Thursday, December 19, 2024
நவ தீப வழிபாடு ❤️❤️❤️
12/11/2024.அன்று பெங்களூரு சத்சங்கத்தில்... பக்தர்களுக்கு குருநாதர் அகத்தியர் பெருமான் கொடுத்த உத்தரவு!!!
பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்று உத்தரவு தந்துள்ளார் குருநாதர் அகத்தியர் பெருமான்.
அப்பனே நன்றாகவே பின் அதாவது சரியாகவே அப்பனே ஒரு பட்டு துணியை அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது தூய மஞ்சளில் இட்டு பின் நனையுங்கள் நீரினாலே!!!
அறிந்தும் கூட அதை கீழே வையுங்கள்!!!!
அப்பனே/ அம்மையே!!!
இவை அறிந்தும் கூட நிச்சயம் அதன் மேலே வெற்றிலை பாக்கும் கூட!!!!
அறிந்தும் கூட நிச்சயம் பின் உதாரணத்திற்கு பின் சூரியனுக்கான பின் எவை என்று அறிய அறிய தானியம்
(கோதுமை) அறிந்தும் கூட அதை பரப்புங்கள்!!!
அறிந்தும் இதையென்று புரிய நிச்சயம் பின் இதன் மேலே பின் தீபம் வையுங்கள்!!!
அறிந்தும் இதை தன் சூரியனாக (தீபத்தை) நினைத்துக் கொள்ள வேண்டும்!!!
அறிந்தும் இதை என்று பயன்படுத்த நிச்சயம் பின் அறிந்தும் கூட ஜோதியை ஏற்றுங்கள்.
அப்பனே நன்றாகவே இவை என்று அறிந்தும் இதை தன் பின் உண்மையென புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் கிராம்பையும் கூட நல்விதமாகவே அறிந்தும் கூட பச்சை கற்பூரத்தையும் கூட ஏலக்காயையும் கூட நிச்சயம் பின் மாவாக்கி...(இவை மூன்றையும் பொடித்து) பின் அத் தீபத்தில் உள்ளே இட்டு பின் சூரியனுக்காக அதாவது காயத்ரி மந்திரத்தையும் கூட 108 முறை செப்புங்கள்!!!
இதே போல் பின் சந்திரனுக்கும் குருவானவனுக்கும் ராகுவானவனுக்கும் கேதுவானவனுக்கும் இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தீபமாக நவ தீபங்கள். ஏற்ற வேண்டும்!.
இப்படி ஒவ்வொரு நவகிரகத்திற்கும் பட்டு துணி தீபம் வெற்றிலை பாக்கு அந்தந்த கிரகத்திற்குரிய தானியங்களை வைத்து ஏற்றி அந்தந்த கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை செப்புதல் வேண்டும்
இப்படியே அனுதினமும் செய்ய வேண்டும்.
இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!!
அதனால்தான் முதலிலேயே சொன்னேன். இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள்... தை! மாசி! மாதங்கள் வரை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment