ஓம் அகத்தீசாய நம அகத்தியன் அருள் வலைத்தளத்தை வாசிக்கும் அன்பர்களுக்கு அடியேனின் வணக்கம். நமது பிறப்பு நம்முடைய கர்ம வினை மூலமாக தான் நமக்கு அமைகிறது. நம்முடை தாய் தந்தை சகோதரன் சகோதரி உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைத்தும் நமக்கு அமைகிறது. இதை மாற்ற என்ன வழி சித்தர் வழிபாடுதான் அனைத்திற்கும் தீர்வு அகத்திய பெருமானை குருவாக ஏற்று அவன் திருவடி தொழுதால் நம்முடைய கர்மவினை நீங்க நமக்கு உபாயம் சொல்லி நம்மை ஆட்கொள்வான். கர்ம வினை தீர ஒரே வழி புண்ணியம் செய்வதுதான். அன்னதானம் செய்வது தொண்டு செய்வது எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது இவை அனைத்தும் நம்முடைய கர்மவினை நீங்க வழிகளாகும் என்று அகத்திய பெருமான் நமக்கு சொல்லும் அறிவுரைகள் ஆகும். நாம் எல்லோரும் இவற்றை கைபிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கோவோம். இன்றைய அனைவருக்கும் நன்மை நடைபெற எல்லா வல்ல அகத்திய பெருமானை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் ஓம் அகத்தீசாய நம. நற்பவி
No comments:
Post a Comment