சற்று நேர இடைவெளிக்கு பின் "ஒரு கோவிலில், இறைவன் பாதத்தில் விழுந்து சூக்ஷும உடல் சரணடைவதை பார்க்கும் பொழுது, "நீங்கள் எவ்வுரு கொண்டு, எங்கெல்லாம் கோவில்களில் அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கெல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இதே நேரத்தில் உங்களை வணங்குகிறது. அதன் வழி அடியேனின் நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன். அத்தனை உடல்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுங்கள். மறுபிறப்பு வேண்டாம்" என வேண்டி பல உடல்களை இறைவனிடம் திருப்பி ஒப்படைத்து விடலாமே! இல்லையா?" என்றார்.
"அட! ஆமாம்! மிக எளிய யோசனை ஆயிற்றே! இது மட்டும் உண்மையாயின், மனிதனுக்கு வாழ்க்கை பயணத்தை கடப்பது மிக எளிதாயிற்றே. இத்தனை சண்டை, சச்சரவு, வாழ்வதற்கு போட்டி என, நிறைவேறாத ஆசைகளை, வாசனைகளாக சேர்த்து வைத்து துன்பப்பட வேண்டாமே!" என்றேன்.
"மனிதனுடைய சந்தேக எண்ணம், நம்பிக்கையின்மை, இதெல்லாம் சாத்தியமா! என்கிற அவநம்பிக்கை, வெளியுலக விஷயங்களில் உள்ள ஆர்வம், ஆசை போன்றவைதான் அவனுக்கு தடையாக உள்ளது. இந்த மாதிரி எளிய விஷயங்களை கூட தனிப்பட்ட முறையில் நடை முறைப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிலை தான் காரணம்".
"சரி! யாரோ ஒருவர் இதை நம்பி நடை முறைப்படுத்தித்தான் பார்த்து விடுவோமே என்று இறங்கினால், அவரை அந்த இறையே சோதிக்க நினைக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.
"இறை சோதனை மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து செல்ல வழியையும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி பயமுறுத்துகிறீர்களே! அப்புறம் எப்படி ஒரு சாதாரண மனிதன் இந்த வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்லை என்று எப்படி நீங்கள் குறை கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் கேள்வியை எழுப்பினேன்.
"எல்லாம், எளிதாக, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் நினைக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிலையை அடைந்தவர்கள், எப்படிப்பட்ட சோதனைகளை கடந்து வந்தவர்கள் என உனக்கு புரியாது. அவர்கள் அனைவரையும், இறைவன் சோதித்து, திசை திருப்பி, புடம்போட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.
"நீரில் மூழ்கினும், நஞ்சு என்னை தீண்டினும், நாமம் உரைப்பது "நமச்சிவாயமே" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம் கொடுத்துள்ளான் இறைவன். அந்த சோதனையில் ஒரு மிகச் சிறு அளவு சோதனை வைத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த தேர்வை எழுத மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், கேள்வி கேட்பதற்கே அருகதையற்றவர்கள்", என மிக நிதானமாக, தெளிவாக கூறினார்.
அமைதியாக இருந்த என் மனதில் "சரிதான்! போச்சுடா! தவறாக ஏதாவது பேசிவிட்டோமோ?" என்று தோன்றியது.
இதை அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வரலாம்! தவறில்லை! முறை தவறி விடக்கூடாது, உரையாடலை தொடருவோம்" என சூழ்நிலையை சுமுகப்படுத்தி, மேலும் "அந்த இறை சோதனை ஆபத்தையும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.
சித்தன் அருள்................... தொடரும்!

No comments:
Post a Comment