Monday, February 17, 2025

ஸ்ரீ ஐயப்பன் ஜீவநாடி வாக்கு ❤️

Monday, 17 February 2025 சித்தன் அருள் - 1802 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ ஐயப்பன் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு 16/2/2025 அன்று ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் அன்னதான பிரபு ஸ்ரீ ஐயப்பன் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு. வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா குருநாதரின் உத்தரவின் பேரில் சபரிமலை யாத்திரை சென்றார்... அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழை உட்பட ஐயப்பனின் திருக்கோயில்கள் அனைத்தும் தரிசனம் செய்துவிட்டு சபரிமலைக்கு சென்றார் சபரிமலையில்... ஐயப்பன் பால் பெரும்பக்தி கொண்ட 36 வருடங்களாக மாதா மாதம் தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரும் ஒரு அகத்திய பக்தருடன் யாத்திரையில் பங்கெடுத்து சபரிமலையில் ஐயப்பன் கருவறையில் ஓலைச்சுவடி கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் திருமேனியில் சிறிது நேரம் வைக்கப்பட்டு தீபாரதனை செய்து வணங்கி விட்டு. சபரிமலை அடிவாரத்தில் ஹரிஹர புத்திரா சேவா அமைப்பு வளாகத்தில் ஓலைச்சுவடியை திரு ஜானகிராமன் ஐயா வணங்கி விட்டு வாசிக்க சபரிமலை கருவறையில் ஐயப்பன் கைகளில் இருந்து நேரடியாக பூஜை செய்யப்பட்டு வந்த ஓலைச்சுவடியில்... முதல்முறையாக ஐயப்பன் வாக்குகள் ஈந்தார். நம்மை வாழவைக்கும் தெய்வம் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஐயப்பனுக்கு அன்பாக மணிகண்டன் அனாதை ரட்சகன் சபரிநாதன் ஐயன் மலையோன் காடுடையோன் வேந்தன் புலியன்... என அன்பாக பெயர்களை இட்டு ஐயனுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து.. மேக்கரையில் இருந்து திருவிளையாடல் புரிந்து ஐயனின் லீலைகளை ஒன்றாக நமக்கு எடுத்துக் கூறி நம்மை வழிநடத்துகின்றார். ஐயப்பன் ஜீவனாடியில் வந்து வாக்குகள் தந்த உடன் குருநாதரும் வந்து ஐயப்பனின் லீலைகளை எடுத்துக் கூறினார் பாகம் இரண்டில் அவை வெளிவரும். தற்போது ஐயனின் வாக்குகள்!!! விதி ஒன்றை சமநிலைப்படுத்த!! மாற்றி அருளக்கூடிய அறிந்தும் பிறர் அறியா வண்ணம் இருக்கக்கூடிய வீர ஐயனே பேசுகின்றேன்!! எண்ணில் அறிந்தும் உண்மைதனை புரிந்தும் புரிந்தும் இதனையென்றும் அறியாத மனிதனே!! உண்மைதனை நெருங்கிய பொழுதும்... பொழுதொன்றும் அறிந்தும் இதை தன்னைக் கூட தெரியவில்லையே!!! தெரியவில்லையே!! விளங்கவில்லையே மனிதனுக்கு!!! மனிதன் என்றும் அடி நின்றும் பின் காணாத ஒன்றொன்றை பின் பயன்படுத்தினாலும் கிட்டவில்லையே அருள்கள் மனிதனுக்கு!! மனிதனுக்கு அருளும் ஈந்து பின் அருள் கொடுத்துக் கொண்டே!! கொடுத்துக் கொண்டே!! அதையும் சரியாக பயன்படுத்தவில்லையே மனிதன். என்றென்றும் வாழ பிறர் வாழ... பின் தன் கையில் ஏந்திய பின் அனைத்தும் பின் கொடுத்து அனுப்புகின்றேனே!! அனுப்புகின்றேனே!! அதையும் கூட பயன்படுத்த வரவில்லையே மனிதன். அறிந்தும் இதன் தன்மையையும் கூட உணர்ந்து விட்டால் பின் மோட்ச கதியே!! மோட்ச கதியே!! வருகிறார்கள் பின் அறிந்தும் என்னிடத்தில் ஓடோடி!! ஆனாலும் கொடுத்தும் அனுப்புகின்றேனே!!! அனுப்புகின்றேனே அதையும் கூட சரியாக பயன்படுத்த முடியவில்லையே!! முடியவில்லையே!! தெரியவில்லையே!! அறிந்தும் அனைத்து நலன்களையும் கூட பின் கொடுத்து கொடுத்து என் பக்தர்களுக்கு நிச்சயம் அறிந்தும் கூட என்னிடத்தில் ஓடோடி வந்து வந்து என்னைத் தொழுது!! தொழுது !! ஆனாலும் அறியவில்லையே உண்மை பொருளை!! எப்படி? ஏது? என்று சிலர் விசித்திரமான கஷ்டங்களை வைத்து பார்க்கின்றேனே... ஆனாலும் பின் திருந்தவில்லையே!! இதனால் என்ன! ஏது? செய்வது? கலியுகத்தில் இப்படித்தான் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் பின் பல சக்திகள் பின் இருந்தாலும் அதை தன் மனிதனுக்கு கொடுத்து கொடுத்து நிச்சயம் தன்னில் உயர்த்தி வைக்கலாம் என்று பார்த்தாலும்!!!..... மனிதன் திருந்திய பாடு இல்லை!!! நிச்சயம் அதே தன் சாக்கடையில் போய் விழுகின்றான். வந்ததும் போவதும் நினைப்பதும் அறிந்ததும் பின் எது?? எது என்று கேட்டால்!!... ஏதுமில்லையே!! இதனால் எதற்காகவே பிறந்தோம்?? எதற்காகவே வளர்ந்தோம்?? என்பதை கூட தெரியாமலே சுற்றி!! சுற்றி!! மனிதா!!! அறிந்தும் இதன் உண்மையைக் கூட.. ஆசைகள் ஆசைகள் பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்பதை எல்லாம்.. இவை தன் கூற பின் சித்தர்கள் எடுத்துரைத்தாலும் நிச்சயம் தன்னில் கூட அவை தன் கூட மாற!!! எப்படி மாறும்? என்பதையெல்லாம் யான் உணர்ந்தேனே!!! உணர்ந்திட்டேனே!!! என்பவை எல்லாம்!! இன்னும் அநேகாதி பின் சித்தர்களும் இதை அறிவார்கள் சுற்றி சுற்றி பின் பின் அறிந்தும் ஜீவஜோதியாகவே பின் காண்கின்றார்கள் பின் சித்தர்களும் கூட!! சித்தர்கள் அறிந்தும் எனை தேடி..வந்தே!! தேடி வந்தே!!.... அறிந்தும் எப்படி ?மனிதர்கள் ஏது? என்று புரியாமல் தவிக்கின்றானே!!! பின் ஆசைகள் பொங்க பொங்க வந்தாலும் அறிந்தும் மீண்டும் கஷ்டங்கள் கஷ்டங்களில் நுழைந்து அறிந்தும் பின் கொடுக்கவில்லையே !! என்று ஏங்கி!! ஏங்கி!! இதை தன் பயன்படுத்தி அறிந்தும் கூட பின் கொடுக்க யானே பின் முற்படுத்தி பின் அதாவது.. பந்தளத்தில் இன்னும் பின் எழுதிய பின் சுவடிகள் அறிந்தும் பின் பல கோடி சுவடிகள் அறிந்தும்!!! அதாவது இட்டிட்டேனே!!! நிச்சயம் அறிந்தும் இவை தன் புரிய