Monday, December 4, 2023

சித்தன் அருள் - 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்

சமீபத்தில், அடியவர் ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்த கேள்வியை குருநாதர் அகத்தியப் பெருமானிடம் நாடியில் கேட்ட போது, உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்) ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச் சொன்னேன்? எதை என்றும் அறிய அறிய அதுவே கடைசி எதை என்றும் அறிய அறிய பின் ஈர்ப்புத்திறன் அதாவது எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட தனுஷ்கோடி எதை என்றும் புரியப்புரிய அங்குதான் இவ் ஆன்மாக்கள் (முன்னோர்கள்) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது எதை என்றும் கூற இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக் கொள்ளும். எதை என்றும் கூற அடுத்த படியாக எவை என்றும் பின்பற்ற அங்கு சென்றால் எதை என்றும் அறிய அறிய (தனுஷ்கோடி) அருகே சென்றால் உங்களுக்கும் எதை என்று அறிய அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் எதை என்று கூற அவ் ஆன்மா (முன்னோர்கள்) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்துவிடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் எதை என்றும் அறிந்து அறிந்து அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச் சொல்கின்றேன். போகச் சொல்கின்றேன். (முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்

சித்தன் அருள் - 1524 - அகத்தியப்பெருமானின் ஒரு உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! உங்கள் அனைவரிடம் அகத்தியப்பெருமான் உரைத்த ஒரு விஷயத்தை தெரிவிக்க விழைகிறேன். ஒரு குழந்தை, உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அடியேனுக்கு செய்தியை கூறி, திரு,ஜானகிராமனிடம் நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்க வேண்டினர். எங்கு பயணம் செய்தாலும், இப்படிப்பட்ட வேண்டுதல்களை அடியேன் தெரிவிக்கின்ற பொழுது அதற்கு, குருநாதரிடம் வாக்கு கேட்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு உடன்படிக்கை. பல அடியவர்களும், நோயினால் அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது தொடர்பு கொண்டு வாக்கு கேட்கும் பொழுது, அகத்தியப்பெருமான் ஒரு விஷயத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டி இந்த தொகுப்பு. "காப்பாற்றுங்கள் என யார் ஓடிவந்தாலும் கருணையுடன் அருள்வது எங்கள் வழக்கம். ஆயினும், நோய் வாய்ப்பட்டவர், அவர் குடும்பத்தார் போன்றவர்களின் புண்ணிய பலத்தை பொறுத்துதான் எங்களால் காப்பாற்ற முடியும். ஒரு சில வேளைகளில் அந்த நேரத்தில் சில புண்ணியங்களை செய்தால் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், ஒரு சில பரிகார, புண்ணிய செயல்களை செய்யச் சொன்னால், மனதில் எந்த குறைகளையும் நினைக்காமல், மிகுந்த பக்தியுடன் அதை உடனே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், இதை விடவும் கொடிய சூழ்நிலைகள் அனைவரின் வாழ்க்கையிலும் வரும். அதை நேர் கொள்வதற்காகத்தான், புண்ணியத்தை செய்யுங்கள், சேர்த்துக்கொள்ளுங்கள், ஒரு உயிரை வதைக்காதீர்கள், அசைவம் அறவே தவிருங்கள் என உரைக்கிறோம். மேற்கொண்ட எதுவுமே செய்யாதவர்களுக்குத்தான், இறைவன் தண்டனையை இடிபோல் இறக்கி பலமான சோதனைகளை கொடுத்து, கதற விடுகிறான். எங்கள் அருள் வேண்டின், தினமும் உணவு உண்பதுபோல், தின வாழ்க்கையில் ஏதேனும் ஒரு புண்ணியத்தை சேர்த்திருக்க வேண்டும். இதை மனதில் இருத்தி எம் சேய்கள் அனைவரும் வாழ்ந்துவர ஆசிகள்!" அடியவர்களே, புண்ணியம் செய்வது நாம் சுவாசம் விடுவது போல் இருக்க வேண்டுமே அன்றி, தலைவலி மாத்திரை எடுத்துக் கொள்வது போல் இருக்கக்கூடாது! புரிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கேன் இந்த தலைவலி என யாரேனும் நினைக்கலாம். அடியேன் கூறிக்கொள்ள நினைப்பது ஒன்றுதான். முகம் பார்க்காமல் உதவினும், தோல்வியின் பக்கம் நிற்க அடியேன் ஒரு போதும் விரும்பாதவன். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

இராமலிங்க அடிகளார்

ஓம் இராமலிங்க அடிகளார் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!! ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே. பாடல் விளக்கம்:- ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம். அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை. நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார் கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்து விட வேண்டும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும். நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். சென்னையில் உறையும் கந்தவேளே ! குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.