Monday, December 4, 2023

சித்தன் அருள் - 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்

சமீபத்தில், அடியவர் ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்த கேள்வியை குருநாதர் அகத்தியப் பெருமானிடம் நாடியில் கேட்ட போது, உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்) ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச் சொன்னேன்? எதை என்றும் அறிய அறிய அதுவே கடைசி எதை என்றும் அறிய அறிய பின் ஈர்ப்புத்திறன் அதாவது எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட தனுஷ்கோடி எதை என்றும் புரியப்புரிய அங்குதான் இவ் ஆன்மாக்கள் (முன்னோர்கள்) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது எதை என்றும் கூற இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக் கொள்ளும். எதை என்றும் கூற அடுத்த படியாக எவை என்றும் பின்பற்ற அங்கு சென்றால் எதை என்றும் அறிய அறிய (தனுஷ்கோடி) அருகே சென்றால் உங்களுக்கும் எதை என்று அறிய அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் எதை என்று கூற அவ் ஆன்மா (முன்னோர்கள்) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்துவிடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் எதை என்றும் அறிந்து அறிந்து அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச் சொல்கின்றேன். போகச் சொல்கின்றேன். (முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்

சித்தன் அருள் - 1524 - அகத்தியப்பெருமானின் ஒரு உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! உங்கள் அனைவரிடம் அகத்தியப்பெருமான் உரைத்த ஒரு விஷயத்தை தெரிவிக்க விழைகிறேன். ஒரு குழந்தை, உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அடியேனுக்கு செய்தியை கூறி, திரு,ஜானகிராமனிடம் நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்க வேண்டினர். எங்கு பயணம் செய்தாலும், இப்படிப்பட்ட வேண்டுதல்களை அடியேன் தெரிவிக்கின்ற பொழுது அதற்கு, குருநாதரிடம் வாக்கு கேட்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு உடன்படிக்கை. பல அடியவர்களும், நோயினால் அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது தொடர்பு கொண்டு வாக்கு கேட்கும் பொழுது, அகத்தியப்பெருமான் ஒரு விஷயத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டி இந்த தொகுப்பு. "காப்பாற்றுங்கள் என யார் ஓடிவந்தாலும் கருணையுடன் அருள்வது எங்கள் வழக்கம். ஆயினும், நோய் வாய்ப்பட்டவர், அவர் குடும்பத்தார் போன்றவர்களின் புண்ணிய பலத்தை பொறுத்துதான் எங்களால் காப்பாற்ற முடியும். ஒரு சில வேளைகளில் அந்த நேரத்தில் சில புண்ணியங்களை செய்தால் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், ஒரு சில பரிகார, புண்ணிய செயல்களை செய்யச் சொன்னால், மனதில் எந்த குறைகளையும் நினைக்காமல், மிகுந்த பக்தியுடன் அதை உடனே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், இதை விடவும் கொடிய சூழ்நிலைகள் அனைவரின் வாழ்க்கையிலும் வரும். அதை நேர் கொள்வதற்காகத்தான், புண்ணியத்தை செய்யுங்கள், சேர்த்துக்கொள்ளுங்கள், ஒரு உயிரை வதைக்காதீர்கள், அசைவம் அறவே தவிருங்கள் என உரைக்கிறோம். மேற்கொண்ட எதுவுமே செய்யாதவர்களுக்குத்தான், இறைவன் தண்டனையை இடிபோல் இறக்கி பலமான சோதனைகளை கொடுத்து, கதற விடுகிறான். எங்கள் அருள் வேண்டின், தினமும் உணவு உண்பதுபோல், தின வாழ்க்கையில் ஏதேனும் ஒரு புண்ணியத்தை சேர்த்திருக்க வேண்டும். இதை மனதில் இருத்தி எம் சேய்கள் அனைவரும் வாழ்ந்துவர ஆசிகள்!" அடியவர்களே, புண்ணியம் செய்வது நாம் சுவாசம் விடுவது போல் இருக்க வேண்டுமே அன்றி, தலைவலி மாத்திரை எடுத்துக் கொள்வது போல் இருக்கக்கூடாது! புரிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கேன் இந்த தலைவலி என யாரேனும் நினைக்கலாம். அடியேன் கூறிக்கொள்ள நினைப்பது ஒன்றுதான். முகம் பார்க்காமல் உதவினும், தோல்வியின் பக்கம் நிற்க அடியேன் ஒரு போதும் விரும்பாதவன். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

இராமலிங்க அடிகளார்

ஓம் இராமலிங்க அடிகளார் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!! ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே. பாடல் விளக்கம்:- ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம். அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை. நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார் கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்து விட வேண்டும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும். நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். சென்னையில் உறையும் கந்தவேளே ! குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

Wednesday, November 29, 2023

சித்தன் அருள் - 1500 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 14!

குருநாதர்:- ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். பின் அனைவரும் அறிந்ததே. அனைத்தும் சொல்லிவிட்டேன். ஆனாலும் நீங்களும் தேடி வந்தீர்கள் இதனால் சந்தர்பத்தை உங்களுக்கு யானே அளிக்கின்றேன். பின் கூறுங்கள்? (அடியவர்கள் கேள்வி கேட்கலாம்) அடியவர்:- அகஸ்தியர் தீபக்குழு மூலமாக நாங்க இன்னும் பிரபலம் அடைஞ்சி நிறைய பேருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணுகின்றோம். ஒருத்தர் கர்மா…. குருநாதர்:- அப்பனே அதை யான் நிச்சயம் பிரபலம் அடைய தேவை இல்லை. என்னிடத்தில் விட்டு வையுங்கள். நிச்சயம் பல நபர்களுக்கு யாங்கள் உதவி செய்ய வேண்டும் என்று இதனால் யானே முன் வந்து செய்து தருகின்றேன் உங்களுக்கு. அடியவர்:- ( ஒரு தனிப்பட்ட கர்மா) இதை நீக்குவதற்கு என்னங்கய்யா வழி? குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொன்னாயே பின் நல் மனிதர்களுக்காவது உதவி செய்து கொண்டே வா. அடியவர்:- தீபக்குழுவுக்கு வாகனம் வாங்கி விளக்கு எல்லாம் எடுத்துட்டு போவதற்கு … குருநாதர்:- அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டுத்தான் முன்னே இதனால் கஷ்டங்கள் சிறிது படுங்கள் அப்பனே. அனைத்தும் நடந்துவிடும் என்பேன். ஆனால் இவை எல்லாம் வெறும் யான் சந்தர்பத்தை கொடுத்தேன். ஆனால் அப்பனே ஒருவர்கூட சரியாக பயன்படுத்த வில்லையே அப்பனே. அடியவர்:- இந்த ஜென்மாவில் கடைத்தேறி முக்தி அடைவது. குருநாதர்:- அம்மையே எதற்காக இவை நீ கேட்டாய்? அடியவர்:- பிறவி போதும் குருநாதர்:- அம்மையே எழுந்து நில் அடியவர்:- (எழுந்து நின்றார்) குருநாதர்:- அம்மையே அனைவருக்கும் இவ்வாழ்க்கை பற்றி எடுத்து உரை. அடியவர்:- வாழ்க்கையில் அமைதிதான் வேணும். இந்த காலத்தில் மகான்கள் வந்து இருக்கின்றார்கள். மகான்களை பிடித்துக்கொண்டு நமச்சிவாயா மந்திரத்தை சொல்லுங்கள். நமச்சிவாயம். ஒம் நமச்சிவாய ( அடியவர் பின்வரும் பாடலை பாட , இதர அடியவர்களும் உடன் பாடினர்) ஒம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம் ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் (அதன் பின் அடியவர் உரைத்தது) நமசிவாய மந்திரத்தை விடாம பிடித்துக்கொள்ளுங்கள். நமசிவாய மந்திரம்தான் நமக்கு இறுதி. முதலும் அதுதான் முடிவும் அதுதான். அகஸ்தியப்பெருமான் பாதத்தை பிடித்துக்கொள்ளுங்கள். அவர விட்டா (நம் அனைவருக்கும் வேற) கதியே கிடையாது. கதியே கிடையாது. கதியே கிடையாது நமசிவாயம். குருநாதர்:- அப்பனே ஏன் எதற்காக இவ்வளவு ஆனால் எதையுமே கேட்கவில்லை இவள். ஏன் எதற்காக? பல கஷ்டங்கள் கடந்துதான் வந்துள்ளாள். அப்பொழுதுதான் பக்குவங்கள். அப்பொழுதுதான் மோட்சம். ஒருவன் கேட்டானே கஷ்டங்கள் இல்லாமல் அவை வேண்டும், இவை வேண்டும் என்று. நிச்சயம் முடியாதப்பா. கஷ்டங்கள் பட்டால்தான் வாழ்க்கை என்பதே தெரியவரும். அம்மையே பின் கஷ்டங்கள் என்ன என்ன பட்டாய் என்பதை நீ நிச்சயம் ( அனைவருக்குமே ) கூற வேண்டும் என் அருகில். அடியவர்:- வாழ்க்கையே கஷ்டமாகத்தான் இருக்கு. அதாவது உலகத்தில் மக்கள் அப்படித்தான் இருக்காங்க. நாம்தான் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். எதையும் சரி சரி என்று நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். மகான்கள் சொல்வதை ஏற்று, எல்லாமே இறைவனாக பார்க்க வேண்டும். நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். அடுத்தவங்களை சரி செய்வது என் (நமது) வேலை கிடையாது. மகான் அவர் ( அகத்தியப்பெருமான்) பாதத்தை பிடித்துக்கொண்டு, அவர் வழி நடத்துகின்றார். நான் ஒன்றுமே இல்லை. அவர் வழி நடத்தும் போது நான் என்ன என்று என்னை பக்குவப் படுத்தவே கஷ்டங்கள் வருகின்றது என்று நினைத்து அவர் பாதத்தை பிடித்து அவரே என்னை வழி நடத்துகின்றார். அகஸ்தியப்பெருமான் வழி நடத்துகின்றார். மகான்கள் வழி நடத்துகின்றார்கள். குருநாதர்:- அப்பனே கடைசியில் சொன்னாயே எப்பொழுதும் இதைத்தான் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அப்பனே நீங்கள் எதுவுமே கேட்கத் தேவை இல்லை. இறைவனுக்கு தெரியும். எந்நேரத்தில் எதை செய்ய வேண்டும். சரியான வழியில் கடத்திச் செல்ல இறைவனுக்கு தெரியும் என்பேன். அப்பொழுது நீங்கள் கேட்டாலும் நடந்து விடுமா என்ன? அம்மையே கூறு. அடியவர்:- நான் கேட்டாலும் நடக்காது. அவர் என்ன, அந்த அந்த விதிப்படித்தான் நடக்கும். நம்ம விதிப்படி, நம்ம கர்மாப்படிதான் நடக்கும். மகான்கள் (நம்மை வழி) நடந்திகின்றார்கள். ஒரு சிலை இருக்குன்னா, அந்த சிலையை வந்து செதுக்கி செதுக்குனாத்தான் வரும். ஆனா நமக்கு எல்லாமே தெரியுது. இருந்தாலும் கஷ்டங்கள் வழி தெரியல. இருந்தாலும் அந்த (கஷ்ட) நேரத்துல அவர் பாதத்தை பிடிச்சுகிட்டு நாம போய்கொண்டே இருக்க வேண்டியதுதான். நம்மை செதுக்குவதற்காக வந்திருக்கார். கஷ்டங்கள் வருவது அவரை இருக்கமாக புடிச்சிக்கிறதுக்காகத்தான். கஷ்டங்கள் வந்து ஒரு ஸ்வீட் மாதிரி நம்ம கொண்டு போறாரு. அவரு பாதத்தில் (வைத்து) நம்ம கொண்டு போறார். அதுதான். இந்த ஜென்மத்துல கரை சேர்பதற்கு அவர் வழி சொல்றது அவ்வளவுதான். வேற ஒன்றுமே கிடையாது. மனுசங்கள் வந்து கஷ்டம் வருவது, துன்பம் வருவது வேற எதுவுமே கிடையாது. கஷ்டங்கள் வந்தாலும் நன்மைக்காகத்தான் நம்மளோட நன்மைக்காகத்தான். அப்டின்னு நினைச்சுட்டு போயிட்டா நம்பள நம்ம திருத்திக்கனும், நம்பள நம்ம பக்குவப் படுத்திக்கனும் என்பதற்காகத்தான் எல்லாமே குடுத்துருக்காரு.அவரை இருக்கமாக பிடிச்சுகிட்டா எந்த கஷ்டமுமே கஷ்டம் கிடையாது. அவர பிடிக்கறதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டம் குடுக்குறாரு. குருநாதர்:- அம்மையே பின் (ஓரு அடியவர் அடையாளம் சொல்லி) அழை. அடியவர்:- இருவர் எழுந்தனர் குருநாதர்:- அப்பனே முந்திக் கொண்டாய் அப்பனே. அப்பனே வாழ்க்கையின் ரகசியத்தை அனைவருக்கும் எடுத்துக்கூற வேண்டும். திரும்பிச்சொல். அடியவர்:- வாழ்க்கைய பத்தி சொல்றது என்னனு தெரில. அப்பாவே (அகத்தியப்பெருமான்) சொல்றாங்க. இந்த உலகத்துல பிறந்த நோக்கமே இறையை அடையறதுதான். நம்ம பிறப்பு எடுத்ததுக்கான நோக்கத்தையே யாரும் தெரிஞ்சுக்கல. இறையை அடைவது என்றால் என்ன என்று யாருக்கும் தெரியல. எதோ இந்த வாழ்க்கைல வந்துருக்கோம் பணம் சம்பாதிக்கணும் சாப்பிடணும் தூங்கணும் இப்படி வாழ்க்கை போகும் அப்டின்னு நினைக்கிறாங்க. நம்ம இந்த உலகத்தில் இந்த உடம்பு வாழ்வதறக்கே சாப்பாடு. ஆனா உலகத்துல சம்பாதிக்கிறதே உலகமா வாழ்ந்துடறாங்க. எதுக்கு வாழ்றாங்கனு யாருக்குமே தெரியல. ஒரு அகங்காரம், கோபம் என்ன என்னமோ பிடிச்சு தொங்கிட்டு இருக்காங்க. இந்த உலகத்துல வந்து நம்ம ஒரு அறியாமை என்னால கீழ விழுந்துட்டோம் (பிறந்துவிட்டோம்). எந்திரிச்சி நிக்கறதுக்கு பேர்தான் இறை. அந்த எந்திருச்சு நீன்று விட்டால் இறையை அடைஞ்சுறுவீங்க. இறையோட கலந்தவங்களுக்கு மாயப்பிறப்பே கிடையாது. நம்ம இந்த உலகத்துக்கு வந்தது அதற்கான நோக்கமே நம்ம அவங்களோட கலக்கிறதுக்குதான். அப்ப அந்த கலக்கிறதுக்கு இந்த உடம்பு வந்து கண்டிப்பா தேவை இந்த உடம்புக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த உடம்பு வந்து தக்க வைக்கிறது தற்காலிகமாக ஒரு ஆகாரம் ஒன்னு சாப்பிடனும்.அந்த ஆதாரத்துக்காக நம்ம உழைக்கணும். ஆனா நம்ம உழைக்கிறது எதுக்கு சாப்டறதுக்கு. இந்த உடம்பு எதுக்கு? இறை அடைவதற்கு. அப்ப இறை அடைவதற்காக இந்த உடம்பு கொடுக்கப்பட்டு இருக்குன்னு யாருமே யோசிக்கிறது இல்ல. நம்ம அப்பா சொன்னதுனால சொல்றேன். ( இந்த அடியவர் தனது இறை ஞானத்தின் ஒளியை அருமையாக எடுத்து அனைவருக்கும் உரைத்தார்கள்) குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. முதலில் கர்மா. பின் அதாவது தாயை மதிக்காதது. பின் தந்தையை மதிக்காதது. நீங்கள் அனைவருமே ( இந்த வாக்கு அனைவருக்கும்) ஒருமுறை இதை செய்திருக்கின்றீர்கள் அப்பனே. இதற்காக சில தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் கருமங்கள் ஆக அது தொடரும் என்பேன் அப்பனே. அதற்காகத்தான் அப்பனே சில சில தண்டனைகளும் அப்பனே இறைவனால். ஆனால் அதைக்கூட நீக்க வேண்டும் என்றால் எப்படி அப்பா நீக்க முடியும்? ஆனால் பொய்கள் சொல்லி அதற்கும் பரிகாரங்கள் கூறுகிறார்கள். அதையும் கூட அப்படியே (ஏதும் அறியாத மக்கள்) ஏற்றுக் கொள்கின்றார்கள். அதனால தான் அறிவுள்ளவன் அப்பனே எது என்று புரியாமல் கூட மனிதன் திரிந்து கொண்டிருக்கும் பொழுது எப்படி அப்பா நல்லது நடக்கும். நிச்சயம் நல்லதே நடக்காது அப்பா ஏன்? எதற்காக அப்பனே? நீ செய்த கர்மங்கள் தான் அப்பனே. ஆனால் அவ் கருமங்கள் நீக்கப்பட வேண்டும். அம்மையே சிறு விளக்கங்களை கூறு? அடியவர்:- மகான்கள் வர்ராங்க என்றால் அவங்களை பிடித்துக்கொண்டு பக்குவப்படுத்தி நம்மள கொண்டு வரணும். அதுல நல்ல ஆழ்ந்து நம்ம பயிற்சி செய்து தியானம் பண்ணி, நம்ம நல்லது செஞ்சு நாலு பேரு வராங்கன்ன நல்லது. இறைவனே வரார்னு நினைக்க வேண்டியதுதான். அவங்க வரல. மனுஷங்கள மனுஷங்களா பார்க்காம இறைவனாதான் பாக்கணும். இறைவன் பாத்து அதுக்கு தகுந்த மாதிரி அவங்கள இறைவனா பாத்து அவங்க நம்மை வழி நடத்தி போய்கிட்டே இருக்கனும். நம்ம வழியில ( கையில் ) எதுமே கெடையாது. எல்லாத்தையும் இறைவனா பாத்துட்டா பிரச்சனையே கிடையாது. இந்த ஜென்மத்திலேயே முக்திதான் நமக்கு. ஜென்மத்துலே முக்தி. இறை வழியிலேயே நடக்கும் போது இறைவனுடன் இறைவனா ஐக்கியமானபோது நம்ம… அவன் வேறு நான் வேறு இல்ல. அவனும் நம்மளோட ஒன்றி கலந்து இருக்கான் அவன். அதனாலதான் பிரிச்சு பாக்குறதுக்கு எதுவுமே கிடையாது. அந்த அளவுக்கு நம்மை பக்குவப்படுத்தி விட்டோம் என்றால் நமக்கு இந்த ஜென்மத்திலேயே முக்திதான். குருநாதர்:- அப்பனே அனைத்தையும் சொல்லிவிட்டேன். அதனால் அப்பனே இறைவன் அனைத்தையும் கொடுக்க தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் அப்பனே நீங்கள் அப்பனே தகுதி இல்லைகளப்பா. உங்களிடத்தில் தகுதிகள் இருந்தால்தான் அப்பனே இறைவன் கூட கொடுப்பான் என்பேன் அப்பனே. அத்தகுதிகள் இல்லை என்றால் நிச்சயம் இறைவன் கூட கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே. அப்பனே திருமணம் ஆகவில்லை என்று ஏன் எதற்காக அத்தகுதி உன்னிடத்தில் இல்லையப்பா. நீ திருமணம் ஆகினாலும் சரியாக வாழ முடியாதப்பா இதனால்தான் திருமணத்தை இறைவனே தடுத்து தடுத்து அப்பனே புரிய வைத்து பின்பு வாழ்க்கையின் பாதையை கூட மாற்றி அமைக்கின்றான். அதை மட்டும் இல்லாமல் அப்படியே பின் தொழில் தொழில் என்று அப்பனே எதற்காக அப்பா உங்களுக்கு தொழிலை தர வேண்டும் அப்பனே?. தொழில் வேண்டும் என்பவர்கள் எழுந்து நில்லுங்கள். அடியவர்:- சில அடியவர்கள் எழுந்து நின்றனர். குருநாதர்:- அப்பனே உட்கார் அப்பனே. இதுதான் உன் வேலை அப்பனே. எழுந்து நில். இதுதான் அப்பனே உன்னோட வேலை அப்பனே சொல்லிவிட்டேன். உட்கார். அடியவர்:- ( குருநாதர் வாக்கின்படி உட்கார்ந்தார்) குருநாதர்:- (ஒரு அம்மைக்கு விதியில் உள்ளதை எடுத்து உரைத்து தனிப்பட்ட வாக்கு இதில் உள்ள பின் வரும் வாக்குகள் அனைவருக்கும் பொது என்பதால் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது) விதியில் உள்ளது சரியாக பின் செய்தால்தான் கஷ்டங்கள் என்பதே வராது. ஆனால் எவரும் சொல்வதில்லை எனவே நன்மை ஆனால் உனக்காக ஏன் சொல்கிறேன் என்றால் புரிந்து கொள். (தனிப்பட்ட வாக்குகள்) அனைவருக்குமே தெரிவிக்கின்றேன். யார் ஒருவன் மற்றர்களை நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றான், மற்ற குழந்தைகளைப் பற்றி எண்ணுகின்றானோ அப்பொழுது அவன்தன் குழந்தைகளைக் கூட இறைவனே பார்த்துக்கொள்வேன் என்பேன் அப்பனே. இதுதான் (தன்னை, தன் குடும்பம், தன் குழந்தை பற்றி மட்டும் யோசிப்பது) மனிதனின் அறிவுகெட்ட தாழ்வான புத்தி என்பேன். அதனால் எதையும் பற்றி சிந்திக்காதே. இறைவன் கொடுத்தது இறைவனுக்கு தெரியும் எப்படி எப்படி வழி நடத்த வேண்டுமென்று. (அதனால் தன்னை ஆராய்ந்தால் சுயநலமான இது தவறு என்று தெரியவரும்) இப்படி ( சுயநலமான ) தவறுகள் தன்னிடத்தில் இருந்து கொண்டு புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இதற்காகத்தான் கஷ்டம் என்று ஒரு சொல் வருகின்றது. இது தவறா? அடியவர்:- தவறுதான் குருநாதர்:- பக்குவங்கள் பட்டால் தான் அனைத்தும் கொடுக்க முடியும் அப்பனே. ஒருவன் திருமணமே எனக்கு வேண்டும் வேண்டும் என்று ஆனால் அப்படியே அவனிடத்தில் உடம்பில் ஒன்றுமே இல்லை அப்பா. பின் திருமணம் ஆகியும் பிரயோஜனம் இல்லை அப்பா. பின் அப்பெண்ணும் வந்து கஷ்டங்கள் பட வேண்டுமா? அப்பன்னே கூறு? செய்து தவறா, சரியா அனைவரும் கூற வேண்டும்? ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

சித்தன் அருள் - 1499 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 13

அடியவர்:- ( அடுத்தவருக்காக அடியவர் வாக்கு கேட்ட போது ) குருநாதர்:- அவரவர் கேட்கட்டும். புத்திகள் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். புத்திகள் இல்லாவிடில் எதை என்று கூற முருகனை வணங்கச்சொல். அனைவரையுமே செந்தூரானை ( திருச்செந்தூர் முருகனை ) நாடச்சொல். அடியவர்:- ( அடுத்தவருக்காக மற்றொரு அடியவர் வாக்கு கேட்ட போது ) குருநாதர்:- அப்பனே சொல்லிவிட்டேன். யார் யாருக்கெல்லாம் வாக்குகள் வேண்டுமோ அவர்கள் எல்லாரும் பஞ்ச பூத தலங்களுக்கு சென்று வாருங்கள். பின்பு உரைக்கின்றேன். சிறிதளவாவது புண்ணியங்கள் சேர்கட்டும். சில கஷ்டங்கள் அனைவருக்குமே இருக்கின்றது. பாவங்கள். அவ் பாவங்கள் சிறிதளவாவது தொலையட்டும். இதனால் யார் யாருக்கு ( வாக்கு ) கேட்க வந்தீர்களோ அவர்கள் எல்லாம் பின் பஞ்ச பூத தலங்களுக்கு செல்லுங்கள். செல்லுங்கள். சொல்லிவிட்டேன். பின்பு கேளுங்கள். அடியவர்:- (ஒரு தனி வாக்கு கேட்டார்) குருநாதர்:- அனைவருமே எதையும் கேட்டுவிடாதீர்கள். அனைவருக்குமே அப்பனே இல்லத்தில் இருக்கின்றாயே அனைவருக்கும் எழுந்து சொல் யான் என்ன சொன்னேன் என்று. நாடி அருளாளர்:- (மதுரை அடியவரிடம் எடுத்து சொல்ல சொன்னார்கள்) அடியவர்:- (இந்த அடியவர் இல்லத்தில்தான் இந்த வாக்குகள் உரைக்கப்பட்டது) பஞ்ச பூத தலங்கள் அனைத்தும் தரிசனம் செய்துவிட்டு (அகத்தியர்) ஐயா வாக்கு கேட்க சொல்லி இருக்கின்றார்கள். திருவண்ணாமலை, ஶ்ரீ காளஹஸ்தி, காஞ்சிபுரம் (ஏகாம்பரநாதர் ஆலயம்), சிதம்பரம் , திருவாணைக்காவல் அனைத்தும் தரிசனம் செய்து குருநாதர் வாக்கு கேட்க சொல்லி இருக்காங்க. குருநாதர்:- அப்பனே அவ் அனைவருக்குமே ஒவ்வொரு வினைகள். அவ் வினைக்கான தீர்வுகள் இதனால் அப்பனே அங்கே இருக்கின்றது என்பேன் அப்பனே. (பஞ்ச பூத தலங்களை) சுற்றி வாருங்கள். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. பணம் வேண்டும் என்றால் ஓடி ஒடி உழைக்கின்றீர்கள் அப்பனே. அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன் அனைத்தும் கூட. அதனால் தொழில் வேண்டும் என்றால் ஓடி ஓடி (உழைக்கின்றீர்கள்) அப்பனே ஆனால் இறை அருள் வேண்டும் என்றால் வாக்குகள் வேண்டும் என்றால் அப்பனே இதை செய்யுங்கள். எதுவுமே செய்யத்தேவை இல்லை. யான் (வாக்குகள்) கொடுக்கின்றேன் உங்களை தேடி வந்து. போதுமா? அடியவர்:- ( தனிப்பட்ட கேள்வி ) குருநாதர்:- ( அடியவருக்கு தனிப்பட்ட வாக்கு) அனைவருமே ஏன் உயர் பெரியவர்கள், ஞானியர்கள் பேசவில்லை என்றால் இதற்காகத்தான். ஆனாலும் யான் சொன்னேனே நெற்றியில் பின் வரிசையாக செல்கள் இருக்கும் என்று, ( அவ்செல்கள் ) இவ்வாறு பேசினாலும் உதிர்ந்து விடும் கீழே. அப்படியே மூக்கு பின் வாய் என்று அப்படியே சென்று விடும். இதனால்தான் இவைஎல்லாம் ஞானிகள் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். அதனால்தான் பேசத்தெரியாமல் அனைத்தும் சாதித்தார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள் தரித்திரர்கள். தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் யாங்கள் பேசாமல் வாழ முடியாது எனபதைக்கூட நீங்கள் தெரிவிப்பீர்கள். ஆனால் கர்மத்தை இப்படித்தான் யாரால் அழிக்க முடியும்? அடியவர்:- (அமைதி) குருநாதர்:- அப்பனே பேசாமல் பேசி வாழ்வது எப்பொழுது? இதற்கு நிச்சயம் அர்த்தங்கள் கூறவேண்டும். (இங்கு) அனைவருக்கும் வாக்குகள் வேண்டும் அல்லவா? ஆதனால் இதறக்கு கூறுங்கள்? அடியவர்:- அய்யா அனைவரும் பஞ்ச பூத தலத்தில் வழிபாடு செய்ய சொன்னீங்க. எந்த வரிசையில் வணங்க வேண்டும்? குருநாதர்:- அம்மையே இப்பொழுது உண்ணும் நேரம் வந்து விட்டது. இப்பொழுது உண்பாயா ? இல்லை நாளை உண்பாயா? அடியவர்:- இப்பொழுது குருநாதர்:- அம்மையே நீ இதற்கும் தவறான பதில்தான். அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டிருந்தால் போய் விடுகின்றது அவ்வளவுதான். (பஞ்ச பூத தலங்களை அவர் அவர் விருப்பம் போல் சொன்று வணங்கலாம். கால நேரம் கிடையாது) அடியவர்:- ( இதற்கு முந்தைய கேள்விக்கு பதில் என்ன என்று நாடி அருளாளர் மீண்டும் கேட்க… இதற்கு ஒரு அடியவர்) மனசுல எந்த எண்ணம் இல்லை என்றால்… குருநாதர்:- அப்பனே இறைவன் அனைத்தும் செய்வான் என்று மனதில் இருந்தாலே போதுமானதப்பா. இதற்கே இவ் அர்த்தம் என்பேன். அனைவருக்குமே ஒவ்வொரு சூழ்நிலையில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனாலும் இறைவனுக்கு தெரியும். இப்பொழுது கூட கேட்டார்கள் இப்பிள்ளைக்கு திருமணம் எப்பொழுது என்று ஆனால் உடனடியாக எதை என்றாலும் பிரிவு நிலைகள் வந்து விடும். ஆனால் இறைவன் இவ்நேரத்தில் இவ்வயதில் ஆகவேண்டும் என்று எண்ணிக் கொண்டு அதாவது (விதியை ) எழுதி வைத்து அனுப்புகின்றான் அதை மீறி நடந்தால்தான் அப்பா துன்பங்கள். இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே ஏன் எதற்காக தடைபட்டு தடைபட்டு நடக்கின்றது. நல்லதா? தீயதா? அப்பனே இறைவன் செய்வது அனைத்தும் நல்லதே. ஆனால் நீங்கள்தான் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அதனால் சொல்லிவிட்டேன் அம்மையே இப்பொழுது இதன் முன்னே திருமணம் நடந்திருந்தாலும் பின் கணவன் மனைவிமார்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு இவை மீண்டும் இங்கிருந்து வந்து மீண்டும் பின் எங்கெங்கோ சென்று பணத்தை இழந்து பரிகாரங்கள்தான் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது இறைவன் உந்தனுக்கு நல்லது செய்தானா? கெட்டது செய்தானா? என்று கூறு. ஆனாலும் அம்மையே நீயும் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுவாய். அடியவர்:- ( அடியவர் பொதுவாக அனைவருக்கும் உரைத்தது ) எப்போ நம்ம எதிர்பார்ப்புக்கு தடை வருகின்றதோ அப்போ ( இறைவன் ) நம்மை புடம் போடுகின்றார் என்று அர்த்தம். குருநாதர்:- (இந்த அடியவர் பொதுவாக உரைத்தது) அனைவருக்கும் தெரிந்ததா இது? அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு ) அடியவர்:- ஜீவ சமாதிக்கு போகச் சொன்னீங்க. குருநாதர்:- அனைத்தும் தெரிவித்து விட்டேன். மீண்டும் இதைத்தான் கேட்கின்றீர்கள். அடியவர்:- தொழில் மேன்மைக்கு ஆசிர்வாதம்.. குருநாதர்:- அப்பனே பரமா , நீ என்ன சொன்னாய்? அடியவர்:- பஞ்ச பூத தலம் போய்தான் வாக்கு கேட்கணும் எல்லாருமே. குருநாதர்:- அப்பனே யான் சொல்வதை கேட்பதில்லை (நீங்கள்). ஆனால் நீங்கள் சொல்வதை மட்டும் யான் சொல்ல வேண்டுமா. இல்லையப்பா சென்று வாருங்கள். அப்பனே இதிலே அடக்கமப்பா. அடியவர்:- இதில் சூட்சும்… குருநாதர்:- அப்பனே பஞ்ச பூதங்களை எதை என்று அறிய அப்பனே ஏன் நாவை அடக்கவேண்டும், செவியை அடக்க வேண்டும், இவற்றை எல்லாம் ஏன் போகச்சொன்னேன் ஏன் இதற்கு பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம் அப்பனே யான் தெரிவிக்கின்றேன். அங்கு செல்லாமல் அப்பனே பக்தியும் வராதப்பா உங்களுக்கு. அதனால்தான் (அங்கு) செல்லச் சொன்னேன். இப்பொழுது சொல்லிவிடலாம் நீங்கள் பக்திக்கே வரமாட்டீர்கள். இதுதான் விசயமப்பா உங்களுக்கு. அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அப்பனே இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தால் அதனால் சென்று வாருங்கள். அகத்தியன் சொல்வது உங்கள் நன்மைக்கே. அப்பனே மீண்டும் பின் வந்து ( இதுபோல் செல்லச்) சொல்வீர்களா என்றால் அப்பனே சொல்வேன். அப்பொழுது கூட மற்ற திருத்தலத்திற்கு ( உங்களை ) செல்லச்சொல்வேன். அப்படி சென்று கொண்டே இருந்தால் அனைத்தும் மாறும் அப்பா. அனைத்து பிரச்சினைகளும் தீரும் அப்பா. அப்பனே கஷ்டங்கள் பட்டால்தான் அனைத்தும் கிடைக்கும் என்பேன். கஷ்டப்படாமல் ஏதும் கிடைக்காதப்பா. இதை ஏற்கனவே உரைத்து விட்டார்கள் அப்பனே. தெரியுமா? தெரியாதா? தெரிந்தவர்கள் அறிவாளி. தெரியாதவர்கள் முட்டாள். அப்பனே முட்டாள்தான் கேள்விகள் கேட்பான் அப்பனே. தெரிவித்து விட்டேன் பின். அடியவர்:- நாங்கள் எல்லோரும் அறிவாளிகள். குருநாதர்:- சந்தோசம் தாயே. அனைவருக்கும் சொல் அதை. அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு ) குருநாதர்:- அம்மையே இப்பொழுது வேலை இல்லாதவள் என்று சொல்லிவிட்டார். முருகனை அம்மையே மாதத்திறக்கு ஒரு முறை பழனி தன்னை ஏறிவா. அடியவர்:- சரிங்க குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈர்த்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றால் அப்பனே கஷ்டங்கள் அப்பனே அதை ராகு பின் கொடுக்கும் என்பேன் அப்பனே. அதனால் அதை கொடுத்து அப்பனே அங்கு சென்று கொண்டிருந்தாலே அனைத்து கர்மாக்களை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் என்பேன் அப்பனே. இதனால் வெற்றி உங்களுக்கே என்பேன் அப்பனே. அதனால் பழனி மலையின் சிறப்பு இதுதானப்பா. இன்னும் சொல்கின்றேன் வரும் காலங்களில் அப்பனே. பொறுத்திருந்தால் அப்பனே. ஒவ்வொன்றாக அதை பயன்படுத்திக் கொண்டால் வெற்றி வாழ்க்கையில். இல்லை என்றால் தோல்வி. அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அப்பனே செந்தூரானை பற்றியும் சொல்கின்றேன். வெற்றி வெற்றி என்பதெல்லாம். ஆனாலும் அப்பனே பின் ஒருவன் சொன்னான் குரு ஸ்தலமா என்று கூட. அங்கு சனியும் அழகாக இருக்கின்றான் அப்பனே. அதனால் தான் வெற்றி. குரு , சனி இருவர் கொடுத்தால்தான் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பேன். இவர்கள் கொடுக்காவிடில் ஒன்றும் இல்லையப்பா. அதனால்தான் முக்கியத்துவம் அங்கு அப்பனே. அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அப்பனே அனைவருக்குமே புரிகின்றதா? அடியவர்:- புரிகின்றது. குருநாதர்:- அப்பனே புரிகின்றதென்றால் யான் என்ன சொன்னேன் என்று கூறுங்கள். அடியவர்:- பஞ்ச பூத ஸ்தலம்…. குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு) இறைவன் செய்வது அனைத்தும் நல்லதே. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஆசிகள். இன்னும் பல வாக்குகள் காத்துக் கொண்டிருக்க நிச்சயம் சொல்கின்றேன். ஆசிகள். ஆசிகள்!!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

சித்தன் அருள் - 1498 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 12!

குருநாதர்:- அப்பனே குன்றத்தில் இருப்பவன் யார்? அப்பனே ஏன் நிற்கின்றான் என்று யாராவது சிந்தித்தீர்களா என்ன? அடியவர்:- உயர் நிலை ஞானம் குருநாதர்:- குன்றத்தில் ஏறி நிறக்கின்றேன் என்றால் அப்பனே ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. பட்ட கஷ்டங்கள் கால்களில் பின் ஊர்ந்து, நடந்து, எழுந்து சென்றால்தான் அப்பனே கடைசியில் இறைவனை காண முடியும் என்பதற்கே இவன்தன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் அப்பனே. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் அப்பனே கஷ்டமே வரக்கூடாது என்றால் நீங்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான். உங்கள் வாழக்கை தின்போம் , பின் தின்று நோய்கள் சம்பாதித்துக் கொண்டு, பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, மீண்டும் கர்மாவை சேர்த்துக் கொண்டு, மீண்டும் ( சேரத்த கர்மாவை கழிக்க) பிறவி எடுத்துக் கொண்டு இப்படியே வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல என்பேன் அப்பனே. அதனால் துன்பங்கள்ள பட்டுப்பட்டு சென்றால்தான் அப்பனே உயர் நிலையை அடைய முடியும் என்பேன் அப்பனே. அப்பொழுது துன்பங்கள் யான் கொடுப்பது சரியா? தவறா? அடியவர்:- (அமைதி) குருநாதர்:- அப்பனே இதனால் இவ் பக்குவங்கள் உங்களை ஏன் சில பேர் மட்டும் யான் இங்கு (மதுரை அடியவர் இல்லத்தில்) அழைத்து உள்ளேன் என்றால், அப்பனே முதலில் நீங்கள் நன்மை செய்தாலும் அப்பனே சில தானங்கள் செய்தாலும் இவை எல்லாம் இப்படித்தான் என்று கூறி அவர்களுக்கு (மக்களை ) திருத்தி வழி நடத்த வேண்டும் என்பேன் அப்பனே தெரியாதவர்களுக்கு அப்பொழுதுதான் ( உங்களுக்கு முதல் வகை ) புண்ணியம். அதை விட்டு விட்டு ஏதோ பின் அன்னத்தை கொடுத்து விட்டு அப்பனே இந்தா தின்னு என்று சொன்னால் அப்பனே ஒன்றும் பிரயோஜனமில்லை அப்பா. இதனால் கர்மாதான் அப்பனே. மீண்டும் கடைசியில் வந்து யான் அதை செய்தேன் , இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே என்ன (பலன்)? அப்பனே. அதனால் தெரியாமல் எதையும் செய்யக்கூடாதப்பா. (ஈரேழு பதினான்கு உலகங்களை ஆளும் நமச்சிவாயன் அகத்தில் வாழும் ஈசன், பொதிகை வேந்தன் , அகத்திய பிரம்ம ரிஷி அருளால் மதுரை அடியவர் இல்லத்திற்கு 4.9.2023 அன்று பல அகத்தியர் அடியவர்கள் அழைக்கப்பட்டு உலகிலேயே கலிகாலத்தில் முதன் முறையாக அன்னதானம் வழியில் முதல் வகை உயர் புண்ணியம் பெறும் உண்மையை விளக்கும் வாக்கு அடியவர்களுக்கு உரைக்கப்பட்டு அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து அடியவர்களுக்கும் அவர்கள் எப்படி உயர் புண்ணியம் எப்படி பெற வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் மிக மிக அதி முக்கிய மகத்தான மகிமை புகழ் வாக்கு என்பதை உணர்க. அன்னதானம் செய்யும் போது , உயர் முதன்மை புண்ணியம் பெரும் வழி முறை:- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- “அனைவரும் அன்னத்தையும் மற்றவர்களுக்கு (இட்டு) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது பின் மற்றவர்களுக்கு (பொதுமக்களுக்கு) பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று (வழி/செயல் முறைகளை எடுத்து நேரில் சொல்லி) காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.” உதாரணமாக அன்னதானம் செய்யும்போது ஒவ்வொரு நபர்களிடம் கூற வேண்டிய சில வாழ்க்கை நெறிகள்:- 1) எதையும் மனதில் நினைக்காமல் இறைவனை வணங்குங்கள். 2) உங்களால் இயன்ற அன்னத்தை எறும்பு, பறவை முதலிய ஜீவராசிகளுக்கு தினமும் அளித்து சேவை செய்யுங்கள். 3) மனிதன் உயிர் , ஆரோக்கியம், நல்வாழ்வு அனைத்தும் புண்ணியத்தில்தான் உள்ளது. புண்ணியம் செய்யும்போது எதையும் எதிர் பாரக்காமல் மழை நீரைப்போல், சூரிய ஒளி போல் தர்மத்தை செய்து கொண்டே செல்லுங்கள். 4)அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும். 5)அனுதினமும் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள். 6) இந்த தகவல்களை அனைத்துடன் குறைந்தது 108 பேருக்காவது தயவு செய்து எடுத்து நேரில் சொல்லுங்கள்.அடுத்தவர்கள் நன்கு வாழட்டும். அடுத்தவர்களை உயர்த்துங்கள். ———-> இப்படி சில நல்ல வழிகளை ஏதும் அறியாத ஏழை/எளியோரிடம் அன்னதானம் செய்யும் போது கண்டிப்பாக சொல்ல அது உயர் நிலை முதல் வகை புண்ணியமாக மாற இறை அருளும். “பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை (நீங்கள் சொல்லியவர்கள்) பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு (வாழ்க்கை) நிலமைகள் மாறும். மாறும் என்பேன்.“ - அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு எனவே அடியவர்கள் அனைவருக்கும் இது போல எடுத்து சொல்லி உயர் புண்ணிய பலம் பெற்று நல்வாழ்வு வாழ்க வளமுடன். இந்த வாக்கை படித்த அனைத்து அடியவர்களும் இதை முதலில் அனைவருக்கும் எடுத்து சொல்லி அவர்களை உயர் புண்ணியம் பெற்று நல்வாழ்வு வாழ வழி செய்யுங்கள் என சிரம் தாழ்த்தி உங்கள் அனைவரையும் வேண்டுகின்றோம். ) யான் சொல்கின்றேன் அப்பனே மின்சாரக்கம்பியை பிடி என்று, (நீ) பிடித்து விடுவாயா என்ன? அடியவர்:- இல்லை ( பிடிக்க மாட்டேன் ) குருநாதர்:- அப்பனே இங்கு பக்தி பொய் ஆகிவிட்டதப்பா. என் அகத்தியன் சொன்னால் யான் (மின்சாரக்கம்பியை) பிடிப்பேன் என்று எங்கப்பா நீ சொன்னாய். அடியவர்:- அமைதி குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால் யான் காப்பாற்றி விடுவேன். பயந்து நின்றால் எப்படியப்பா யான் காப்பாற்றுவது? இப்படித்தானப்பா மனிதர்கள் ஏதோ ஒரு சுயநலத்திற்காகவே வருகின்றார்கள். வாக்கு கேட்கின்றார்கள். எப்படியப்பா முடியும். அப்பனே இப்பொழுது புரிகின்றதா உன்னுடைய பக்தி என்னவென்று?. அப்பனே அதனால் நம்பு. உன்னை நம்பு. நிச்சயம் என் அகத்தியன் கொடுப்பான் என்று. அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே. அடியவர்:- சரிங்கய்யா. குருநாதர்:- அப்பனே இப்பொழுது கூறு, மின்சாரத்தை தொடுவாயா என்ன? அடியவர்:- தொடுவேன் ஐயா. குருநாதர்:- அப்பனே இப்படித்தான் அப்பா பின் தெரியாமல் வாழ்ந்திட்டு அவ்கர்மத்தை சொன்னால்தான் அப்பனே “ஓ!! இப்படியா” என்று சொல்லிவிடுகின்றார்கள் மனிதர்கள். எப்படியப்பா இது? ஏன் தொடுகின்றாய் அப்பனே? கூறு. அடியவர்:- அகத்தியர் காப்பாத்துவார். குருநாதர்:- அப்பனே முதலில் ஏன் இதை புரியப் படுத்தவில்லை. கூறு? அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு ) குருநாதர்:- அப்பனே, அவ் அறிவின்மையைதான் கொண்டு வருவதற்கே சில கஷ்டங்கள். இது நல்லவையா? தீயவையா? அப்பொழுது உந்தனுக்கு கஷ்டங்கள் வருவது நன்மையா? தீமையா? இதுநாள் வரை கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றதே பின் நன்மையா? தீமையா? கூறு அப்பனே. குருநாதர்:- நன்மைதான் அய்யா. அடியவர்:- அப்பனே பின் நன்மையாக செய்து விட்டேன் அல்லவா இப்பொழுது சந்தோசமா உந்தனுக்கு அப்பனே. குருநாதர்:- ரொம்ப சந்தோசம் அய்யா. அடியவர்:- அப்பனே அனைத்தும் கொடுத்து விட்டேன் அப்பனே போதுமா? குருநாதர்:- போதும் அய்யா. அடியவர்:- அப்பனே இதுநாள் வரையில் உந்தனுக்கு என்ன செய்து கொண்டிருந்தேன் அப்பனே கூறு? குருநாதர்:- நன்மையே செய்து கொண்டு இருந்தீர்கள். அடியவர்:- அப்பனே, புரிகின்றதா? அமர். ( குருநாதர் அந்த அடியவரை இதுவரை நின்றதால் அமர உத்தரவு இட்டார்கள் ) குருநாதர்:- சரிங்க அய்யா. ( அடியவர் அமர்ந்தார்) அடியவர்:- ( அடியவர்கள் உரையாடல்கள் ) குருநாதர்:- ( அடியவருக்கு அவர் விதி மாற்றம், கடுமையான கர்ம நிலை நீக்கம் குறித்த தனிப்பட்ட வாக்கு) அடியவர்:- புரிந்தது ஐயா குருநாதர்:- அப்பனே இதை எல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள் அப்பா. பரிகாரங்கள் செய். பரிகாரங்கள் செய். தெரியாமலே செய்து கொண்டு இருப்பான் அப்பனே. அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதை கூட யாரும் தெரிவிக்க மாட்டார்கள் அப்பா. சித்தர்களால் மட்டுமே முடியும் என்பேன். அவை எல்லாம் உங்களுக்கு அனைத்தும் கற்பிக்கின்றேன் வரும் காலங்களில். அதனால் இப்பொழுது என்ன வகுப்பில் நீங்கள் (அனைவரும்) இருக்கின்றீர்கள் அப்பனே கூறுங்கள்? அடியவர்:- முதல் வகுப்பு குருநாதர்:- அப்பனே முதல் வகுப்புக்கே இன்னும் வரவில்லையப்பா நீங்கள். அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அதனால் முதல் வகுப்பே பின் தேர்ச்சி பெற்றால் தான் இரண்டாவது வகுப்பு அப்பனே. அதனால் பூஜியத்திலேயே இருக்கின்றீர்கள் அப்பனே. அடியவர்:- அமைதி குருநாதர்:- அப்பனே பூஜியத்தில் இருப்பவன் என்ன கேள்வி கேட்பான் தெரியுமா? எந்தனுக்கு அதைச்செய், இதைச்செய், எந்தனுக்கு கடன், எந்தனுக்கு துன்பங்கள், எந்தனுக்கு கஷ்டங்கள் என்று கேட்டுக் கொண்டு இருப்பான் அப்பனே. அவன் பூஜியத்திலேயே இருக்கின்றான் என்பேன் அப்பனே. இப்படி இருப்பவன் அப்பனே எப்படியப்பா யான் ஒன்று, இரண்டு என்றெல்லாம் (அடுத்த வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது?) அதனால் அப்பனே சில பக்குவங்கள் (துன்பங்கள்) பட்டு பட்டுத்தான் எழுப்பி நடந்திட வேண்டும் என்பேன் அப்பனே. குழந்தையும் கூட தானாகவே தானாகவே கஷ்டங்கள் பட்டு பட்டு எழும் அப்பா. ஆனால் உங்களுக்கு அறிவுகள் வந்துவிட்டது. நீங்கள் அப்பனே தானாகவே எழுந்திருக்க முடியவில்லையே. தன்னைத்தானே உணரவில்லையே. குழந்தைகூட தன்னைத்தானே உணர்ந்து பின் அடிபணிந்து (தவழ்ந்து எழுந்து) கீழே விழுந்து விழுந்து எழுந்து நிற்கின்றதப்பா. அதனால் நீங்களும் அடிபட்டு சிறிது எழுந்து நில்லுங்களப்பா. யான் வழி காட்டுகின்றேன். அமர்ந்து கொண்டே எந்தனுக்கு அதைத்தா இதைத்தா என்றால் யான் சொல்வேன் நீங்கள் அப்படியே அமர்ந்து கொள்ளுங்கள் என்று. புரிகின்றதா? அடியவர்:- அமைதி குருநாதர்:- அப்பனே உங்களை படைத்தது இறைவன் அப்பனே. அதை பின் எப்பொழுது தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா என்ன? நீங்கள் கேட்டுத்தான் பெற வேண்டுமா என்ன? ஆனாலும் குழந்தைக்கும் தன் தாய் பின் என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியும் அப்பனே. இல்லை என்றால் குழந்தை அழும். அது போலத்தான் அப்பனே இறைவனை குழந்தை அழுவதுபோல் இறைவா என்று அழையுங்கள் போதுமானது. இறைவன் உந்தனுக்கு என்ன தேவை என்பதை கொடுத்து விடுவான். அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே. அதனால் புரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே தரித்திர மனிதர்கள் என்று எண்ணி அப்பனே யான் தலை குனிகின்றேன் அப்பனே. அதனால் தான் முதலில் தெரிய வைக்கின்றேன் அப்பனே. இப்படி வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று. பின்பு உரைக்கின்றேன் எப்படி என்று கூட. ( முதுகில் உள்ள கர்ம மூட்டை என்ற சுமை ) அதை உணர விடாமல் எப்படியும் வாழ முடியாதப்பா மனிதன். இப்படிப்போனாலும் துன்பம், அப்படி சென்றாலும் துன்பம், உட்காரந்தாலும் துன்பம், எழுந்தாலும் துன்பம் அப்பனே. இவை எல்லாம் ( உங்கள் முதுகில் உள்ள கர்ம மூட்டை ) எங்கு உன்னை விட்டு போகும் அப்பா? அதனால் சொல்லி விட்டேன் அப்பனே கர்மா எங்கு உள்ளது என்றால் உன் முதுகிலே இருக்கின்றதப்பா. அதை முதலில் இறக்கிவிட்டு செல் அப்பனே. அனைத்தும் நடக்கும். அதை வரும் காலங்களில் எப்படி இறக்கி வைப்பது எல்லாம் தெரியப்படுத்துகின்றேன் அப்பனே. அதை இறக்கி வைத்தால்தான் அப்பனே இன்பம். அதை இறக்காவிடில் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா. நிச்சயம் அப்பனே. அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அதனால் அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே அப்பனே மனிதர்கள். அதனால்தான் இறைவன் கூட படைத்து விட்டோமே மனிதனை. தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்று (வருத்தப்படும் அளவில் மனிதர்கள் நாம்….) ஓர் நாள் அப்பனே மரணம். எப்பொழுது என்பதைக் கூட உங்களுக்கு தெரியாதப்பா. ஆனால் எங்களுக்கு தெரியும் அப்பா. சரியான இப்பொழுதெல்லாம் அனைவருக்குமே சொல்வேன் இந்நேரம் எவ்கிழமை எத்துணை இன்னும் வருடங்கள் இருக்கின்றது என்றெல்லாம் யான் சொல்லி விடுவேன் அப்பனே. நிச்சயம் என் பக்தர்களுக்கும் அதை ( சிவபதவி அடையும் நேரத்தை) யான் வரும் காலங்களில் ஞானத்தை பெற்றவனுக்கே யான் சொல்வேன் அப்பனே. சொல்லிவிட்டேன். இதனால் சித்தர்களை மிஞ்சியவர்கள் எவரும் இல்லையப்பா. ஆனால் சித்தர்களை வைத்து ஏமாற்றிவிட்டார்கள் அப்பனே அவ்வளவுதான் அப்பனே. இப்படியே ஏமாற்றிக் கொண்டிருந்தால் சித்தர்களே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் என்பேன் அப்பனே அதனால்தான் யாங்களே எங்களை பக்குவப்படுத்தி பின் யாங்களே வந்து பின் அனைவரையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கின்றோம் கஷ்டங்களை வைத்து இது தவறா? அடியவர்:- சரிதான் அய்யா குருநாதர்:- அப்பனே அனைத்தும் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது. அப்பனே மனிதன்தான் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கின்றான். அதனால் ஒரு அடி கொடுத்து சரியான வழியில் செல் என்று யான் … இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது என்பேன் அப்பனே. இன்னும் வாக்குகள் பலமாகும் என்பேன் அப்பனே. சொல்லி எவை என்று அறிய அறிய பாவம் அப்பா மனிதன் தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே. அதனால் இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே அங்கு அங்கு வந்து எப்படி வாழவேண்டும் என்று எல்லாம் அப்பனே. அப்படி வாழந்திட்டாலே அப்பனே போதுமானதப்பா. மாற்றங்கள் எளிதில் நிகழும். ஆசிகள். ஆசிகள் அப்பா. அடியவர்:- என் மகள் திருமணம்… குருநாதர்:- ( பிரம்ம ரிஷி தனிப்பட்ட வாக்கு உரைத்தார்கள். அந்த வாக்குகள் நீக்கப்பட்டது) அடியவர்:- அடியவர் மகள் குருநாதர்:- அம்மையே ராகு கேதுக்கள் புரிகின்றதா? அடியவர்:- புரியுது ஐயா குருநாதர்:- அம்மையே ராகுவானவன் அனைத்தும் கொடுத்துவிட்டால் கடைசியில் அனைத்தும் எடுத்து விடுவான். நிச்சயம் மெதுவாக நடக்கும். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

