Saturday, May 19, 2018

முருகன் அருள்

                     
                  முருகா என்றால்:
காமம் அற்று போகும்.
பொறாமை நம்மை விட்டு விலகும்.
கோபம் நீங்கிவிடும்.
பேராசை அறவே இருக்காது
பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும்.
லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும்.
தாய்மை குணமுடைய முருகப்பெருமானத
ு திருவடிகளைப் பற்றி பூசித்தால் நம்மிடம் உள்ள தீயன ஒழிந்து நன்மைகள் அனைத்தையும் பெறுவதோடு மேற்கண்ட குணப்பண்புகளை முழுமையாகப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர் இரவு 9.00 மணிக்கு படுத்துவிட வேண்டும். அதிகாலை 4.30 மணிக்கே எழுந்துவிட வேண்டும். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து உலக பொதுமறையாம் ஞானபண்டிதரால் அளிக்கப்பட்டு அரங்கரால் வகுத்தும், தொகுத்தும் அளிக்கப்பட்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பாராயணம் செய்திடல் வேண்டும்.
இப்படி அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.00 மணி வரையிலான பிரம்மவேளையிலே தொடர்ந்து சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பாராயணம் செய்து வரவர, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவு உண்டாகி சுத்த சைவ உணவை மேற்கொள்வார்கள். பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும், லோபித்தனம் நீங்கி கொடுக்கக்கூடிய மனம் வரும். நிலையில்லாததை நிலையென்று நம்புகின்ற அறியாமை நீங்கும்.
இப்படி அதிகாலை ஞானியர் பூஜையை தொடர்ந்து செய்து செய்து வெற்றிப் பெற்றேன் நான். இது எனது சொந்த அனுபவமாகும்.
- ஓங்காரக்குடிலாசான், அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிகர்

No comments: