Monday, December 4, 2023
சித்தன் அருள் - 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்
சமீபத்தில், அடியவர் ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்த கேள்வியை குருநாதர் அகத்தியப் பெருமானிடம் நாடியில் கேட்ட போது, உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்)
ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச் சொன்னேன்? எதை என்றும் அறிய அறிய அதுவே கடைசி எதை என்றும் அறிய அறிய பின் ஈர்ப்புத்திறன் அதாவது எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட தனுஷ்கோடி எதை என்றும் புரியப்புரிய அங்குதான் இவ் ஆன்மாக்கள் (முன்னோர்கள்) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது எதை என்றும் கூற இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக் கொள்ளும். எதை என்றும் கூற அடுத்த படியாக எவை என்றும் பின்பற்ற அங்கு சென்றால் எதை என்றும் அறிய அறிய (தனுஷ்கோடி) அருகே சென்றால் உங்களுக்கும் எதை என்று அறிய அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் எதை என்று கூற அவ் ஆன்மா (முன்னோர்கள்) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்துவிடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் எதை என்றும் அறிந்து அறிந்து அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச் சொல்கின்றேன். போகச் சொல்கின்றேன்.
(முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment