்பணம்! கொடுக்கும் பொழுது பிறர் நன்றாய் வாழ அவர் வாழ்க்கைக்கு கொடுப்பதால், இருக்கும் வரை நல்ல படியாக வாழ்ந்துவிட்டு போகட்டும், பின்னர் சிவனிடம் தானே சென்று சேரப்போகிறது என்று உணர்த்தவே, கொடுக்கும்பொழுது "சிவார்ப்பணம்" என்று கூறி நிறுத்தினார்.

சற்று நேரம் எங்கும் அமைதி. எங்கும் பரவி நின்ற அமைதியை சற்று மென்மையாக கலைத்தபடி, தூரத்திலிருக்கும் கோவிலின் மணியோசை சன்னமாக ஒலித்தது. அமர்ந்திருந்த நால்வரும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து, எழுந்து நின்றனர். ஒருவர் கையால் உயர்த்தி காட்டவே, அடியேனும் எழுந்து நின்றேன்.

ஒரு நொடியில், பக்கத்திலிருந்த புதரிலிருந்து, ஒரு மிகப் பெரிய அரவம் வேகமாக மணியோசை வந்த திசை நோக்கி சென்றது. அதை கண்டு ஒரு நிமிடம். உறைந்து போனேன். முதுகில் ஏதோ தடவியது போல் உணர்வு வர, திரும்பி பார்த்தால், நால்வரில் ஒருவர், அடியேன் தோள்மீது, கைபதித்து மெதுவாக, "அமைதி" என்றார்.

அனைத்தும் ஒடுங்கிப்போய், சிலையாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மௌனத்தை கலைக்கும் விதமாக, "இறைவனின் பூசையை பார்க்க, அம்மா கிளம்பிட்டா. இனி நாம் நம் கலந்துரையாடலை தொடருவோம்" என அந்த பெரியவர் கூறினார்.

ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு, "நாம் எல்லோருமே, அந்த கோவிலுக்கு சென்று பூசையை கண்டு வரலாமே" என்று கூறினேன்.

"இது இருக்கும் இடத்திலேயே இருந்து உணரவேண்டிய நிமித்தம் . துரத்தி சென்று வேடிக்கை பார்க்க வேண்டிய நேரம் அல்ல. இங்கிருந்தே கண் மூடி தியானித்தால், அந்த பூசையை உள்ளே காணலாம். துரத்தி சென்று பார்க்க முயற்சித்தால், திரும்பி எழுந்து நின்று தடை விதிக்கும் நேரமாக மாறிவிடும். 

Wednesday, June 20, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 7

சற்று நேர இடைவெளிக்கு பின் "ஒரு கோவிலில், இறைவன் பாதத்தில் விழுந்து சூக்ஷும உடல் சரணடைவதை பார்க்கும் பொழுது, "நீங்கள் எவ்வுரு கொண்டு, எங்கெல்லாம் கோவில்களில் அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கெல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இதே நேரத்தில் உங்களை வணங்குகிறது. அதன்  வழி அடியேனின் நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன். அத்தனை உடல்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுங்கள். மறுபிறப்பு வேண்டாம்" என வேண்டி பல உடல்களை இறைவனிடம் திருப்பி ஒப்படைத்து விடலாமே! இல்லையா?" என்றார்.

"அட! ஆமாம்! மிக எளிய யோசனை ஆயிற்றே! இது மட்டும் உண்மையாயின், மனிதனுக்கு வாழ்க்கை பயணத்தை கடப்பது மிக எளிதாயிற்றே. இத்தனை சண்டை, சச்சரவு, வாழ்வதற்கு போட்டி என, நிறைவேறாத ஆசைகளை, வாசனைகளாக சேர்த்து வைத்து துன்பப்பட வேண்டாமே!" என்றேன்.

"மனிதனுடைய சந்தேக எண்ணம்,  நம்பிக்கையின்மை, இதெல்லாம் சாத்தியமா! என்கிற அவநம்பிக்கை, வெளியுலக விஷயங்களில் உள்ள ஆர்வம், ஆசை  போன்றவைதான் அவனுக்கு தடையாக உள்ளது. இந்த மாதிரி எளிய விஷயங்களை கூட தனிப்பட்ட முறையில் நடை முறைப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிலை தான் காரணம்".

"சரி! யாரோ ஒருவர் இதை நம்பி நடை முறைப்படுத்தித்தான் பார்த்து விடுவோமே என்று இறங்கினால், அவரை அந்த இறையே சோதிக்க நினைக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.

"இறை சோதனை மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து செல்ல வழியையும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி பயமுறுத்துகிறீர்களே! அப்புறம் எப்படி ஒரு சாதாரண மனிதன் இந்த வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்லை என்று எப்படி நீங்கள் குறை கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் கேள்வியை எழுப்பினேன்.

"எல்லாம், எளிதாக, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் நினைக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிலையை அடைந்தவர்கள், எப்படிப்பட்ட சோதனைகளை கடந்து வந்தவர்கள் என உனக்கு புரியாது. அவர்கள் அனைவரையும், இறைவன் சோதித்து, திசை திருப்பி, புடம்போட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.

"நீரில் மூழ்கினும், நஞ்சு என்னை தீண்டினும், நாமம் உரைப்பது "நமச்சிவாயமே" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம் கொடுத்துள்ளான் இறைவன். அந்த சோதனையில் ஒரு மிகச் சிறு அளவு சோதனை வைத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த தேர்வை எழுத மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், கேள்வி கேட்பதற்கே அருகதையற்றவர்கள்", என மிக நிதானமாக, தெளிவாக கூறினார்.

அமைதியாக இருந்த என் மனதில் "சரிதான்! போச்சுடா! தவறாக ஏதாவது பேசிவிட்டோமோ?" என்று தோன்றியது.

இதை அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வரலாம்! தவறில்லை! முறை தவறி விடக்கூடாது, உரையாடலை தொடருவோம்" என சூழ்நிலையை சுமுகப்படுத்தி, மேலும் "அந்த இறை சோதனை ஆபத்தையும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.

சித்தன் அருள்................... தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 6

"இனி சொல்வதை கவனமாக குறித்துக்கொள். எந்த ஒரு விஷயத்தையும் "மனம் உவந்து" பிறருக்கு கொடுத்தால்தான் அது அவர்களை சென்று சேர்ந்தாலும், பலனளிக்கும். ஏனோ, தானோவென்று, கொடுப்பது எதுவும், அது சென்று சேர வேண்டிய நிலையை அடைவதில்லை.  இறைவனிடம் பிரார்த்தனை வைத்தாலும், பல முறை அது நிறைவேறாமல் போகக் காரணமே, "சொல்லிட்டாங்க! அதுனால செய்கிறேன். நிறைவேற்றிக்கொடு" என்கிற மனப்பான்மையுடன் 99% மனிதர்களும் நினைத்துக் கொள்வதுதான். மனிதனை சொல்லிக் குற்றமில்லை. அவனோ கலியின் பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பௌதீக விஷயங்களை பார்த்து, நம்பி, அதன் வழியே நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதையும் செய்வதில்லை. உலக பௌதீக விஷயங்களில் உடன் பலன் கிடைக்கும் என்று உணர்ந்தால், எத்தனை வேகமாக, நம்பிக்கையுடன் செய்கிறானோ, அந்த நம்பிக்கையுடன் இனி கூறுபவற்றை செய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."

"நீ செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தால் என்ன செய்வாய்?"

"கோவில் உள் சென்று இறைவனை, தரிசித்து, பிரார்த்தனை செய்து செல்வேன்" என்றேன் நான்.