ஒருவரும் ஆளில்லையே என்றெல்லாம்!!!! நிச்சயம் தன் கிணற்றிலே விட்டிட்டேன்!!! மனிதர்களே நீங்களும் கூட கிணற்றுக்குள்ளே வாழ்ந்து வருகின்றீர்கள். மேல் லோகத்திற்கு எப்படி வருகின்றீர்கள் என்பதை எல்லாம் பின் அதாவது பின் உண்மை நிலையை தெரிந்து கொண்டால் தான் கரையை பின் சேர முடியும். பின் உலகம் பார்த்தாலும் நிச்சயம் பின் கிணறு என்றே பின் அழகாகவே சமமாகவே பின் கிணற்றுக்குள்ளே அடியிலே நிச்சயம் தண்ணீரில் நீந்தி கொண்டிருக்கும் பொழுது கஷ்டங்கள் தானே!! அதை தன் எப்பொழுது? பின் எதை தாக்கும்? எப்பொழுது பின் கீழே விழும்? என்பதையெல்லாம் சரிவுகள்.. மண் சரிவுகள் என்பதெல்லாம்!! ஆனாலும் பின் இறைவனை அடைய பின் கிணற்றிலிருந்து அறிந்தும் சிறிது சிறிதாகவே மேல் நோக்கி.. மேல் நோக்கி ஏற!! ஏற !! பக்குவங்கள் பட!! பட!! பின் சமநிலை வந்து விட்டால் இறையையும் காணலாம்!! ஆனால் காண்பதற்கு ஆள் இல்லையே!! காண்பதற்கு ஆள் இல்லையே!! அறிந்தும்!! இன்னும் பின் பாதாளம் இன்னும் பின் பூலோகம் இன்னும் அறிந்தும் பல லோகங்கள் அறிந்தும் இதை தன் கூட... மனிதன் பின் உணர்ந்திருக்கவில்லையே! அறிந்தும் ஏதேதோ இன்னும் பின் மேலோகத்தில் கூட கீழ் லோகத்திலே இருந்து கொண்டு அறிந்தும் பின் அதை சுற்றுகின்ற பொழுது ஓரிடத்திற்கு அனுப்பி அறிந்தும் பின் அதை பயன்படுத்துகின்ற பொழுது எப்படி இன்னொரு உலகம் தெரியும் என்பதை எல்லாம்?? மனிதனின் கூட பின்... அதாவது புத்தி பின் ஈன புத்தியாகவே தென்பட்டு தென்பட்டு... அதனால்தான் இறைவன் கண்களுக்கே தெரிவதில்லை!!! மேலோகம் இப்புவிதன்னிலே மேலோகம் கீழோகம் தன்னில் கூட பின் சுற்றி சுற்றி திரிகின்ற பொழுது ஓர் இடத்திற்கு பின் அனுப்பும் பொழுது விஞ்ஞானிகள். ஆனாலும் இதை தன் பின் என் தந்தை அகத்தியனே நிச்சயமாய் பின் உரைக்கும் பொழுது புரியும்!!! இன்னும் அறிந்தும்!! இதனால்தான் பின் அதாவது சித்தர்களோ இன்னும் இன்னும் மனிதர்களுக்கு அறிவுகள் எட்டவில்லையே?? எட்டவில்லையே?? என்றெல்லாம்!! இன்னும் பின் மூட நம்பிக்கைகளிலே ஒளிந்துள்ளார்கள் ஒளிந்துள்ளார்கள் என்றெல்லாம்!! ஆனாலும் எனக் காண என் பிள்ளைகள் ஓடோடி வந்தாலும்... ஆசைகளை பின் வைத்துக் கொண்டு வைத்துக்கொண்டு... அதற்கு பின் தகுந்தாற்போலே யானும் கொடுத்திட்டாலும் நிச்சயம் அதை சரியாக பயன்படுத்துவதில்லையே பயன்படுத்துவதில்லையே இதுதான் கலியுகம்... இறைவன் இருந்தும் அறியவில்லையே!! அனைத்தும் இருந்தும் அறியவில்லையே!!! அனைத்தும் பின் மனிதனுக்கு கொடுக்க தயாராகவே!!! அதாவது வரங்களை கொடுத்து அனுப்புகின்றேன் மீண்டும் மாயையில் சிக்கி கொண்டு அழித்து மீண்டும் பின் ஐயனே!!! என்று பின் வந்து பின் மண்டியிட்டு வணங்கினால் யான் என்ன செய்வது???? இதுதான் நிச்சயம் கலியுகம்! கலியுகம்! அறிந்தும் உண்மைதனை விளக்க யாரும் இல்லையே?? பின் அறிந்தும் பின் யான் எழுதிய சுவடிகளும் கூட இன்னும் அறிந்தும் பின் பந்தளத்தில் பின் தள்ளாடுகின்றது.. அதை படிப்பதற்கும் ஆள் இல்லையே!!! அதை சரியாக யார் ஒருவன் படித்தால்... பின் இவ்வுலகம் நிச்சயம்.. உலகம் ஒளி பெறும்.. பின் ஆனால் படிக்க ஆள் இல்லையே!!! எத்தனை?? எத்தனை?? சுவடிகளோ!!!!... அறிந்தும் பின் படித்து அதாவது.. எத்தனையோ தெரியாமல் படித்தும் கூட... மனிதர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர.... ஆனால் உண்மை பொருளை விளங்குவதற்கு யான் அழகாகவே எழுதி வைத்துள்ளேனே!! அறிந்தும்!! அதை தன் பின் எடுக்க ஆள் இல்லையே!!! அதை தன் நிச்சயம் எடுத்து பின் ஓதி விட்டால் நிச்சயம் இவ்வுலகம் பின் அறிந்தும்!!! இதை தன் கூட பின் கட்டளையை மீறி அதாவது ஈசன் கட்டளையே!!! இவையெல்லாம் பின் படிப்பதற்கு அறிந்தும் கூட!! யானே அவதாரம் எடுத்து மீண்டும் இதை ஓதி நிச்சயம் அனைவரையும் காப்பேன்!!! இக்கலியுகத்தில் பின் என்னிடத்தில் இருந்தே சத்தியம்!! அறிந்தும் கூட!! பின் வந்துகொண்டே இருக்கின்றேன் மக்களோடு மக்களாகவே பின் வந்து கொண்டே இருக்கின்றேன். ஆனால் காண முடியவில்லையே!!!.... பின் இன்னும் ஏன் காண முடியவில்லை?? அறிந்தும் பின் பணத்தாசைகள் அதாவது பணத்தாசைகள் என்றும் கூட அதாவது பேயாசைகளே !! என்பதை கூட!! பின் பணத்தின் மீது ஆசைகள்!! ஆசைகள்!! எப்பொழுது ??? எல்லாம் அவ் ஆசைகள் நீங்குகின்றதோ!!! அப்பொழுதே என்னை காணலாம்!!! வீசுகின்றார்கள் பின் ஆசைகள் ஆகவே!!! இதை தன் உணர்வதற்கு ஆள் இல்லையே!!! இதனால்தான் அறிந்தும் அறிந்தும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பிறவிகள் மனிதன் கடந்து கடந்து பின் வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட.... என்னால் பின் விதியையும் மாற்ற இயலும்!!! ஆனாலும் மாற்றி விட்டு அனைத்தும் கொடுத்தாலும் மாயையில் சிக்கிக் கொண்டு பின் அறிந்தும் பெண்ணாசை!! பின் பொன்னாசை!! பின் மண்ணாசை..!!. இன்னும் என்னென்ன ஆசைகளோ!!!... அவற்றையெல்லாம் அனுபவித்து மீண்டும் பின் ஐயனே!!! பின் கொடுத்திட்டாயே!!!.... பின் தவறான வழியில் சென்றிட்டு... நிச்சயம் கர்மத்தை ஏற்றேனே!!! பின் எப்படி என்றெல்லாம் மீண்டும் எனை கேட்கும்பொழுது!!! யான் ஆறுதல் சொல்லவா??? அறிந்தும் அதாவது பெரிய தவறு செய்து விட்டேனே என்று!!! யான் தான் வெட்கப்பட வேண்டும்!! அறிந்தும்!! இதைத்தன் தான்.. பின் கூறுகின்றேன்... சிறப்பாகவே பின் ஒழுங்காகவே சரியாகவே எப்பொழுதும் எனை நாடி நாடி வருவோர்களுக்கு எல்லாம்... இப்படித்தான் இருந்தால் பின் நிச்சயம் பின் அனைத்தும் கிடைக்கும் என்பதை எல்லாம் அப்படியே பின் வாழும் வரை... கடைப்பிடித்தாலே போதுமானது. ஆனாலும் போதுமானது ஆனாலும் இல்லையே!!! அறிந்தும் கடைப்பிடிப்பதே இல்லையே மனிதன்!!! ஏதோ அதாவது மனிதனை மனிதனே ஏமாற்றுகின்றான். ஆனால் மனிதன் அதாவது.. இறைவனே ஏமாற்றினால் என்ன?? யாங்கள் என்ன தண்டனை? பின் கொடுப்போம் என்றெல்லாம்!!! நீங்கள் அறிவீர்களா???? தெளிந்து பின் புத்திகள் பெற்று!!!!..... இதனால் அறிந்தும் பின் எந்தனுக்காக பல வழிகளில் கூட அறிந்தும் கூட பின் இப்படித்தான் இருக்க வேண்டும்.. என்றெல்லாம் நிச்சயம் பின் உணர்ந்தும் உணர்ந்தும். ஆனாலும் அப்படி இல்லையே!!! மனசாட்சிகள் இல்லையே!!! அறிந்தும் கூட!!! சுத்தம் அதைக் கூட!!! சரியாக பயன்படுத்தி பின் மண்டலம் வரை எப்படி இருந்தீர்களோ..... அப்படியே இருந்துவிட்டால்.. இவ்வுலகத்தில் நோய்களே இல்லை!!! கஷ்டங்களே இல்லை! பணத்தட்டுப்பாடும் இல்லை!! நிச்சயம் அறிந்தும் கூட... நீடூழி வாழலாம்! வயது ஆகவே ஆகாது!!! நிச்சயம் தன்னில் எப்பொழுதும் இளைஞனாகவே வாழலாம்!! ஆனாலும் இப்படி யாரும் இல்லையே!!! யாரும் இல்லையே!! அறிந்தும் அனைவருமே என் பக்தர்கள்!!! சிறுபிள்ளைகளே அனைவரும்.. என்னிடத்தில்!! நிச்சயம் அறிந்தும் பின் எப்பொழுதும்.. உறங்கிக் கொண்டே (தவத்தில்) இருக்கின்றேன்! நிச்சயம் இச் சபரி தன்னிலே!!! அனைவருக்கும் ஆசிகள் கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். ஆனால் மனிதனோ.. பின் நிச்சயம் பல பல வழிகளிலும் கூட நிச்சயம் அறிந்தும் கூட குடும்பத்திற்கே... குடும்பத்தில் ஒருவர் வந்தால் அக்குடும்பத்திற்கே மோட்சகதியை அளித்திட்டு நிச்சயம் அதன் தன்மையை கூட இன்னும் தெரிந்திருக்க முடியவில்லையே என் பிள்ளைகளே!!! அறிந்தும் எதை என்று பின் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன்... பல ஆசிகள்!!! ஆனாலும் பின் நீங்கள் அதை பயன்படுத்த.. அதாவது சரியாக பயன்படுத்துவது இல்லையே!!! இதனால்தான் இன்னும் கலியுகத்தில் இன்னும் அழிவுகளாகவே இன்னும் அழிவுகளாகவே... இன்னும் என்னென்ன?? நடக்க போகின்றது என்பதை எல்லாம் சித்த பெருமக்கள்.. நிச்சயம் அறிந்தும் கூட.. இன்னும் பின் 18 படிகளும்.. கூட பின் ஏன் ஏறிக்கொண்டு இருக்கின்றோம்?? என்பதை அறியவில்லையே!! நிச்சயம் பின் என் அவதாரங்களே!!! பின் 18... ஆனாலும் அதைக் கூட பின் மறைத்திட்டார்களே!! இதைத்தான் பின் சுவடிகளிலே யான் அழகாகவே எழுதி வைத்துள்ளேன்... பந்தளத்திலே!! அறிந்தும் இதை தன் கூட!! ஆனாலும் இதை எதை எதையோ? சொல்லிட்டு மனிதன் பின் அப்படியே பயன்படுத்தினான்... பின் தவறான விஷயங்களை எல்லாம் பரப்பி பரப்பி... அப்படியே ஆயிற்று!!! எப்பொழுதெல்லாம் என் பின் அதிசயங்கள்.. அதாவது பின் அறிந்தும் கூட பதினெட்டு (படிகளின்) அறிந்தும் இதன் தன்மையைக் கூட உணர்ந்து பின் அவதாரங்களை.. நிச்சயம் பார்க்கின்றானோ... அவனே நிச்சயம் மனிதன் மாமனிதன் ஆக ஆக்கிட்டு அனைத்தும் யான் அருளிடுவேன் நிச்சயம் தன்னில் கூட!!! அங்கங்கு அவதாரங்கள் பின் அறிந்தும் கூட... இதைத் தன் கூட வரும் காலத்தில் கூட பின் எடுத்துரைக்கும் பொழுது புரியும். புரியும் பின் எம்முடைய ஆசிகள்!! அனைவரையும் கூட அதிகாலையிலே பின் உங்களை சந்தித்தேன். பின் பலமுறையும் உங்களை யான் சந்தித்துள்ளேன்.. பின் இப்பிறவியில் மட்டும் இல்லை!!! நிச்சயம் தன்னில் கூட!! அனைத்தும் யான் கொடுக்கின்றேன்!! அனைவருக்கும் பின் எம் ஆசிகள்.. பின் ஆணையாகவே!! (மண்டல காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து எந்த தவறும் செய்யாமல் வேறு எந்த சிந்தனையும் செய்யாமல் இறைவனை நினைத்துக் கொண்டு இருந்து பக்தியுடன் இருப்பதை வாழ்க்கையில் சபரிமலைக்கு மாலை அணிந்து மண்டல காலம் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தால் நோய்களே இல்லை கஷ்டங்களே இல்லை) சபரிமலையில் இருக்கும் 18 படிகளும் ஐயப்பனின் 18 அவதாரங்களை குறிக்கும் இதை உணர்ந்து வணங்குதல் வேண்டும்) சுவாமியே சரணம் ஐயப்பா!! வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப சுவாமி குறிப்பிடும் ஓலைச்சுவடிகள் பந்தளம் அரண்மனையில் இன்றளவும் அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஐயப்பன் சுவாமி பயன்படுத்திய வில் வாள் திருவாபரணங்கள்.. உடன் ஐயப்பன் தன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இருக்கின்றது. ஐயப்பன் நீராடிய நீர் சுனையும் இருக்கின்றது!! பந்தளம் அரண்மனை பத்தனம்திட்டா சுவாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனையில் அவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. அதை அரண்மனை நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு சுவாமி ஐயப்பன் நீராடிய குளம் இருக்கிறது. Pandalam Palace is located in Pandalam, Kerala, India. The palace is the ancestral home of the royal family of Pandalam, who are the descendants of the Pandya kings. Here is the address of Pandalam Palace: Pandalam Palace, Pandalam, Pathanamthitta District, Kerala, India. PIN - 689501 Note: The palace is open to visitors and offers guided tours. However, please check the current visiting hours and regulations before planning your visit.. குருநாதர் அகத்திய பெருமான் மறுவாக்கில் வந்து உரைத்த வாக்கு பாகம் இரண்டில் வெளிவரும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

No comments: