ஓம் அகத்தீசாய நம அன்புள்ள வாசகர்களுக்கு அடியேன் வணக்கம் அடியென்னுடைய பதிவுகள் நீங்கள் வாசித்து பயனடைய எல்லா வள்ள ஆசான் அகத்தீசனை வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய பதிவுகளில் பிழை இருப்பின் பொருத்துஅருள வேண்டுகிறேன். நீங்கள் கமெண்டில் தங்களுடைய விருப்பத்தை தெருவியுங்கள் இது அடியேன் வேண்டுகோள் நன்றி வணக்கம். நற்பவி
Thursday, May 31, 2018
Tuesday, May 29, 2018
புஜண்ட மகரிஷி
(நற்பவி) இது மகான் காக புஜண்ட மகரிஷி ஜீவா சமாதியிலிருந்து கிடைத்த ஒரு மோகன அஸ்திரம் இதை சத்தமாக நாம் சொல்லும்போது இதை சொல்லுபவருக்கும் இதை கேட்பவருக்கு பல நன்மைகள் ஏற்படும். இதை பொது இடத்தில் சத்தமாக சொல்லும்போது இதை கேட்க்கும் மக்களும் உலகத்தில் பல நன்மைகள் நடைபெறும் இது புஜண்ட மகரிஷி வாக்காகும். வணக்கம் நற்பவி நற்பவி நற்பவி....
Monday, May 28, 2018
முருகன் பெருமை
முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.
தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது. அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், காட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ.
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழநி
4. சுவாமிமலை
5. திருத்தணி
6. சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
7. மருதமலை
8. வடபழனி (சென்னை)
9. வைத்தீஸ்வரன்கோவில் முத்துக்குமாரசுவாமி
10. நாகப்பட்டினம் சிக்கல்
11. திருச்சி வயலூர்
12. ஈரோடு சென்னிமலை
13. கோபி பச்சமலை
14. கரூர் வெண்ணைமலை
15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17. கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

Sunday, May 27, 2018
கொங்கண மகரிஷி பாடல்
தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்
தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
-மகான் கொங்கண மகரிஷி 12-
மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம் :
மனிதன் எண்ணிலடங்கா பிறவிகள் எடுத்துள்ளான். ஆறுகளில் உள்ள மணல்களை எண்ணி கணக்கிட்டாலும், நமது பிறவியை கணக்கெடுக்க முடியாது. இத்தனை பிறவிகளிலும் காமத்தாலும், பொருள் வெறியாலும், ஜாதி வெறியாலும், மத வெறியாலும், நான் என்ற கர்வத்தாலும், தனக்குள்ள ஆள்படையாலும், கல்வி கற்றோம் என்ற கர்வத்தாலும், உத்யோக பெருமிதத்தாலும் அடாது பாவங்கள் செய்திருப்போம். இந்த பாவங்கள்தான் அறிவை மங்க செய்துவிடும். அதன் காரணமாக பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர முடியாது. அப்படியே அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொன்னாலும் நமது பாவத்தின் காரணமாக உணர முடியாது. மூர்க்கத்தனமே மிஞ்சி இருக்கும். இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் பல ஜென்மங்களில் செய்திருந்தாலும், ஆசான் அகத்தீசன் திருவடியை நம்பி தொடர்ந்து பூஜை செய்து வந்தால் பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர்த்துவார்கள்.
ஒரு மனிதன் பாவியாவதற்கு காரணம், மனைவியினுடைய இயல்பை அறியாமல் அவள்மீது சந்தேகப்படுதலும், அடிமைபோல் எண்ணி அடித்தலும், கொடுமையாக பேசுதலும், மேலும், கல்வி அறிவு இருப்பதால் உடன் பிறந்தவர்களின் சொத்தை அபகரித்தலும், மேலும் தாய் தந்தை நமக்கு செய்த உதவிகளை நன்றி மறந்துவிடுவதும், மேலும் நம்மிடம் வேலை செய்கிறவர்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையும், பொருள் சேர்க்கும் பொழுது மற்றவர்கள் சொத்தை அபகரித்து கொள்ள வேண்டும் என்ற அறியாமையும்தான் பாவம் சேர்வதற்கு காரணங்கள் ஆகும். மேற்கண்ட பாவங்களைப் பற்றி ஆசான் அகத்தீசர் உணர்த்தியும், மேலும் பாவங்கள் செய்யாமல் இருப்பதற்குரிய பரிபக்குவத்தையும் ஆசான் நமக்கு அருள்செய்வார்.
மேலும், உடம்புதான் ஞானவீடு என்றும், இந்த உடம்பாகிய வீட்டை அறிந்து வீட்டை உறுதிபடுத்தி கொள்ளவும் ஆசான் அகத்தீசர் உபதேசிப்பார். அவர் உபதேசித்தபின் இந்த உடம்பில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே அமைந்துள்ளது என்பதை உணர முடியும். மேலும், பாவமாகிய மும்மல தேகத்தை நீத்து புண்ணியமாகிய ஒளி உடம்பு பெற அருள்செய்வார். புண்ணிய உடம்பு பெறுவதற்கு இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய இயல்பை அறிந்து சுழிமுனையில் வாசி செலுத்தினால் அது ஓங்கார ரீங்காரமாக ஓசை உண்டுபண்ணி தசநாதமாக பின்பு விரிவடையும். மேலும், அமிழ்தமும் சிந்தும், ஜோதியும் தோன்றும். ஆசானே நம்முன் தோன்றி அருள்செய்வார். அதுமட்டுமல்ல கோபத்தால்தான் பல பிறவிகளில் பாவம் வந்தது என்று அறிந்து அந்த கோபத்தின் முனையையும் மழுங்கச்செய்துவ
ிடுவார். அதுமட்டுமல்ல ஆசைதான் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மூலக்கனலை எழுப்பச் செய்து அந்த ஆசைகளை வேரோடு எரித்துவிடுவார். மேலும், கொடூரமான எண்ணங்கள் நீங்கி சாந்தம் உண்டாகும்.எனவே, ஆசான் அகத்தீசரை தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து வந்தால் முன்செய்த பாவங்களும் தீரும். ஊனாகிய உடம்பைப்பற்றி அறிகின்ற அறிவும் வரும். சுழிமுனைiயாகிய இரகசியமும் தெரியும். சிவவடிவாக உள்ள அகத்தீசன் நம்முன் தோன்றி காட்சி தருவார். மூர்க்கத்தனம் நீங்கி சாந்தம் உண்டாகும். இதுவ மேற்கண்ட பாடலின் சாரமாகும்.
-
ஓங்காரக்குடிலாசான்
நற்பவி.

அரங்கன் அருளுரை
முருகா என்றால் :
இயற்கையே நம்மை தோற்றுவிப்பதற்க
ும், நம்மை காப்பதற்கும் அழிப்பதற்கும் காரணம் என்று அறிவிப்பான்.
பஞ்சபூதங்களின் தலைவியான இயற்கை அன்னை மாறா இளமையுடன் அதிரூபமாய் வீற்றிருந்து இந்த பிரம்மாண்டமான அண்டகோடி தன்னிலே எல்லா உயிர்களையும் தோற்றி அவற்றினை வளர்த்து அந்த அந்த உயிர்களின் தன்மைக்கேற்ப உடலம் அளித்து அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்ப உடலம்தனை அழித்து மீண்டும் மீண்டும் தோன்ற செய்கின்றாள்.