"நீ வழியே செல்லும் பொழுது, இறங்கி, உள்சென்று இறைவனை தரிசிக்க நேரமில்லை, என வைத்துக்கொள். அப்பொழுது, உன் பிரார்த்தனை சூழ்நிலை எப்படி இருக்கும்? என்றார்.

இவர் எது வழியோ வந்து என்னை கவ்வ வருகிறார், என புரிந்தது.

"அப்படிப்பட்ட நிலையில், கோவிலின் வெளியே நின்று, மனதால் இறைவன் பாதத்தை, உருவத்தை தியானித்து "எல்லா ஜீவன்களையும் காப்பாற்றி, அருள் புரியுங்கள் இறைவனே" என வேண்டிக்கொள்வேன்" என்றேன்.

"பரவாயில்லை! நல்ல வேண்டுதல்தான். இருப்பினும், அப்பொழுது, அங்கு நீ பிரார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா? இல்லை, கவனித்ததுண்டா?" என்றார்.

"ஒரு சிலவேளை, அப்படி பிரார்த்திக்கும் பொழுது, என்னைப் போல் ஒரு மனித உருவம், இறைவன் காலடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில், இது என் மனம் உள்ளுக்குள்ளே அப்படி ஒரு உருவத்தை தோற்றுவிக்கிறது. உண்மையாகவே அப்படியெல்லாம் கிடையாது" என எண்ணிக்கொண்டு சென்றுவிடுவேன்.

சற்று நேரம் என் கண்களையே உற்று நோக்கிய படி இருந்தார், அந்த பெரியவர்.

பின்னர், அந்த உற்று நோக்கலை கலைத்துவிட்டு, மற்ற பெரியவர்களை பார்த்தபின், சிரித்தபடியே "நீ பார்த்தாயே அந்த உருவம்தான் எத்தனையோ சூக்ஷ்ம உடல்களில் ஒரு உடல். இங்கு மனதுள் நினைப்பதை அங்கே பதிவு செய்து கொள்ள காத்திருக்கும் உடல். நீ எங்கு சென்றாலும், உன்னை தொடரும் உடல்.

அங்கே  பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.

Friday, June 15, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 5

பிரார்த்தனையை சமர்ப்பிக்க கோவில்கள், மகான்களின் சமாதிகள், பல புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து கொள்வது?

"தனிப்பட்ட வாழ்வின், பிரார்த்தனைகள் என்றால், அதை புரிந்து கொள்ள காலங்கள் ஆகும். பிறருக்கென என்றால், ஒரு சில வேளை உடனேயே நம் கண் முன் நடப்பதை காணலாம். இதிலிருந்தே, எதற்கு, இறைவன் முக்கியத்துவம் கொடுத்து, உன்னை வழி நடத்துகிறான் என்று உணரலாம். பிரார்த்தனையை, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காரணமே, பிறருக்கு பிரார்த்திக்கும் நிலைமையில், ஒரு மனிதன் தன் தேவைகளை மறக்கிறான். அந்த தன்னை மறந்த நிலையில், இறைவனே இறங்கி வந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்து விடுவான். லோகம் க்ஷேமமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிற பொழுது, அந்த பன்மையான பரந்த நிலையில், நீயும் இந்த உலகத்தில்தானே இருக்கிறாய். உன் தர்மத்துக்கு உட்பட்ட பிரார்த்தனைகளும், காலப்போக்கில் நிறைவேற்றப் படும்.

ஒரு விஷயத்தை கூறுகிறேன். சரியாக புரிந்து கொள். கர்ம பாரத்தை குறைத்துக் கொள்ளத்தான் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஒரு மனிதனுக்கு எத்தனையோ உடல்கள் உள்ளது. இனி உள்ள ஜென்மங்களுக்கான சூக்ஷும உடல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. இங்கு நாம் பார்க்கும் பௌதீக, பஞ்ச பூத உடலுக்கு "ஸ்தூல" உடல் என்று பெயர். பஞ்ச பூத கலப்பில்லாத உடல்கள் அதனதன் இடத்தில் உள்ளது. இந்த உடலால் செய்யப்படுகிற விஷயங்களின் கர்ம பலனுக்குண்டான நிகழ்வை, இனி எந்த ஜென்மத்தில் அந்த ஒருவன்/ஒருவள் அனுபவிக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்து அந்தந்த சூக்ஷும உடலில், பதித்து விடுவார். நல்லது செய்தால் நல்ல பலன், தீயது செய்தால், தீய பலன். மறுபடியும், மறுபடியும் பிறவித் தளை. இது எதற்கு என்று மனிதன் யோசிப்பதில்லை. இந்த பிறவித்தளையிலிருந்து விடு பட என்ன செய்ய வேண்டும் எனக்கூட மனிதன் யோசிப்பதில்லை. நல்லது செய்தாலும், தீயது செய்யாமல் இருக்க வேண்டும். நன்மை, தீமை போன்றவற்றின் கர்ம பலனை இறைவனிடமே சமர்ப்பித்து விடவேண்டும். "எனக்கு நன்மையையும் வேண்டாம்/ தீமையும் வேண்டாம், இறைவா நீயே அனைத்தையும் எடுத்துக்கொள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும். அவனிடமே, கொடுத்துவிடவேண்டும். இதை எத்தனை பேர் செய்கிறார்கள் என கவனித்துப் பார். அப்போது, நமக்கென காத்திருக்கும் உடல்கள் என்னவாகும் என்ற யோசனை வரும். என்ன செய்தால், அந்த உடல்களையும் தாரை வார்த்துக் கொடுத்து, பிறவித்தளையை விட்டு வெளியே வரமுடியும்? என்று யோசிப்பாய். அதற்கும் விடை, மிக எளிய ஆத்மார்த்தமான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும்! அனைத்தையும் கழித்து விடலாம், எனக் கூறி நிறுத்தினார்.

பிரார்த்தனை வழி உடலை தாரை வார்த்து, பிறவித்தளை விலகி இறைவனோடு கலந்துவிடலாமா? தாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது, என்றேன்.

இந்த மாதிரி, எத்தனையோ எளிய வழிகள், சித்த மார்கத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதை புரிந்து கொள்ளத்தான், யாருக்கும் மனம் இல்லை! நேரம் இல்லை, என்றார்.

சித்தன் அருள்.......................... தொடரும்!



சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 4

[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த தொடரில் தெரிவிப்பதெல்லாம், சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த பெரியவர்களின் வாக்கு! யார் மனதையும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு, அடியேனால், எழுத முடியும் என்று தோன்றவில்லை. நம்முள் பல கேள்விகள் இருக்கலாம். எல்லா கேள்விகளுக்கும், நாம் விரும்புவதுபோல் பதில் இருக்கும் என்று அடியேன் நம்பவில்லை. உரைத்த உண்மையை அது போல் தெரிவிப்பது மட்டும் தான் அடியேனின் வேலை. இங்கு கூறுபவைகளை, நடை முறைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. குளத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள கரையிலிருந்தால் முடியாது. நீரினுள் இறங்கித்தான், அவரவர் உணரவேண்டும். அதற்கு, முதலில், "அகம்பாவம்" என்கிற ஆடையை கரையில் கழட்டி வைத்து, இறங்கி, ஆழம் அறிந்தபின், "அக்கரை" ஏறும் பொழுது, கௌபீனம் கூட வேண்டாம் என தோன்றும். அப்படித் தோன்றினால், அந்த ஆத்மா உணர்ந்துவிட்டது என்று அர்த்தம். இனி, இந்த வார தொடருக்கு செல்வோம்.]

"இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது தானே! அப்படியிருக்க, பஞ்ச பூதங்கள் துணையின்றி ஒரு பிரார்த்தனையை சமர்ப்பிக்க முடியுமா? அனைத்திலும் அந்த பஞ்ச பூதங்களின் குணம் என்னவோ அதன் படித்தானே பிரார்த்தனையும் அமையும். உதாரணமாக இங்கிருப்பவர் பிரார்த்தனை உடன் பலனளிக்கும், வெளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என பெரியவர்கள் கூறுவதின் அர்த்தம் என்னவோ?

நீ பிரார்த்தனையை கூறுகிறாயா? அல்லது கர்மா செய்வதை கூறுகிறாயா?

இரண்டும் வேறாகினும், ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது தானே!

ஆம்! இரண்டும் வேறு வேறு தான். ஆயினும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. உன் கேள்வி புரிகிறது. பாரத கண்டத்தை கர்ம பூமி என்கிறார்கள். அங்கு செய்யப்படும் கர்மாக்கள், பிரார்த்தனைகள் எளிதில், விரைவில் நிறைவேறிவிடும். இந்த வித்யாசத்தோடு, ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்க வருகிறாய்! அப்படித்தானே!

அந்த படைப்பு ஒரு தெய்வ ரகசியம். ஏன், பாரத கண்டத்தை "கர்ம பூமி" என இறைவன் வரையறுத்து, மிச்ச இடங்களை போக பூமி என்று பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்லை. ஒரு வீடு கட்டினால், மனிதன், வாசல், திண்ணை, நடு அறை, மாடி, பின்புறம் என பல இடங்களாக பிரித்துக் கொள்கிறான்? அவன் வசதிக்காக, மேலும் சொல்லப்போனால், சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு முறை. அல்லவா. ஒரே கல் தான், ஒன்று படியாகிறது, இன்னொன்று தெய்வம் குடிகொள்ளும் சிலையாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் கேட்டால் என்ன சொல்வான். அது சிலைவடிக்கும், பக்குவம் கொண்டது. ஒன்று போதும், இன்னொன்று பக்குவம் இருப்பினும் படியாகட்டுமே என்று தீர்மானித்தேன், என்பான். அது போல், இறைவன் தேர்ந்தெடுத்த இடங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட பக்குவம் உடையது. தெரிவு செய்வது, இறைவன் உரிமை. அதில் கேள்வி கேட்க்கும் உரிமை நமக்கில்லை, என்பதே உண்மை. இருப்பினும், மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு, கேள்வி கேட்க்கும் உரிமை இருக்கும் வரை, இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். இப்போதைக்கு, இந்த விஷயத்தில், இது வரை தெரிந்து கொண்டால் போதும்.


Tuesday, June 12, 2018

சித்த மார்க்கம் தொடர்ச்சி 3

ஒருவர், "இன்னிக்கு மாட்டிண்டார்! சரியா ஆணி அடிக்கப் போறார், பெரியவர்" என கூறினார்.

"எங்களுக்குள் பெரியவர் சின்னவர்  எல்லாம் இங்கு கிடையாது. அனைவரும் சமம். அது இருக்கட்டும். மனிதனை தவிர வேறு ஒரு சூழ்நிலையும் இங்கு கிடையாதா?"

பிற உயிரினங்கள், இயற்கை, நதி, பூமி, ஆகாயம், காற்று,அக்னி, இப்படி எத்தனையோ விஷயங்களை மனிதன் உபயோகப் படுத்திக்க கொள்கிறானே, அவற்றுக்கு உயிர் கிடையாதா? ஏன், அவை பேசாது என்று நினைக்கிறாயா?

இல்லை, அவை பேசும் மொழி மனிதனுக்கு கேட்பதில்லை, கேட்டாலும் புரியாது. புரிய வேண்டுமானால், அதெற்கென ஒரு நிலையை அடைய வேண்டும். அந்த நிலையை அடைய அவனுக்குள் ஒரு கனிவு எப்பொழுதும் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த கனிவு, வற்றாத ஜீவ நதியாக எல்லாவற்றையும் தழுவும் பொழுது, அவன் மாறும்பொழுது, அனைத்தும் கேட்கும், புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் மனிதனுக்கு எங்கே நேரம் இருக்கிறது? தன் சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, எதையும் அழித்து, எதையும் கீழடக்கி, தனதாக்கி கொள்ளத்தானே நினைக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம் ஐந்து பேரும் 5% என்று ஒரு உதாரணத்துக்காக வைத்துக் கொண்டால், இந்த நிலை என்று 100% ஆகிறதோ அன்று 95% வென்று விடுவோம். ஆனால் அது என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க யோகிகளும் இன்றும், என்றேனும் 100% ஆகி, பின்னர் அந்த 100லேயே இருந்து மனிதனை மேலே எடுத்து செல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக பிரார்த்தனையை கூறலாம்.

நீ சொன்ன சூழ்நிலைகளுடன், இனி கூறுகிற சூழ்நிலைகளையும் சேர்த்துக்கொள். விரைவில் உன் கர்மா கரைந்துவிடும், உடல் சுத்தமாகும், ஆன்மா மேல் நிலைகளை அடையும்! ஆனால் பொறுமை தேவை. இன்று அரச மரத்தை சுற்றிவிட்டு, நாளை காலை வயிற்றை தடவி பார்க்கக்கூடாது. அவசரமும் கூடாது. இயல்பாக அந்த சூழ்நிலையாகவே எப்பொழுதும் மாறிவிடவேண்டும். ஒரு சில சூழ்நிலைகளை கூறுகிறேன்.

பயணிக்கும் பொழுது, அவசர ஊர்தி சென்றால் "இறைவா! யார் என்றறியேன்! போதும் அவர்கள் கர்ம வசத்தால் வேதனை அடைவது. ஒன்று, குணப்படுத்திவிடு, இல்லையேல், மோக்ஷத்தை கொடுத்துவிடு" என வேண்டிக்கொள். மற்றவை இறைவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.

போகும் வழியில் ஏதேனும் ஒரு ஜீவன் உடலை நீத்திருந்தால் "இந்த உடலில் இருந்த ஆத்மாவுக்கு மோக்ஷத்தை கொடுத்துவிடு. போதும் மறுபடியும் பிறப்பை கொடுத்து விடாதே! உன் பாதத்தில் பிடித்து வைத்துக் கொள்!" என வேண்டிக்கொள்.

ஏதேனும் இடத்தில் உயிரினங்களை வதைத்து உணவு வியாபாரத்துக்காக வைத்திருந்தால் "இறைவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு. இங்கு உயிரிழந்த அனைத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்பை கொடுக்காதே! இவர்கள் செய்கிற தவறுகளை மன்னித்து, திருத்தி, காத்தருள்!" என வேண்டிக்கொள்.

இயற்கையை, பஞ்ச பூதங்களை அழிக்கிற சூழ்நிலையை கண்டால், "இறைவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு!" என வேண்டிக்கொள்.

மருத்துவமனையை கடந்து செல்லும் பொழுது, அனைவரையும் சீக்கிரம் குணப்படுத்தி விடு, இறைவா" என வேண்டிக்கொள்.

பேராசை படுகிற மனித சூழ்நிலையை கண்டால், "இறைவா! சீக்கிரமே நல்ல புத்தி கிடைக்கட்டும் இவர்களுக்கு" என்று வேண்டிக்கொள்.

கோவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு சென்றால் "லோகம் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று வேண்டிக்கொள்.

இப்படி, தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும், உடல், மனம் சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டனை காலத்தை விரைவில் கடக்கலாம், ஆத்மா வேகமாக பல நிலைகளை கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு சூழ்நிலையை கண்டு, "ஓம்" என மனதுள் நினைத்தாலே, உடனேயே இறைவன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி நிறுத்தினார்.

மனிதர்கள், இந்த சூழ்நிலைகளை, இறைவன், அவர்கள் முன் கொண்டு போட்டாலும் புரிந்து கொள்வதில்லை, என்பதே நிதர்சனம்.

மற்ற மூவரும் "மிகத் தெளிவாக, இயல்பாக சித்த மார்கத்தை விவரித்தீர்கள்" என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

"இன்னும் கேள்வி இருக்கா?" என்பது போல் அந்த பெரியவர் அடியேனை பார்த்தார்.

"இருக்கிறது! அவற்றை நான் தெரிந்து கொள்வதற்கா மட்டுமல்ல, எத்தனையோ பேர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவ வேண்டும்" என்றேன்.

"சம்மதம்! வெளியே கூறு" என்று சரியாக என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அனுமதியை, பதிலளித்தார்.

அடியேன் அடுத்த கேள்வியை கேட்க தயாரானேன்.

சித்தன் அருள்................... தொடரும்!

சித்த மார்க்கம் தொடர்ச்சி 2

நாம் கண்டுகொள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி உண்டு. எப்படியெல்லாம் ஒரு விஷயத்தை நாம் அணுகுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல் நடக்கும் விஷயங்கள், விஷயங்களின் முகம் மாறுவதை நாம் காணலாம். சற்று முன் கூறினேன், பிரார்த்தனை என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம், அதன் வழி தன் கர்மாவை கழித்து, உடலை தூய்மையாக்கி, ஆத்மாவை உயர் நிலைக்கு அழைத்து செல்ல ஒரு மனிதன் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என. ஏன், இதே பிரார்த்தனையை, இறைவன் ஒருவனுக்கு கொடுக்கிற தண்டனையாக கூட எடுத்துக் கொள்ளலாம். இல்லையா? எனக்கூறி ஒரு இடைவெளி விட்டார்.

ஏதோ ஒன்று புரிகிற மாதிரி இருந்தது. தெளிவாக இல்லாததால் பதில் கூறாமல் அவர் தொடரட்டும் என்று காத்திருந்தேன்.

எத்தனையோ ஜென்மமாய் ஒவ்வொரு ஆத்மாவும் கரையேறி தன்னை வந்து அடையட்டும் என்று விரும்பி, பல சூழ்நிலைகளை கொடுத்து, அங்கேயே பிரார்த்திக்க தொடங்குகிறானா? என்று இறை காத்திருந்து பார்த்து, அது நடக்காமல் போகவே, மறுபடியும் பரீட்ச்சை வைத்து தேர்வடைகிறானா என்று பார்க்கிறது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் 100 முறை எழுது என்று தண்டனை கொடுப்பது போல், இறையும். இன்னும் ஒரு முறை எழுது என ஜென்மத்தை கொடுத்து காத்திருக்கிறது. இனி ஒரு ஜென்மம் என்பது எவரும் விரும்பாதது தானே. தேர்வில் வென்றால் தானே கைலாச வாசம்/வைகுண்ட வாசம்.

சரி! நீ கேட்ட விஷயத்துக்கு வருவோம். உன் கண் முன் விரிந்த, உனக்கு புரிந்த பிரார்த்தனை பண்ண வேண்டிய சூழ் நிலைகளை, நீ கவனித்த படியே கூறு, என்று கேள்வியை அடியேனிடம் திருப்பி போட்டார்.

சற்று நேரம் யோசித்து, முன் ஜாக்கிரதையுடன் சொல்லத் தொடங்கினேன்.

அடியேன் கூறுவது சரியா, தவறா என்று தெரியவில்லை. இருந்தும் கூறுகிறேன்.

உடல் நலக்குறைவால் வாடுபவர்கள், வேறு வழியின்றி உயிர் வாழ யாசகம் செய்பவர்கள், பசியால் வாடுபவர்கள், குடும்ப பாரத்துடன் அதன் பிரச்சினைகளை சுமப்பவர்கள், என பல மனித சூழ்நிலைகளை அடியேன் எதிர் கொண்டுள்ளேன், எனக் கூறி நிறுத்தினேன்.

சபாஷ்! அப்படியென்றால், உன் பிரார்த்தனையை மனிதர்களுடன் நிறுத்திக் கொண்டாய் அல்லவா, என ஒரு புன்சிரிப்புடன் கேட்டார்.

இந்த கலந்துரையாடல் எங்கு செல்கிறது என்று உணர்ந்த மற்ற மூவரும், சற்று சத்தமாகவே சிரித்து, அர்த்த புஷ்டியுடன் ஒருவருக்கொருவரை பார்த்துக் கொண்டனர்.

சித்த மார்க்கம் தொடர்ச்சி 1

இந்த வார தலைப்பு "பிரார்த்தனை"

அடியேனின் கேள்வி: "அய்யா, அகத்தியப் பெருமான் "பிரார்த்தனையை" விட மிகச்சிறந்த, உயர்வான விஷயம் இந்த உலகில் இல்லை" என்று உரைத்துள்ளார். இதை விரிவாக கூறுங்களேன்!" என்றேன்.

அவர்கள் அனைவரின் பதிலையும் ஒன்று சேர்த்துள்ளேன்.

"இறைவன், ஒரு மனிதன் தன்னை, தன் கர்மாவை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அளித்த வரம்தான் "பிரார்த்தனை". இதை இரு வகையாக பிரிக்கலாம். 1.பிரார்த்தனை - தனக்காக; 2. பிரார்த்தனை - பிற ஆத்மாக்களுக்காக. இந்த கலியுகத்தில், 95% பேரும் தனக்காக வேண்டித்தான் பிரார்த்திக்கிறார்கள். மீதி 5% பேர்கள்தான் சித்தர்கள் சொன்ன பிரார்த்தனையை புரிந்து கொண்டு, அதன் படி செய்கிறார்கள். இப்படி, ஒரு மிகப் பெரிய ஒரு குறை இருக்க, இரண்டாவது குழுவில் இருக்கிற மனிதர்களை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு, எப்படியப்பா இந்த உலகை காப்பது. இன்று இங்கு நடக்கும் அத்தனை துர் நிகழ்ச்சிகளுக்கும் காரணம், மனிதனின் பேராசை. சரி அதை விடு, இறைவன் பார்த்துக்கொள்வார்.

பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும்? மிக இயல்பாக, எளிதாக, ஒரு குழந்தை தன் தகப்பனிடம் தனக்கு பிடித்த இனிப்பை கேட்பது போல், (குழந்தைக்கு தெரியும், தன் தகப்பனிடம் உரிமை இருக்கிறது என்று) பற்றின்றி, தனது உறவாக இருந்தாலும், "இவர்கள் அனைவரும் உன் குழந்தைகள், கர்மபலனால் உறவாக, நட்பாக பிறவி எடுத்துள்ளார்கள்" என ஒரு முகமறியாத ஆத்மாவுக்கு வேண்டுவதுபோல், உறவாக இருந்தாலும், வேண்டிக்கொள்ளவேண்டும். மிக  சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டிக்கொள்கிற பொழுது, "எது அந்த ஆத்மாவுக்கு நல்லது என்று உனக்கு தோன்றுகிறதோ, அதை செய், அதையும் உடனேயே செய்" என வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறருக்காக சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனையினால், ஒருவன் தன் கர்மாவை கரைத்துக்கொள்கிறான், ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்கிறான், உயர் நிலையை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். அந்த ஒருவனின் பிரார்த்தனை நாள் செல்லச் செல்ல உடனேயே பலனளிக்கத் தொடங்கிவிடும். இந்த நிலைக்கு ஒரு ஆத்மா முன்னேறுவதற்கு தினசரி வாழ்க்கையிலேயே இறைவன் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறான். ஆனால், ஆரறிவு பெற்றவன் நான் என்று வாழ்கிற மனிதன் அந்த வாய்ப்புகளை புரிந்து கொள்வதில்லை/பிடித்துக் கொள்வதில்லை. உயர்ந்த நிலையை அடைகிற வாய்ப்பை இழப்பது மனிதர்கள், இத்தனை தெரிவித்தும் புரிந்து கொள்ளாததினால், வருத்தப்படுவது சித்தர்களும்/இறைவனும்.