சித்தன் அருள் - 1496 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 11

குருநாதர்:- அப்பனே தன் தனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் நீங்கள் இப்படி கேட்டுக் கொண்டிருந்தால் அப்பனே சிறு குழந்தைகள் கூட அப்பனே தாய் தந்தையர் இல்லாமல் இருக்கின்றார்களே, அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்? யாராவது அதை உணர்ந்து இருக்கின்றீர்களா? என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காகத்தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். எப்படியப்பா? (நியாயம்). நீங்கள் சரியாக இருந்தால் “அகத்தியனே, நீங்கள்தான் எந்தனுக்கு அனைத்தும், நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்று கையை தூக்கி வணங்கிவிட்டால் அப்படி கூட வணங்க வேண்டாம் அப்பனே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். யான் தருவேன் அப்பா. என்பிள்ளைகளுக்கு தராமல் யாருக்கு தரப்போகின்றேன் அப்பனே சொல்லுங்கள். உங்கள் கடமையை செய்யுங்கள். உன் கடமை என்றால் அப்பனே பிறர் நலனை காணுங்கள் அப்பனே. போதுமானது அப்பனே. என் வழியில் வருபவர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் கஷ்டங்கள் நீங்கும். ஆனாலும் அச்செல்கள் அங்கங்கு மாறி கிடக்கின்றது. அவை ஒன்றாக இணைந்தால்தான் வெற்றி உண்டாகும். கடைசியில் இணைத்து விடுகின்றேன். இதற்காகத்தான் அப்பனே திருநீறு, திருநீறு. ( திரு = இறைவன். நீறு = சாம்பல் ). அடியவர்:- (அமைதி) குருநாதர்:- அப்பனே அன்றைய நேரத்தில் (பழங்காலத்தில்) அவ்செல்கள் சிதறாமல் இருக்க பல மூலிகைகள் ஆன நீற்றை அணிந்தார்கள். ஆனால் இன்றளவும் பின் மாறிவிட்டதப்பா. அதை இழுத்தால் அப்பனே எங்கும் செல்லாதப்பா. அங்கேயே (அவ் செல்கள்) தேங்கி நிற்கும் அப்பா. உயர்ந்த பக்தியை காண்பித்தார்களப்பா. இன்றளவு அப்பனே மாறிவிட்டது. அதாவது இயற்கை முறையில் நன்றாக (திருநீறு செய்து) அப்பனே அனைவருக்கும் கொடுங்கள் அப்பனே. அணியச் சொல்லுங்கள் அப்பனே. (பின் அவ்செல்கள்) அது மாறாதப்பா. அதை (அவ்செல்களை பழைய நிலைக்கு ஈசன் படைத்தது போல் உங்கள் நெற்றியில் ) மாற்றுவதற்கு பசும் சாணியிலே இருக்கின்றதப்பா. அடியவர்:- சரி அய்யா குருநாதர்:- அப்பனே நல்ன்கள். ஆசிகள். நின்று கொண்டு இருப்பவர்களே யாராவது என்ன கேள்விகள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிந்து எவை என்றும் புரியப்புரிய. ( கேள்விகள் கேட்கலாம் ) அடியவர்:- ஐயா, (எங்கள்) உடல் பொருள், எண்ணம் , செயல், சொல் அனைத்தாலும் பிறர் நலத்தை மட்டுமே நாட வேண்டும். ஐயா ஆசிர்வாதம் செய்யவேண்டும். வழி காட்டனும். குருநாதர்:- இவ்வளவு நேரம் யான் என்ன தெரிவித்துக் கொண்டிருந்தேன் அப்பனே? அடியவர்:- இதைத்தான்…(சொல்லி கொண்டு இருந்தீர்கள்) குருநாதர்:- அப்பனே என்னை நோக்கி வந்து விட்டாலே யான் அப்படித்தான் செய்வேன். முதலில் அதைத்தான் கொடுப்பேன். பின்பு அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. முன்பே அனைத்தும் கொடுத்து விட்டால் பறப்பீர்கள் நீங்கள். பறந்தாலும் நீங்கள் விழுந்து விடுவீர்கள். அதனால்தான் உங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீங்கள் இப்படியும் செல்லாமல், அப்படியும் செல்லாமல் எப்படி பக்குவப்படுத்த என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்து மாற்றுகின்றேன். நின்று கொண்டு இருப்பவர்களே ஈசனை எப்படி அழைப்பது? அடியவர்:- கருணை வடிவானவர். குருநாதர்:- அப்பனே இது சரியா? பக்கத்தில் இருப்பவனே கூறு? அடியவர்:- சிவபுராணம் படிச்சு அழைக்கனும். குருநாதர்:- அப்பனே (ஆதி ஈசன்) வந்து விடுவானா என்ன? அடியவர்:- உண்மையான பக்தி இருந்தால் வருவார். மாசற்ற… குருநாதர்:- அப்பனே உண்மையான பக்தி என்றால் என்ன? அடியவர்:- தன்னலம் இல்லாமல் பொது நலத்தோட இருத்தல். குருநாதர்:- அப்பனே அது யாரிடத்திலும் இருப்பது இல்லை அப்பா. அதனால்தான் (அந்த பொது நலம் உங்களிடம்) இருப்பதற்கு யாங்கள் பல கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருக்கின்றோம் அப்பனே. இது தவறா? சரியா? அடியவர்:- (அமைதி) சரிதான் குருநாதர்:- அப்பனே நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் முதலில் கூட அப்பனே. தூய்மையான எண்ணத்தில், இதயத்தில் இறைவன் வாழ்வான் என்பேன் அப்பனே. அப்படி இல்லாமல், கடன் அங்கு, அங்கு மனம் செலுத்துவது இப்படி கஷ்டங்களோ என்றெல்லாம் இருந்தால் அப்பனே அவ்மனதில் இறைவன் குடி கொண்டு இருக்க மாட்டான் அப்பா. முதலில் பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பற்றி நினைக்காதீர்கள் அப்பனே. இறைவன் நம் மனதிலே உள்ளான் என்று எண்ணிக்கொண்டால் அப்பனே நிச்சயம் வருவான் இறைவன். அனைத்தும் செய்வானப்பா. அப்பனே உடல் எப்படி எல்லாம் இயங்குகின்றது? உயிர் எங்கு இருக்கின்றது? அப்பனே உயிர் எப்படி எல்லாம் இவை பற்றி எல்லாம் எடுத்துரைக்கின்றேன். முதலில் இவை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அப்பனே உணவை எப்படி உண்ணுகின்றீர்கள்? அப்பனே. அதனை அருமை பற்றி பெருமை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு அப்பனே முதலில் நீரை ஊற்ற வேண்டும். பின்பு எதைச்செய்ய வேண்டும். எதை இட வேண்டும் என்றெல்லாம் அனைத்தும் தெரிவித்துக் கொண்டுதானே உண்ணுகின்றீர்கள்? அப்பனே. இது தெரியாமல் உண்டு விட்டால் என்ன லாபம்? அரிசி மட்டும் உண்டுவிட்டால் போதுமா அப்பனே? இப்பொழுது அரிசி மட்டும்தான் உண்டு கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அப்படி இல்லாமல் பக்குவங்கள் பட்டு பட்டு வாழந்தால்தான் சிறப்பு. ஆனால் தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் பைத்தியக்காரர்கள். இங்கு மனிதர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்பேன் அப்பனே. அவ் பைத்தியனே அப்பனே பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றான் அப்பா. இதுதான் அப்பா திருடன் மனிதன் என்றார்கள் அப்பனே. இன்னும் (வாக்குகள் சொல்ல) புசண்டன் ( சித்தர் ஶ்ரீ காகபுசண்ட பிரம்ம ரிஷி ) வருவான் அப்பனே. அப்பனே புரியவைப்பான் வரும் காலத்தில் என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றான் என்று கூட. இதனால் என்ன பிரயோஜனம்? அப்பனே. எங்களால் அனைத்தும் நீக்க முடியும் ஒரு நொடியில். ஆனால் நீங்கள் சரியான முறையில் நிச்சயம் அதனை பயன்படுத்த மாட்டீர்கள் என்பது தெள்ளத் தெளிவான கருத்து என்பேன்!. இன்று யான் சொல்லி விடுவேண். நாளை மனிதன் அங்கு சென்று ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் “ஆ இப்படியா” என்று அங்கேயே மயங்கி விடுவீர்கள் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே மனிதனின் புத்தியை கீழ் நோக்கி அழைத்துச் செல்கின்றது என்பேன். அதனால் முதலில் தன்னை உணருங்கள் யார் என்பதைக்கூட. தன்னை உணர்ந்தால் அங்கு இறைவன் வருவானப்பா. அனைத்தும் சொல்லிக் கொடுப்பானப்பா. கூறு இன்னும்? அடியவர்:- ஐயா , இங்க உள்ள எல்லோரும் உங்களை பற்றி நல்லபடியா வேண்டுவதற்கு ஒரு அருமையான பாடல் ( ஒன்று கூறுங்கள்). குருநாதர்:- அப்பனே அகத்தியன் என்று சொல்வதற்கே புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. பல கோடி அப்பனே. ஆனால் சரியாக அதை பயன் படுத்த தெரியவில்லை அப்பா. அதனால்தான் அப்பனே மீண்டும் அப்பனே கஷ்டங்கள். அப்பனே யான் கொடுக்க மாட்டேன் என் சீடர்களே கொடுத்து விடுவார்கள் அவ்வளவுதான். அடியவர்:- அகத்தியர் என்று சொல்வதற்கே பெரும் புண்ணியம் ஐயா குருநாதர்:- அப்பனே வாக்கு, வாக்கு என்று கேட்டுக் கொண்டிருந்தாயே இப்பொழுது கேள். அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு) என்ன சொல்றதுன்னு தெரியலங்க ஐயா. குருநாதர்:- அப்பனே பின் வாயில் தெரியாது தெரியாது என்றுதான் வருகின்றது. தெரியும் என்ன தெரியும் கூறு? அடியவர்:- தெரியும் என்பது எதுவும் இல்லை குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அனைவரையுமே ஒன்று கேட்கின்றேன் அப்பனே. அனைத்தும் தெரியாது என்று கூறுகின்றான். இவன்தனக்கு யான் ஏதாவது கொடுத்தால் இவன் சரியாக பயன் படுத்துவானா என்ன? நீங்களே கூறுங்கள் அவன்தனக்கு. அடியவர்:- ….. குருநாதர்:- அப்பனே துன்பங்கள் ஏன் என்று தெரிந்து கொண்டாயா? அப்பனே. உந்தனுக்கு கொடுக்கப் போகின்றேன். அதனால்தான் பக்குவங்கள் பட வேண்டும் என்பதற்கே இத்துன்பங்கள் அப்பனே. அடியவர்:- ……….. குருநாதர்:- அப்பனே இவ் அகத்தியன் செய்வது உங்கள் நண்மைக்கே என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் தீமை என்றால் அப்பனே உங்களுக்கு தெரியாது அப்பனே ஒர் முறையில் நீங்கள் என்னென்ன கஷ்டங்கள் அப்பனே விதியில் உள்ளதை முன்பே ஆராயந்து உங்களை யான் பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. ( உங்கள் அனைவரின் ) அகத்தின் உள்ளேயே இருந்து. (அகத்தீசன் = அகத்தின் + ஈசன் = நம் அகத்தில் இருக்கும் ஈசன் ) அப்பனே சிறு நொடியில் உன் உள்ளே நுழைந்து வெளியே சென்று விட்டால் கர்மங்களை யான் அழித்து எங்கோ விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் தகுதியான ஆளாக இல்லையப்பா இல்லை, இல்லை. அத்தகுதியை முதலில் வளரத்துக்கொள்ளுங்கள். அத்தகுதி எப்படி வரும் மனதில் எதுவுமே இருக்கக்கூடாதப்பா. முதலில் தான் யார்? முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. முதலில் இவ்வுலகத்திற்கு ஏன் வந்தோம்? எவை எவை செய்யவேண்டும்? எவை எவை செய்யக்கூடாது ? என்பதை எல்லாம் அப்பனே புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே. அனைவருமே இதை புரிந்து கொளவதே இல்லையப்பா. அதனால்தான் கஷ்டங்கள் என்பேன் அப்பனே. அதை புரிந்து கொண்டால், சரியாகவே வாழ்ந்து வந்தாலே யாங்களே அதை புரிய வைப்போம். புரிந்து கொண்டு வாழ்ந்தாலே வெற்றி நிச்சயம். புரியாவிடில் தோல்வி நிச்சயம். அடியவர்:- ……… குருநாதர்:- அப்பனே அதனால் கவலைகள் இல்லை. ஒரு பொழுதும் என் பக்தர்களுக்கு யான் கஷ்டங்கள் தருவதே இல்லையப்பா! நீங்கள் தான் கஷ்டத்தை (கர்மாவை) நோக்கி செல்கின்றீர்கள் அப்பனே. கூறுங்கள் அப்பனே. என் மீது தவறா? அடியவர்:- இல்லங்கய்யா குருநாதர்:- அப்பனே உங்களை பக்குவப்படுத்தி பக்குவப்படுத்தி, ஆற்றி ஆற்றி இப்பிறவிக்கு என்னென்ன கஷ்டங்கள் படுவீர்கள் எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு என்னென்ன தீர்வுகள் என்றெல்லாம் யான் எடுத்துரைப்பேன்.அதனால் எக்குறைகளும் கொள்ளத்தேவை இல்லை என்பேன். கேளுங்கள் இன்னும்.சொல்கின்றேன். அடியவர்:- ( நீன்ட அமைத்திக்குப்பின் ஓர் அடியவர்) ஐயா அடியார்கள் பூசுவதற்கு தென்காசி சுரண்டையில் இருந்து இப்போ விபூதி வாங்கி (மற்றவருக்கு) எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சு இருக்கோம் ஐயா. அதை சாணம் வாங்கி அதையே திரும்ப ஐயா கிட்ட… குருநாதர்:- அப்பனே தாராளமாக கொடு. ஆனாலும் சில கர்மங்களை ஏற்பாய். அதை வரும் காலங்களில் பின் எப்படி அழிப்பது என்பதையும் சொல்லி விடுகின்றேன். அடியவர்:- குருநாதர்தான் வழி காட்டனும். குருநாதர்:- அப்பனே வழியும் காட்டி விட்டேன். மீண்டும் கேட்கின்றாய் என்பேன். இதுதான் மனிதர்களின் புத்தி. மட்ட புத்தி. அடியவர்:- ஐயா ஒரு முறை ஜீவ சமாதி போகும்போது, மக்கள் எல்லாம் உட்காந்து (வாக்கு) கேட்கும்போது அந்த ஜீவ சமாதியிலிருந்த மகான் வந்து அருள் பாலிக்கும் விதம் ஒரு மந்திரம் சொல்ரேன்னு சொன்னீங்கல்ல. குருநாதர்:- அப்பனே அதை நீ இப்பொழுது செப்பினாலும் வீணாகப்போய் விடும் என்பேன் அப்பனே . ஆனால் மீண்டும் கடன் தான் அதிகமப்பா. ஆனாலும் அதை வரும் காலங்களில், எப்பொழுது எதை செப்ப வேண்டுமோ என்பதை எல்லாம் யான் சொல்லி விட்டேன் அப்பனே. எப்பொழுது எதைத்தர வேண்டுமோ அப்பொழுது கொடுத்தால்தான் நல்லது என்பேன். இப்பொழுது சொன்னாயே ஜீவசமாதி என்று அது எப்படியப்பா? ( ஜீவ சமாதி என்றால் என்ன?) அடியவர்:- இறைவனை நமக்குள் பார்த்து இறைவனுடன் ஒடுங்குதல். குருநாதர்:- அப்பனே. உயிரோடு இருப்பதப்பா அப்பனே இதில் உயிரோடு இருப்பதே எப்படி நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றால் சிறிது தொலைவில் அமர்ந்து தியானங்கள் செய்தாலே அப்பனே உன் உடம்பு ஆடுமப்பா. ஆடும். அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதற்கு பன்மடங்கு தியானங்கள் செய்யவேண்டும். அப்பொழுதுதான் உண்மை நிலை புரியும் என்பேன். (உங்களை) ஆட்டுவிப்பான் அவனை (ஜீவ சமாதியில் உள்ள சித்தர்களை) நினைத்து தியானங்கள் செய்து கொண்டிருந்தால் இங்கு உன் உடம்பு அப்படியே ஆடும் அப்பா. அதிர்வுகள் ( உன் உடம்பின் உள் ) தோன்றுமப்பா. பின் உடம்பே ஆடுமப்பா. அப்பொழுதுதான் (உனது) சில கர்மாக்கள் தொலையுமப்பா. அப்படி இல்லை என்றால் ஒரு நொடி போய் விடுகின்றது. பின் ஏதோ வணங்கி விடுகின்றீர்கள் என்றால் நிச்சயம் பின் கஷ்டங்கள் தான் வருமப்பா. பின் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் அப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. ஜீவன் இப்பொழுது எல்லாம் அதை சொல்லக்கூடாது வரும் காலத்தில் அதை சொல்லிவிடுகின்றேன் அதைக்கூட. அடியவர்:- ……. குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு? அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம் குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா. அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும் குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள். அடியவர்:- ……. குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள் அங்கு சென்றால் புருவின் ( புருவத்தின் ) மத்தியில் வந்து விடும் அப்பா. ஆனால் சென்று கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அங்கெல்லாம் சென்றால் (நெற்றியில் உள்ள) சிதறி கிடக்கின்றதே அதெல்லாம் ஒன்று சேரும் அப்பனே. இப்படி சேரந்தால்தான் அப்பனே பக்தியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அப்பனே பின் சில சில மனிதர்களுக்கு தானாகவே புண்ணியங்கள் சேர்ந்து விடும். இறை பலங்கள் வந்து விடும். தானாகவே ( அவ் செல்கள்) சேர்ந்துவிடும். (அப்படி) அவை சேர்ந்துவிட்டால் நீங்கள் நினைத்ததை எளிதில் அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. வரும் காலங்களில் அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

Tuesday, November 28, 2023

சித்தன் அருள் - 1495 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 10!

(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை சித்தன் அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 ,1485,1488, 1494 பதிவுகளில் பார்க்கவும்) குருநாதர்:- அப்பனே, துன்பங்கள் இல்லாமல் எதுவும் கொடுக்க முடியாதப்பா. அப்பனே இப்பொழுதே அப்பனே துன்பம் வேண்டுமா? இன்பம் வேண்டுமா? அடியவர்:- (பல அடியவர்கள் சொல்லியது) துன்பம். குருநாதர்:- அப்பனே இங்கு துன்பம் என்றால் இறைவன். இன்பம் என்றால் கர்மா. அப்பொழுது நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். புரிகின்றதா? அடியவர்:- புரிந்தது குருநாதர்:- அப்பனே தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். என்னிடத்திலே இருந்து கொண்டு அகத்தியா, அகத்தியா என்று சொல்லிக் கொண்டிருந்து அப்பனே வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பா. அதனால்தான் அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக்கொடுத்து, அப்பனே ஒரு சிறு பிள்ளைக்கு ஒரு தாய் தந்தையர் எப்படி சொல்லிக் கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் சொல்லிக் கொடுத்துத்தான் உன் விதிகளைக்கூட உள்ளதை யான் அனைத்தும் சொல்வேன் அப்பனே. அப்பொழுதுதான் அனைத்தும் மாறும் அப்பா. பின் யான் சொல்லிவிடலாம். ஓடு, அங்கு ஓடு, இங்கு ஒடு என்றெல்லாம். நீ ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். அதனால் நம்பிக்கையோடு வாருங்கள். அவ்நம்பிக்கையே உங்களை உயர்த்தி வைக்கும். அப்பனே நம்பிக்கைத்தான் யான் என்று உணர்ந்து கொண்டீர்கள் நீங்கள். அடியவர்:- (ஆதி குருவின் ஞான ரசம் திருப்தியாக உண்ட அமைதி) குருநாதர்:- அப்பனே யாருக்காவது பின் கேள்விகள் இருக்கின்றதா என்று கேட்டு எந்தனுக்கு தெரிவி. அடியவர்:- ஐயா குருநாதர் அகஸ்தியப்பெருமான் (மீது உள்ள) நாட்டத்தில் நண்பர் வந்துள்ளார். அவர் நல்லா வந்து திருப்பி இப்போ தீய வழிக்கு போய்ட்டாங்க. இப்போ ( உயிருடன்) இல்ல. ஆனா குருநாதர் வந்து முதல்ல கெட்டவங்களா இருந்த அவங்கள நல்ல வழியில் மாத்தி உட்டாங்க. ஆனா இவரு நல்ல வழியில வந்துதுட்டு, கெட்டதா போனதுக்கு காரணம் என்ன? குருநாதர்:- அப்பனே நீ பார்த்தாயா? நல்லதை செய்து கொண்டிருக்கின்றான் என்று? அப்பனே உன் வேலையை செய்யவே உந்தனுக்கு நேரம் இல்லை. அவன்தனை நீ பார்த்தாயா? சொல். அடியவர்:- அவர் அன்னதானம் பண்ணிக்கிட்டு இருந்தார். குருநாதர்:- அப்பனே அனைவருமே அன்னதானம் செய்கின்றார்கள் அப்பனே. யாருக்கு கஷ்டம் வரவில்லை கூறு. அடியவர்:- அவர் அகத்தியர் குருநாதர் வாக்குகளுடன் வந்தாரு. அதுக்கப்புறம்… குருநாதர்:- அப்பனே இதுவரை யான் சொல்லிக் கொண்டிருந்தது என்ன? மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. இவன்தனக்கு புத்தியில்லை. இப்பொழுதிலிருந்தே புரிகின்றது அப்பனே. இவன் பின் ஏற்கெனவே யான் சொல்லிவிட்டேன். இறைவன் என்பவன் நெருப்பு என்று. அதை நெருங்க நெருங்க துன்பம் வரும். ஆனால் பாதியிலேயே திரும்பி வந்து விட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று. இதை நீ அப்பனே மீண்டும் மீண்டும் செல்வதற்கு அகத்தியன் (நெருப்பு என்று உணர்க) அப்பனே புரிந்துகொள். மூளை இல்லாதவனே. அடியவர்:- (திரு.ஜானகிராமன் அவர்கள் இந்த அடியவருக்கு விளக்கம் தந்தார்கள்) குருநாதர்:- அப்பனே உன்னை அறிவாளி என்றே சொல்கின்றேன் (மீண்டும் என்னைக்கேள்வி) கேள். அடியவர்:- அதனாதலதான் அய்யா மனசுல… குருநாதர்:- அப்பனே இதனால்தான் எங்கு வாய்யை விட வேண்டுமோ அங்கு வாயை விடவேண்டும் அப்பனே. எங்கு எப்படி நடக்க வேண்டுமோ அங்கு அப்படி நடந்து கொண்டால் சிறப்பு. அப்படி இல்லை என்றால் படைப்பு. அப்பனே எதைச் சொன்னேன் என்றால் மீண்டும் பிறவியப்பா. அதனால் உணருங்கள். தெளிவு பெறுங்கள். அப்பனே அப்படி இல்லை என்றால் யானே கஷ்டத்தை தருவேன் என்று கூட சொல்லிவிட்டேன். அதைக்கூட நீ கேட்கவில்லையா? அடியவர்:- சரிங்க குருநாதர்:- அப்பனே, எதற்காக அப்பா நீ வந்தாய் இங்கு? அடியவர்:- குருநாதருடைய வாக்கை கேட்பதற்கு! குருநாதர்:- அப்பனே அனைத்தும் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றேன் நீ கேட்கவில்லையே. அதனால் என்ன சொன்னேன் என்று சில வாரத்தைகளை அனைவருக்கும் மீண்டும் கூறு? அடியவர்:- ஐயா கஷ்டப்பட்டாதான் கர்மாவை போக்க முடியும். குருநாதர்:- அப்பனே இதை தெரிந்து கொண்டே என் நண்பன் கஷ்டப்படுகின்றான் என்று கூறி விட்டாயே அப்பனே. இவைதன் எப்படியப்பா நீ நான் சொன்னாய் அப்பனே அதனால்தான் அப்பனே. மூளை இருக்கின்றது. மனிதனுக்கு உபயோகப்படுத்த தெரியவில்லையப்பா. அப்பனே தெரிகின்றதா இப்பொழுது? அவன் எதற்காக கஷ்டப்படுகின்றான் என்று. அடியவர்:- அவர் இப்ப இல்லங்க. புரியுதுங்க. அவர் மீண்டும் பிறவி எடுத்து (கஷ்டப்பட) வரப்போறார். குருநாதர்:- அப்பனே என்னை நம்பியவர்கள் கூட கஷ்டப்படுத்திக் கொண்டே அதாவது கஷ்டப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றார்கள். எதற்காக நீ கூற வேண்டும். அடியவர்:- அய்யா, கர்மாவை போக்கி அவங்களை புனிதப்படுத்தி அவர்களை சுத்தப்படுத்துவதற்காக. குருநாதர்:- அப்பனே தெரிந்து கொண்டாயா?. அனைத்தும் தெரிந்து கொண்டே கேள்விகள் கேட்கின்றாயே? அப்பனே அடியவர்:- மௌனம் குருநாதர்:- இதனால் அப்பனே (மீண்டும்) கேள். அடியவர்:- அய்யா அதாவது உயர் தர புண்ணியம்னா என்ன? உணவு வழங்குதல் ஓரு புண்ணியம் அப்டின்னு சொல்றோம். கல்விக்கு வழி வகுத்தல் ஒரு புண்ணியம்ன்னு சொல்றோம். அப்புறம் வந்து இறை வழிபாட்டுக்கு அழைச்சு வர்ரது புண்ணயம்ங்குறோம். இதுல வந்து எது புண்ணியம் அதிகமானது மனிதனுக்கு புண்ணியம் அதிகம் சேரத்து அவனது கர்மாவை பலன்களை குறைக்கும்? குருநாதர்:- அப்பனே, “அனைத்தும் இறைவா நீ” என்று சொல்லிவிடு முதலில். அதிலிருந்து அப்பனே இறைவனே உனக்கு அனைத்தும் கொடுப்பான் அப்பனே. வாங்கிக்கொள். அதை மீறி என்னால் முடியும் என்று சென்றால் அங்குதான் அப்பனே கஷ்டங்களப்பா ( கர்மாக்கள் ). அதனால் புரிந்து கொள். அதனால் அப்பனே பரமனே (மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறைஅருள் மன்றம் அடியவர்) தெரிந்து கொள். ஏன் எதற்காக வந்து கொண்டிருந்தாய்? உன்னை கஷ்டங்கள் நெருங்கப் போகின்றது. ஏன் எதற்காக நீ கூறுவாய். அகத்தியனே உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தேனே இப்படி கஷ்டங்கள் ஆகி விட்டதே என்று. ஆனாலும் அப்பனே அனைத்தும் உந்தனுக்கு சொல்லிவிட்டேன் அப்பனே. இதையும் பரப்பு. எப்படி மனிதன் வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே. உன் கடமையை செய். மற்றவர்கள் கடை பிடிக்கின்றார்களோ இல்லையோ. நீ சொல்லிவிடு அப்பனே. அப்பனே அது கர்மா. அவனையே போய் சார்ந்துவிடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. உந்தனுக்காக மட்டும் இங்கு வந்தேன் அப்பனே. ஆனால் மற்றவர்கள் எல்லாம் கர்மாவை சேகரித்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான். அடியவர்:- அமைதி குருநாதர்:- அதனால் அப்பனே புரிகின்றதா? என் பக்த்தனை எப்பொழுதும் யான் விடமாட்டேன் அப்பனே. இப்பொழுதிலிருந்து அதனால் அப்பனே என் பக்தனை கஷ்டங்கள் வருகின்றதென்றால் யானே அவனிடத்திற்கு சென்று பாடங்களை கற்பிப்பேன் போதுமா? அடியவர்:- அமைதி குருநாதர்:- நீ கேட்டாய் அப்பனே, அவை, இவை, இப்படிச்செய்தால் புண்ணியம் புண்ணியம் என்று, செய்துகொண்டே இரு அப்பனே யான் வருவேன். அவ்வளவுதான் அப்பனே. அப்பனே அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது என்பேன் அப்பனே. யான் புண்ணியங்கள் செய்தேனே என்றெல்லாம். அதனால் அப்பனே யானே வந்து காத்தருளுவேன் வருங்காலங்களில் கூட அப்பனே. அதனால்தான் அப்பனே முதலில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூட தெரிந்து தெரிந்து செய்தால்தான் அப்பனே வெற்றி கிடைக்குமே தவிர இல்லை என்றால் தோல்விகள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே. அப்பனே தோல்விகள், தோல்விகள் ஏற்பட, ஏற்பட ஒரு நாள் வெற்றியாகிவிடும் என்பேன் அப்பனே. துன்பங்கள் ஏற்பட ஏற்பட ஒர் நாள் இன்பமாகிவிடும் என்பேன் அப்பனே. பொய்கள் சொல்லச் சொல்ல ஓர் நாள் உண்மை ஆகிவிடும் என்பேன் அப்பனே. இவ்வாறு மனிதன் பொய் சொல்லிச் சொல்லி அப்பனே கடைசியில் கலியுகத்தில் உண்மை ஆக்கிவிட்டால் பாவி மனிதன் அப்பனே. அதை தடுக்கவே யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே. முதலில் அதை தடுத்துவிட்டு உங்கள் அனைவருக்குமே மோட்சகதியை யான் கொடுக்கின்றேன். நலங்கள். ஆசிகள். அடியவர்:- அமைதி. (அடியவர்கள் மோட்சகதி என்று கேட்டு ஆனந்தம்) குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. சித்தர்கள் ஏன் உங்களுக்காக வரவேண்டும்? அப்பனே உங்கள் மூளையில் உள்ள அனைத்து செல்களைக்கூட யான் ஆராயந்து விட்டேன். மனிதன் என்னென்ன வேலை செய்கின்றான் எங்கெல்லாம் (உடம்பில் உள்ள செல்களில்) சில தரித்திரங்கள் தங்கும். அவை எல்லாம் பின் அங்கங்கே நோய்கள் ஏற்படும் என்பதை எல்லாம் யான் நன்றாக தெரிந்திருக்கின்றேன் அப்பனே. (சித்த ரகசியம்:- 100 ட்ரில்லியன்/Trillion cells அதாவது ஒரு கோடி கோடி செல்கள் 100,000,000,000,000 உள்ள மனித உடம்பில் - நன்கு கவனிக்க - ஒரு மனிதனின் உடலில் உள்ள இவ்வளவு செல்களை அகத்திய பிரம்ம ரிஷி அவர்களால் நொடிப்பொழுதில் ஆராய இயலும் இறை வல்லமை இது. மனிதனால் எந்நாளும் நினைத்தே பார்க்க இயலாத சித்தர்களின் மாபெரும் இறை வல்லமை இது. இது போல மனிதனால் உணர இயலாத பல இறை வல்லமைகள் சித்தர்கள் வசம் உண்டு. அதனை அவர்கள் கூறினால் மட்டுமே ஒரளவு தெரிந்து கொள்ள இயலும். புரியாதவற்றை சொன்னால் கர்மம் என்பதால் சித்தர்கள் இது போன்ற பல விசயங்களை மனிதர்களுக்கு உரைப்பதில்லை. கர்மங்கள் இத்துணை செல்களில் இருந்து நீக்கும் வல்லமை இருவருக்கு மட்டுமே உண்டு. உலகை ஆளும் ஆதி ஈசனாலும், அகத்தியப் பெருமானால் மட்டுமே இயலும் என்பதை உணர்க.) இதை எவரும் தெரிந்திருக்கவில்லையப்பா. அதனை முதலில் ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே. (ஒரு அடியவரின் வரப்போகும் நோய் குறித்து வாக்கு உரைத்தார் மாமுனிவர். அதற்கு குருநாதர் அந்த அடியவர்க்கு இயலாதவர்களுக்கு உணவளித்துவர அருளினார்). இவை எல்லாம் வரும் காலங்களில் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை எல்லாம் யான் தெரிவித்துக் கொண்டே இருப்பேன் அப்பனே. அனைத்து செல்களும் அதாவது நெற்றியில் வலது கண்ணில் இருந்து இடது கண் வரை கூட அப்பனே பின் வரிசையாக செல்கள் இருக்கின்றதப்பா. அவ்செல்கள் மாறக்கூடாது என்பேன். (அவை) மாறிவிட்டால்தான் நோய்களப்பா நோய்கள். அப்பனே நலன்களாகவே நீங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அது அங்கு அங்கு தங்கிவிடும் அப்பா. உடம்பில் கூட. அதை மீண்டும் அப்பனே பின் எங்கு இருக்கின்றதோ அங்கு சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கின்றேன் புண்ணியங்கள் செய். புண்ணியங்கள் செய் என்பேன் அப்பனே. ஆனால் அனைவருக்குமே அச்செல்கள் மாறிவிட்டதப்பா. அதை மாறக்கூடாது என்பதற்காகவே நீரைப்பூசுங்கள் என்று திருநீரு என்பது வந்துவிட்டது என்பேன். அப்பனே அதைப்பூசி அப்பனே பக்தியோடு இருந்தாலே பின் எண்ணங்கள் எங்கும் கர்மத்தையும் சேரக்க முடியாது. இறைவன் பாதத்தில் மனதை வைத்து அப்பனே அது போலவே பின் (அவ்செல்கள்) வரிசையாகவே நின்றால் அப்பனே புருவ மத்தியில் இறைவனை நிறுத்தி இறைவனையே காணலாம். அப்பனே இப்புவிதன்னில் அனைவருக்குமே (அவ்செல்கள்) சிதைந்தாகி விட்டது என்பேன். ஆனால் (அவ்செல்களை) ஒன்று சேரப்பது எவ்வளவு கடினம் அல்லவா அப்பனே. அதை யான்தான் ஒன்று சேர்க்க வேண்டும். ஆனாலும் அப்பனே அதற்கும் ஒரு ஒரு திருத்தலங்கள் இருக்கின்றது அப்பா. அங்கு சென்றால் மாறிவிடும். ஆனால் அங்கு செல்வதற்கும் அவ்செல்கள் விடாதப்பா. மேல்நோக்கி செல்கள் இதனை தடுக்கும் (ஆலயத்திறக்கு செல்வதை). இதுதானப்பா வினை. அப்பனே அதை சேர்க்கவே வரும் காலங்களில் எத்திருத்தலத்திற்கு எல்லாம் செல்ல வேண்டும். எங்கெல்லாம் அமர வேண்டும். எங்கெல்லாம் தூ(ங்கி) எழுதல் என்பதை எல்லாம் சொல்கின்றேன் கடைபிடியுங்கள் அப்பனே. வாழந்து கொள்ளலாம் அப்பனே. இல்லை என்றால் வாழத் தெரியாமல் அப்பனே இப்படித்தான் கஷ்டங்களோடு இருக்க வேண்டும் சொல்லி விட்டேன் அப்பனே. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் - 1494 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 9!