அந்த இயற்கையே மனிதனாகிய நம்மையும் தோற்றி நமக்கு பசி, காமம் என்ற உணர்வுகளை கொடுத்து பசிக்கு உணவளித்து உடல் வளர்த்து உடல் இன்பம் தந்து நம்மை வளர்த்து காத்து ஒரு கால பரியந்தம் வரை வளர்த்த அவளே சற்றும் கருணையின்றி நம்மை தேயச் செய்து உடல் செயல்களை படிப்படியாக முடக்கி அழித்தே விடுகிறாள். தோற்றியதில் தாயாய் இருந்த அவளே காளியாய் மாறி அழிக்கின்றாள் என்ற பரிணாமத்தின் சுழற்சிதனை முருகனை முருகா! முருகா!! முருகா!!! என்றே பூசித்து பூசித்து அவன் அருள் பெற்று உணரப்பெறலாம்.
முருகன் திருவடியைப் பற்றி மனம் உருகி முருகப்பெருமானார் தம் நெஞ்சம்தனை தொடுமளவிற்கு பூசைகளை செய்திட செய்திட அவனும் மனமிரங்கி எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையே நமது அழிவிற்கு காரணமானதையும் எந்த இயற்கை நமது அழிவிற்கு காரணமாய் இருந்ததோ அந்த இயற்கையின் துணைகொண்டு அவளை மயங்கச் செய்து அவளது ஆசியினால் அவளை நம்முள் சார்ந்திடச் செய்து அவளது மீளமுடியாத பரிணாமத்தின் சுழற்சிக்கு அகப்படாமல் வெளியேறி விடலாம் அதன்பின் இயற்கைக்கு அடிமையாகிய நாம் அவளை அவளது துணையாலேயே அடிமையாக்கிக் கொள்ளலாம் என்பதையும் உணர்த்துவான்.
முருகப்பெருமானார் தமை இடைவிடாது எந்நேரமும் நிற்கும்போதும் நடக்கும்போதும் ஓடும்போதும் உண்ணும்போதும், பேசும்போதும், பேசாதிருக்கும்ப
ோதும் என்றே சகல காலத்தும் மனிதினுள் முருகனை சிந்தித்தும், நாமம்தனை சொல்லியும் வரவர முருகனின் நாமத்தின் வல்லமைகள் கூடி அந்த முருகனே உமது அறிவினைச் சார்ந்துமே இயற்கை அன்னையின் ஆசியை பெறுவது எப்படி என்றே உணர்த்திட முற்படுவான்.
எதற்கும் மயங்காத இயற்கையையும் மயக்கி தன்வயப் படுத்திடலாம் என்றே உணர்த்துவான் ஞானத்தலைவன். எந்த இயற்கை உலகினுள் உயிர்களை தோற்றுவித்ததோ அந்த இயற்கை தோற்றிய எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த செலுத்த அந்த உயிர்களை மகிழச் செய்ய செய்ய அந்த உயிர்களிடத்து வெளிப்படும் இயற்கை உமது உள்ளத்து வெளிப்படும் தயவினால் ஈர்க்கப்பட்டு உமது தயவின் ஒளி பெருக பெருக அந்த உயிர்கள்பால் உள்ள இயற்கை அன்னை உமது தயவினை கண்டு மகிழ்ந்து உமது தயவின் செயல் கண்டு மகிழ்ந்து மகிழ்ந்து உன்னிடம் மயங்க ஆரம்பிப்பாள்.
மயங்க ஆரம்பிக்கும் இயற்கை அன்னை உம்மை அவ்வளவு எளிதில் சார்ந்திட மாட்டாள். உமக்கு எளிதில் ஆசியையும் வழங்க மாட்டாள்.
எவர் ஒருவர் இயற்கையை முதலில் வென்றாரோ அவரே அதன் சூட்சுமம் அறிந்தவன். அவனே ஞானத்தலைவனாகிய முருகப்பெருமான் என்றே உணர்வினுள் ஆழப்பதிந்து மேன்மேலும் முருகா! முருகா!! என உளமார உருகி உருகி தியானிக்க முருகன் தனக்கு அவர்தம் திருவடிக்கு உள்ளம் உடல், பொருள், ஆவி அனைத்தும் ஈந்து அர்ப்பணம் செய்து முருகனைத்தவிர வேறொன்றும் நாடாத நிலைதனிலே வருகையுற்று அயராது நாத்தழும்பேற முருகனை செபித்து செபித்து செபித்து உருகி உருகி உருகி உள்ளம் உருக ஊன் உருக நம் பாவமெல்லாம் பொடிபட்டு கரைந்திட கல்லும் கரையும்படியான உருக்கத்துடன் உருகி தியானித்திட மனமிரங்கும் முருகப்பெருமான் உம்முள்ளே தயவு ஒளி கூட்டி தாமே உம்மை சார்ந்து உமது உயிர்சார்ந்து உடல் சார்ந்து இயற்கை அன்னையை உம்முள் வந்திடச் செய்யும் உபாயம் உரைப்பான்.
உலக உயிர்கள்பால் அன்பு செலுத்த செலுத்த உயிர்கள் மகிழ மகிழ அவையனைத்தும் ஆசிகளாய் மாறி அந்த ஆசிகளெல்லாம் அளவு கடந்து செல்ல செல்ல இயற்கை அன்னையும் மீள முடியாமல் உம்முள் வசமாவாள்.
எல்லா உயிர்களையும் தோற்றி காத்து இரட்சித்து அந்த உயிரிடத்து சார்ந்து இளமை அளித்து தாமே அவ்வுயிர்களிடத்து தேய்ந்து முதுமையாகி பின் அவ்வுயிர்களை விட்டு நீங்கி உடல் அழித்து மீண்டும் பிறிதொரு உடல் தந்து பிறவி தந்து காத்து அழிக்கின்ற அந்த இயற்கை அவ்வுயிரிடத்து வெளிப்பட்டு தான் மட்டும், என்றும் மாறா இளமையுடன் இருக்கின்றாள். அவளை தயவினால் தான் மயக்க முடியும். தயவின் ஆற்றல் பெருக பெருக ஒரு தக்க சமயம் தயவின் அருள் கூடிட விலகும் இயற்கை விலகாது சிறுகசிறுக நம்மிடம் மயங்கி மயங்கி நம்மை சார்ந்திடுவாள். முருகன் நம்முள் இருந்து நம்மை நமது அறிவை நமது உடலை, நமது ஆன்மாவை இயக்கி அவள்தனை நம்முள்ளே ஐக்கியமாக்கிட செய்திட ஐக்கியமான இயற்கை அன்னை அவளது பரிணாமப் பிடியினின்று நம்மை விடுவிக்கும் சாவியினை நமக்கு அருளி நம்மைவிட்டு வெளியே செல்லாமல் நம்முடனே தங்கிடுவாள்.