கேள்வி: தினசரி வாழ்க்கையில் கோவில்களில், புண்ணிய ஸ்தலங்களில் பிரார்த்தனைகள் நடந்து கொண்டு தானே இருக்கிறது. ஏதோ மனிதன் அவனுக்கு தெரிந்ததை இறைவனுக்கு செய்கிறானே? அது போதாதா?

பதில்: நல்ல கேள்வி. மிகுந்த தாகத்தில் இருப்பவனுக்கு, ஒரு சொட்டு நீர் எப்படி போதவில்லையோ, அது போல் மனிதர்கள் செய்து கூட்டுகிற பாபங்களை கரைக்க போதுமான பிரார்த்தனைகள் இல்லை. 5% எப்படி 95% கடந்து முன்னேறும்?

உண்மைதான். தினமும், பிரார்த்தனையை இறைவனிடம் வைக்க என்ன செய்ய வேண்டும்? அது எப்படி இருக்க வேண்டும்? அப்படி சமர்ப்பிக்கப் பட்ட பிரார்த்தனைகள் எப்படி ஒரு ஆத்மாவை சுத்தம் பண்ணும்? சற்று தெளிவாக கூறுங்களேன் என்றேன்.

பதில்: இதுவும் நல்ல கேள்விதான்! இருப்பினும் ஒன்றை கேட்க விட்டுவிட்டாய். அது என்ன என்று யோசி, பார்ப்போம்.

சற்று நேர அவகாசம் கொடுத்தார்கள். எத்தனை யோசித்தும் என்ன விட்டு போனது என்று அடியேன் சிற்றறிவுக்கு புரியவில்லை.

"தெரியவில்லையே!" என்றேன்.

"தினமுமே இறைவன் பிற ஆன்மாக்களுக்காக பிரார்த்திக்க பல வாய்ப்புகளை தருகிறான்" என்றேனே! அந்த வாய்ப்புகளை, அனைத்தும் இல்லையென்றால், ஒரு சிலவற்றவையாவது உதாரணம் காட்ட, கேட்டிருக்கலாமே!' என்றார் ஒரு பெரியவர்.

"அட! ஆமாம்! இதை யோசிக்கவே இல்லையே!' என்று வெட்கி தலை குனிந்தேன்.

பின்னர் சுதாகரித்து "அதையும் சேர்த்தே கூறிவிடுங்களேன்" என்று பணிய,

அவர் விவரிக்கலானார். மற்றவர்கள் கூர்மையாக அவரையும், அவர் கூறுவதையும் கவனிக்கத் தொடங்கினர்.

அடியேனும்!

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday, June 7, 2018

அகத்தியன் அடிமை

                           
                  அன்பு உள்ளம் கொண்ட அணைத்து அன்பர்களுக்கும் அடியேனின் வணக்கம். சித்த மார்க்கத்தின் அறிவுரை என்ற தலைப்பில் அகத்திய பெருமான் அருளிய அறிவுரை. சித்தன் அருள் என்ற வலைத்தளம் மூலம் அடியேன் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி வணக்கம் ஓம் அகத்தீசாய நம நற்பவி நற்பவி நற்பவி.. 

Thursday, May 31, 2018

அகத்தியன் அடிமை

                           
              ஓம் அகத்தீசாய நம அன்புள்ள வாசகர்களுக்கு அடியேன் வணக்கம் அடியென்னுடைய பதிவுகள் நீங்கள் வாசித்து பயனடைய எல்லா வள்ள ஆசான் அகத்தீசனை வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய பதிவுகளில் பிழை இருப்பின் பொருத்துஅருள வேண்டுகிறேன். நீங்கள் கமெண்டில் தங்களுடைய விருப்பத்தை தெருவியுங்கள் இது அடியேன் வேண்டுகோள் நன்றி வணக்கம். நற்பவி 

ஓம் சட்டைமுனி சித்தர் திருவடிகள் போற்றி

                         

                           

Tuesday, May 29, 2018

புஜண்ட மகரிஷி

                           
(நற்பவி) இது மகான் காக புஜண்ட மகரிஷி ஜீவா சமாதியிலிருந்து கிடைத்த ஒரு மோகன அஸ்திரம் இதை சத்தமாக நாம் சொல்லும்போது இதை சொல்லுபவருக்கும் இதை கேட்பவருக்கு பல நன்மைகள் ஏற்படும். இதை பொது இடத்தில் சத்தமாக சொல்லும்போது இதை கேட்க்கும் மக்களும் உலகத்தில் பல நன்மைகள் நடைபெறும் இது புஜண்ட மகரிஷி வாக்காகும். வணக்கம் நற்பவி நற்பவி நற்பவி....

Monday, May 28, 2018

முருகன் பெருமை

                     
முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.
தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது. அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், காட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ.
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழநி
4. சுவாமிமலை
5. திருத்தணி
6. சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
7. மருதமலை
8. வடபழனி (சென்னை)
9. வைத்தீஸ்வரன்கோவில் முத்துக்குமாரசுவாமி
10. நாகப்பட்டினம் சிக்கல்
11. திருச்சி வயலூர்
12. ஈரோடு சென்னிமலை
13. கோபி பச்சமலை
14. கரூர் வெண்ணைமலை
15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17. கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

Sunday, May 27, 2018

கொங்கண மகரிஷி பாடல்

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்
தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
-மகான் கொங்கண மகரிஷி 12-
மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம் :
மனிதன் எண்ணிலடங்கா பிறவிகள் எடுத்துள்ளான். ஆறுகளில் உள்ள மணல்களை எண்ணி கணக்கிட்டாலும், நமது பிறவியை கணக்கெடுக்க முடியாது. இத்தனை பிறவிகளிலும் காமத்தாலும், பொருள் வெறியாலும், ஜாதி வெறியாலும், மத வெறியாலும், நான் என்ற கர்வத்தாலும், தனக்குள்ள ஆள்படையாலும், கல்வி கற்றோம் என்ற கர்வத்தாலும், உத்யோக பெருமிதத்தாலும் அடாது பாவங்கள் செய்திருப்போம். இந்த பாவங்கள்தான் அறிவை மங்க செய்துவிடும். அதன் காரணமாக பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர முடியாது. அப்படியே அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொன்னாலும் நமது பாவத்தின் காரணமாக உணர முடியாது. மூர்க்கத்தனமே மிஞ்சி இருக்கும். இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் பல ஜென்மங்களில் செய்திருந்தாலும், ஆசான் அகத்தீசன் திருவடியை நம்பி தொடர்ந்து பூஜை செய்து வந்தால் பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர்த்துவார்கள்.
ஒரு மனிதன் பாவியாவதற்கு காரணம், மனைவியினுடைய இயல்பை அறியாமல் அவள்மீது சந்தேகப்படுதலும், அடிமைபோல் எண்ணி அடித்தலும், கொடுமையாக பேசுதலும், மேலும், கல்வி அறிவு இருப்பதால் உடன் பிறந்தவர்களின் சொத்தை அபகரித்தலும், மேலும் தாய் தந்தை நமக்கு செய்த உதவிகளை நன்றி மறந்துவிடுவதும், மேலும் நம்மிடம் வேலை செய்கிறவர்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையும், பொருள் சேர்க்கும் பொழுது மற்றவர்கள் சொத்தை அபகரித்து கொள்ள வேண்டும் என்ற அறியாமையும்தான் பாவம் சேர்வதற்கு காரணங்கள் ஆகும். மேற்கண்ட பாவங்களைப் பற்றி ஆசான் அகத்தீசர் உணர்த்தியும், மேலும் பாவங்கள் செய்யாமல் இருப்பதற்குரிய பரிபக்குவத்தையும் ஆசான் நமக்கு அருள்செய்வார்.
மேலும், உடம்புதான் ஞானவீடு என்றும், இந்த உடம்பாகிய வீட்டை அறிந்து வீட்டை உறுதிபடுத்தி கொள்ளவும் ஆசான் அகத்தீசர் உபதேசிப்பார். அவர் உபதேசித்தபின் இந்த உடம்பில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே அமைந்துள்ளது என்பதை உணர முடியும். மேலும், பாவமாகிய மும்மல தேகத்தை நீத்து புண்ணியமாகிய ஒளி உடம்பு பெற அருள்செய்வார். புண்ணிய உடம்பு பெறுவதற்கு இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய இயல்பை அறிந்து சுழிமுனையில் வாசி செலுத்தினால் அது ஓங்கார ரீங்காரமாக ஓசை உண்டுபண்ணி தசநாதமாக பின்பு விரிவடையும். மேலும், அமிழ்தமும் சிந்தும், ஜோதியும் தோன்றும். ஆசானே நம்முன் தோன்றி அருள்செய்வார். அதுமட்டுமல்ல கோபத்தால்தான் பல பிறவிகளில் பாவம் வந்தது என்று அறிந்து அந்த கோபத்தின் முனையையும் மழுங்கச்செய்துவ
ிடுவார். அதுமட்டுமல்ல ஆசைதான் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மூலக்கனலை எழுப்பச் செய்து அந்த ஆசைகளை வேரோடு எரித்துவிடுவார். மேலும், கொடூரமான எண்ணங்கள் நீங்கி சாந்தம் உண்டாகும்.எனவே, ஆசான் அகத்தீசரை தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து வந்தால் முன்செய்த பாவங்களும் தீரும். ஊனாகிய உடம்பைப்பற்றி அறிகின்ற அறிவும் வரும். சுழிமுனைiயாகிய இரகசியமும் தெரியும். சிவவடிவாக உள்ள அகத்தீசன் நம்முன் தோன்றி காட்சி தருவார். மூர்க்கத்தனம் நீங்கி சாந்தம் உண்டாகும். இதுவ மேற்கண்ட பாடலின் சாரமாகும்.
-
ஓங்காரக்குடிலாசான்
நற்பவி.

அரங்கன் அருளுரை

முருகா என்றால் :
இயற்கையே நம்மை தோற்றுவிப்பதற்க
ும், நம்மை காப்பதற்கும் அழிப்பதற்கும் காரணம் என்று அறிவிப்பான்.
பஞ்சபூதங்களின் தலைவியான இயற்கை அன்னை மாறா இளமையுடன் அதிரூபமாய் வீற்றிருந்து இந்த பிரம்மாண்டமான அண்டகோடி தன்னிலே எல்லா உயிர்களையும் தோற்றி அவற்றினை வளர்த்து அந்த அந்த உயிர்களின் தன்மைக்கேற்ப உடலம் அளித்து அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்ப உடலம்தனை அழித்து மீண்டும் மீண்டும் தோன்ற செய்கின்றாள்.
அந்த இயற்கையே மனிதனாகிய நம்மையும் தோற்றி நமக்கு பசி, காமம் என்ற உணர்வுகளை கொடுத்து பசிக்கு உணவளித்து உடல் வளர்த்து உடல் இன்பம் தந்து நம்மை வளர்த்து காத்து ஒரு கால பரியந்தம் வரை வளர்த்த அவளே சற்றும் கருணையின்றி நம்மை தேயச் செய்து உடல் செயல்களை படிப்படியாக முடக்கி அழித்தே விடுகிறாள். தோற்றியதில் தாயாய் இருந்த அவளே காளியாய் மாறி அழிக்கின்றாள் என்ற பரிணாமத்தின் சுழற்சிதனை முருகனை முருகா! முருகா!! முருகா!!! என்றே பூசித்து பூசித்து அவன் அருள் பெற்று உணரப்பெறலாம்.
முருகன் திருவடியைப் பற்றி மனம் உருகி முருகப்பெருமானார் தம் நெஞ்சம்தனை தொடுமளவிற்கு பூசைகளை செய்திட செய்திட அவனும் மனமிரங்கி எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையே நமது அழிவிற்கு காரணமானதையும் எந்த இயற்கை நமது அழிவிற்கு காரணமாய் இருந்ததோ அந்த இயற்கையின் துணைகொண்டு அவளை மயங்கச் செய்து அவளது ஆசியினால் அவளை நம்முள் சார்ந்திடச் செய்து அவளது மீளமுடியாத பரிணாமத்தின் சுழற்சிக்கு அகப்படாமல் வெளியேறி விடலாம் அதன்பின் இயற்கைக்கு அடிமையாகிய நாம் அவளை அவளது துணையாலேயே அடிமையாக்கிக் கொள்ளலாம் என்பதையும் உணர்த்துவான்.
முருகப்பெருமானார் தமை இடைவிடாது எந்நேரமும் நிற்கும்போதும் நடக்கும்போதும் ஓடும்போதும் உண்ணும்போதும், பேசும்போதும், பேசாதிருக்கும்ப
ோதும் என்றே சகல காலத்தும் மனிதினுள் முருகனை சிந்தித்தும், நாமம்தனை சொல்லியும் வரவர முருகனின் நாமத்தின் வல்லமைகள் கூடி அந்த முருகனே உமது அறிவினைச் சார்ந்துமே இயற்கை அன்னையின் ஆசியை பெறுவது எப்படி என்றே உணர்த்திட முற்படுவான்.
எதற்கும் மயங்காத இயற்கையையும் மயக்கி தன்வயப் படுத்திடலாம் என்றே உணர்த்துவான் ஞானத்தலைவன். எந்த இயற்கை உலகினுள் உயிர்களை தோற்றுவித்ததோ அந்த இயற்கை தோற்றிய எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த செலுத்த அந்த உயிர்களை மகிழச் செய்ய செய்ய அந்த உயிர்களிடத்து வெளிப்படும் இயற்கை உமது உள்ளத்து வெளிப்படும் தயவினால் ஈர்க்கப்பட்டு உமது தயவின் ஒளி பெருக பெருக அந்த உயிர்கள்பால் உள்ள இயற்கை அன்னை உமது தயவினை கண்டு மகிழ்ந்து உமது தயவின் செயல் கண்டு மகிழ்ந்து மகிழ்ந்து உன்னிடம் மயங்க ஆரம்பிப்பாள்.
மயங்க ஆரம்பிக்கும் இயற்கை அன்னை உம்மை அவ்வளவு எளிதில் சார்ந்திட மாட்டாள். உமக்கு எளிதில் ஆசியையும் வழங்க மாட்டாள்.
எவர் ஒருவர் இயற்கையை முதலில் வென்றாரோ அவரே அதன் சூட்சுமம் அறிந்தவன். அவனே ஞானத்தலைவனாகிய முருகப்பெருமான் என்றே உணர்வினுள் ஆழப்பதிந்து மேன்மேலும் முருகா! முருகா!! என உளமார உருகி உருகி தியானிக்க முருகன் தனக்கு அவர்தம் திருவடிக்கு உள்ளம் உடல், பொருள், ஆவி அனைத்தும் ஈந்து அர்ப்பணம் செய்து முருகனைத்தவிர வேறொன்றும் நாடாத நிலைதனிலே வருகையுற்று அயராது நாத்தழும்பேற முருகனை செபித்து செபித்து செபித்து உருகி உருகி உருகி உள்ளம் உருக ஊன் உருக நம் பாவமெல்லாம் பொடிபட்டு கரைந்திட கல்லும் கரையும்படியான உருக்கத்துடன் உருகி தியானித்திட மனமிரங்கும் முருகப்பெருமான் உம்முள்ளே தயவு ஒளி கூட்டி தாமே உம்மை சார்ந்து உமது உயிர்சார்ந்து உடல் சார்ந்து இயற்கை அன்னையை உம்முள் வந்திடச் செய்யும் உபாயம் உரைப்பான்.
உலக உயிர்கள்பால் அன்பு செலுத்த செலுத்த உயிர்கள் மகிழ மகிழ அவையனைத்தும் ஆசிகளாய் மாறி அந்த ஆசிகளெல்லாம் அளவு கடந்து செல்ல செல்ல இயற்கை அன்னையும் மீள முடியாமல் உம்முள் வசமாவாள்.
எல்லா உயிர்களையும் தோற்றி காத்து இரட்சித்து அந்த உயிரிடத்து சார்ந்து இளமை அளித்து தாமே அவ்வுயிர்களிடத்து தேய்ந்து முதுமையாகி பின் அவ்வுயிர்களை விட்டு நீங்கி உடல் அழித்து மீண்டும் பிறிதொரு உடல் தந்து பிறவி தந்து காத்து அழிக்கின்ற அந்த இயற்கை அவ்வுயிரிடத்து வெளிப்பட்டு தான் மட்டும், என்றும் மாறா இளமையுடன் இருக்கின்றாள். அவளை தயவினால் தான் மயக்க முடியும். தயவின் ஆற்றல் பெருக பெருக ஒரு தக்க சமயம் தயவின் அருள் கூடிட விலகும் இயற்கை விலகாது சிறுகசிறுக நம்மிடம் மயங்கி மயங்கி நம்மை சார்ந்திடுவாள். முருகன் நம்முள் இருந்து நம்மை நமது அறிவை நமது உடலை, நமது ஆன்மாவை இயக்கி அவள்தனை நம்முள்ளே ஐக்கியமாக்கிட செய்திட ஐக்கியமான இயற்கை அன்னை அவளது பரிணாமப் பிடியினின்று நம்மை விடுவிக்கும் சாவியினை நமக்கு அருளி நம்மைவிட்டு வெளியே செல்லாமல் நம்முடனே தங்கிடுவாள்.

வெள்ளிங்கிரிமலை

                                
            வெள்ளிங்கிரி மலையே இங்கு சிவனாக உள்ளது. பல சித்தர்கள் வாழும் மலை பல நோயிகளை தீர்க்கும் மூலிகை மலை இம்மலைக்கு நமக்கும் நெருக்கிய தொடர்புகள் அதிகம் உள்ளது. வெள்ளிங்கிரி மலை ஏழு மலை தொடர்கள் உள்ளது அதேபோல் நமது உடம்பில் சூட்சுமமாக ஏழு ஆதார சக்கரங்கள் உள்ளது இம்மலையில் நாம் ஏறும்போது நமது உடம்பில் சூட்சுமமாக செயல்படுகிறது. நமது உடம்பில் உள்ள நோய்கள் நீங்குகின்றன உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது அனைவரும் செல்வோம் இம்மலைக்கு இறைவன் அருளை பெறுவதற்கு ஓம் நமசிவாய... ஓம் வெள்ளிங்கிரி ஆண்டவர் திருவடிகள் போற்றி.... 

Saturday, May 26, 2018

அகத்தியன் பெருமை

                      
     ஓம் அகத்தீசாய நம என்று தினமும் காலை மாலை 5 நிமிடம் சொல்லுவோம் ஞானிகளின் அருளை பெறுவோம் அகத்தியன் பெருமை 

Saturday, May 19, 2018

போகரின் அற்புதம் பாகம் 2

"இன்னும் ஒருமுறைகூட போகரின் நாடி படித்து ஏதேனும் மருந்தை போகர் சொல்கிறாரா என்று பார்த்து சொல்லுங்களேன்" என்றனர் அவர்கள்.
மறுபடியும் நாடியை படிக்க முன்னர் சொன்னதே இப்பொழுதும் வந்ததை கண்டு மனம் தளர்ந்த அவர்களை நோக்கி,
"வியாதிக்கு காரணமான கர்மாவையே அழித்தவர் சிவபெருமான். உங்கள் குழந்தையை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார். இனிமேல் அந்தக் குழந்தையை சிவபெருமானின் குழந்தை என்ற எண்ணத்துடன் தூக்கி சென்று, போகர் பெருமான் கூறியதை நிறைவேற்றுங்கள். நல்லதே நடக்கும்" என்றேன்.
அந்த தம்பதியர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;
"உங்கள் வாக்கை வேத வாக்காக வைத்து, இந்த நிமிடம் முதல் அந்தக் குழந்தை "சிவபெருமானின்" குழந்தை என்ற எண்ணத்துடன் சென்று நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டு வருகிறோம்" என்று கூறி விடை பெற்றனர்.
இரு வாரங்களுக்கு பின் அந்த இருவரும் என்னை காண வந்தனர். கையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக விளையாடியபடி இருந்தது. அவர்கள் முகத்தில் நிறையவே சந்தோஷம்; கூட நிறையவே புல்லரித்துப்போக வைக்கிற அனுபவங்கள். அந்த குழந்தையின் தந்தை நடந்ததை விவரித்தார்
போகர் சித்தர் சொன்னது போலவே ஹிமாலயத்தில் உள்ள அலகானந்த நதிக்கரைக்கு குழந்தையுடன் போய் சேர்ந்தோம். தண்ணீரின் வேகமும் அதில் உறைந்த குளிர்ச்சியின் வீரியமும் எங்களை அதிர வைத்தது. குழந்தையை எப்படி இந்த குளிர்ந்த தண்ணீரில் மூழ்கடிப்பது? என்ற யோசனை இருமுறை எங்களை தாக்கியது. மூன்றாவது முறையும் அந்த கேள்வி எங்களை தாக்கும் முன் சித்தர் சொன்னபடி இறைவன் நாமமான "நமச்சிவாய" என்பதை கூறிக்கொண்டே மெதுவாக ஒருமுறை பயத்துடன் முக்கினோம். என்ன நடந்தது என்று புரியவில்லை. பொதுவாகவே அப்படிப்பட்ட குளிர் உடலை தாக்கும்போது குழந்தை "வீ ல்" என்று அலறியிருக்கும். ஆனால் அந்தக் குழந்தை சிரித்தபடி அந்த நீரின் ஸ்பரிசத்தை விரும்பியது. அப்போது எங்கள் பக்கமாக நடந்து வந்த ஒரு சாது, "குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் குளிப்பாட்டி பத்திரமாக திருப்பி தருகிறேன், கவலை வேண்டாம்!" என்று கூறி வாங்கி சென்றார்.
குழந்தையை வாங்கி சென்றவர் நாங்கள் நின்ற பகுதிக்கு நேராக சற்று ஆழமுள்ள பகுதிக்கு சென்று குழந்தையை பலமுறை நீரியில் முக்கியபின் சற்று அருகில் வந்து குழந்தையின் உடலை தடவி கொடுத்து, பின் தன நனைந்த வஸ்திரத்தின் ஒரு முனையிலிருந்து சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் தடவி, சிறிதளவு அதன் வாயிலும் போட்டு அதன் வலது காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு எங்களிடம் தந்தார். குழந்தை கிடைத்த வேகத்தில் அதன் உடலில் உள்ள நீரை துவட்டும் வேலையில் கவனத்தை செலுத்தியதில் அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டோம். ஒரு நிமிட இடைவேளையில் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்த சாதுவை காணவில்லை. குழந்தையின் உடல் சூடு முன்னரை விட சற்று அதிகமாக இருக்கவே, குழந்தைக்கு எல்லாம் சரியாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊர் வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மருத்துவர்களே அசந்து போய் விட்டனர். எங்கள் குழந்தையின் இருதயத்தில் இருந்த ஓட்டை முழவதுமாக அடைந்து போய் இப்பொழுது பம்பிங் சரியாக நடப்பதாக சொல்கின்றனர். வந்தவர் யார் என எங்களுக்கு புரியவில்லை. எப்படி குணப்படுத்தினார் எனவும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் மட்டும் நடந்துள்ளது எங்கள் நன்றியை போகர் சித்த பெருமானுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
போகர் ஜீவ நாடியில் நடந்த அதிசயத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார்
"இந்தத் திருவிளையாடல் சிவ பெருமான் நேரடியாக நடத்தியது. சித்தர்களுக்கே தலையாய சித்தர் தான் ஒரு திருவிளையாடலை ஏதோ ஒரு காரணத்துக்காக நடத்த விரும்புகிறார் என்றால், எங்களுக்கு அங்கே என்ன வேலை? சொன்னதை சொல்வதுடன் எங்கள் வேலை முடிந்தது. அதனால் தான் எந்த மருந்தும் அந்த குழந்தைக்கு விதிக்கப்படவில்லை. சில திருவிளையாடல்களுக்கு அர்த்தம் புரியாது. புரிந்துகொள்ளவும் முயற்ச்சிக்கக்கூடாது." என்ற உபதேசத்துடன் நிறுத்திக்கொண்டார்.
சிவபெருமானே நம்மிடை சித்தனாக உலா வருகிறார் என்பதை அறிந்த பொழுது உண்மையில் நானே அசந்து விட்டேன்.

போகரின் அற்புதம் பாகம் 1


!!"ஜீவநாடி அற்புதங்கள்"!!
அகத்தியர் அருளும் "ஜீவநாடி" இருந்ததை போல், போகரின் ஜீவா நாடி ஒன்றும் அகத்தியர் அருளால் என்னிடம் வந்து சேர்ந்தது. பொதுவாக அதில், போகர் மருத்துவ முறைகளை பற்றியும், இன்ன வியாதிக்கு இன்ன மூலிகை என்றும் தகவல் தருவது வழக்கம். ஜீவ நாடி போலவே அதிலும் போகரின் வார்த்தைகள் தங்க நிறத்தில் வந்து போகும். அதை படித்து பலருக்கும் போகர் அருளால் மருந்துகளை கிடைக்க வழி செய்துள்ளேன்.
ஒருநாள் இரு இளம் வயது தம்பதியர் நாடி படிக்க வந்து அமர்ந்தனர். இருவரையும் அமரச்செய்து விஷயம் என்னவென்று விசாரித்தேன்.
"எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் தான் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு இப்பொழுது இரண்டு வயது ஆகிறது. பிறக்கும் போதே உடல் நலக் குறைவுடன் பிறந்துள்ளது. "
"என்ன உடல் நலக் குறைவு?"
"ஒன்றரை வயதானதிலிருந்து திடீர் திடீர் என்று உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். உடனே, குழந்தையை வாரி எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கி சென்று சிகிர்ச்சை அளித்தால் வியாதி விலகி விடுகிறது. ஆனால் மறுபடியும் அந்த வியாதியின் தாக்கம் எப்பொழுது வரும் என்பதை எங்களால், மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. எத்தனையோ மருத்துவ முறைகளை கையாண்டு விட்டோம். முதலில் மாதம் ஒருமுறை என்று வந்த உடல் நலக்குறைவு, இப்பொழுது வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது. கடைசியாக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர்தான் இந்த தாக்கம் எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்தார். பிறவியிலேயே எங்கள் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் உள்ளதாம். அதனால் ரத்தம் பம்ப் பண்ணுவது சரியாக அமையாத நேரங்களில், பிராணவாயு குறைவால் உடல் நீல நிறமாகிவிடுகிறது. இதற்கு இரண்டு வழிதான் உள்ளதாம். ஒன்று குழந்தைக்கு அறுவை சிகிர்ச்சை செய்து பார்க்க வேண்டும். ஆனால் குழந்தை அறுவை சிகிர்ச்சையை தாங்குகிற அளவுக்கு உடலில் சக்தியை பெறவில்லை. அதனால் அறுவை சிகிற்ச்சை செய்தால் பலன் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றார்".
"சரி! இரண்டாவது வழி என்ன சொன்னார்?"
"அந்த மருத்துவர் போகர் சித்தரின் மருத்துவ முறைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். அதனால், போகர் சித்தர் மனது வைத்தால் மருந்து மூலம் இந்த குழந்தையை பிழைக்க வைக்கலாம் என்றார். மேலும் அவர் உங்களிடம் போகர் நாடியில் போகரின் உத்தரவு என்ன என்பதை கேட்டு வரச் சொன்னார். தாங்கள் தான் போகர் நாடி படித்து எங்கள் பிரச்சினைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினர்.
போகரின் ஜீவநாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்து "சித்தபெருமானே! இந்த தம்பதியரின் குழந்தைக்கு நல்ல சரியான ஒரு தீர்ப்பை வழங்குங்கள்" என்று மனதுள் வேண்டிக்கொண்டேன்.
நாடியில் வந்த போகர் பெருமான் இவ்வாறு சொன்னார்.
"இந்தக் குழந்தையை சிவபெருமானால் மட்டும் தான் காப்பாற்றமுடியும். இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அது, ஒரு வியாழக்கிழமை அன்று அலகானந்தா நதியில் மூன்று முறை மூழ்கி குளிக்கப்படவேண்டும். அப்படி குளிப்பாட்டும் போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். கண்டிப்பாக சிவபெருமான் வந்து இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்" என்று கூறி உடனே மறைந்துவிட்டார்.
பொதுவாகவே போகர் சித்தர் கேட்ட கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் சொல்பவர். மருந்து எதையும் கூறாமல், குழந்தையை அலகாநந்தா நதியில் மூன்று முறை முக்கி குளிப்பாட்ட வேண்டும் என்று கூறியதை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் விட்டனர். அலகாநந்தா நதி குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற ஒன்று. பெரியவர்களே அதில் ஒரு முறை நீராடினால் விறைத்து போவார்கள். அதிலும் இந்த குழந்தை ரொம்ப பலவீனமான இதயத்தைக் கொண்டு பிறந்துள்ளது. அந்த குளிரில் மூன்று முறை முக்கி எடுத்தால் என்னவாகும்? என்று நினைப்பு எனக்கு.
"இதை தவிர வேறு எதுவும் போகர் கூறவில்லையா?" என்று கேட்டனர்.
போகர் சொன்னதை கூறிவிட்டேன், மருந்து எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னபடி செய்துவிட்டு வாருங்கள். கண்டிப்பாக நல்ல செய்தியுடன் திரும்பி வருவீர்கள்" என்றேன்.
சற்றும் நம்பிக்கை இல்லாமல் சோர்ந்த மனதுடன் எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.
இரண்டு மாதங்கள் வரை அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதியினர் வந்தனர். அந்த குழந்தையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் அவர்களால் போகர் நாடியில் வந்து சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
"உண்மை தான். போகர் நாடியில் வந்து சொன்னதை சாதாரண மனிதர்களின் மன நிலையில் இருந்தால் நிறை வேற்ற முடியாது தான். சற்றே திட மான மன நிலையுடன் சித்தர் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள். எல்லாம் வெற்றி அடையும். சீக்கிரம் போங்கள்" என்றேன்.