Monday, February 3, 2025

அன்புடன் அகத்தியர்

Sunday, 2 February 2025 சித்தன் அருள் - 1792 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் கமலமுனி சித்தர்! 28/1/2025அன்று கும்பமேளாவில் கமலமுனி சித்தர் உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். நாகேஸ்வர் காட் திரிவேணி சங்கமம் பிரயக்ராஜ் உத்தர் பிரதேசம். பரப்பினை ஆளுகின்ற இறைவா போற்றி!!!! (பரப்பு =புவிப்பரப்பு.) போற்றியே நின் தாள் பணிந்தேனே கமல முனியே!! அன்றியென்றும் இன்றியென்றும் ஓத!! ஓதாவிடிலும் தன்னை நிலைத்திருக்கும் ஈசா!! (இருக்கின்றது என்றாலும் இல்லை என்றாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் என்றும் நிலைத்திருக்கும் ஈசனே) ஈசனே உனை பணிந்து நின்றேனே!! நின்றேனே உனைப்பணிந்து நின்றேனே!! அனைத்து சித்தர்களும் வந்து உனை பார்க்க!! கோடி கோடியாய் தவங்களை மேற்கொண்டோமே!!! மேற்கொண்டோமே! ஈசனே! ஈசனே! எனை ஆண்ட ஈசனே!! அன்பனே!! ஈசனே!! கருணையனே ஈசனே!! நூதனே!!! மூலனே!! ஈசனே! ஈசனே! பார்வதி நேசனே!! நேசனே சிவகாமியின் புதல்வனே!! புதல்வனே!! இன்றியென்று என்றியென்று உண்மைதனை உரைத்த இறைவா!!! நின் தாளை பணிந்தோமே!! எப்பொழுதும் உனையே நம்பியே யாங்களும் இருந்தோமே!! இன்று அன்றின்று இன்றியென்று எவ்வாறென்று மனிதன் தெரியாமல் போனால் இவை தன் உணர்ந்திருக்க நின்றேனே. நின்றேனே!! உன்னை காண கோடான கோடி ஜென்மங்கள் எடுத்து இங்கு வந்தேனே. வந்தேனே முழு முதற்கடவுளே. முழுமுதற் இறைவனே நீயே என்று உணர்ந்த பிறகு என்ன வேண்டும்??? எந்தனுக்கு!! கூறு!! இவைதன் தனை உணர்ந்து விட்டால் இங்கு நியாயங்கள் என்று பேசும் இறைவா!! இறைவா!!! நீயின்றியென்று உலகத்தில் அசைவேது??? இறைவா!!! ஈசனே!!! ஈசனே நன்று என்று இருந்து உனைக்காண ஓடோடி யாங்கள் மக்கள் மூலமே வந்து வந்து தொழுதோமே!! கோடி கோடி பிறப்பு எடுத்து உனைதனை பின் உணர முடியாமல் பின் போனதே!!! அன்பான ஈசனே ஈசனே இன்னும் யாங்களே தெளிவடையாத போதிலும் இல்லையே!!! மக்கள் எப்படி தெளிவடைவார்கள்?? என்று நினைத்தேனே!!! ஈசனே ஈசனே பார்வதி நேசனே... எமையாளும்.. நின்று தொழுது இங்கு பின் அழகாக நதியில் ஓடும் பின் அனைத்து பாவங்கள் சுமந்து பின்.. அன்பான ஈசனே!!!! அழகான ஈசனே!! இளைஞனே!!! உண்மை பொருள் என்று யாருக்கும் தெரியாத ஈசனே!! உண்மை பொருள் என்று யாருக்கும் தெரியாத ஈசனே அன்பனே நீயின்றி என்று எப்பொருள் யார்? யார்? உணர்ந்து நின்றென்று கண்டென்று உற்றார் என்று இருந்த போதிலும்...!?!?!? பாவம் என்ற!!!..‌‌ பின் அதிலிருந்து தப்ப முடியவில்லையே மனிதன். அவை தனும் கூட உணர்ந்து உலகத்திற்கு அப்பாற்பட்டவனாகவே விளங்கும் என் ஈசனே!! மனதில் குடிகொள்ளும் ஈசனே உனையே நம்பி நம்பி யாங்கள் தவங்கள் புரிந்து புரிந்து அனைவருக்கும் தம் தன் பின் தன்பால் பின் என்னென்ன நினைத்துள்ளோம் என்று பின் அனைத்தும் கொடுத்திட்ட ஈசனே!!! ஈசனே உன்மேல் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் அன்பை செலுத்துவார்... நீங்களும் என்னைப்போல் இருப்பீர்களாக என்று உத்தரவு கொடுத்த ஈசனே!! ஈசனே அன்பு மிகுந்த கருணை மிகுந்த ஈசனே மக்களுக்கு இன்னும் புரியவில்லையே !! தெரியவில்லையே!! ஈசன் என்று யார்? என்று பின் புரியவில்லையே கோடி கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் ஈசன் என்று யார் ? என்று உணர்ந்து கொள்ள ஆளில்லையே!! இவ்வுலகத்திலே!!! (ஈசன் நாமத்தை) பெயரும் சொல்லலாம் பின் அவனையும் தொழலாம் பின் பாடல்கள் பாடலாம் ஆனாலும் ஈசனை கண்டு உணர ஆள் இல்லையே!!! ஆனாலும் ஈசனை கண்டுணர்ந்த ஆள் இல்லையே!!! ஏன் இந்த பிறவி என்று யோசிக்கின்ற நேரத்திற்குள் பின் முடிவடைகின்றதே பின் உயிரும் கூட...கூட உயிரை எப்பொழுது தானம் கொடுத்தீர்களால் அப்பொழுதே அனைத்தும் தந்திட்ட ஈசா!! ஈசனே சிவகாமி அன்பு அழகான முருகனே இருந்து இழந்து பின் நிற்கின்ற பின் இழப்பினும் பின் கணபதியும் இவர்களை பிரித்திட்ட ஈசா!! (ஏகன் அனேகனாக அனைத்து தெய்வங்களாக பிரிந்து அவை மீண்டும் ஒன்றே ஈசனே) பிரித்த பொழுதும் இவர்களும் பார்க்கும் பொழுது... இவர்களும் ஒன்று என்று மக்களுக்கு பின் தெரியவில்லையே!!! இவை தனும் உணர்ந்து பின் முருகனும் பின் கணபதியும் மணிகண்டனும் மூவரும் சேர்ந்து ஒன்றென்று மக்களுக்கு புரியவில்லையே!! (கணபதி முருகன் ஐயப்பன் மூவரும் ஒருவரே) இவை தனை கூட எப்பொழுது ?மனிதன் பின் புரிகின்றானோ? அப்பொழுதுதான் உயர்வுகள் கிட்டுமே தவிர!! பின்பு என்ன ஏது? என்று பின் பின் எங்கு சென்றாலும் உண்மை நிலை தெரியவில்லையே ஈசனே !!! ஈசனே அன்பு அன்பு (அன்பே சிவம் ) எங்கு என்று பின் அறிந்தும் அறிந்தும் ஓடுகின்ற ரிஷிகளும் கூட இன்றைய நாளில் உனை காண ஓடோடி வந்து ஓடோடி வந்து பின் தொழுகின்றார் தொழுகின்றார். பின் ஆனாலும் மக்கள் பின் மட்ட புத்தியில் இருந்து கொண்டு ஏனென்று இறைவன்? எதற்காக இறைவன்? எதற்காக இறைவன்?என்று சிந்தித்த பொழுது வாழ்க்கையும் முடிகின்றது.. வாழ்க்கையும் தோல்வியில் முடிந்து மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து என்ன லாபம்?? மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து என்ன லாபம்?? அறிந்தும் பின் அறியாமலும் பிறந்த பிறப்பை பின் மோட்சம் அளித்திடும் இறைவா மோட்சம் அளித்திடும் இறைவா!! உனை மனதில் தாங்கியே யாங்கள் நின்றின்று அறிந்தோமே நின்று இன்று அறிந்தோமே. மனிதனே ஒரு சாபக்கேடு!!! இதில் தன் இறைவனை பின் எப்படி உணர்வான்? என்று தெரியவில்லையே ஈசா!!! தெரியவில்லையே ஈசா!!! கலியுகத்தில் அழிவுகள் மிச்சமாகின்ற பொழுது எப்படி மனிதன் எப்படி வாழ்வான்?? ஈசா!! ஆணும் பெண்ணும் எப்பொழுது ஒருவராக ஒருவரே என்று (அனைவரும் சமம் என்று) எப்பொழுது மனிதன் நினைப்பான்?? இறைவா!!! அப்பொழுதுதான் நீயும் கூட பின் கருணை வடிவாக வந்து பாவத்தை தொலைப்பாயே!!! முருகா!! கணபதியே மணிகண்டனே அறிந்தும் கூட பைரவனே அனைத்தும் நீயே நமச்சிவாயனே அன்பு எங்கு? அங்கு !! குடியிருக்கும் கருணை வடிவான ஈசா!!! அருவும் உருவும் சொரூபமும் இல்லாதவனே!! ஆதி உலகை படைத்தவனே ஈசா!! அறிந்தும் அறிந்தும் மனிதனுக்கு இன்னும் ஏன் பின் கெட்ட குணங்கள் இன்னும் அழிவுக்கு செல்கின்ற மனிதா!! எப்பொழுது இறைவனை காண்பாய் ?? மனிதா!! எத்தனை பூஜைகள் செய்தாலும் எத்தனை தர்மங்கள் தானங்கள் தான தர்மங்கள் செய்தாலும் அறியவில்லையே ஈசனை!! மனிதன் அறியவில்லையே ஈசனை!! எப்பொழுது அறிவாய்?? என்று இருந்தபோதிலும் அனைத்தும் கொடுத்திட்டும் ஈசா!!! யானே படைத்தேனே இங்கே இருக்கின்றேனே என்று மனிதனுக்கு உரைக்கின்ற போதிலும்!!! உணராத பைத்தியக்கார!! மனிதா!! உணராத பைத்தியக்காரனே மனிதா!! அனைத்தும் தவறுகள் நீயும் செய்திட்டு மீண்டும் இறைவனை வந்தடைந்து என்னவோ? புரியும் மனிதா! என்னவோ? புரியும் மனிதா! ஈசனை அழகாக காணலாம்!! ஆனாலும் மனிதனிடத்தில் பின் புத்திகள் இல்லையே!! அறிந்தும் உண்மைதனை எடுத்து அழகாக யாங்கள் இங்கு ஈசனை உனை ஓடோடி வந்து காண்கின்ற நேரத்தில்... காண்கின்ற நேரத்தில் ஆனந்தமாய் இங்கு யான் பாடுகின்றேனே சிவபெருமானே!! அனைத்திலும் நீயே!! ‌ அனைத்தும் உனதென்று இருந்து அனைத்து உலகையும் காப்பாய் அறிவாய்!! எத்தனை உலகங்கள் இருக்கின்றது? என்று மனிதனுக்கு எப்பொழுது தெரியும் ? ஈசனே!! இவையெல்லாம் தெரிந்த பிறகுதான் மோட்சம் அடைவான் மனிதன்.. மோட்சம் அடைவானே மனிதன். அப்படி இல்லை என்றால் மோட்சமும் கிடைக்காது முக்தியும் கிடைக்காது சந்தோசம் கிடைக்காது சிவபெருமானே சந்தோசம் கிடைக்காது சிவபெருமானே!! அனைத்தும் அறிந்து உலகத்திற்கு நீயும் எம் இறைவா!!! எம் இறைவனே!!! உனை தேடி இங்கு வந்தேனே உம்மை தேடி இங்கு வந்தோமே!! அழகென்றவனே அமுதென்றவனே கருணை என்றவனே பாசம் என்றவனே பாசம் என்றவனே எங்கும் நிறைந்தோர்க்கு இறைவா !!! அனைத்தும் கொடுத்தாய்! கொடுத்தருள்வாய்!! மனிதன் இன்னும் சாபங்களில் இருந்து தப்பிக்க முடியவில்லையே சிவ பெருமானே!! தப்பிக்க முடியவில்லை சிவபெருமானே!! பணத்தின் மீதும் மோகம் கொண்டும் பின் பெண்ணின் மீதும் மோகம் கொண்டும் பின் என்னென்ன மீதோ?? மோகம் கொண்டும்!!..... மனிதன் இறைவனை அறிந்தில்லை ஈசனே!!! மனிதன் இறைவனை அறியவில்லை ஈசனே!! இப்படி இருந்தும் ஈசன் எந்தனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே??? என்று புலம்பும் மனிதனே!! கேடுகெட்ட மனிதனே புலம்பும் மனிதனே!! கேடுகெட்ட மனிதனே!! உண்மை பொருள் ஏது என்று தெரியாமல் அலைந்தாலும் திரிந்தாலும் ஒன்றும் கிட்டாது மனிதா!!! ஒன்றும் கிட்டாது மனிதா!!! ஆசிகள்!! ஆசிகள்!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

No comments: