முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வு குறித்த
மகான் சுப்பிரமணியரின் ஆசி நூல்
பலமோடு பண்புமிக்க பரதமே
பழனி ஆண்டவன் என் துணைமிக்க தமிழகமே
பலனாக இந்தியா தமிழகம் தன்னில்
பாடிடுவேன் இந்த வார நிகழ்வு ஆசிதனை
தன்னிலே விளம்பி சித்திரை திங்கள்
தாமுரைப்பேன் மூவேழீர் திகதிமேல் முப்பான் திகதிவரை
(விளம்பி சித்திரை 23ம் நாள் 06.05.2018 முதல் சித்திரை 30ம் நாள் 13.05.2018, வரை)
அண்ணல் அரங்கஞானி கேட்க
அறிவிப்பேன் எதிர்கால வார பலனாக
பலனாக சுப்பிரமணியரும் விளம்பிடுவேன்
பாடிடுவேன் தமிழகம் தன்னில்
சலனமுற்று சூழ்ச்சியான அரசியலில்
சாதித்தவர்கள் எல்லாம் சரிந்து போவர்
போவரப்பா போக்கிடம் அறியா
புண்ணிய பலம் பெற்ற மக்களே
ஆவரப்பா ஆளுமை பதவிகளில்
ஆறுமுகன் என் ஞான ஆட்சி காலம்
காலம் கனிய இருக்கவே
கடமை தவறுபவர்கள் கண்ணியம் இல்லாதவர்கள்
வேலன் என் பலம் உணராதவர்கள்
வினை வழி உயிர் உடமை என
என யாவும் இழந்து அல்லலும்
எண்ணற்ற கீழ் பிறவிகள் எடுத்தும்
ஊனமாக ஞானமிலா திரிய நேரும்
உத்தரவாக உயர் பதவி மக்களுக்கு
மக்களுக்கு விளம்பினேன் இன்று
மனமுவந்து ஏற்றுத் திருந்தி
பக்குவமுற ஆளுமை புரிய
பதவி வழி பணிவுடன் பரோபகாரம்பட
பரோபகாரம்பட சேவை ஆற்றுபவரே
பதவி சிறந்து பாருலகில் பவனி வருபவர்
துரோகம் அநீதி லஞ்சம் வஞ்சமென
தீவழி நடப்பவர் துணைபோகுபவர் எல்லாம்
எல்லோரும் கலிகால அழிவில்
இருப்பிடம் தெரியா அழிவு காண்பர்
வல்லமை பெற்று சிறக்க வேணுமா
வளர்ச்சி கொள்கை பரவ வேணுமா
வேணுமாயின் என் சக்திமிகு அரங்கன்
வினவிட ஞான கொள்கை ஏற்று
ஞானக்குடிலுக்கு வாருங்கள்
ஞானிகள் பூசை கலந்து வணங்கி
வணங்கியே ஞானவழி நடந்து
வடிவேலன் என் நாமசெபம் சொல்லுங்கள்
இணங்கியே தருமப்படி நடந்து வாருங்கள்
எல்லா காலமும் பாதுகாப்பு கிட்டி
கிட்டியே ஞான ஆட்சி உதயமாகும்
கேட்டிடுவாய் நடுவண் மாநில அரசுகள்
திட்டம் வழி இணைந்து மக்களுக்கு
தீங்கில்லா சேவை ஆற்றிட வளரும்
வளரும் மலரும் ஞான ஆட்சியாக
வல்லமையென தருமநெறி மீறி
தளரும் நிலைக்கு மக்களை நோக்கி
தவறுகள் தகாத திட்டங்கள் கொண்டால்
கொண்டாலோ தமிழகம் எல்லை
குழப்பம் பதட்டம் குறையா வண்ணம்
உண்டாகும் போராட்டம் புரட்சி
உலக இயற்கையும் சீற்றம் காணும்
காணவே தமிழகம் காக்கப்படவே
கட்டாயம் ஆளுமைகள் வரலாற்றில்
தானாக பேரு புகழ் அடையும்
தரணி வியக்க வல்லரசாக மாறும் வார ஆசி நூல் முற்றே.
-சுபம்-
முருகப்பெருமான் துணை
மகான் சுப்பிரமணியர் அருளிய வார ஆசி நூலின் சாரம் :
பலமும் பண்பும் கொண்ட பரததேசமே பழனி ஆண்டவன் முருகப்பெருமான் எனது துணைமிக்க தமிழகமே இந்தியாவிலும் தமிழகத்திலும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 23ம் நாள் 06.05.2018, ஞாயிறு முதல் சித்திரை மாதம் 30ம் நாள் 13.05.2018, ஞாயிறு முடிய உள்ள ஒரு வார காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்.
தமிழகத்தில் மனச்சலனத்தினால் சூழ்ச்சியான அரசியல் செய்து வெற்றி கண்டவர்கள் எல்லாம் சரிந்து போவார்கள். அவர்கள் எல்லாம் போகுமிடம் தெரியாமல் போய்விடுவார்கள். புண்ணிய பலம் பெற்றிட்ட மக்களே ஆட்சி பொறுப்புகளில் பதவி வகிப்பார்கள். முருகப்பெருமான் எனது ஞானஆட்சி காலம் விரைவில் உலகினில் அமைய இருக்கின்றபடியினால் உலக மக்களே இனியேனும் உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.
கடமை தவறுபவர்கள், கண்ணியமும் இல்லாதவர்கள் முருகப்பெருமான் எனது பலத்தினை உணராதவர்கள், அவர்கள் செய்த பாவவினைகளினால் பீடிக்கப்பட்டு வினை வழி சென்று உயிர் உடைமை என யாவையும் இழந்து அல்லல்பட நேரும். எண்ணிலாத கீழ்நிலையான பிறவிகளை எடுத்து பகுத்தறிவு அற்ற நிலையில் திரிய நேரிடும்.
உயர்பதவி வகிக்கும் மக்கள் தமக்கு சுப்பிரமணியர் எனது அறிவிப்பாய் கூறுகிறேன். உயர் பதவி வகிக்கும் மக்களே இனியேனும் மனமுவந்து நன்னெறி ஏற்று திருந்திக் கொள்ளுங்கள். பக்குவமுடன் ஆட்சி செய்திட பதவியை பயன்படுத்தி பணிவுடன் நடந்து பரோபகாரம்பட நடந்து தங்களது பதவியை சேவை மனப்பான்மையோடு செயல்படுபவர்களே பதவியில் சிறந்து விளங்கி இவ்வுலகினில் தொடர்ந்து ஆட்சி புரிவார்கள்.
துரோகச் செயல்கள் செய்பவர்களும், அநீதியான செயல் செய்பவர்களும், லஞ்சம் வாங்குபவர்களும், வஞ்சமாய் செயல்புரிபவர்களும், தீயவழியில் நடப்பவர்களும், அதற்கு துணை போகும் மக்களும், கலிகால அழிவினில் இருக்கும் இடம் தெரியாமல் அழிவைக் காண்பார்கள்.
வல்லமை பெற்று சிறப்பான வாழ்வை பெற வேண்டுமா, வளர்ச்சி கொள்கை பரவ வேண்டுமா, வேண்டுமாயின் சுப்பிரமணியன் என் சக்திமிகு அரங்கன் ஞானக்கொள்கைகளை ஏற்று அரங்கன் வாழும் ஞானத்துறையூர் ஓங்காரக்குடிலுக்கு வாருங்கள். ஆங்கே நடக்கும் ஞானிகள் பூஜையில் கலந்து வணங்கி அரங்கன் கூறும் ஞானவழி
No comments:
Post a Comment