(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை சித்தன் அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 ,1485,1488 பதிவுகளில் பார்க்கவும்) குருநாதர்:- அதனால் இப்படித்தான் பக்குவங்கள் பட வேண்டும். பக்குவங்கள் பட்டுவிட்டால் உன் விதியைக் கூட யான் சொல்வேன் அப்பனே. அதை மாற்றும் சக்திகள் கூட என்னிடத்திலே இருக்கின்றது அப்பனே. பிரம்மாவிடம் எடுத்துச் செல்வேன் அப்பனே. புரிகின்றதா? அடியவர்:- புரிகின்றது. குருநாதர்:- அப்பனே, புரிகின்றது என்று சொல்லிவிட்டாய் என்ன புரிகின்றது? கூறு. அடியவர்:- பக்குவ நிலையை அடைவதற்கு துன்பம்தான் இறைவன் கொடுத்த வழி. துன்பத்தை ஏற்றுக் கொண்டு இறைவன்பால் மனதை…(இதை சொல்லி முடிக்கும் முன்னர் ) குருநாதர்:- அப்பனே இனிமேல் என்னை எதாவது கேட்பாயா என்ன? அடியவர்:- ஆசிர்வாதம் வேண்டும். குருநாதர்:- அப்பனே, என்னுடைய ஆசிர்வாதம் இல்லாமலா இங்கு வந்திருக்கிறாய் நீ சொல்? அடியவர்:- சரிங்கய்யா. உண்மைதான். குருநாதர்:- அப்பனே, சரி என்று எதற்கு கூறினாய்? அடியவர்:- நீங்க இல்லன்னா இங்கு வரமுடியாது. தெரியும். குருநாதர்:- அப்பனே இதை முதலிலேயே சொல்லலாம் அல்லவா? அடியவர்:- புரிஞ்சுதுங்கய்யா. மன்னித்துகொள்ளுங்கள். குருநாதர்:- அப்பனே, பின் அப்பொழுது நீயே புரிந்து கொண்டாயா? நீ தவறு செய்தாயா? தவறு செய்தவன்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்பனே. அதுதான் அப்பனே உன் வாயில் இருந்தே. அப்பனே தவறு செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும். தவறு செய்தவனுக்குத்தான் அப்பனே அப்பொழுது நீ தவறு செய்தவனா? அடியவர்:- ஆமாங்க குருநாதர்:- அப்பனே, யான் இல்லை என்று சொல்கின்றேன். அடியவர்:- தெரியல அய்யா. குருநாதர்:- அப்பனே தெரியவில்லை என்றால் என்ன? அடியவர்:- (மௌனம்) குருநாதர்:- அப்பனே இப்படியே தெரியாது, தெரியாது என்று சொல்லிக் கொண்டே இரு அப்பனே. அனைத்தும் தெரிந்துவிடும். யான் இருக்கின்றேன் அப்பனே. அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கு ஒரு மந்திரம் சொல்லட்டுமா? (அந்த மந்திரம்) அப்பனே “தெரியாது”. அடியவர்:- (நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் அடியவருக்கு விளக்கம் தருகின்றார்.அதன் பின்..) குருநாதர்:- அப்பனே எதை தெரியாது என்று கூற வேண்டும்? அடியவர்:- இறைவன் கூட… குருநாதர்:- அப்பனே, இப்பொழுது புரிகின்றதா? அப்பனே கடன் எதற்காக? என்பதைக்கூட இதுவும் கூட தெரியாதப்பா. அதனால் அமைதியாக இரு. சிறிது சிறிதாக மாறும் என்பேன். அடியவர்:- (அமைதி) குருநாதர்:- அப்பனே நல்முறையாக சில விசயங்கள், கேள் அப்பனே. ………………………………….. அடியவர்:- (தனிப்பட்ட 5 முதல் 6 கேள்வி பதில் இங்கு நீக்கப்பட்டது) …………………………………… குருநாதர்:- அப்பனே அப்படி இருக்க, அப்பனே அனைத்தும் செய்வது மனிதனப்பனே. அதை திருத்துவது யான். ஆனாலும் அப்பனே சில துன்பங்களை கொடுத்துத்தான் திருத்தி விடுகின்றேன். இது தவறா? (அடியவர்கள் இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். துன்பங்கள் அகத்தின் ஈசன் மூலம் நமது அனைவரின் கர்மம் நீக்கும் நன்மைக்காக வழுங்கப்பட்டு, நமது கர்மங்கள் ஆணிவேரோடு முற்றிலும் களை எடுக்கப்படுகின்றது. அதன்மூலம் நல்வாழ்வு கிட்டுகின்றது.) அடியவர்:- சரிதான் குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொல் உந்தனுக்கு துன்பம் கொடுத்தது நல்லதா? கெட்டதா? அடியவர்:- நல்லதுதான் குருநாதர்:- அப்பனே இதனால் சில கர்மங்களையும் தொலைத்துவிட்டாய் அப்பனே. அதனால்தான் அப்பனே துனபம் கொடுத்தால் அதன்மூலமே யான் கர்மத்தை துடைப்பேன் (நீக்குவேன்). உந்தனுக்கும் அதுபோலத்தான். உன் பக்கத்தில் இருப்பவனுக்கும் அதுபோலத்தான். யாரை நம்ப வேண்டும் முதலில்? அடியவர் 1:- இறைவனை அடியவர் 2:- குருநாதரை குருநாதர்:- அப்பனே முதலில் அப்பனே உன்னை நம்புங்கள் முதலில். அப்பனே எப்படி என்னை (எங்களை நாங்கள்/அடியவர்களை அடியவர்கள்) நம்புவது என்று நீங்கள் கூறுவீர்கள் அப்பனே. முதலில் யோசித்து செய்யவேண்டும் ஒரு விசயத்தை அப்பனே. இதை செய்தால் நல்லவையா? கெட்டவையா? நிறக்கின்றாயே, பின் கடன் என்று சொல்லிவிடேன் அப்பனே. அதை முதலிலே யோசித்திருந்தால் பின் தெரிந்திருக்கும் அப்பனே இதனால் என்ன துன்பம் என்று. அதனால்தான் முதலில் உன்னை உணர் என்று. இது தவறா? அடியவர்:- தவறில்லை குருநாதர்:- அப்பனே இதை புரியாமல் சுற்றி திரிந்து அப்பனே வலங்கள் (இறைவனை / குருநாதரை சுற்றி) வந்து வந்து ஒன்றும் நடக்கவில்லை என்றால் எப்படியப்பா? உன் விதியில் இருப்பதுதான் நடக்கும். ஆனாலும் உயர்ந்த பக்தியும் உயர்ந்த புண்ணியங்களும் செய்து கொண்டிருந்தால் அப்பனே யானே மாற்றி அமைப்பேன் இப்புண்ணியங்களை பிரம்மாவிடத்தில் கூறி. அடியவர்:- அதுக்கும் நீங்கதான் வழி சொல்லணும் குருநாதர்:- அப்பனே இதனால் பலகர்மாக்கள் உந்தன் விதியில் கூட. யான் பலமுறை பிரம்மாவிடம் சென்று விட்டேன். ஆனால் பின் அகத்திய மாமுனிவரே துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இவன் என்று சொல்லிவிட்டான். அதே போலத்தான் உன் பக்கத்தில் உள்ளவனுக்கும் சொல்லிவிட்டான் அப்பனே ஆனால் யாங்கள் உங்களை விட வில்லை. அடியவர்:- ( மௌனம் ) குருநாதர்:- அப்பனே நீ கேட்கலாம். அறிவுள்ளவன்தானே. அகத்தியனே பின் அனைவருக்கும் நன்மை செய்கின்றீர்களே. என் விதியை மாற்றலாமே என்று. அப்பனே அனைத்திற்கும் மூலப்பொருள் (ஆதி ஈசன்) இருக்கின்றது. அவ்மூலப்பொருளை அடைந்து உந்தனுக்காக யான் விதியை மாற்றி விடுகின்றேன். பின் நாளை என்னைப் பார்த்து பிரம்மன் முறைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எப்பொழுது பின் எவ்மனிதனுக்கு தகுதி பின் எவ்விடத்தில் இருக்கின்றதோ அதை பார்த்துத்தான் யான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன். இதனால்தான் சில கர்மாக்களை உங்களை கஷ்டத்தை உள் அடக்கி மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றேன். அனைத்தும் மாறும் அப்பா கவலையை விடுங்கள். அப்பனே இதை இருவருக்கும் மட்டும் சொல்லவில்லை. (உலகத்தில் உள்ள) அனைவருக்கும் சொல்கின்றேன். அடியவர்:- ( அமைதி ) குருநாதர்:- அதனால் மனிதன் என்றால் கஷ்டம்தான். அப்பனே கடலில் நீந்த வேண்டும். கடலில் நீந்துவது எவ்வளவு கஷ்டம் என்று அனைவரும் உணர்ந்ததே என்பேன். அதில் என்னென்ன ஜீவராசிகள் இருக்கும். உங்களை துரத்தும். மீண்டும் பிறவிகள் தேவையா? அப்பனே. அதனால் சித்தர்களை நம்பினோர்க்கு நிச்சயம் மறுபிறவி இல்லையப்பா சொல்லிவிட்டேன். அதனால் கஷ்டங்களை இப்போதே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் உங்களை யான் விடமாட்டேன் சொல்லிவிட்டேன். அப்பனே சித்தனை வணங்குவதற்கும், சித்தன் நாமத்தை உச்சரிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டுமப்பா. அத்தகுதி இல்லாவிடில் நிச்சயம் எங்களை வந்தடையவும் முடியாது. எங்கள் பெயரை உச்சரிக்கவும் முடியாது என்பேன் அப்பனே. அப்பொழுது நீங்கள் எல்லாம் புண்ணியவாதிகளே. அடியவர்:- (இந்த அமுத வாக்கை கேட்ட அடியவர்கள் பல துன்பங்களில் இருந்தாலும் மிக்க மனம் மகிழந்தனர்.) மிக்க நன்றி ஐயா. குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். முதலில் இவ்வாறு வாழந்தாலே உன் விதியின் ரகசியத்தையே யான் சொல்லி அப்பனே ஏனைய சித்தர்களும் சொல்வார்களப்பா. அதில் இருந்து நீ எதற்காக வந்தாய் என்பதை கூட சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் போராடினாலும் உன் விதியை யாராலும் சொல்ல முடியாதப்பா. பணங்கள் பின் ஏமாந்து ஏமாந்து கர்மத்தையும் சேகரித்து சேகரித்து மீண்டும் மீண்டும் பிறவிக்குள் நுழைந்து கஷ்டங்கள்தான் பட வேண்டும். சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பனே அகத்தியன் வாக்குகள் கேட்பதற்கும் தகுதி இருக்க வேண்டும். அப்படி தகுதி இல்லாவிடில் அப்பனே நிச்சயம் அவன் என்ன செய்தாலும் பிரயோஜனம் இல்லையப்பா. பிரயோஜனம் இல்லை. அப்பனே நீங்கள் அனைவருமே கஷ்டங்களுக்குள் நுழைந்து நுழைந்து வந்து கொண்டுதான் (இருக்கின்றீர்கள்). அதனால்தான் இவ்வாக்குகள் உங்களுக்கு சேரட்டும் என்று அப்பனே இன்னும் (உலகெங்கும் உள்ள) என் பக்தர்களுக்கு சேரட்டும் என்று (இந்த வாக்கை) சொல்லி இருக்கின்றேன் அப்பனே. (இந்த மதுரை வாக்கின் அனைத்து பகுதிகள் அனைத்தும் மிக மிக அதி மிக அடியவர்கள் அனைவருக்கும் இந்த வாக்கு உங்களுக்கு என்று நன்கு உணர்ந்து இந்த வாக்குகளில் குருநாதர் சொல்லிய அறிவுரைகளை அன்புடன் ஏற்று, அதன்படி செயல்பட்டு, உங்கள் உயர் முதல் தர புண்ணிய பலங்கள் அதிகரித்து, உங்கள் கர்மங்கள் வினைகள் நீக்கப்பட்டு, அருள் நல்வாழ்வை அடைந்து, பிறருக்கு சேவை செய்து மாமனிதனாக வாழுங்கள்.) அதனால் வாழ்க்கையில் உயர்ந்தவராக வேண்டும். இறைவன் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பனே நண்மைகளே பின் மனிதனுக்கு ஆகவேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் துன்பத்தில் மிதக்க வேண்டும் அப்பனே. அவ்துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே வெற்றிகளும் உண்டு. அப்பனே இன்பமும் உண்டு. பின் இறைவன் பக்கத்தில் பின் இருக்கும் வாய்ப்பும் கிட்டும். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் - 1488 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 8!

(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை சித்தன் அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 ,1485 பதிவுகளில் பார்க்கவும்) ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். குருநாதர்:- அப்பனே அதாவது கடனுக்காக என்று (அகத்தியனிடம் கேட்கின்றீர்கள்) அனைவருமே. கடனை அடைப்பதற்காகத்தான் பிறவியே எடுத்து வந்திருக்கின்றீர்கள். அவ்கடன் (பிறவிக்கடன்) எப்படியப்பா அடைபடும். நீ (பணமாக) கடன் வாங்கியது அடைந்துவிடும். ஆனாலும் அப்பனே, அனைவருமே ஒரு கடனை பின் அடைக்க உலகத்திற்கு வந்திருக்கின்றார்கள் அப்பனே. அவ்கடன் எப்போதுதான் அடைக்கப் போகின்றீர்கள்? அவ்கடனை அடைத்தால்தான் மோட்சம். இல்லை என்றால் இல்லையப்பா. அடியவர்:- சரிங்கய்யா குருநாதர்:- ஆனால் அவ்கடன் மிகப் பெரியதப்பா. வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் எப்படி அடைக்க வேண்டும் என்பதைக்கூட. அதை விட்டு விட்டு பணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. முட்டாள் மனிதர்களே. அடியவர்:- (மௌனம்) குருநாதர்:- அப்பனே, அவ்கர்மா கடனை அடைத்து விட்டால் துன்பங்கள் என்பதே நெருங்காதப்பா. ஆனாலும் அதற்கு பக்குவங்கள் பட வேண்டும். பல பல வழிகளிலும் கூட துன்பங்கள் பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே கடன்கள் அடைக்க வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் நீங்கள் இவ்வுலகத்திற்கு நீங்கள் கடனுடனே வந்திருக்கின்றீர்கள் அனைவருமே. அவ்கடனை அடைக்க வேண்டும் என்றால் அதறக்கு சரியான தீர்வு துன்பம்தானப்பா. அப்பொழுது நீங்கள், இதிலிருந்து என்ன உந்தனுக்கு பின் தெளிந்தது கூறு? அடியவர்:- துன்பத்தை அனுபவித்து கடைனை தீர்க்கணும். குருநாதர்:- அப்பனே இதனால் தீபங்கள் அப்பனே ஏற்றுகின்றாயே, அப்பனே ஆனாலும் ஏற்றிவிட்டால் மட்டும் அப்பனே நண்மைகள் ஆகிவிடுமா என்ன? அப்பனே. இவை எல்லாம் (மதுரையில் உரைத்த வாக்குகள் அனைத்தும்) நீ சொல்ல வேண்டும். அப்பனே புண்ணியங்களும் செய்ய வேண்டும். இவை எல்லாம் அங்கு அங்கு செப்ப வேண்டும் மனிதர்களுக்கு அப்பொழுதுதான் புண்ணியம் மிகுந்து காணப்படும் அப்பா. இல்லை என்றால் அப்படியேதான் அப்பனே. மண்ணை கையில் எடுத்துக் கொண்டேதான் (பிரயோஜனம் ஏதும் இல்லாமல்) செல்ல வேண்டும் சொல்லிவிட்டேன். ———————————————— (அகத்திய பிரம்ம ரிஷிகள் மிக உயர்ந்த புண்ணியம் எது என்ற வாக்கில் உரைத்த வாக்கினை இங்கு கீழே தருகின்றோம். இந்த வாக்கின் முழு பதிவு சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு! என்ற பதிவில் படிக்கவும். இந்த பதிவு உங்கள் பார்வைக்கு https://siththanarul.blogspot.com/2022/03/1097.html?m=1 இந்த பதிவில் உள்ள உயர் புண்ணியம் தொடர்பான வாக்குகளை பாரப்போம்:- அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே. அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச் சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச் செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள். அனைவரும் அன்னத்தையும் இவையன்றி கூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற (அன்னதானம் முதலிய) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே. அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன் எனவே அடியவர்கள் அன்னதானம், தீபங்கள் ஏற்றும்போது அவர்களுக்கு நல் வழி சொல்லி அவர்களை கடைபிடிக்கச் செய்யுங்கள். ஏதும் தெரியாத மனிதர்களுக்கு குருநாதர் காட்டிய நல் வழிகளை எடுத்து கூறுங்கள். அவர்கள் அதை பின்பற்றினால் அதுவே உங்களுக்கு முதல் மிக உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும்.) ——————————————— அடியவர்:- ( அடியவருக்கு நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் எடுத்து உரைத்தார் பின் வருமாறு:- ஐயா தீபம் எத்தும்போது எப்படி வாழனும், எப்படி செய்யனும் அப்படீன்னு சொல்லுங்க. அப்பதான் கஷ்டம் நீங்கும்) குருநாதர்:- அப்பனே, இதை தொடங்கி வைத்தானே , (அகத்திய பிரம்ம ரிஷி தனது நாடி வாக்கில் பல முறை தனது மைந்தன் என்று அழைக்கப்பட்ட அகத்தியர் திருவடி சேர்ந்த உயர்திரு. அகத்தியர் திருமகன், அகத்தியர் அதிஷ்ட தீபக்குழு நிறுவனர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் சிவபெருமான் , முருக பெருமான் , அகத்தியர் பெருமான் இவர்களின் ஆசி பெற்ற உயர் ஆன்மா ஆவார். ஐயா அவர்கள் அகத்திய பிரம்ம ரிஷி நாடி அருளாளர் திரு. ஹனுமன் தாசன் அய்யா அவர்கள் மூலமாகவும், அகத்தியர் ஜீவநாடி தஞ்சாவூர் கணேசன் ஐயா அவர்களின் ஜீவநாடி மூலமாகவும் ஆசி பெற்று அதன் மூலமாக உள்ளுணர்வு தூண்டப் பெற்று அகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழுவை அமைத்தார்கள். தஞ்சை அகத்தியர் நாடியில் திரிசூலம் மாமுனிவர்களாகிய அருள்மிகு அகத்தியர் மஹரிஷி, வசிஷ்ட மகரிஷி மற்றும் விஷ்வாமித்திர மகரிஷி ஆகியோர் ஆசி கொடுத்து மனித பிறவியை உருவாக்கி , அவர் மூலம் இந்த பூலோகத்தில் தீபங்கள் மூலம் அருள் வளம் பெற வாழ்ந்த ஒரு மாமனிதர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் பிருங்கி மகரிஷி மற்றும் பிருகு மகரிஷி ஆன்மா தொடர்பு உடையவர் என்பதை அடியவர்கள் அறியத் தருகின்றோம். நாடி வாக்கு தொடர்கின்றது.….. ) பல பேருக்கும் நன்மை செய்தான் ஆனாலும் அப்பனே அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான். ஏன் வந்தது? ஆனாலும் வாழத்தெரியவில்லையப்பா. இவன்தனும் கற்றுக்கொள்ள அதாவது பின் சொல்லிக் கொடுக்கவில்லையே அப்பா. அதனால்தான் துன்பங்களாக போய்விட்டது அனைவருக்குமே. அதை நீ செய்து விடாதே வரும் காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே. அடியவர்:- ஐயா வழி நடத்துங்க ஐயா. என்ன செய்யனும்னு. ( மற்ற அடியவர்கள் :- சொல்லனும் எப்டி வாழனும்னு. துன்பத்தை அடைஞ்சு அடைஞ்சுதான் கர்மா போகும். அப்படீன்னு தீபம் ஏற்றும் பொழுது சொல்லணும்) குருநாதர்:- அப்பனே பின் தீபம் ஏன் ஏற்றுகின்றீர்கள்? கூறுங்கள். அடியவர்:- (மறுபடி கேள்வி பதில் ஆரம்பித்ததால் அடியவர்க்கள் மகிழச்சி, சிரிப்பு) ஜோதி வழியாக இறைவனை தரிசனம் செய்ய. குருநாதர்:- அப்பனே அப்படி இல்லையப்பா. அப்பனே இவ்தீபம் இப்படி எரிகின்றதே (பிரகாசமாக அனைவருக்கும் ஒளி கொடுத்து) அதே போலத்தான் தன் வாழக்கையும் எரிய வேண்டும் என்பதற்கே தீபங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்படியே எரிந்திருக்க அப்பனே அதற்கு என்ன தேவை என்று பின் அனைத்தும் தெரியும் என்பேன். அது போலத்தான் நீங்கள் அழகாக பின் ஒளிர்வதற்கு அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே தானாக தீபமும் அணைந்துவிடும். நீங்களும் அணைந்து விடுவீர்கள். அவ்வளவுதான் வாழ்க்கை அப்பனே. அடியவர்:- (அமைதி) குருநாதர்:- அப்பனே பின் நீ சேவைக்காகவே வந்தவன் அப்பனே. ஒவ்வொன்றாக எடுத்து கூற வேண்டும். சொல்லிவிட்டேன். அப்படி எடுத்துக் கூறவில்லை என்றால் பல பல சுவடிகள் ஓதிக்கொண்டு இருப்பவர்கள் கூட எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள அதாவது சொல்லித் தரவில்லை அப்பா மனிதர்களுக்கு. இதனால்தான் சுவடிகளை படிப்பவர்களுக்கு எல்லாம் கஷ்டங்கள் வந்து கடைசியில் அப்பனே பாதாள லோகத்திற்கு சென்று விடுகின்றார்கள் அப்பனே. ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா. தன்னைத்தானே அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் உண்மை நிலை அப்பனே யாங்களே மனிதனை திட்டித் தீர்க்கவில்லை என்றால் அப்பனே வரும் காலங்களில் பின் சித்தர்களே பொய். சித்தர்களே இல்லை என்று ஒரு வாரத்தையில் சொல்லிவிட்டு போயிருப்பான் அப்பா. அதனால்தான் மனிதர்களுக்கு முதலில் பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி பின் வாக்குகள் ஒவ்வொரு சித்தனாக உரைப்பான் அப்பனே. (சித்தர் பெருமான்) போகன் அறியாததா நீங்கள் அறிந்திருக்கப் போகின்றீர்கள்? அப்பனே. அப்பனே உப்பை சிறிது நீரில் இட்டு அருந்தினாலே அப்பனே போகனை நினைத்து போகனே வந்து சில நோயை குணப் படுத்துவானப்பா. அப்பனே தெள்ளத் தெளிவாக இருங்கள். தெளிவாக இல்லை என்றால் மற்றவர்கள் உன்னை சுலபமாக ஏமாற்றிவிட்டு சென்றிருப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன். இறைவன் ஒருபோதும் உன்னை ஏமாற்ற மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே. துன்பங்கள் கொடுப்பானே தவிர அப்பனே ஏமாற்றமாட்டான் அப்பனே சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டேன். அப்பனே ஏன் பழத்தை இறைவனுக்கு வைக்கின்றார்கள்? அடியவர்:- நிவேத்தியம் குருநாதர்:- அப்பனே துன்பங்கள் பட்டு பட்டு பல வகைகளிலும்கூட இன்னல்கள் பட்டு பட்டு அப்பனே கடைசியில் அப்படி பட்டால்த்தான் கடைசியில் அதுவே இறைவனிடத்தில் வருகின்றது. அதனால் நீங்கள் சுலபமாக இறைவனிடத்தில் வந்து விடுவீர்களா என்ன? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பன்மடங்கு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு வாக்கிலும் சொல்லுகின்றேன். அடியவர்:- புரியுதிங்கய்யா குருநாதர்:- அப்பனே, கற்பூரம் கற்பூரம் என்று கூறுகின்றார்களே, எதற்காக அதை ஏற்றுகின்றார்கள் இறைவனுக்கு? அடியவர்:- கற்பூரம் ஒளிவிட்டு தன்னைத்தானே எரிச்சிக்குது. குருநாதர்:- அப்பனே இதிலிருந்தே புரியவில்லையா? அதாவது எப்படி உருகி உருகி நிற்கின்றதோ அதுபோலத்தான் பிறர்நலன் நீங்கள் காணவேண்டும் அப்பனே. அப்படி இருந்தால்தான் இறைவனுக்கு அப்பனே இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் என்பேன் அப்பனே. தான் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ அவன்தன் பக்கத்தில் இறைவன் இருப்பான் அப்பனே. அது புறத்திலே உள்ளதப்பா. ஏன் பின் இறைவனுக்கு புஷ்பத்தை வைத்துக் கொண்டு வணங்குகின்றீர்கள்? அடியவர்:- மலர் தனக்குன்னு ஏதும் வச்சுக்கிரது இல்ல. வாசத்த கூட பிறருக்குத்தான் கொடுக்குது. குருநாதர்:- அப்பனே இன்று பூ. நாளை அது உதவாதப்பா. இவ்வளவுதான் வாழ்க்கையப்பா. இதுதான் மனிதனப்பா. அதாவது உதவாத உடம்பை வைத்துக்கொண்டு பின் ஏதாவது செய்யுங்கள் என்பதே இதனுடைய அர்த்தம் சொல்லிவிட்டேன். இதன் பின் அர்த்தத்தையும் இன்னும் இன்னும் சொல்கின்றேன். புரிகின்றதா அப்பனே? இன்று மனிதன் நாளை எங்கேயோ அப்பனே. அடியவர்:- புரியுது. குருநாதர்:- அப்பனே இறைவனுக்கு தெரிந்துதான் அனைவருமே செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உங்களுக்குத்தான் தெரியவில்லை என்பேன் அப்பனே. அதை எல்லாம் கேட்காதீர்கள் அப்பனே. துன்பம் வந்துவிட்டது , எதற்காக இவ்வாறு சண்டைகள்? கடன் தொல்லைகள் என்றெல்லாம் தெரிந்து வாழுங்கள் அப்பனே. என்னை நம்பி பின் (ஏதும் வாழ்க்கையை பற்றி) தெரியாமலே வாழ்ந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா அகத்தியனை வணங்கிக்கூட. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

சித்தன் அருள் - 1485 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 7!

இந்த பதிவின் முந்தைய பதிவுகளை சித்தன்்அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 தொகுப்புகளில் பார்க்க.) ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அடியவர்:- நன்றி குருவே. குருநாதர்:- அப்பனே, எதற்க்காக நன்றி சொன்னாய்? அடியவர்:- (எங்களுக்கு) அறிவு இல்லை. குருநாதர்:- அப்பனே ஒர் முறை சொல்லிவிட்டேன் (நீ கூறியதை). மற்றொரு முறை ஏதாவது ஒன்றை உரை. அடியவர்:- எனக்கு என்னங்க தெரியும். (குருநாதா) உங்களுக்குத்தான் தெரியும். குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை நீ செய்யவில்லை அப்பா. அதனால்தான் பல அடிகளை வைத்து அப்பனே ஆனாலும் சில சில வகைகளிலும் கூட பக்குவங்கள் ஏற்ப்படுத்தி ஒரு மனிதனாக வாழ வைக்கப்போகின்றேன். நீ கேட்கலாம் (இதுவரை) இப்போது நான் மனிதனாக வாழவில்லையா என்று. நிச்சயம் வாழவில்லையப்பா. இனிமேல்தான் நீ மனிதனாக வாழப்போகின்றாய் அப்பனே. போதுமா? ( குருநாதரின் கருனை மழை இங்கு இந்த அடியவருக்கு பொழிந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.) அடியவர்:- நன்றிங்க ஐயா. (அடியவர் குருநாதரின் அன்பு வாக்கை கேட்ட உடன் உடைந்து அழ ஆரம்பித்தார்) குருநாதர்:- அப்பனே அதனால் உன் பக்கத்தில் இருக்கின்றானே இவன்தனும் சில சில தவறுகள், அதாவது சில கர்மத்தை சேகரித்துக் கொண்டான் அப்பனே. இதனால்தான் அப்பனே இதுவரையில் கூட சில வாக்குகள் யான் செப்ப வில்லை என்பேன் அப்பனே. இனிமேலும் அதை எப்படி அகற்றிட வேண்டும் என்பதைக்கூட சிறிது சிறிதாக அகற்றிக்கொண்டிருந்தேன் அப்பனே. இனிமேலும் உன் வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் யான் சொல்லுகின்றேன். பொறுத்திருக. (அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் ஓர் வேண்டுகோள். ஒரு மிக முக்கிய நிகழ்வை இந்த அடியவர் மூலம் உணரந்திட வேண்டியது அவசியம். எனக்கு ஏன் நாடி வாக்கு பல முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என நல் உள்ளங்கள் பல ஏங்கும் நேரங்கள் பல உண்டு. அதே நேரத்தில் அந்த நல் உள்ளங்கள் கர்மத்தினால் திசை திருப்பப்பட்டு வழி தவறிய ஆடு போல் ஜோதிடம்/இதர சுவடிகளிடம் சென்று பணம் கொடுத்து பரிகாரம் என்ற கர்ம வழிக்கு செல்பவர்களும் உண்டு. ஆனால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை உணர இந்த வாக்கு ஒரு உதாரணம். நாடி வரும் வரை பொறுமை காத்தலே சிறந்த சீடனுக்கு/பக்தனுக்கு அழகு. வேறு கர்மம் பிடித்த வழிகளில் சென்று கர்மத்தை சேர்ப்பதை தவிர்க்கவும். கர்மா இருக்கும் நேரங்களில் அகத்திய பிரம்ம ரிஷி நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தன், அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்களை தொடர்பு கொள்ள அவர்கள் கர்மா விடாது என்பதை அறியவும். பொறுத்தார் பூமி…..) அடியவர்:- (உடைந்து அழுதுகொண்டே இருக்கின்றார்கள்…) குருநாதர்:- இதுபோலத்தான் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா வினை. அதனுள்ளே எந்தனுக்கு அதைத்தா, இதைத்தா என்றெல்லாம் பின் கேட்டால் யான் எப்படியப்பா தருவது? தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இவ் அகத்தியன் அப்பனே எப்பொழுது யாருக்கு (நாடி வாக்குகள்) தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் கொடுப்பான் அப்பா. நிச்சயம் கைவிடமாட்டேன் அப்பா. ஆனால் திருத்துவதற்கே அனைத்தும் கூட. அதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. அப்பனே (வேறு எங்கு) சென்றாலும் உன் கர்மா விடாதப்பா. அப்பனே சொல்லி விட்டேன். இப்பொழுது பின் இருவரை (ஒற்றைக்காலில்) நிக்கச்சொன்னேன் அப்பனே. கால்களை ஆட்டி ஆட்டி இதனால்தான் நீ எங்கு எதை செய்தாலும் கர்மா உங்களை ஆட்டும். ஆட்டிப்படைக்கும். சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் சமமாக நிற்கவேண்டும் தைரியமாக. பின் அவ் கர்மத்தை நீக்கினால்தான் அப்பனே அனைத்தும் வெற்றியாகும். அதனால்தான் முதலில் கர்மாத்தை (நீக்க வேண்டும்). அதனால் சில துன்பங்கள் அதனால்தான் ஏற்படுத்துகின்றேன் என்பேன் அப்பனே. கவலைகள் இல்லை. அப்பனே யார் யார்க்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் யான் கொடுப்பேன். உங்கள் பல தலங்களைக்கூட யானே வடிவமைத்தேன் என்பேன் அப்பனே. அங்கெல்லாம் யான் நிச்சயம் வரும் காலங்களில் அப்பனே யான் எதை எங்கு எவை என்று அனைத்தும் எடுத்துரைக்கப் போகின்றேன். உலகம் அப்பனே பின் பக்திமயமாகட்டும். அதனால்தான் யாங்கள் வந்தோமப்பா. அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் பக்தி என்ற சொல்லுக்கு பொய் என்று ஆக விடும் என்று அப்பனே அதனால்தான் மனிதன் பல குற்றங்களை செய்து செய்து கடைசியில் பாரத்தால் அப்பனே திருடன் கூட ஒரு ருத்திராட்சத்தை அணிந்து, பின் காவி உடை அணிந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. யான் பக்தன், எந்தனுக்கு அனைத்தும் தெரியும் பின் வாயில் வந்தவை எல்லாம் சொல்வது அப்பனே. பின் வாயில் வருவதை எல்லாம் சொல்லி பின் பணங்கள் பறிப்பது. அப்பனே இவை இருந்தால் அப்பனே இக்கலியுகத்தில் இப்படித்தானப்பா நடக்கும். அதனால்தான் நாங்கள் சித்தர்கள் விட வில்லை அப்பா. பக்தி எப்படி காண்பிப்பது எப்படி என்று வரும் காலங்களில் யாங்கள் அங்கங்கு தெரிந்து தெரிந்து காண்பிப்போம் என்பேன். அதனால் அப்பனே முதலில் அகத்தியனுக்கு எங்கு திருத்தலம் கட்ட வேண்டும் அப்பனே? சொல்லுங்கள். அடியவர்:- மனதில், உள்ளத்தில் குருநாதர்:- அப்பனே, அதை தெரிந்து கொண்டாலே போதுமப்பா. உன் ஆசைகளை யானே நிறைவேற்றி விடுவேன் அப்பனே. எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லையப்பா. இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. மனிதனாக வாழுங்கள் போதுமானது என்பேன் அப்பனே. அன்புக்கு அதற்கே யான் கட்டுப்பட்டவன். அப்பனே என்னை வைத்துக் கொண்டே அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே. அதாவது பின் என்னையும் லோபாமுத்ராவையும் அமைத்து விட்டார்கள் அழகாக. ஆனால் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான் (ஆலயம் கட்டியவர்). பின் ஆனால் பொய்களப்பா பொய்கள். வாயக்குள் வருவதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றான் ஒருவன் அப்பனே. என்னதான் அவன் தனக்கு யான் செய்வது அப்பனே. ஆனால் கடைசியில் பார்த்தால் அகத்தியனுக்குத்தான் தொண்டு செய்தேன். ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் எப்படியப்பா (யான்) பொறுப்பு? இதை நீ சொல்ல வேண்டும் அப்பனே. நீ அலைந்தவன். அப்பனே அதனால் நீ தான் சொல்ல வேண்டும். அப்பனே அதனால் நிச்சயம் எந்தனுக்குக்கூட சேவைகள் செய்யாதீர்கள் சொல்லிவிட்டேன். இயலாதவர்களுக்கு சேவை செய்யுங்கள் போதுமானது அப்பனே. யான் உங்களுக்காக சேவை செய்கின்றேன். அவ்வளவுதான் அப்பனே. (இதுவரை ஒற்றைக்காலில் கைகளை மேலே தூக்கி நின்ற அடியவர்களை) அப்பனே, நின்று கொண்டிருக்கின்றீர்களே நீங்கள். சேவை என்பது என்ன? அடியவர்:- தன்னலமில்லாமல் பிறருக்கு உதவி என்று செய்யாமல் நமக்கு நாமே சேவை செய்வது. குருநாதர்:- அப்பனே எதை என்று கூற சேவை என்பது உன் பக்கத்தில் இருப்பவன் சொல்லட்டும். அடியவர்:- பிறருக்கு தொண்டு செய்வது. குருநாதர்:- அப்பனே, எதற்காக தொண்டு செய்கின்றாய்? அடியவர்:- தேவையான உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கிறது. குருநாதர்:- அப்பனே, பிறருக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கின்றாய். அவ்வளவுதான். பிறருக்கு யார் ஒருவன் சேவை செய்கின்றானோ அவன் தன் தனக்கே சேவை செய்கின்றான். தன் கர்மத்தை போக்கிக் கொள்கின்றான் என்பதே அர்த்தம் இதன் பொருள். அப்பனே கர்மத்தை நீக்க வேண்டும் என்றால் அப்பனே நல்படியாக நல் எண்ணங்கள் முதலில் வளர வேண்டும் அப்பனே. அனுதினமும் ஏதாவது உயிருக்காவது என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் கூட ஒருவனுக்காவது இவ்திருத்தலத்திறக்குச் செல் நலமாகும். எதாவது பின் நல்லதை பின் சொல்லிக் கொண்டிருந்தாலே (நல் சேவை/புண்ணியங்கள்) ஆனாலும் அப்பனே பின் உண்மைகள் தெரியாமல் , பொய்கள் பரப்பிக்கொண்டிருந்தாலே அதுவும் கர்மாதானப்பா. இன்றைய நிலையில் அதுபோலத்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. அதனால் அப்பனே நீங்கள் ஒன்றும் இறைவன்கள் இல்லை. உங்களால் ஒன்றும் செய்ய முடியாதப்பா. இதுபோலத்தான் மனிதன் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. பின் அதை , இவை, யான் இறைவனுக்கே சேவை செய்பவன். இறைவனுக்கு அப்பரிகாரங்கள் செய்தால் நல்லவை நடக்கும். இவை எல்லாம் ஒரு வெற்று வேட்டுகளப்பா. பொய்களப்பா. இதனையும் கூட வரும் காலங்களில் நிருபிக்கப்போகின்றேன். அனைத்தும் தான் தன் வாழ்வதற்கே செய்து கொண்டிருக்கின்றான் மனிதன் அவ்வளவுதானப்பா. ஆனால் கர்மா சேர்கின்றது என்பது தெரியாமல் போய் விட்டதப்பா. பாவமப்பா மனிதனப்பா. அடியவர்:- ( மொனம் ) குருநாதர்:- அப்பனே அதனால் உண்மை நிலை உணருங்கள். ஒருவொருவரும் எதை என்றும் அறிய அறிய யாருக்குமே உண்மைநிலை தெரியவில்லை அப்பா. அதனால்தான் உண்மை நிலை தெரிவித்திருக்கின்றேன் இன்று. அடியவர்:- ( மொனம் ) குருநாதர்:- அதனால் உண்மையை உணருங்கள் அப்பனே. உண்மையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே. இறைவன் நிச்சயம் நிச்சயம் உன்பால் நிச்சயம் பின் வந்து உதவிடுவான் இதனால் அப்பனே நல்முறைகளாக இன்னும் இன்னும் எதிர்பார்த்து எவை என்றும் புரியாமல் அப்பனே எதற்காக வந்தாய் இங்கு நீ? அடியவர்:- குருநாதரை பார்த்து தரிசனம் செய்ய. குருநாதர்:- அப்பனே, நீ சொல்லிவிட்டாய் உன்பக்கத்தில் உள்ளவனை சொல்லச்சொல். அடியவர்:- குருநாதர் ஆசிர்வாதம் வாங்க குருநாதர்:- அப்பனே, என்னுடைய எப்பொழுதுமே இருக்குமப்பா உந்தனுக்கு. அடியவர்:- கடன் ( இந்த அடியவர் கேட்ட விதம் பொதுவாக அனைவர் கேட்கும் கேள்வியாக பொருந்தும். உடனே கருணைக்கடல் அகத்தியப் பெருமான் அளித்த அற்ப்புத பதில் கடனில் உள்ள உலகோர் அனைவருக்கும் பொருந்தும். ) குருநாதர்:- அப்பனே , தெரியாமலே கேட்க்கின்றேன். அனைவரையும் பார்த்தே கேட்கின்றேன். அதாவது என்னை கேட்டுத்தான் வாங்கினாயப்பா நீ? ( இங்கு நீ என்பது கடனில் உள்ள அனைவரையும் குறிக்கும் என்று உணர்க) அடியவர்:- ( மொனம் ) குருநாதர்:- அப்பனே உன் சந்தோசத்திற்க்காகவே வாங்கி மீண்டும் சோம்பேறித்தனமாக கட்ட முடியாமல் மீண்டும் என்னிடத்தில் கேட்டால், யான் என்ன செய்ய வேண்டும் அப்பனே? அடியவர்:-நீங்கதான் வழி சொல்லனும். குருநாதர்:- இதுதானப்பா, கர்மா செய்யும்போது யாருமே கேட்பதில்லை என்பேன் அப்பனே மனிதன். அப்பனே ஒரு முறையாவது யான் இப்படி செய்கின்றேன் என்று கேட்டானா? இல்லையப்பா. அதனால்தான், கர்மா சேகரித்துக் கொண்டு அப்பனே அவை பலங்கள் ஆகும் பொழுதுதான் இறைவனையே நோக்கிப்படை எடுத்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். அதனால் முன்னே உணர வேண்டும். இவை பின் செய்யலாமா? வேண்டாமா? என்று அப்பனே ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே. அதனால் அப்பனே இதைக்கூட யான் பார்த்துக்கொள்கின்றேன். பொறுத்திருக! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

சித்தன் அருள் - 1481 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 6!

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். இன்பங்களே கொடுத்து கொண்டு இருந்தால்….. சிந்திக்கவே மாட்டான் அப்பா. எப்படியப்பா யான் நல்லது செய்வது? குருநாதர்:- அப்பனே, வாழ்க்கை என்பது என்ன? அடியவர்:- பிறருக்கு உபகாரமாக இருப்பது. குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கே அதாவது உபகாரமாக நீ இல்லையப்பா எப்படியப்பா பேசுகின்றாய்? அடியவர்:- (அடியவர்கள் அமைதி. சில நொடிகளுக்கு பின்னர் ஒர் அடியவர்) ஐயா ஜெயிக்க முடியாது ஐயா. அகத்தியப்பெருமானிடம் பேசி. குருநாதர்:- அப்பனே எழுந்து நில் அப்பனே. (இங்குதான் அந்த மகத்துவம் மிக்க மகிமை புகழ் நிகழ்வு புலோகத்தில் பல ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. குருநாதர் நேரடியாக சீடர்களுக்கு பாடம் எடுப்பது போல ஆரம்பித்தார் சில நல் ஆத்மாக்களுக்கு. நாடி வாக்கே பலருக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், ஆனால் இந்த அடியவர்கள் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்க்கும் வாய்ப்பு கிட்டியது. எப்பேர்பட்ட பாக்கியம் அந்த அடியவர்களுக்கு) அடியவர்:- (அடியவர் எழுந்து நின்றார்) குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில். அடியவர்:- (ஒரு காலில் நிறக்க ஆரம்பித்தார்) குருநாதர்:- அப்பனே கைகளை மேலே துக்கி , அடியவர்:- ( இரு கைகளை மேலே தூக்கி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்) குருநாதர்:- ஏதாவது அனைவருக்கும் ஓர் உரை, உரை. அடியவர்:- (அடியவர் மெதுவாக பேசினார்) குருநாதர்:- அப்பனே, உன் மனதிலேயே தான் நீ சொன்னாய் எனபேன் அப்பனே. அனைவருக்கும் பலமாக எடுத்துரை் என்பேன் அப்பனே. அடியவர்:- எல்லோரும் அன்பாக இருங்கள். எல்லோரையும் அகத்தியப்பெருமான் பார்த்துக்குவார். ( இப்போது ஒற்றைக்காலில் நிற்க்கும் அடியவர் , நிற்க இயலாமல் ஆடிக்கொண்டே இதை அனைவருக்கும் உரைத்தார். ) குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்க்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத்தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி. அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.) குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன? அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகி தொழுது உய்யுங்கள். வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே. குருநாதர்:- (இந்த பாடலை முழுவதும் பாடி முடிக்கும் முன்னரே , இடையிலேயே குருநாதர் குறுக்கிட்டு ) அப்பனே, நிறுத்து. அப்பனே கர்மா வைத்துக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதிலிருந்தே தெரிகின்றது என்பேன் அப்பனே. ஆடி ஆடி பாடுகின்றாய் என்பேன் அப்பனே. உன் பக்கத்தில் இருப்பவனை எழச்சொல். அடியவர்:- ( அடியவர் எழுந்து நின்றார்) குருநாதர்:- அப்பனே இது போலே நில். ( ஒற்றைக்காலில், இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி) அடியவர்:- (அடியவர் குருநாதர் சொன்னது போல் நின்றார்) குருநாதர்:- அப்பனே, முருகனைப்பார்த்து ஒரு பாடலைப்பாடு. அடியவர்:- (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் உள்ள பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. குருநாதர்:- அப்பனே, இறைவனை நம்பினாலும் ஓர் பக்குவப்படுத்த அப்பனே ஒர் ஆள் தேவையப்பா. உன்னால் ஒன்றுமே அதாவது பக்கத்தில் உள்ளவன் கெட்டியாக (ஒற்றைக்காலில் நிற்க்கும் உன்னை) பிடித்தான். அதுபோலத்தானப்பா மனிதனுக்கு சில சில வினைகளில் யாங்களே வந்து அப்பனே அப்படியே பிடித்துக்கொள்வோம் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பா? உன் நிலமையும் உந்தனுக்கு அதனால்தான் அப்பனே வாக்குகள் உந்தனுக்கு கொடுக்கவில்லை என்பேன் அப்பனே. சில கர்மாக்களை எதை என்று அறிய அறிய சம்பாதித்து அப்பனே அனுபவித்துக்கொண்டிருந்தாய். ஆனாலும் அப்பனே சிறுக சிறுக முருகனே அதை நீக்கிவிட்டான். அதனால் நிச்சயம் அப்பனே பாடலை பாடு. அப்பனே காலை கீழே விடாதே. அடியவர்:- (அதே முருகன் பாடலை பாட ஆரம்பித்தார்) குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை இதைக்கூட சரியாக செய்யவில்லை என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் என்னென்ன கேட்கின்றீர்கள் அப்பனே. அவை எல்லாம் யான் தரவா முடியும் அப்பனே. எவை என்று அறிய இதை சரியாக எவை என்று கூற யான் சொல்லியதை சரியாக பின்பற்றினால்தான் அப்பனே பின் அனைத்தும் செய்ய முடியும். ஏனென்றால் அப்பனே ஏன் எதற்க்காக சொல்கின்றேன் என்றால் அவ்கர்மாவை நீக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே கர்மாவை பற்றி இப்படியே எடுத்து கூறு நீ. அடியவர்:- கர்ம வினை என்பது நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் ஏற்ப வரும். நல்லது பன்னால் நல்லது வரும். கெட்டது பன்னா கெட்டதை வரும். குருநாதர்:- (தனிப்பட்ட வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் உரைத்தார். அந்த பதிவுகள் நீக்கப்பட்டது. அந்த அடியவர் இல்லத்திலே குருநாதர் இருப்பதாக உரைத்தார்.) இறைவன் தான் செய்த வினைகளுக்கு ஏற்ப்பவே அப்பனே சில சில துன்பங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றான். இது தவறா? அடியவர்:- சரிதான். குருநாதர்:- அப்பனே எதை என்று கூற நீங்கள் இன்னும் அப்பனே தவறு செய்துவிட்டு தவறு செய்து விட்டு , தவறு செய்து விட்டு என்னிடத்தில் வந்தால் எப்படியப்பா யான் கொடுப்பது? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே. அடியவர்:- (அனைவரும் அமைதியானார்கள்.) குருநாதர்:- அதனால் அப்பனே, உன் பக்த்திலேயே இருக்கின்றானே இவன்தன் ( தனி நபர் வாக்கு நீக்கப்பட்டது) தாய்க்கு பல உதவிகள் சேவை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இறைவன் சேவைகள் செய்வான். தாயை பாரத்து ஒரு பாடல் பாடு. அடியவர்:- (பாடல் ஒன்றை பாடினார்) குருநாதர்:- அப்பனே அனுதினமும் உன்தாயை வணங்கிக்கொண்டே வா அப்பனே. நிச்சயம் மாறுதல் ஏற்பபடுத்துகின்றேன் அப்பனே. முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்குதல் வேண்டும். இதை வணங்காதவர்கள் (உலகில் உள்ள அனைவருக்கும் ) அப்பனே, எப்படியப்பா கொடுப்பது? அதனால் உங்களுக்கு அருகிலேயே யான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையப்பா. அதனால்தான் சில சில கஷ்டங்களை உங்களுக்கு யானே வைத்தேன் அப்பனே. அடியவர்:- ( அனைத்து அடியவர்களும் அமைதி) குருநாதர்:- இதனால் அப்பனே உணருங்கள். அப்பனே, (உங்களால்) சிறிது நேரம் கூட நிற்க்க முடியவில்லை என்பேன் அப்பனே. வாழ்க்கை எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே? ஆனால யான் இருக்கின்றேன் அப்பனே. பாதை காட்டுகின்றேன். வையுங்கள் காலை கீழே. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Sunday, November 26, 2023

சித்தன் அருள் - 1480 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 5!

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே இவை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே யான் தெளிவாகவே. யான் கண்டுபிடிப்பதை யாரும் தடுக்க வழிகள் இல்லை. இறைவனும் அறிவியலையும் கூட ஒன்றாக இனைத்து அனைத்தும் ஒன்றே என்று உங்களுக்கு தெரிவிக்கப்போகின்றேன். அதற்க்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் அப்பா. ஏனென்றால் உடனடியாக சொல்லிவிட்டாலும் பைத்தியக்காரனாகி விடுவீர்கள். ஏனென்றால் பைத்தியக்காரனுக்கு எவ்வளவு சொன்னாலும் பைத்தியக்காரனப்பா. அறிவுள்ளவனுக்கு எவ்வளவு சொன்னாலும் அவனும் ஒரு பைத்தியக்காரனப்பா. பொய்களுக்கு (பொய் சொல்லுபவனுக்கு) எவ்வளவு சொன்னாலும் அவனும் ஒரு பைத்தியக்காரனப்பா. அதனால் நீங்கள் கேட்கலாம் இவ்வுலகத்தில் சிறிதாவது உண்மைகள் இருக்கின்றதா என்று. சத்தியமாக இல்லை அப்பா. அப்பனே நீங்கள் மீண்டும் கேட்கலாம் உண்மையான அகத்தியர் பக்தர்கள் இருக்கின்றார்களா என்று. அப்பனே நிச்சயம் யான் என்ன சொல்வது. சொன்னாலும் யான் என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இப்பொழுது சொல்ல மறைமுகமாக பின் சென்று இப்படி சொல்லிவிட்டானே அகத்தியன் என்று நீங்களும் ஏங்கிக்கொண்டு இருப்பீர்கள் அப்பனே. அதனால் உண்மையை தெளிவடையுங்கள் அப்பனே. எதற்க்கும் ஆசைப்படாதீர்கள் அப்பனே. சென்று கொண்டே இருங்கள் அப்பனே. கிடைக்கும் அப்பனே அதனால் எதையுமே எதிர்பார்க்காமல் வருவது இரண்டுதான் அப்பனே. ஒன்று கர்மா. மற்றொன்று அப்பனே நிறுத்தி வைக்கின்றேன் யாராவது ஒருவன் சொல்லட்டும். (இதன்பின் மதுரையில் நாடி வாக்கு கேட்க வந்த அடியவர்களிடம் குருநாதர் கேள்வி பதில் முறையில் மகத்தான மகிமை புகழ் நல் வாக்கு அளிக்க ஆரம்பித்தார்கள். இங்கு அடியவர் என்பது பல அடியவர்களை குறிக்கும். அவர்கள் அருமையான கேட்ட பல கேள்விகள், அதற்கு குருநாதர் அளித்த அற்புத வழிகாட்டும் பதில்/கேள்விகள் உங்களுக்கு தனிப்பட்ட நல்ல புரிதல்களை உண்டாக்கும். அனைவரும் வாருங்கள். இந்த மகத்தான கேள்வி பதில் உரையாடல் உள் நுழைந்து ஞான அமுத ரசத்தை நம் அனைவரும் சுவைத்து ஞானத்தெளிவு பெறுவோம்) அடியவர்:- புண்ணியம் குருநாதர்:- அப்பனே, கர்மா என்பது என்ன? அடியவர்:- நாம் செய்யக்கூடிய பாவ செயல். குருநாதர்:- அப்பனே, பாவத்தின் சம்பளம் என்ன? அடியவர்:- மரணம். குருநாதர்:- அப்பனே, மரணம் வந்து விட்டால் அப்பொழுது என்ன லாபம் என்பேன் அப்பனே. அப்பொழுது எவன் ஒருவன் கஷ்டத்தை அனுபவிப்பது? அடியவர்:- அவனுடைய வாரிசுகள். குருநாதர்:- அப்பனே, அப்படி இல்லையப்பா. அவனவன் கஷ்டத்தை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும் என்று யான் சொல்கின்றேன் தீர்மானமாக. அடியவர்:- மறுபிறவி எடுத்து (கழிக்க /அனுபவிக்க வேண்டும் ) குருநாதர்:- அப்பனே ஏன் மறு பிறவி எடுக்கின்றாய்? அடியவர்:- கர்மா மிச்சம் இருக்கு. குருநாதர்:- அப்பனே, இப்பொழுதான் யான் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே அவ்கர்மாவைத்தான் கழிக்க வந்துள்ளீர்களே மீண்டும் ஏன் நீங்கள் பிறவி எடுக்கின்றீர்கள்? அடியவர்:- கர்மாவை கழிக்காம பாவம் சேரத்ததால் குருநாதர்:- அப்பனே, சொல்லி விடுகின்றேன். இங்கு இருப்பவர்கள் அனைவருமே பாவத்தை சேர்த்து வைத்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. அடியவர்:- நீங்கதான் காப்பாத்தனும். குருநாதர்:- அப்பனே, இறைவன் காப்பாற்றி விடுவானா என்ன? சொல். அடியவர்:- திருந்துவதற்கு வாய்பு… குருநாதர்:- அப்பனே அதனால்தான் அப்பனே பொதுப்படையாகவே சில விசயங்களை சொல்லிச்சொல்லி அப்பனே அவ் பாவத்தை அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் பாவத்தை சம்பாதித்துக் கொள்கின்றான். எப்படியப்பா கஷ்டங்கள் வராது? இதில்கூட இறைவன் கூட அப்பனே கஷ்டத்தை வேற கொடுத்து விடுகின்றான் அப்பனே. அதை எப்படி தடுக்க வேண்டும் அதனால் அப்பனே அனுதினமும் உன்னால் முடிந்தவரை நல்எண்ணத்தோடு அப்பனே பிறருக்கு ஏதாவது ஒரு நல்லதை செய்து கொண்டே இரு அப்பனே. அப்படி நல்லதை செய்ய முடியவில்லை என்றால் இப்படி இரு. இறைவனை வணங்கு. என்றெல்லாம் அப்பனே பின் சொல்லிக்கொண்டே இரு அப்பனே. எவை என்று கூற (உன் வாழ்க்கை மற்றும் உலக நிலைகள்) மாறுதல்கள் அடையும் என்பேன். அப்பனே பின் இவ்வுலகத்திற்க்கு அப்பனே இரண்டு தேவை வாழ்வதற்ககு என்ன? அடியவர்:- அருளும், பொருளும். குருநாதர்:- அப்பனே இவை இரண்டும் இருந்தால் எவை என்று அறிய அறிய இப்பொழுது யான் தந்து விடுகின்றேன் அருளும், பொருளும் கூட. அதை வைத்துக்கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்? அடியவர்:- அது வள்ளுவர் சொன்னது. குருநாதர்:- அப்பனே அருளும், பொருளும் கொடுத்துவிடுகின்றேன். (இவை இரண்டு மட்டும் போதுமா? என்பதை போல குருநாதர் வேறு சில கேள்வி கேட்டார்கள். அதற்கு அடியவர் உரைத்த சில பதில்கள் அதற்கு குருநாதர் உரைத்த பதில் கேள்விகள் முதலிய தனி நபர் சார்பான பதிவுகள் இங்கு நீக்கப்பட்டுள்ளது). அடியவர்:- இல்ல. அறிவு கிடையாதுங்க அய்யா (குருநாதா) அந்த அளவுக்கு. குருநாதர்:- அப்பனே எவை என்று அறிய அறிய அறிவு இல்லாமலா இவை எல்லாம் செய்து கொண்டிருந்தாய் இப்பொழுது? அடியவர்:- குருநாதரிடம் பேசி ஜெயிக்க முடியாது அய்யா. குருநாதர்:- அப்பனே, ஜெயிக்கலாம் என்பேன் யான். அடியவர்:- ( பல அடியவர்களின் சிரிப்பு அலை இங்கு) அதுக்கும் நீங்கதான் வழி நடத்தனும். குருநாதர்:- அப்பனே, எதை என்றும் அறிய அறிய வழி நடத்திக்கொண்டே தான் இருக்கின்றேன். அப்பனே. அடியவர்:- நன்றி! குருநாதர்:- அப்பனே கடைசியில் பாரத்தால் அப்பனே நன்றி என்று சொல்லி விடுவது அப்பனே. அடியவர்:- (பல அடியவர்களின் சிரிப்பு அலை இங்கு) குருநாதர்:- அப்பனே எதற்கு நன்றி சொல்கின்றீர்கள் என்று யாருக்காவது தெரியுமா அப்பனே? அடியவர்:- இறைவனுக்கு அருகில் அழைத்து சொல்வது குருநாதர்:- அப்பனே, உன்னிடத்தில் அறிவுகள் இல்லையப்பா. அதை மற்றொருவன் செய்கின்றான். அதனால்தான் நன்றி. அடியவர்:- (பல அடியவர்களின் சிரிப்பு ) குருநாதர்:- அப்பனே, அப்பொழுது நீங்கள் அறிவை வளரத்துக் கொண்டிருக்கின்றீர்களா? அப்பனே உங்களிடையே ஓர் சக்திகள் அதாவது பிறக்கும் பொழுது அப்பனே ஓர் சிறிய எதை என்றும் அறிய அறிய நெற்றியில் ஓர் சக்தி குவித்து விடுகின்றான் இறைவன். அதை யாருமே சரியாக பயன் படுத்துவதில்லை அப்பா. அதை முதலில் பயன்படுத்திக் கொண்டாலே உன் வாழக்கை உன்னைப் பற்றி தெரியும் அனைத்தும் கூட. ஆனாலும் அப்பனே அதை பற்றித்தான் வரும் காலங்களில் எடுத்துரைத்து அவ்சக்தியை அப்பனே எப்படி என்று வரும் காலங்களில் அப்பனே உங்களுக்கும் கூட சிறிது சிறிதாக உங்களுக்கும் எப்படி செயல்பட என்று கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பேன். ஆனால் தானாகவே அப்பனே முக்கால் பங்கு ஒருவனுக்கு வந்துவிட்டது இங்கு ஆனால் இப்பொழுது அதை யான் தெரிவிக்க மாட்டேன். அப்பனே கேளுங்கள் ஏதாவது ஒரு கேள்வியை. அடியவர்:- இல்ல. இத்தனை அறிவுரைகளும் சிறு வயதிலே கிடைக்காமல், ஆசைகள் நிறைந்து, குடும்பம் அமைந்து, மனைவி வந்து, குழந்தைகள் வந்து இத்தனை கடமைகளையும் தோளில் ஏத்தினதுக்கு அப்புறம் சொல்லுறீங்களே அப்புறம் எப்படி மனுசன் தப்பு பண்ணுனான்னு சொல்றீங்க? குருநாதர்:- அப்பனே ஒத்துக் கொள்கின்றேன் அப்பனே கேட்பதை. ஆனாலும் அகத்தியன் யான் உங்களை நோக்கி ஏன் வர வேண்டும்?. பின் நீங்களும் என்னை ஏன் அகத்தியன் என்று அழைக்க வேண்டும். சொல். அடியவர்:- கடைசி அடைக்கலம் நீங்கதானே. குருநாதர்:- அப்பனே, இதை முன்னே தெரிவிக்கலாமே. அதனால் நீங்கள் என்னை தேடி வரவில்லை அப்பனே. யான்தான் உங்களை தேடி வந்திருக்கின்றேன் அப்பனே. நீங்கள் ஓர் பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் யான் தேடிவந்து உங்களுக்கு அனைவருக்குமே கஷ்டங்கள் இருக்கின்றது. அதை எப்படி போக்குவது என்பதைக்கூட ஆனால் அதைத் தெரியாமல் நீங்கள் அலைந்து கொண்டு இருக்கின்றீர்களே!!! வாழ்க்கையே வீணாக்கிக் கொண்டு இருக்கின்றீர்களே!!! அதற்காகத்தான் அப்பா யான் வந்தேன் அப்பனே. அதனால் புண்ணியங்கள் செய்தால் எங்களை நோக்கி நீங்கள் வரத் தேவையே இல்லை அப்பா. யான் உங்களை நோக்கி வருவேன் அப்பனே. உங்களுக்கு என்ன தேவையோ யான் பக்கத்திலே இருந்து ஓர் தாய் தந்தையர் போல் என்ன செய்ய வேண்டுமோ அதை யான் செய்வேன் அப்பனே. அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. எதையும் கேட்டு வாங்காதீர்கள் என்பேன் அப்பனே. கொடுப்பதை பெற்றுக் கொள்ளுங்கள். யார் ஒருவன் அதைப் பெற்றுக் கொள்கின்றானோ அவன்தான் மனிதன். ஆனால் மனிதனாக யாருமே வாழவில்லையே அப்பனே. எந்தனுக்கு அது வேண்டும், இது வேண்டும். அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவன் அனைத்தும் கொடுத்து விடுவானா என்ன? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அதனால் ஒவ்வொன்றாக அப்பனே பைத்தியம் என்றால் எப்படி அப்பனே? பைத்தியக்காரன் என்று ஒருவனை ஏன் அழைக்கின்றார்கள்? (அடியவர்களிடம் அமைதி) நாடி அருளாளர் :- ஐயா யாராவது கூறலாம். அடியவர்:- நாங்க என்ன பதில் சொன்னாலும் தப்பாதாங்க அய்யா இருக்கும். (அடியவர்கள் மத்தியில் சிரிப்பு) அகத்தியப்பெருமான் இடத்தில் இருந்து சிந்திக்கிற அளவுக்கு நமக்கு தெரியாது. குருநாதர்:- அப்பனே, அதனால்தான் அப்பனே சிந்திப்பதற்கே சிறிது துன்பங்களப்பா. துன்பங்கள் கொடுத்தால்தான் மனிதனே சிந்திப்பான் என்பேன் அப்பனே. இன்பங்களே கொடுத்து கொண்டு இருந்தால்…..! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

சித்தன் அருள் - 1477 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 ( பகுதி 4)

சித்தன் அருள் தொகுப்பு 1475 ன் தொடர்ச்சியாக! ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே அதனால் உன் வழியில் சென்று கொண்டே இருங்கள் அப்பனே. யான் தருகின்றேன் மாற்றத்தை. அவ்வளவுதான் அப்பனே. ஓர் தந்தைக்கு தெரியும் அப்பனே தன் பிள்ளையை எப்படி காப்பாற்ற , எப்படி பக்குவங்கள் படுத்தப்படுத்த என்பதெல்லாம். அதனால் அப்படித்தான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. இதனால் அப்பனே பின் பொய் கூறலாம். அப்பனே அவ்பரிகாரங்கள் செய்தால் இது நடக்கலாம் என்று. இவ்பரிகாரங்கள் செய்தால் அவை நடக்கலாம் என்று. அவ்பரிகாரங்கள் செய்தால் உந்தனுக்கு அனைத்தும் கிட்டும் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் திருமணம் நடக்கும் என்று. ஆனால் நடக்காதப்பா நடக்காது. எல்லாம் பொய்களப்பா. இதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில். ஆனால் நடக்கும். ஆனாலும் அப்பனே பின் மீண்டும் கஷ்டங்கள் வந்து விடுமப்பா. ஆனாலும் பின் மீண்டும் ஓடி ஒடி அங்கு ( பரிகாரம் செய்ய ) சென்றுவிடுவீர்கள் அப்பனே. இதுதான் அப்பா உங்களுடைய தரித்திரம் என்பேன் அப்பனே. அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இதனால் நிச்சயம் அகத்தியன் இருக்கின்றான். அகத்தியன் பார்த்துக் கொள்வான். என் தந்தை இருக்கின்றான், என்னை பக்குவப்படுத்துவான் என்றெல்லாம் நீங்கள் உணர்வீர்கள். ஏன்? எதற்க்காக இவ்வளவு நேரம் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அனைவருக்குமே கஷ்டங்கள்தானப்பா. அதனால்தான் ஓடி ஒடி இங்கு வந்து உட்கார்ந்து விட்டீர்கள் அப்பனே. அதனால் அப்பனே உண்மை நிலையை அறியுங்கள் அப்பனே. உண்மை நிலை அறியாவிடில் துன்பம்தானப்பா. அப்பனே பின் உங்கள் முதுகின் பின்னாலே துன்பத்தை (கர்மாவை) வைத்துக்கொண்டு சென்று கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே. ஆனால் அத்துன்பமும் உங்கள் பின்னாலே வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதற்கு ஒருவனும் கூட அப்பனே லாயக்கு இல்லாதவன். (யாங்கள் மனிதர்களுக்கு பல முறை) சொல்லிச் சொல்லி (மனிதர்கள்) மீண்டும் மீண்டும் (கர்ம) துன்பத்தில் நுழைந்து நுழைந்து, அப்பனே அத்துன்பத்தை முதலில் இறக்கி வையுங்கள் அப்பனே. எப்படி இறக்க வேண்டும் என்று யாராவது கேட்டானா? யாரும் இல்லையப்பா? ஒருவொருவனுக்கும் இன்னும் பொருள் தேவை, இன்னம் பணம் தேவை, இன்னும் புகழ் தேவை, இன்னும் என்னென்னவோ தேவை அப்பனே. அனைத்தும் கொடுத்து விட்டால் இறைவன் எதற்கப்பா? கூறுங்கள் நீங்களே அப்பனே. அதனால் அப்பனே இனிமேலும் என்பக்தர்கள் அப்பனே சொல்லிக் கொடுங்கள் அனைவருக்குமே அப்பனே. “யாருக்காவது , ஒரு உயிருக்காவது அப்பனே நன்மை செய்ய வேண்டும் அனுதினமும்” என்று கூற யானே உங்களிடத்தில் வந்து இச்சுவடியை (மும்மூர்த்திகளால் ஆசிர்வாதம் பெற்ற உலகின் ஒரே ஜீவநாடியை) வைத்து எதை என்று அறிய அறிய உங்களுக்கே வாக்குகள் தெரிவிக்கின்றேன் அப்பனே நன்முறைகளாக. ( அகத்தியரின் பக்தர்கள் இந்த உத்தரவை அவர்கள் சிரசில் ஏற்று குறைந்த பட்சம் 1008 பேர்களுக்காவது நேரில் எடுத்து கூறுங்கள். அதிகம் முடிந்தவரை உலகெங்கும் இந்த மகத்தான நல் வாக்கை எடுத்து சொல்லுங்கள்). பிழைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. பிழைக்கத்தெரியாமல் வாழுகின்றீர்களே என்பதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கும் கூட ஏக்கம் என்பேன் அப்பனே. அதனால்தான் எப்படி இவர்களை வாழ வைப்பது, எப்படி என்பதை எல்லாம் யாங்கள் காட்டுக்குள்ளே சென்று தவங்கள் மேற்கொண்டு அப்பனே இறைவனை எப்படி என்பதை கூட அப்பனே சித்தர்கள் பலபேர் சொல்லி விட்டார்கள் ஏற்கனவே அப்பனே இறைவன் எங்கிருக்கின்றான் என்பது தெரியாமல் யாங்கள் படாதபாடுகளா? யுகங்கள் யுகங்களாக பட்டு பட்டு இறைவன் எங்கிருக்கின்றான் என்பதை எல்லாம் தேடி அலைந்து, அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே இப்பொழுது யான் சொல்லமாட்டேன். அப்பனே பின்பற்றிக் கொள்ளுங்கள். வாழ கற்றுக் கொள்ளுங்கள். அப்பனே அனைத்தும் தெரிவிக்கின்றேன். எவை என்று அறிய அறிய இறைவன் எங்கிருக்கின்றான் என்பதைக்கூட சொல்லிவிட்டால் அப்பனே எதை என்றும் புரியாமலே ஆனால் சொல்லி விடுகின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன். அப்பனே யான் தெரிவித்து விட்டேன். இதனால் நன்மையை செய்யுங்கள் எதையும் எதிர்பார்க்காமல். அனைவருமே கர்மத்தை எதை என்று கூற பெட்டியில் சேமித்துக் கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் இது என்ன செய்யும் என்பதை எல்லாம் யாருக்குமே தெரியவில்லை அப்பனே. எவை என்றும் அறியாமல் அப்பனே ஏன் திருத்தலங்கள் இவ்வளவு இருக்கின்றன?. ஏன் அமைக்க வேண்டும்? ஏன் எதை என்று அறிய அறிய இவ்தேசத்திலே இவ்வளவு திருத்தலங்கள் இருக்கின்றது என்பதை யாராவது ஒருவன் பின் அறிந்திருக்கின்றானா? நிச்சயம் இல்லையப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே. இன்னும் இன்னும் அமானுஷ்ய சக்திகளெல்லாம் இவ்வுலகத்தில் இருக்கின்றது. அவை எல்லாம் அப்பனே கர்மா ஏற்றினால் (அதிகரித்தால்) அப்படியே அப்பனே நம் உடலை பின் சேராமல் அப்பனே எவை என்றும் தெரியாமல் அப்படியே இருக்கின்றதப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் அப்பனே நிச்சயம். ஆனாலும் நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள் அப்பனே. ஆனாலும் உங்கள் கீழே எத்தனையோ பேர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெரியுமா அப்பனே? ஆனால் இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள் சுய நலவாதிகள் என்று கூட. அப்பனே இச்சுயநலவாதி குணம் வேண்டாமப்பா. எந்தனுக்கு அவை வேண்டும், இவை வேண்டும். அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை பற்றி யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே. இதனால் தனக்காக வேண்டும் இன்னும் அனைத்தும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள் வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக் கொண்டிருந்தால் கூட இறைவன் தர மாட்டான் அப்பா. மற்றவர்களைப் பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே. (வணக்கம் அகத்தியர் அடியவர்களே, மேலே சொன்ன இந்த வாக்கின் படி உலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால் வாடும் எழை எளியோர்களுக்கு சேவை செய்யும் அகத்தியர் அடியவர் ஒருவரிடம் மதுரை பசுமலையில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் கை ஏந்தி யாசகம் கேட்டு உணவு உண்டார். அந்த மகத்தான நிகழ்வின் பதிவு கீழே உங்களுக்காக https://siththanarul.blogspot.com/2022/02/1081.html?m=1 இதனால் ஓடி ஓடிச்சென்று மக்களுக்கு கட்டாயம் உதவுங்கள். இறைவன் உங்களை நோக்கி நிச்சயம் வருவார். தான் எப்படிப் போனாலும் கவலை இல்லை, பிறர் வாழ வேண்டும் என்ற உங்கள் தன் சுய நலம் அற்ற நல் மனமே இறைவனை உங்களிடம் வர வைக்கும். குரு வாக்கை ஏற்று பிறர் நலம் காண்பதே உங்கள் அனுதினம் பூசை ஆகட்டும்! என் பக்த்தர்கள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன். இதனால் சுவடிகளை வைத்து வைத்து அப்பனே (அனைவரையும்) ஏமாற்றி ஏமாற்றி அப்பனே சித்தர்களே இல்லை (என்ற) நிலமைக்கு அதாவது இன்னும் இன்னும் அப்பனே சித்தன் ஏதும் சொல்லவில்லையே. இன்னும் சித்தன் வரவில்லையே என்பதை எல்லாம் பொய்களாக்கி அப்பனே அவை செய்தால் இப்பரிகாரம் செய்தால் எவை என்று அறிய அறிய அப்பனே காசுகள் பெருக்கிக் கொண்டு அவன்தனும் அப்பனே கர்மத்தை சேரத்துக்கொண்டு, மற்றவர்களையும் கர்மத்தில் விழ வைத்து அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றானே மனிதன் அப்பனே மிக அறிவாளியப்பா. மனிதனப்பனே, பொய்கள் சொல்வதில் அறிவாளியப்பா, கெட்டிக்காரனப்பா மனிதன். இதில் யான் இப்படித்தான் யான் சொல்ல வேண்டும். அப்பனே மீண்டும் சொல்கின்றேன் மனிதன் எதில் கெட்டிக்காரன் என்றால் பொய் சொல்வதில் அப்பனே. நடிப்பதில் அப்பனே. பக்தியை செலுத்தி நடிப்பதில் மிக வல்லவனப்பா. வல்லவனுக்கு அப்பனே ஒன்றும் உதவாதப்பா. என் பக்த்தர்களுக்கு முதலில் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பனே பக்குவங்களே இல்லை அப்பா. அவ் பக்குவங்கள் வராவிடில் யான் என்ன சொன்னாலும் நடக்காதப்பா விதியில் உள்ளதுதான் நடந்திடுமப்பா. அப்படி என்றால் கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்குமப்பா. அதனால் யான் சொல்லியவற்றை சரியாகவே இறைவன், மனிதன் எவை என்று கூற (இறைவன்) மனிதர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கின்றான் என்று கூற அப்படி வாழந்தால்தான் விதியும்கூட மாறுமப்பா, மாறும்ப்பா. அப்படி இல்லை என்றால் யான் என்ன சொல்லிக்க கொண்டிருந்தாலும் பிரயோஜனம் இல்லை அப்பா. அப்பனே பல வழிகளிலும் கூட பல தொண்டுகள் என்னால் பல பல வழிகளிலும் கூட, அப்பனே பல பல யுகங்களில் கூட ஆற்றி ஆற்றி மனிதனை திருத்தி உள்ளேன். ஆனால் கலியுகத்தில் இருக்கின்றானே மனிதன் பொய் சொல்வதில் அப்பனே பின் அறிவுள்ளவனப்பா. மற்றவைகளில் அறிவில் பின் எதை என்று கூற அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் கொடுக்காமல் என்னால் நிச்சயம் திருத்த முடியாதப்பா. கஷ்டங்கள் கொடுத்து கொடுத்துத்தான் யான் நிச்சயம் திருத்த்துவேன் சொல்லிவிட்டேன் அப்பனே. இதை நிச்சயம் அனைவரையும் அதனால்தான் அப்பனே யானே இங்கு உங்கள் அனைவரையும் அழைத்தேன் இங்கு. (இந்த வாக்கு 4.9.2023 அன்று மதுரையில் ஒரு அடியவர் வீட்டில் உரைத்த போது 50க்கும் மேற்பட்ட பல அடியவர்கள் வந்திருந்தனர்). ஏனென்றால் நிச்சயம் இதை (இந்த அதி முக்கிய நாடி வாக்கு அதனை யான் உங்களுக்கு) தெரிவித்து அப்பனே மற்றவர்களுக்கும் பின் நீங்கள் தெரிவிக்க வேண்டும் அப்பனே. மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே. ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன நண்மைகள் இருக்கின்றாய் என்பதை கூட நீ யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் உந்தனுக்கு நன்மை செய்வான் என்பேன் அப்பனே. பின்பு நீயே (யாருக்கும்) நன்மை செய்யவில்லை உந்தனுக்கு ஏன் இறைவன் நன்மை செய்ய வேண்டும் கூறுங்கள் அப்பனே. இவை எல்லாம் நிச்சயம் தெரிவித்தாலே அப்பனே மனிதனுக்கு புரியாததை அப்பனே நீங்கள் தெரிவித்தாலும் அதனுடனும் கர்மா என்பேன் அப்பனே. இங்கு ஒருவன் அப்படித்தான் என்பேன் அப்பனே. கர்மா சேர்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பா.எவை என்று கூற இதில் தர்ம காரியங்கள் யான் செய்தேனே என்று. இல்லையப்பா. பின் அனைத்தும் கர்மாக்கள் அப்பனே. இனிமேலும் நிச்சயம் இதை ( மதுரையில் உரைத்த இந்ந நாடி வாக்குகளை பிறரிடம்) செப்பு அப்பனே. யான் சொல்லியதை (கேட்டு, உணரந்து) அப்பனே மனிதன் மாறட்டும். திருந்தட்டும். (தர்மத்தின் கரம் ஓங்க, தர்மம் செழிக்க, இறைவன் மகிழச்சி கொள்ள, சித்தர்கள் கருணை மழை என்றென்றும் மனிதர்களிடையே பொழிய - அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களும் இந்த நல் வாக்கினை பலருக்கும் அவசியம் எடுத்து சொல்லுதல் அவசியம். பல தளங்களில் இந்த வாக்கினை பதிவு இடுங்கள் என சிரம் தாழத்தி அனைத்து நல் உள்ளங்களை வேண்டிக்கொள்கின்றோம்) அப்பனே மனிதன் புத்திகள் வளரட்டும். அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன். அப்பனே வளர வளர புத்திகள் வளர வேண்டும் ஆனால் புத்திகள் வளர்வதில்லையே அப்பனே.ஆனால் கர்மங்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது அப்பனே. இப்படி இருக்க அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் எப்படியப்பா தடுக்க முடியும்? அதனால் நன்கு உணர்ந்தீர்கள். அதனால் உங்கள் அனைவரையுமே யான் பார்த்து ஆசிகளும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. இதனால் அப்பனே சேவைகள் எதை என்று அறிய அறிய அகத்தியனை நம்பினால் அப்பனே அகத்தியனை மட்டும் நம்புங்கள் அப்பனே. பின்பு எதை என்று அறிய அறிய பின் (பிற ஏதும் அறியாத மனிதர்கள் வாரத்தைகளை) நம்பிவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நரகம்தான் அப்பனே. நரகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் வரும் வரும் காலங்களில். ஏனென்றால் என் பக்தர்கள் அப்பனே பல யுகங்கள் அனைத்தும் தெரிவித்து எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள். ஆனால் கலியுகத்தில் அவ்வாறு இல்லையப்பா. அதனால்தான் துன்பங்கள். அதனால் என் பக்தர்களுக்கு வரும் காலங்களில் எப்படி மனிதன் பிறக்கின்றான். எப்படி வாழுகின்றான். எப்படி எல்லாம் கர்மத்தை சேர்த்துக் கொள்கின்றான். மீண்டும் பிறவிக்குள் நுழைகின்றான். என்னிடத்தில் அவ் ஆன்மா எப்படி வருகின்றது என்பதை எல்லாம் உரைக்கின்றேன்!. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்