வெள்ளிங்கிரிமலை
வெள்ளிங்கிரி மலையே இங்கு சிவனாக உள்ளது. பல சித்தர்கள் வாழும் மலை பல நோயிகளை தீர்க்கும் மூலிகை மலை இம்மலைக்கு நமக்கும் நெருக்கிய தொடர்புகள் அதிகம் உள்ளது. வெள்ளிங்கிரி மலை ஏழு மலை தொடர்கள் உள்ளது அதேபோல் நமது உடம்பில் சூட்சுமமாக ஏழு ஆதார சக்கரங்கள் உள்ளது இம்மலையில் நாம் ஏறும்போது நமது உடம்பில் சூட்சுமமாக செயல்படுகிறது. நமது உடம்பில் உள்ள நோய்கள் நீங்குகின்றன உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது அனைவரும் செல்வோம் இம்மலைக்கு இறைவன் அருளை பெறுவதற்கு ஓம் நமசிவாய... ஓம் வெள்ளிங்கிரி ஆண்டவர் திருவடிகள் போற்றி....
Saturday, May 26, 2018
Saturday, May 19, 2018
போகரின் அற்புதம் பாகம் 2
"இன்னும் ஒருமுறைகூட போகரின் நாடி படித்து ஏதேனும் மருந்தை போகர் சொல்கிறாரா என்று பார்த்து சொல்லுங்களேன்" என்றனர் அவர்கள்.
மறுபடியும் நாடியை படிக்க முன்னர் சொன்னதே இப்பொழுதும் வந்ததை கண்டு மனம் தளர்ந்த அவர்களை நோக்கி,
"வியாதிக்கு காரணமான கர்மாவையே அழித்தவர் சிவபெருமான். உங்கள் குழந்தையை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார். இனிமேல் அந்தக் குழந்தையை சிவபெருமானின் குழந்தை என்ற எண்ணத்துடன் தூக்கி சென்று, போகர் பெருமான் கூறியதை நிறைவேற்றுங்கள். நல்லதே நடக்கும்" என்றேன்.
அந்த தம்பதியர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;
"உங்கள் வாக்கை வேத வாக்காக வைத்து, இந்த நிமிடம் முதல் அந்தக் குழந்தை "சிவபெருமானின்" குழந்தை என்ற எண்ணத்துடன் சென்று நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டு வருகிறோம்" என்று கூறி விடை பெற்றனர்.
இரு வாரங்களுக்கு பின் அந்த இருவரும் என்னை காண வந்தனர். கையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக விளையாடியபடி இருந்தது. அவர்கள் முகத்தில் நிறையவே சந்தோஷம்; கூட நிறையவே புல்லரித்துப்போக வைக்கிற அனுபவங்கள். அந்த குழந்தையின் தந்தை நடந்ததை விவரித்தார்
போகர் சித்தர் சொன்னது போலவே ஹிமாலயத்தில் உள்ள அலகானந்த நதிக்கரைக்கு குழந்தையுடன் போய் சேர்ந்தோம். தண்ணீரின் வேகமும் அதில் உறைந்த குளிர்ச்சியின் வீரியமும் எங்களை அதிர வைத்தது. குழந்தையை எப்படி இந்த குளிர்ந்த தண்ணீரில் மூழ்கடிப்பது? என்ற யோசனை இருமுறை எங்களை தாக்கியது. மூன்றாவது முறையும் அந்த கேள்வி எங்களை தாக்கும் முன் சித்தர் சொன்னபடி இறைவன் நாமமான "நமச்சிவாய" என்பதை கூறிக்கொண்டே மெதுவாக ஒருமுறை பயத்துடன் முக்கினோம். என்ன நடந்தது என்று புரியவில்லை. பொதுவாகவே அப்படிப்பட்ட குளிர் உடலை தாக்கும்போது குழந்தை "வீ ல்" என்று அலறியிருக்கும். ஆனால் அந்தக் குழந்தை சிரித்தபடி அந்த நீரின் ஸ்பரிசத்தை விரும்பியது. அப்போது எங்கள் பக்கமாக நடந்து வந்த ஒரு சாது, "குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் குளிப்பாட்டி பத்திரமாக திருப்பி தருகிறேன், கவலை வேண்டாம்!" என்று கூறி வாங்கி சென்றார்.
குழந்தையை வாங்கி சென்றவர் நாங்கள் நின்ற பகுதிக்கு நேராக சற்று ஆழமுள்ள பகுதிக்கு சென்று குழந்தையை பலமுறை நீரியில் முக்கியபின் சற்று அருகில் வந்து குழந்தையின் உடலை தடவி கொடுத்து, பின் தன நனைந்த வஸ்திரத்தின் ஒரு முனையிலிருந்து சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் தடவி, சிறிதளவு அதன் வாயிலும் போட்டு அதன் வலது காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு எங்களிடம் தந்தார். குழந்தை கிடைத்த வேகத்தில் அதன் உடலில் உள்ள நீரை துவட்டும் வேலையில் கவனத்தை செலுத்தியதில் அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டோம். ஒரு நிமிட இடைவேளையில் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்த சாதுவை காணவில்லை. குழந்தையின் உடல் சூடு முன்னரை விட சற்று அதிகமாக இருக்கவே, குழந்தைக்கு எல்லாம் சரியாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊர் வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மருத்துவர்களே அசந்து போய் விட்டனர். எங்கள் குழந்தையின் இருதயத்தில் இருந்த ஓட்டை முழவதுமாக அடைந்து போய் இப்பொழுது பம்பிங் சரியாக நடப்பதாக சொல்கின்றனர். வந்தவர் யார் என எங்களுக்கு புரியவில்லை. எப்படி குணப்படுத்தினார் எனவும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் மட்டும் நடந்துள்ளது எங்கள் நன்றியை போகர் சித்த பெருமானுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
போகர் ஜீவ நாடியில் நடந்த அதிசயத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார்
"இந்தத் திருவிளையாடல் சிவ பெருமான் நேரடியாக நடத்தியது. சித்தர்களுக்கே தலையாய சித்தர் தான் ஒரு திருவிளையாடலை ஏதோ ஒரு காரணத்துக்காக நடத்த விரும்புகிறார் என்றால், எங்களுக்கு அங்கே என்ன வேலை? சொன்னதை சொல்வதுடன் எங்கள் வேலை முடிந்தது. அதனால் தான் எந்த மருந்தும் அந்த குழந்தைக்கு விதிக்கப்படவில்லை. சில திருவிளையாடல்களுக்கு அர்த்தம் புரியாது. புரிந்துகொள்ளவும் முயற்ச்சிக்கக்கூடாது." என்ற உபதேசத்துடன் நிறுத்திக்கொண்டார்.
சிவபெருமானே நம்மிடை சித்தனாக உலா வருகிறார் என்பதை அறிந்த பொழுது உண்மையில் நானே அசந்து விட்டேன்.

போகரின் அற்புதம் பாகம் 1
!!"ஜீவநாடி அற்புதங்கள்"!!
அகத்தியர் அருளும் "ஜீவநாடி" இருந்ததை போல், போகரின் ஜீவா நாடி ஒன்றும் அகத்தியர் அருளால் என்னிடம் வந்து சேர்ந்தது. பொதுவாக அதில், போகர் மருத்துவ முறைகளை பற்றியும், இன்ன வியாதிக்கு இன்ன மூலிகை என்றும் தகவல் தருவது வழக்கம். ஜீவ நாடி போலவே அதிலும் போகரின் வார்த்தைகள் தங்க நிறத்தில் வந்து போகும். அதை படித்து பலருக்கும் போகர் அருளால் மருந்துகளை கிடைக்க வழி செய்துள்ளேன்.
ஒருநாள் இரு இளம் வயது தம்பதியர் நாடி படிக்க வந்து அமர்ந்தனர். இருவரையும் அமரச்செய்து விஷயம் என்னவென்று விசாரித்தேன்.
"எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் தான் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு இப்பொழுது இரண்டு வயது ஆகிறது. பிறக்கும் போதே உடல் நலக் குறைவுடன் பிறந்துள்ளது. "
"என்ன உடல் நலக் குறைவு?"
"ஒன்றரை வயதானதிலிருந்து திடீர் திடீர் என்று உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். உடனே, குழந்தையை வாரி எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கி சென்று சிகிர்ச்சை அளித்தால் வியாதி விலகி விடுகிறது. ஆனால் மறுபடியும் அந்த வியாதியின் தாக்கம் எப்பொழுது வரும் என்பதை எங்களால், மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. எத்தனையோ மருத்துவ முறைகளை கையாண்டு விட்டோம். முதலில் மாதம் ஒருமுறை என்று வந்த உடல் நலக்குறைவு, இப்பொழுது வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது. கடைசியாக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர்தான் இந்த தாக்கம் எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்தார். பிறவியிலேயே எங்கள் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் உள்ளதாம். அதனால் ரத்தம் பம்ப் பண்ணுவது சரியாக அமையாத நேரங்களில், பிராணவாயு குறைவால் உடல் நீல நிறமாகிவிடுகிறது. இதற்கு இரண்டு வழிதான் உள்ளதாம். ஒன்று குழந்தைக்கு அறுவை சிகிர்ச்சை செய்து பார்க்க வேண்டும். ஆனால் குழந்தை அறுவை சிகிர்ச்சையை தாங்குகிற அளவுக்கு உடலில் சக்தியை பெறவில்லை. அதனால் அறுவை சிகிற்ச்சை செய்தால் பலன் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றார்".
"சரி! இரண்டாவது வழி என்ன சொன்னார்?"
"அந்த மருத்துவர் போகர் சித்தரின் மருத்துவ முறைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். அதனால், போகர் சித்தர் மனது வைத்தால் மருந்து மூலம் இந்த குழந்தையை பிழைக்க வைக்கலாம் என்றார். மேலும் அவர் உங்களிடம் போகர் நாடியில் போகரின் உத்தரவு என்ன என்பதை கேட்டு வரச் சொன்னார். தாங்கள் தான் போகர் நாடி படித்து எங்கள் பிரச்சினைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினர்.
போகரின் ஜீவநாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்து "சித்தபெருமானே! இந்த தம்பதியரின் குழந்தைக்கு நல்ல சரியான ஒரு தீர்ப்பை வழங்குங்கள்" என்று மனதுள் வேண்டிக்கொண்டேன்.
நாடியில் வந்த போகர் பெருமான் இவ்வாறு சொன்னார்.
"இந்தக் குழந்தையை சிவபெருமானால் மட்டும் தான் காப்பாற்றமுடியும். இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அது, ஒரு வியாழக்கிழமை அன்று அலகானந்தா நதியில் மூன்று முறை மூழ்கி குளிக்கப்படவேண்டும். அப்படி குளிப்பாட்டும் போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். கண்டிப்பாக சிவபெருமான் வந்து இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்" என்று கூறி உடனே மறைந்துவிட்டார்.
பொதுவாகவே போகர் சித்தர் கேட்ட கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் சொல்பவர். மருந்து எதையும் கூறாமல், குழந்தையை அலகாநந்தா நதியில் மூன்று முறை முக்கி குளிப்பாட்ட வேண்டும் என்று கூறியதை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் விட்டனர். அலகாநந்தா நதி குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற ஒன்று. பெரியவர்களே அதில் ஒரு முறை நீராடினால் விறைத்து போவார்கள். அதிலும் இந்த குழந்தை ரொம்ப பலவீனமான இதயத்தைக் கொண்டு பிறந்துள்ளது. அந்த குளிரில் மூன்று முறை முக்கி எடுத்தால் என்னவாகும்? என்று நினைப்பு எனக்கு.
"இதை தவிர வேறு எதுவும் போகர் கூறவில்லையா?" என்று கேட்டனர்.
போகர் சொன்னதை கூறிவிட்டேன், மருந்து எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னபடி செய்துவிட்டு வாருங்கள். கண்டிப்பாக நல்ல செய்தியுடன் திரும்பி வருவீர்கள்" என்றேன்.
சற்றும் நம்பிக்கை இல்லாமல் சோர்ந்த மனதுடன் எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.
இரண்டு மாதங்கள் வரை அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதியினர் வந்தனர். அந்த குழந்தையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் அவர்களால் போகர் நாடியில் வந்து சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
"உண்மை தான். போகர் நாடியில் வந்து சொன்னதை சாதாரண மனிதர்களின் மன நிலையில் இருந்தால் நிறை வேற்ற முடியாது தான். சற்றே திட மான மன நிலையுடன் சித்தர் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள். எல்லாம் வெற்றி அடையும். சீக்கிரம் போங்கள்" என்றேன்.
முருகன் அருள்
முருகா என்றால்:
காமம் அற்று போகும்.
பொறாமை நம்மை விட்டு விலகும்.
கோபம் நீங்கிவிடும்.
பேராசை அறவே இருக்காது
பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும்.
லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும்.
தாய்மை குணமுடைய முருகப்பெருமானத
ு திருவடிகளைப் பற்றி பூசித்தால் நம்மிடம் உள்ள தீயன ஒழிந்து நன்மைகள் அனைத்தையும் பெறுவதோடு மேற்கண்ட குணப்பண்புகளை முழுமையாகப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர் இரவு 9.00 மணிக்கு படுத்துவிட வேண்டும். அதிகாலை 4.30 மணிக்கே எழுந்துவிட வேண்டும். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து உலக பொதுமறையாம் ஞானபண்டிதரால் அளிக்கப்பட்டு அரங்கரால் வகுத்தும், தொகுத்தும் அளிக்கப்பட்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பாராயணம் செய்திடல் வேண்டும்.
இப்படி அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.00 மணி வரையிலான பிரம்மவேளையிலே தொடர்ந்து சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பாராயணம் செய்து வரவர, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவு உண்டாகி சுத்த சைவ உணவை மேற்கொள்வார்கள். பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும், லோபித்தனம் நீங்கி கொடுக்கக்கூடிய மனம் வரும். நிலையில்லாததை நிலையென்று நம்புகின்ற அறியாமை நீங்கும்.
இப்படி அதிகாலை ஞானியர் பூஜையை தொடர்ந்து செய்து செய்து வெற்றிப் பெற்றேன் நான். இது எனது சொந்த அனுபவமாகும்.
- ஓங்காரக்குடிலாசான், அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிகர்

Thursday, May 17, 2018
Monday, May 14, 2018
அகத்தியன் அருள் வாக்கு
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள்வாக்கு.
இறைவனின் கருணையைக்கொண்டு வாழ்த்துகளும், வாக்குகளும் மகான்களின் மூலம் வரும்பொழுது அது அப்படியே 100 –க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும் மனமகிழ்வே. ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும், எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதோடு அவனை சார்ந்தோரின் நிம்மதியையும், சார்ந்தோரின் பாவ கர்மாவை பொருத்து கெடுத்து விடுகிறது.
எனவே சுற்றி, சுற்றி, சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்களை விதியின் வாயிலாக பிறவியெடுத்து, பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆகவேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், ‘ இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபோல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது ‘ என்று எடுத்துக்கொண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே ‘சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி‘ என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே ? அந்த வழியில் பிரதான வழியாகும். ‘சித்தர்களை வணங்குவேன், ஸதலயாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன். ஆனால் பெருந்தன்மையோ, பொறுமையோ இல்லாது நடந்துகொள்வேன் ‘ என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை – இதுபோன்ற குணங்களை வளர்த்துக்கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மனோபாவமும் ஏற்படும்.
அகத்தியர் ஞானம்.
ஓம் அகத்தீசாய நமஹ

Friday, May 11, 2018
அகத்தியன் புகழ்
அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.
மகான் காகபுஜண்டர் - 7.
மகான் காகபுஜண்ட மகரிஷி அருளிய கவியின் சாரம்:
உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்;டி எழுப்பியவர்கள்தான் ஞானிகளாவர். அந்த வரிசையில் காகபுஜண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மக்களானவர்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். இவரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர்.
அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு சொல்வதற்கு யாராலும் முடியாது. ஆசான் புஜண்ட மகரிஷி அவர்கள் காகபுஜண்டர் காவியம் ஆயிரத்தில் "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்" என்று முதல் வரியில் சொல்லியுள்ளார்.
ஆசான் அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசாய நம" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமஜெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார். அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பது இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ரகசியம் ஆகும். அந்த ரகசியங்களை எவ்வாறு சொன்னால் வருங்கால தொண்டர்கள் உணர முடியுமோ? அதற்கேற்றாற்போல் வெளியாக பாடியுள்ளார். மேலும், அவர் பாடல் கேட்பதற்கு இனிமை உடையதாகவும் இருக்கும். அவர் தவம் செய்து தங்கிய இடம், பொதிகை மலை என்ற மேருவாகும். பொதிகை மலைக்கு அரசனும் அவரே ஆவார். அவருடைய கருணையே மேருமலைக்கு ஒப்பாகும். அவர் கருணையால்தான் இதற்குமுன் பலகோடி ஞானிகளும் கடவுள்தன்மை அடைந்துள்ளார்கள். மேலும், வருங்காலத்திலும் பலகோடி மானுடர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கடவுள்தன்மை அடைய இருக்கிறார்கள். எனவே, அகத்தீசன் நாமத்தை சொன்னால் நவகோடி சித்தர்களும் நமக்கு உற்ற துணையாக இருந்து மலமாயையும், மனமாயையும், பந்த பாசத்தையும் நீக்கி என்றும் அழியாத பேரின்ப வாழ்வு தருவார்கள்.
நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசாய நம" என்று நாம நாமஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான ரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.
ஒருசிலர் பல சாஸ்திரங்களை படித்துபடித்து முதுமை வந்து இறந்து போனாரே தவிர ஒரு கடுகளவும் உண்மை தெரிந்துகொள்ளவில்லை. காரணம், ஆசான் திருவடியை பூஜைசெய்துபூஜைசெய்து ஆசி பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை. ஞானவாழ்வு என்பது குரு அருளால்தான் கைகூடும் என்று புண்ணியவான்களுக்கு மட்டுமே புலப்படுவதாகும். நல்வினை இருந்தால்தான் குருவருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். புண்ணிய பலம் இல்லாத கசடர்கள் தம்தம் திறமை கொண்டு முன்னேற முயற்சிப்பார்கள். இவர்களெல்லாம் களம் சார்ந்த பதராகும். அவர்களிடம் உண்மையை உணர்ந்தவர்கள் சொன்னாலும் யார் உபதேசமும் எனக்கு தேவையில்லை, எனக்கு கல்வி உள்ளது நானே படித்து தெரிந்து கொள்வேன் என்பார்கள். இவர்கள்தான் நடமாடும் சவமாகும்.
அகத்தியர் சன்மார்க்க சங்கத்தார்கள் மட்டும்தான், குருவருள் ஒன்றுதான் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியும் என்று உறுதியாக நம்பி தினமும் ஆசான் அகத்தீசனை பூஜை செய்து வருகிறார்கள்.
மகான் காகபுஜண்டர் உலகமக்கள்பால் கருணை கொண்டு மேற்கண்ட பாடலை அருளியுள்ளார். வருங்கால ஆன்மீக தொண்டர்களுக்கு இந்த பாடலே உபதேசமாகும். எனவே அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்று கொள்வோம்! பெரும்பேற்றை பெற்று பேரின்பம் பெறுவோம்!!.
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

அரங்கமகா தேசிகர் அருளுரை
அரங்கமகா தேசிகர் அருளுரை முருகா என்றால்
மனமுவந்து அன்னதானம் செய்வதற்கும், உலகப்பொது வேதமாம் சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பாராயணம் செய்வதற்கும் முருகன் அருளும் ஆசியும் வேண்டுமென்று அறியலாம்.
முருகனை வணங்க வணங்க முருகனே அரங்கனுருவில் இக்கலியுகம் மாமாயையினின்று விடுபட்டு அற்புதமாய் அறியாமை இருள் நீங்கி ஞானஒளி பெற்றிடவே வேதங்களின் முடிவாய், ஞானநூல்களின் முடிவாய், அநேகஅநேக புராண இதிகாச சாஸ்திர ஸ்தோத்திர நூல்களின் முடிவாயும் இறுதியாயும் , எளிமையாயும், வெட்டவெளியாய் இந்நூலை அமைத்தனன் முருகன் என்று உணரலாம்.
ஞானிகளின் நாமசெபமே உம்மை ஞானியாக்கும் என்ற பேருண்மையையும் அதனுள் ஆழப்புதைத்து வைத்தனன் அந்த ஆறுமுகன் என்ற உண்மையையும் உணரலாம். முருகனை வணங்க வணங்க வேத, ஞான, இதிகாச, புராண, சாஸ்திர, ஸ்தோத்திர நூல்களினை படித்து அதன் உட்பொருள்தனை விவாதித்து, கற்று, கேட்டு, தெளிந்து, அறிந்து, உணர்ந்து, அதன்பின் உண்மைப்பொருளை அவரவர் மனதினுள் தோன்றியபடி தோன்றியவாறு உணர்ந்து கடைத்தேறுவது என்பது எந்த சென்மத்திலும் நடக்காது என்றும் இதையெல்லாம் தோற்றுவித்த ஞானிகளை அற்புதமாய் பக்தியினாலே மனம்உருகி அவர்தம் திருவடிப்பற்றி பூசித்திட கல்லை பொன்னாக்கும் வல்லமை பெற்றவரும், ஆணை பெண்ணாக்கும் இன்னும் எல்லாம் சாதிக்கவல்ல ஞானிகள் அறியாமையில் உள்ள நம்மை விரைந்து ஆட்கொண்டு கருணையால் அனைத்தையும் நமக்கருளி முக்திதனையும், சித்திதனையும் அருளிக் காப்பார்கள் என்ற அதிநுட்பமான பேரறிவைப் பெற்று ஞானிகள் திருவடியையும் ஞானத்தலைவன் முருகன் திருவடியையும் பற்றி கடைத்தேறலாம் என்ற உணர்வு மேலோங்கி நூல்களை அளவோடு படித்து விவாதம் தவிர்த்து ஞானிகள் திருவடியை பூசித்திடுவான்.
ஞானிகள் பதம் பற்றி ஞானபண்டிதன் பதம்பற்றி போற்றி போற்றி துதித்து துதித்து உளம் உருகி பூசித்து கடைசியில் ஞானிகள் அருளைப் பெற்றே விடுவான் ஞானிகள் அருளைப் பெற்று பெற்று முருகன் அருளையும் பெற்றேவிடுவான் அந்த பாக்கியசாலி. முருகா! முருகா!! முருகா!!! என்றே மனமுருகி பிரார்த்தியுங்கள், முருகன் அருளைப் பெற்று சித்தி முக்தியை பெற்று கடைத்தேறுங்கள்.

அன்னதானமும் பூஜையும் அவரவர் ஆன்மலாபத்திற்காக தன்னலமற்று பிரதிபலன் பாராது செய்கின்ற புனிதச் செயல்களாகும் என்றும், அவற்றை பிரதிபலன் கருதி செய்வதினாலே பலனில்லை என்ற உண்மையையும் உணரப்பெறுவார்கள்.
ஒரு மனிதன் காலை எழுந்து உடலில் உள்ள கழிவுகளை காலத்தே வெளியேற்றி பசித்தபோது உடல் வளர்க்க உணவினை உண்டு, உடல்தனை ஆரோக்கியம் கெடாமல் உடம்பிற்கு என்னென்ன வேண்டும்? எது நல்லது? எது கெட்டது? என்று பார்த்து பார்த்து செய்வது போலவே அவனது ஆன்மாவிற்கு என்ன செய்கின்றான் என்றால் ஒன்றுமில்லை.
உடல் காக்க ஏதேதோ செய்து செய்து காக்கும் அவன் அவனது ஆன்மாவிற்கு ஆக்கம் தருகின்றது எவை எவை என்றே தெரியாமல் வெகுபேர் தடுமாறுகின்றனர்.
முருகப்பெருமானை வணங்க வணங்க முருகன் அருள்கூடி அருள் பெறும் அன்பர்தாம் அவரவர் செய்த செயல்களிலே கர்வம் கொள்ளாது அவர்தம்மை ஆறுமுகன் காப்பான்.
உடல்காக்க உணவு உண்டு மருத்துவம் செய்வது என்ற பலவழிதனிலே உடலை காத்து வரும் மனிதன் ஆறுமுகனார் அருள்கூடிட பல ஞானிகளுக்கு அறிந்தோ அறியாமலோ செய்திட்ட தொண்டின் பலனினால் அவன்தன் ஆன்ம அறிவு தூண்டப்பட்டு உடல் வளர்த்தல் மட்டுமே வாழ்வன்று, உடம்பின்கண் உறையும் ஆன்மாவையும் ஆக்கம் பெறச் செய்ய வேண்டுமென்ற அருளுணர்வு மேலோங்கும்.
அவனின் அந்த அருளுணர்வு ஆறுமுகனாம் முருகப்பெருமான் அவனுக்களித்த அருள் பிட்சையாகும். அந்த அருள் பிட்சையே அவன் அவனது பிறப்பினிலே மனிதனாய் பிறந்ததின் பலன்தனை பெறும் பயனாம்.
அருள்பிட்சை பெற்றவன் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் வாழ்ந்து, உயிர்க்கொலை பாவத்திலிருந்து தப்பிக்கின்றானோ அதுவே அவன் தனக்கு ஆண்டவன் ஆறுமுகன் செய்கின்ற அளவிலாத கருணையாகும். பிறர் தமக்கு அன்னதானம் செய்திட வேண்டுமென்ற உணர்வே உயிர்க்கொலை தவிர்த்தால்தான் வரும். உயிர்க்கொலை தவிர்த்தது முருகனின் அருள்பிட்சை.
அன்னதானம் செய்திட வேண்டும், புண்ணியம் சேர்க்க வேண்டும், பூசை செய்திட வேண்டும், இறையருள் பெற்றிட வேண்டுமென்ற உணர்வு வருவதே பரப்பிரம்மம் முருகன் அளவிலாத கருணைக்கொண்டு அவனுக்கு அளித்திட்ட பிட்சையாகும். பிட்சைபெற்ற நாம் அருளாளன் முருகன் திருவடியை மனமுருகி பூசித்திட வேண்டுமே அன்றி பூசை செய்துவிட்டோம் அன்னதானம் செய்துவிட்டோம் என்று வியப்பது தன்னை வியந்து பாராட்டிக் கொள்வது இவை தம்மால் செய்யப்பட்டது, தனது ஆற்றலால், தனது பணத்தால், தனது உழைப்பால், தனது செயலால், தனது அறிவால் செய்தோம் என்று எண்ணுவதே தலைவன் அருள் அவன்பால் குறைகின்றது என்பதை உணர்த்துவதாகும்.
முருகன் போட்ட பிட்சையால் வாழும், பாவம் சூழ்ந்த மனிதவர்க்கம் நமக்கு ஏதோ போனால் போகிறது என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவன் முருகன் நமக்கு நல்லதை சொல்லித் தந்தான். பிரம்மாண்ட ஞானத்தில் அணுவளவே அன்னதானம் செய்தும் பூஜை செய்தும் தயவை அடையலாம் என்ற உண்மை, அதை தெரிந்து கொண்டு பெரிய பெரிய விஷயங்களை தெரிந்து கொண்டதாக எண்ணி சிலபேர்க்கு அன்னதானம் செய்துவிட்டு ஏதோ சிறிது பூசை செய்துவிட்டு பெரியதாக இறைவனை மகிழ்வித்து விட்டதாக மனதினுள் கற்பனை செய்து கொண்டு நான் அன்னதானம் செய்தேன், மனமுருகி பூசை செய்தேன், ஒன்றுமே நடக்கவில்லை என எதிர்பார்ப்பது மலையை உடைக்க சிறுகடுகை தெளித்துவிட்டு மலை உடையும் என எதிர்பார்ப்பதை போலானதாகும்.
அவனவன் செய்திட்ட பாவம்தான் எவ்வளவு எவ்வளவு. அவனவன் செய்திட்ட பாவச்சுமையின் அளவு கணக்கிலடங்காது. அவ்வளவு பாவச்சுமைகள் இருக்கும்போது சிறிதளவு புண்ணியம் செய்துவிட்டு சிறிதளவு பூசை செய்து விட்டு பெரும் பலனை எதிர்பார்ப்பது தவறு என்ற உண்மை உணர்வு முருகப்பெருமானை பூசை செய்வதால் வரும்.
உணர்வு வந்துமே ஆறுமுகன் திருவடியே கதியென்று பற்றினால் அன்றி நாம் செய்திட்ட பாவத்திலிருந்து விடுபட முடியாது என்றும் உடம்பை வளர்க்க உணவு உண்பதும் உடம்பின் நலன் பெற கழிவு நீக்கமும் அவசியமான கடவுளின் கட்டளை என்பதைப் போலவே. ஆன்ம பெருக்கம் ஆன்ம வளர்ச்சிக்கு புண்ணியமும் அருளும் தேவை என்பதினாலே அன்னதானம் செய்து புண்ணியம் பெருக்கி ஆன்மபலத்தையும் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்து அவனருள் பெற்று ஆன்ம விளக்கம் பெறுதலும் நித்திய கடமைகள் என்ற உண்மை உணர்வு மிகுந்து அன்னதானமும் பூசைகளும் பிரதிபலன் எதிர்பாராது செய்திட வேண்டுமென்ற உள்ளுணர்வு மிகும்.
அன்னதானமும் பூசையும் ஆன்மலாபம் பெறுவதற்காக முருகப்பெருமானால் உமக்கு அளிக்கப்பட்ட அருள் பிட்சையாகும். அந்த அருள்பிட்சை பெற்றிட்ட நாம் ஞானத்தில் வெகுதொலைவு சென்றதாக கற்பனை பண்ணாமல் மேலும் மேலும் முருகன் திருவடியைப் பற்றிட வேண்டுமென்ற தன்னடக்கமும் நான் செய்ததோ என்றில்லாமல் ஆண்டவ உனது அருளால் சிறிது செய்தேன் ஏற்றருள் புரிவாய், நாயிற் கடையேனாகிய எமது பாவங்களையெல்லாம் ஒழித்து திருவடி பற்றிட அடியேன் எம்மை வழிநடத்துவாய் ஞானத்தலைவனே......

அகத்தியன் திருவடி பேரு
அகத்தியனே அருள் குருவே நின் திருவடியே சரணம் அகத்தியனே அருள் ஜோதியே நின் திருவடியே சரணம் அகத்தியனே வினை அறுப்பவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே ஞானத் தலைவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே கருணை கடலே நின் திருவடியே சரணம் அகத்தியனே உயிர் ஈசனே நின் திருவடியே சரணம் அகத்தியனே பிறவியை அறுப்பவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே பாவத்தை போக்கும் புண்ணியனே நின் திருவடியே சரணம் அகத்தியனே சித்தன் தலைவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே கேட்டதை தரும் கற்பகமே நின் திருவடியே சரணம் சரணம் சரணம் சரணம் சமர்ப்பணம்........
முக்திக்கு எளிய வழி
Thursday, May 10, 2018
அருளே அகத்தியன் திருவடி
வினை அறுத்தல்
பாரப்பா பிறவியதை
வினை மரத்தின்
பழமென்று முன்னம்
நீ போட்ட விதை
இப்பிறவி என்றாச்சே
விதைக்காமல் நீ இருந்தால்
பிறவியது ஏதப்பா?
பிறவி அறுக்க மார்க்கம்
காண நாடிடுவாய் கும்பனை ,
செப்பினார் கும்பனும்
வினை அறுக்கும்
உபாயத்தை
செய்திடுவாய் மகத்தான
சித்தர்களின் பூசை தன்னை
பூசையோடு தர்மம் செய்ய
மறவாமல் நீ இருந்தால்
வினையது விளகுமப்பா
காட்சிகளும் கிட்டிடுமே!
வினையறுக்கும் முயற்சி தன்னை
வினையதுவே பாழாக்கும்
திடமாக நீ இருந்து
கும்பனடி பற்றிடுக
அகத்தியனின் திருவடியே
போதுமென்று நீ இருந்தால்
சத்தியமாய் வந்துன்னை
ஆட்கொள்வார் பொதிகை முனி!
பாரப்பா பிறவியதை
வினை மரத்தின்
பழமென்று முன்னம்
நீ போட்ட விதை
இப்பிறவி என்றாச்சே
விதைக்காமல் நீ இருந்தால்
பிறவியது ஏதப்பா?
பிறவி அறுக்க மார்க்கம்
காண நாடிடுவாய் கும்பனை ,
செப்பினார் கும்பனும்
வினை அறுக்கும்
உபாயத்தை
செய்திடுவாய் மகத்தான
சித்தர்களின் பூசை தன்னை
பூசையோடு தர்மம் செய்ய
மறவாமல் நீ இருந்தால்
வினையது விளகுமப்பா
காட்சிகளும் கிட்டிடுமே!
வினையறுக்கும் முயற்சி தன்னை
வினையதுவே பாழாக்கும்
திடமாக நீ இருந்து
கும்பனடி பற்றிடுக
அகத்தியனின் திருவடியே
போதுமென்று நீ இருந்தால்
சத்தியமாய் வந்துன்னை
ஆட்கொள்வார் பொதிகை முனி!
Tuesday, May 8, 2018
Monday, May 7, 2018
முருகன் நாடி சுவடி
முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வு குறித்த
மகான் சுப்பிரமணியரின் ஆசி நூல்
பலமோடு பண்புமிக்க பரதமே
பழனி ஆண்டவன் என் துணைமிக்க தமிழகமே
பலனாக இந்தியா தமிழகம் தன்னில்
பாடிடுவேன் இந்த வார நிகழ்வு ஆசிதனை
தன்னிலே விளம்பி சித்திரை திங்கள்
தாமுரைப்பேன் மூவேழீர் திகதிமேல் முப்பான் திகதிவரை
(விளம்பி சித்திரை 23ம் நாள் 06.05.2018 முதல் சித்திரை 30ம் நாள் 13.05.2018, வரை)
அண்ணல் அரங்கஞானி கேட்க
அறிவிப்பேன் எதிர்கால வார பலனாக
பலனாக சுப்பிரமணியரும் விளம்பிடுவேன்
பாடிடுவேன் தமிழகம் தன்னில்
சலனமுற்று சூழ்ச்சியான அரசியலில்
சாதித்தவர்கள் எல்லாம் சரிந்து போவர்
போவரப்பா போக்கிடம் அறியா
புண்ணிய பலம் பெற்ற மக்களே
ஆவரப்பா ஆளுமை பதவிகளில்
ஆறுமுகன் என் ஞான ஆட்சி காலம்
காலம் கனிய இருக்கவே
கடமை தவறுபவர்கள் கண்ணியம் இல்லாதவர்கள்
வேலன் என் பலம் உணராதவர்கள்
வினை வழி உயிர் உடமை என
என யாவும் இழந்து அல்லலும்
எண்ணற்ற கீழ் பிறவிகள் எடுத்தும்
ஊனமாக ஞானமிலா திரிய நேரும்
உத்தரவாக உயர் பதவி மக்களுக்கு
மக்களுக்கு விளம்பினேன் இன்று
மனமுவந்து ஏற்றுத் திருந்தி
பக்குவமுற ஆளுமை புரிய
பதவி வழி பணிவுடன் பரோபகாரம்பட
பரோபகாரம்பட சேவை ஆற்றுபவரே
பதவி சிறந்து பாருலகில் பவனி வருபவர்
துரோகம் அநீதி லஞ்சம் வஞ்சமென
தீவழி நடப்பவர் துணைபோகுபவர் எல்லாம்
எல்லோரும் கலிகால அழிவில்
இருப்பிடம் தெரியா அழிவு காண்பர்
வல்லமை பெற்று சிறக்க வேணுமா
வளர்ச்சி கொள்கை பரவ வேணுமா
வேணுமாயின் என் சக்திமிகு அரங்கன்
வினவிட ஞான கொள்கை ஏற்று
ஞானக்குடிலுக்கு வாருங்கள்
ஞானிகள் பூசை கலந்து வணங்கி
வணங்கியே ஞானவழி நடந்து
வடிவேலன் என் நாமசெபம் சொல்லுங்கள்
இணங்கியே தருமப்படி நடந்து வாருங்கள்
எல்லா காலமும் பாதுகாப்பு கிட்டி
கிட்டியே ஞான ஆட்சி உதயமாகும்
கேட்டிடுவாய் நடுவண் மாநில அரசுகள்
திட்டம் வழி இணைந்து மக்களுக்கு
தீங்கில்லா சேவை ஆற்றிட வளரும்
வளரும் மலரும் ஞான ஆட்சியாக
வல்லமையென தருமநெறி மீறி
தளரும் நிலைக்கு மக்களை நோக்கி
தவறுகள் தகாத திட்டங்கள் கொண்டால்
கொண்டாலோ தமிழகம் எல்லை
குழப்பம் பதட்டம் குறையா வண்ணம்
உண்டாகும் போராட்டம் புரட்சி
உலக இயற்கையும் சீற்றம் காணும்
காணவே தமிழகம் காக்கப்படவே
கட்டாயம் ஆளுமைகள் வரலாற்றில்
தானாக பேரு புகழ் அடையும்
தரணி வியக்க வல்லரசாக மாறும் வார ஆசி நூல் முற்றே.
-சுபம்-
முருகப்பெருமான் துணை
மகான் சுப்பிரமணியர் அருளிய வார ஆசி நூலின் சாரம் :
பலமும் பண்பும் கொண்ட பரததேசமே பழனி ஆண்டவன் முருகப்பெருமான் எனது துணைமிக்க தமிழகமே இந்தியாவிலும் தமிழகத்திலும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 23ம் நாள் 06.05.2018, ஞாயிறு முதல் சித்திரை மாதம் 30ம் நாள் 13.05.2018, ஞாயிறு முடிய உள்ள ஒரு வார காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்.
தமிழகத்தில் மனச்சலனத்தினால் சூழ்ச்சியான அரசியல் செய்து வெற்றி கண்டவர்கள் எல்லாம் சரிந்து போவார்கள். அவர்கள் எல்லாம் போகுமிடம் தெரியாமல் போய்விடுவார்கள். புண்ணிய பலம் பெற்றிட்ட மக்களே ஆட்சி பொறுப்புகளில் பதவி வகிப்பார்கள். முருகப்பெருமான் எனது ஞானஆட்சி காலம் விரைவில் உலகினில் அமைய இருக்கின்றபடியினால் உலக மக்களே இனியேனும் உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.
கடமை தவறுபவர்கள், கண்ணியமும் இல்லாதவர்கள் முருகப்பெருமான் எனது பலத்தினை உணராதவர்கள், அவர்கள் செய்த பாவவினைகளினால் பீடிக்கப்பட்டு வினை வழி சென்று உயிர் உடைமை என யாவையும் இழந்து அல்லல்பட நேரும். எண்ணிலாத கீழ்நிலையான பிறவிகளை எடுத்து பகுத்தறிவு அற்ற நிலையில் திரிய நேரிடும்.
உயர்பதவி வகிக்கும் மக்கள் தமக்கு சுப்பிரமணியர் எனது அறிவிப்பாய் கூறுகிறேன். உயர் பதவி வகிக்கும் மக்களே இனியேனும் மனமுவந்து நன்னெறி ஏற்று திருந்திக் கொள்ளுங்கள். பக்குவமுடன் ஆட்சி செய்திட பதவியை பயன்படுத்தி பணிவுடன் நடந்து பரோபகாரம்பட நடந்து தங்களது பதவியை சேவை மனப்பான்மையோடு செயல்படுபவர்களே பதவியில் சிறந்து விளங்கி இவ்வுலகினில் தொடர்ந்து ஆட்சி புரிவார்கள்.
துரோகச் செயல்கள் செய்பவர்களும், அநீதியான செயல் செய்பவர்களும், லஞ்சம் வாங்குபவர்களும், வஞ்சமாய் செயல்புரிபவர்களும், தீயவழியில் நடப்பவர்களும், அதற்கு துணை போகும் மக்களும், கலிகால அழிவினில் இருக்கும் இடம் தெரியாமல் அழிவைக் காண்பார்கள்.
வல்லமை பெற்று சிறப்பான வாழ்வை பெற வேண்டுமா, வளர்ச்சி கொள்கை பரவ வேண்டுமா, வேண்டுமாயின் சுப்பிரமணியன் என் சக்திமிகு அரங்கன் ஞானக்கொள்கைகளை ஏற்று அரங்கன் வாழும் ஞானத்துறையூர் ஓங்காரக்குடிலுக்கு வாருங்கள். ஆங்கே நடக்கும் ஞானிகள் பூஜையில் கலந்து வணங்கி அரங்கன் கூறும் ஞானவழி
Friday, May 4, 2018
குருவே அகத்தியன்
முருகப்பெருமானின் முதன்மை சீடன் ஆசான் அகத்தியர் சித்தர்களின் முதன்மை சித்தன் ஆவான். முருகப்பெருமானின் கட்டளை படி ஆசான் அகத்தியன் பூமியில் யுகம் யுகமாக இருந்து மக்களை காத்துவருகிறார். அவன் திருவடியை தொழுதவருக்கு என்றும் மரணமில்ல பெருவாழ்வை தந்து அருள்வான். ஆசான் அகத்தியர் பொதிகை மலையின் அரசன் அவனே திருவடியை தொழுது ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வோம் ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம....
Wednesday, May 2, 2018
அகத்தியன் கவிதை
அகத்தியன் கவிதை பொதிகை மலையின் அரசனே எல்லா உயிரின் ஈசனே குறைகள் போக்கும் யோகியே பிறவியை அறுக்கும் அய்யனே வினையை அழிக்கும் ஜோதியே உன் திருவடியே சரணம்
Agathiyan arul
ஓம் அகத்தீசாய நம அகத்திய பெருமானே உனது திருவடியை தொழுவதற்கு என்றும் உறுதுணையாய் இருப்பவனே.மரணமில்லா பெருவாழ்வை அளிப்பவனே உனது திருவடியே சரணம். இரவும் பகலும் துணையாக இருப்பவனே. பொதிகை மலை வாசனே எந்தன் உயிர் ஈசனே அரும்பெரும் ஜோதியே அடியேன் உள்ளத்தில் அமர்ந்த பரம்பொருளே என்றும் எங்களை காத்துஅருள்வாய்..... ஓம் அகத்தீசாய நம ஓம் நந்தீசயா நம ஓம் திருமூல தேவாய நம ஓம் போகதேவயா நம ஓம் கருவூர் தேவாய நம ஓம் இராமலிங்க தேவாய நம ஓம் ஆறுமுக அரங்கமாக தேசிகாய நம
Subscribe to:
Posts (Atom)