வினை அறுத்தல்
பாரப்பா பிறவியதை
வினை மரத்தின்
பழமென்று முன்னம்
நீ போட்ட விதை
இப்பிறவி என்றாச்சே
விதைக்காமல் நீ இருந்தால்
பிறவியது ஏதப்பா?
பிறவி அறுக்க மார்க்கம்
காண நாடிடுவாய் கும்பனை ,
செப்பினார் கும்பனும்
வினை அறுக்கும்
உபாயத்தை
செய்திடுவாய் மகத்தான
சித்தர்களின் பூசை தன்னை
பூசையோடு தர்மம் செய்ய
மறவாமல் நீ இருந்தால்
வினையது விளகுமப்பா
காட்சிகளும் கிட்டிடுமே!
வினையறுக்கும் முயற்சி தன்னை
வினையதுவே பாழாக்கும்
திடமாக நீ இருந்து
கும்பனடி பற்றிடுக
அகத்தியனின் திருவடியே
போதுமென்று நீ இருந்தால்
சத்தியமாய் வந்துன்னை
ஆட்கொள்வார் பொதிகை முனி!
பாரப்பா பிறவியதை
வினை மரத்தின்
பழமென்று முன்னம்
நீ போட்ட விதை
இப்பிறவி என்றாச்சே
விதைக்காமல் நீ இருந்தால்
பிறவியது ஏதப்பா?
பிறவி அறுக்க மார்க்கம்
காண நாடிடுவாய் கும்பனை ,
செப்பினார் கும்பனும்
வினை அறுக்கும்
உபாயத்தை
செய்திடுவாய் மகத்தான
சித்தர்களின் பூசை தன்னை
பூசையோடு தர்மம் செய்ய
மறவாமல் நீ இருந்தால்
வினையது விளகுமப்பா
காட்சிகளும் கிட்டிடுமே!
வினையறுக்கும் முயற்சி தன்னை
வினையதுவே பாழாக்கும்
திடமாக நீ இருந்து
கும்பனடி பற்றிடுக
அகத்தியனின் திருவடியே
போதுமென்று நீ இருந்தால்
சத்தியமாய் வந்துன்னை
ஆட்கொள்வார் பொதிகை முனி!
No comments:
Post a Comment