Tuesday, February 18, 2025
சபரிமலை அடிவாரம் ❤️
Wednesday, 19 February 2025
சித்தன் அருள் - 1803 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை அடிவாரம்!
16/2/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். ஹரிஹரபுத்ரா சேவா டிரஸ்ட் வளாகம். நாராயணன்தோடு .நிலக்கல்.வழி. சபரிமலை அடிவாரம்.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே என்னுடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே.
சில சில அப்பனே பின் இவ்வுலகத்தில் மாற்றங்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே ஆனாலும் சித்தர்கள் அப்பனே பின் யாங்களே.. வழி நடத்துவோம்.
அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ் ஐயனை (ஐயப்பனை) நிச்சயம் காண வேண்டுமென்றால் அப்பனே எங்கள் அருள் அப்பனே எதை என்று பின் அறிந்தும் கூட
அப்பனே இவன் கூட அப்பனே... (சக்தி)மிகுந்த ஒரு சித்தன் தானப்பா!!!
அப்பனே பின் சித்தன் அப்பனே தெளிவடைந்தவன்!!! அப்பனே!!
இதனால் சித்தனிடத்தில் சிறிது எச்சரிக்கையாகவே (இருக்க வேண்டும்) அப்பனே.. பின் அனைவருமே!!
சித்தர்கள் அறிந்தும் பின் அப்பனே பின் ஒவ்வொன்றாகவே விளக்குகின்றேன் (ஒவ்வொரு சித்தர்களைப் பற்றியும்) அப்பனே.
அப்பனே பின் இவன் கருணை கொண்டவன்!! இன்னும் இன்னும் அப்பனே!! பின் அறிந்தும் கூட..
இதனால் அப்பனே எதுவும் இக் கருணைக்கு ஈடாகாது என்பேன் அப்பனே.
அறிந்தும் இதன் உண்மைதனை கூட இப்பொழுது செப்புகின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே நன் முறைகளாகவே.. அப்பனே அதாவது.. இது இப்பொழுதே நடந்ததப்பா.
அறிந்தும் இதன் தன்மையை உணர்ந்தும் கூட அதாவது அப்பனே அதாவது ஒரு 40 வருடங்களுக்கு முன்பே அப்பனே.. அறிந்தும் இவை தன் கூட அப்பனே.
இதனால் அப்பனே பின் இதை என்று கூற இங்கிருந்து அப்பனே சில மைல் தொலைவிலே அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!
பின் அதாவது ஒரு தாய் தந்தையர்!! அப்பனே பின் ஐயன் மீது பின் பலமாக அப்பனே பின் பக்திகள் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
ஆனாலும் அப்பனே அறிந்தும் இதைத் தன் கூட அப்பனே..ஐயனே!!!!... பின் அதாவது திருமணம் செய்தது கூட நிச்சயம் ஐயனை நினைத்து பின் நீதான் எங்கள் குழந்தை என்று...யாங்கள் அறிந்தும் எதிலும் ஈடுபடவில்லை என்று... நிச்சயம் அவர்கள் பின் ஐயனை நினைத்துக் கொண்டு... வருவோருக்கெல்லாம் பின் அன்னத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தனர்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு வாரி!! வாரி!! பின் வழங்கி கொண்டிருக்கும் பொழுது பலர் நிச்சயம் அதாவது பின் அறிந்தும் பின்...அவ் பெண்மணியிடத்தில் இவ்வாறு நீங்கள் புண்ணியம் செய்கின்றீர்களே!!!!
உங்களுக்கும் ஒரு குழந்தை இருந்தால் பின் நன்று!! என்று!!!
அவர்களும்!!.. ஆனாலும்... எங்களுக்கு தேவையில்லை குழந்தை!
எங்களுக்கு குழந்தையே இவ் மணிகண்டனே!!!... எங்கள் குழந்தை மணிகண்டனே என்று நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும் இருப்பவர்கள் எல்லாம் பின் இவர்களை பாராட்டி நிச்சயம்... இவ்வளவு அன்னத்தை அளிக்கின்றீர்களே... நிச்சயம் தன்னில் இதோடு பின் உங்கள் சேவையை முடிக்க கூடாது.
நிச்சயமாய் பின் உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் பின் செய்து இவ்வாறு நீங்கள் செய்து வருகின்றீர்களே நிச்சயம் அவ்வாறே... பின் அவர்களும் செய்வார்கள் அல்லவா!!!
(உங்கள் வாரிசுகளும் அன்னதானம் செய்வார்கள் அல்லவா அதற்காகவாவது குழந்தை இருந்தால் நல்லது என்று பொதுமக்கள்)
நிச்சயம் என்றெல்லாம்!!
அவ் பெண்மணியும் நிச்சயம் தேவையில்லை!! அதாவது என் குழந்தையே!! ஐயனே!!!..
இதனால் பின் நிச்சயம் எப்படியாவது... நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட இப்படியே.. ஏதாவது ஒரு விதத்தில் கொடுப்பான் என்று நிச்சயம். (எங்கள் குழந்தை ஐயப்பன் நாங்கள் இல்லாத காலகட்டத்திலும் இந்த அன்னதான சேவையை ஐயப்பன் எப்படியாவது ஒரு வகையில் நடத்தி வைப்பார் அனைவருக்கும் அன்னதானத்தை கொடுப்பார் என்று)
ஆனாலும் போகப் போக நிச்சயம் அப் பெண்மணிக்கும் கூட வருத்தங்கள்!!.. ஆமாம் அவர்கள் சொல்லியதெல்லாம்!!! மனதில் எண்ணி குழப்பங்கள் இட்டு... நிச்சயம் தன்னில் கூட இவை தன் கூட.
ஆனாலும் ஒரு முறை நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரியாமல் கூட பின் ஓடோடி பின் அதாவது நிச்சயம் தன்னில் பின் அவ்வாறு எதை என்றும் புரியாமல் அன்னத்தை வாரி!!...வாரி!!...
ஆனாலும் பின் ஐயனோ பின்!!... ஒரு லீலையை நடத்தினான்.
அதனால் நிச்சயம் தன்னில் பின் அதாவது அனைவருக்குமே சமைத்து நிச்சயம் பின் அதாவது... அதிகாலையில் இருந்தே.. அறிந்தும் கூட நேற்றைய பொழுதில்... அதாவது உத்திரம் தினத்திலே இது நடந்தது.
நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் அதிகாலையில் இருந்தே பின் அதாவது நான்கு மணிக்கு பின் அறிந்தும் கூட பின் அக் காலை வேளையில் இருந்தே பின் அன்னத்தை அள்ளி அள்ளி நிச்சயம்... நாள் முழுவதும் கூட!!!
அறிந்தும் பின் எங்கெல்லாம்... இருக்கின்றார்களோ? பக்தர்களுக்கு பின் நிச்சயம் அறிந்தும் கூட!! இதனால் இவர்கள் முடிவெடுத்து நிச்சயம் வருகின்றவர்களுக்கெல்லாம் கொடுப்போம் என்று!
ஆனாலும் கடைசியில் அறிந்தும்.. எதை என்று அறியாமலும் கூட..
ஆனாலும் நிச்சயம் இது தீரட்டும் என்று... நிச்சயம் ஐயனே பல வழிகளிலும் கூட பல மனிதர்களை அனுப்பி அனுப்பி பின் அறிந்தும் கூட பின் மொத்தமாக தீர்ந்து விட்டது!!
(ஐயப்பன் திருவிளையாடல் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு ஐயப்பன் அதிகப்படியான மனிதர்களை அனுப்பி உணவை வாங்கி உண்ணச் செய்து உணவை தீரும் படி செய்து விட்டார்)
பின் இவர்களும் இப்படியா?? எவ்வாறு? இவ்வளவு மனிதர்கள் வந்தார்கள் என்று!!!
ஆனாலும் நிச்சயம் அனைத்தும் உணவுகளும் முடிந்திற்று!!
ஆனாலும் சரி!!! என்று ஆனாலும் வருவோருக்கெல்லாம் நிச்சயம் வேண்டாம் என்பதைப் போல் அறிந்தும் இதன் தன்மையைக் கூட கடைசியில்... மணிகண்டன் நிச்சயம் பின் கையேந்தினான் வந்து!!!
பின்!.. தாயே!!! தந்தையே!!... அறிந்தும் கூட ஏதாவது இருக்கின்றதா??
யான் பசியோடு.. வந்திருக்கின்றேன். என்று நிச்சயம்!!
ஆனால் அறிந்தும்.. பாலகனாகவே மணிகண்டன் வந்து அறிந்தும் இதன் தன்மையைக் கூட.
ஆனாலும் நிச்சயம் அவர்களும்...
ஐய்யய்யோ!!
ஒரு குழந்தை வந்திருக்கின்றதே!!
ஆனால் இப்படி அனைத்து உணவுகளும் இன்று தீர்ந்துவிட்டதே!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய!!
இதனால் நிச்சயம் பின் அதாவது அவ் இல்லத்தோனும் நிச்சயம். தன் இல்லத்தவளிடம்!!..தாயே!! இவந்தனை... இக்கு குழந்தையை இங்கேயே பின் அமைத்திடு!! (உன்னிடமே இருக்கட்டும்)
நிச்சயம் யான் ஓடோடி சென்று.. நிச்சயம் ஏதாவது சில பொருட்களை வாங்கி வருகின்றேன்.. நிச்சயம் தன்னில் கூட.... அப்பொழுது நீ சமைத்து பின் சரியாகவே இக்குழந்தைக்கும் கொடுத்து விடலாம் என்றெல்லாம்.
நிச்சயம் பின்.. நிச்சயம் குழந்தாய்!! நீ இங்கேயே இரு!!! என்று யான் சென்று வாங்கி வருகின்றேன் என்றெல்லாம் பின் இல்லத்தவனும் கூட!!
பின் ஓடோடி சென்றான்!!.... எங்கும் !!எதுவும்!!... கிடைக்கவில்லை!!!!
அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் பின் அனைத்தும் பின் (பொருட்கள்)தீர்ந்துவிட்டது என்றெல்லாம்!!! பின் பக்கத்தில் உள்ள ஊர்களிலும் கூட!!... எதுவுமே இல்லை என்று!
ஆனாலும் அறிந்தும் பின் மீண்டும்.. பின் அதாவது இல்லத்திற்கு வந்து மனமுடைந்து நிச்சயம் தன்னில் கூட இல்லத்தவளிடம்.. பின் அதாவது இச்சிறுவனுக்கு தருவதற்கு எதுவுமே இல்லையே!!!! எப்படி ?என்ன செய்வது??? என்றெல்லாம்!!
நிச்சயம் அங்கிருந்தே...
ஆனாலும் வந்திருப்பது ஐயன் என்று தெரியவில்லையே!!!! அறிந்திருக்க கூட முடியவில்லையே...
இதனால்தான் நிச்சயம் இவ்வாறெல்லாம் இக்கலி யுகத்தில்... தர்மத்தின் பாதையில் செல்வோருக்கெல்லாம் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் பின் இறைவன் வந்தடைந்து கொண்டே இருக்கின்றான்.
ஆனால் நிச்சயம் தெரிவதில்லையே!!!... ஏன்? எதற்கு ? என்றால்... நிச்சயம் அவ் விஷயங்களுக்கெல்லாம் யான் வரும் வரும் காலங்களில் பதிலளிப்பேன். அப்பொழுது புரியும் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம்... ஐயனே வந்து நிச்சயம்... அதாவது நிச்சயம்... ஆனால் எப்படியோ ஏதாவது ஒன்றை சமைத்து விட வேண்டும்... என்று.
பின் ஆனாலும் மணிகண்டனோ?!...... ஐயோ!! பசிக்கின்றது!!! எந்தனுக்கு பசிக்கிறது!! நிச்சயம் ஏதாவது தாருங்கள் என்று!!
அறிந்தும் இதன் தன்மையைக் கூட... ஆனாலும் மீண்டும்
பின் நிச்சயம் எப்படியாவது நிச்சயம் அதாவது பின்... நடுநிசி அதாவது.. 12 மணி இரவு... ஆகிவிட்டது ஆனாலும் நிச்சயம்... அறிந்தும் மீண்டும் பின்... இல்லத்தவன் பின் நிச்சயம் எங்கேயாவது... நிச்சயம் யான் சென்று.. ஏதாவது கொண்டு வந்து இவந்தனுக்கு உணவை ஊட்டுவேன் என்று.. நிச்சயம் அறிந்தும் கூட.
இதனால் பின் அதாவது.. எதையெதையோ?? எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் இதை என்று புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் ஒரு அழகாக ஒரு பசுவும் கன்றும் கூட அவந்தனக்கு தென்பட்டது.
நிச்சயம் தன்னில் கூட சரி!!
பின் இவ் நடு இரவில் எங்கு தேடுவது????
நிச்சயம் இவ் பசுவிடம் சென்று.. நிச்சயம் அறிந்தும் கூட பின் பாலை எடுத்து நிச்சயம்... அக்குழந்தைக்கு கொடுப்போம் என்று.
நிச்சயம் பாலை பின் அழகாகவே அறிந்தும் கூட.. அதாவது யாரும் இல்லையே என்று!!
ஆனாலும் நிச்சயம் அன்னத்தை நிச்சயம் அளிக்க வேண்டும் அனைவருக்கும்!! பின் அனைவரும் பசியாற வேண்டும் என்பதே இவனுடைய குறிக்கோளாகவே!!!
இதனால் அழகாகவே பின் அதாவது பின் பசுவையும் கன்றையும் கூட நிச்சயம் வணங்கிட்டு... அறிந்தும் கூட!!
பின்!! ஒரு பாலகன் வந்திருக்கின்றான்!! என் இல்லத்திற்கு!!!
பின்... யான் ஏதாவது தவறு செய்திருந்தால்.. மன்னித்து அருளிட வேண்டும். நீங்கள் நிச்சயம் பின் பாலை. தாருங்கள் என்று அறிந்தும் அங்கேயே பல வழிகளிலும் கூட... எதை என்று அறிய. பசுவை வணங்கி!!!
ஆனாலும் எதை என்று அறிந்தும் கூட இதனால் அழகாகவே சரியாகவே.. பின் அதாவது இலைகளை மடித்து (பாத்திரம் போல்) பின் பாலை கறக்க!!!
ஆனாலும் அதற்குள்ளே ஓடோடி வந்து விட்டார்கள்!!
திருடன் வந்து விட்டான்! திருடன் வந்து விட்டான்! என்று!!
நிச்சயம் அறிந்தும் கூட பின் பிடியுங்கள் இவனை... இவன்தான் பின் அனைத்தும் திருடிக் கொண்டிருந்தானா!? என்று!!
ஆனாலும் நிச்சயம் அனைவரும் பல ஊர்களில் இருந்து... அறிந்தும்.
அப்பொழுதெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும்.. பின் ஒருவர் ஏதாவது செய்தால்... நிச்சயம் அப்படியே பரப்பி விடுவார்கள்.. பின் ஊர் ஊராகச் சென்று.. நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம் இவந்தன்... இப்படி அன்னத்தை ஈந்து கொண்டிருக்கின்றானே!!!... இவன் மகா பெரிய திருடன்!!
நிச்சயம் இவ்வாறுதான் அனைவரின் இல்லத்திலும் திருடி திருடி இவன் நிச்சயம் பின் இவ்வாறெல்லாம் பின் அதாவது அன்னத்தை ஈகின்றேன் !!அன்னத்தை ஈகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான்.. திருடித் திருடி அனைவருக்கும் கொடுத்தானா!??? என்று!!
நிச்சயம் இவனை நல்லோன்!(நல்லவன்) என்று நினைத்தோமே என்றெல்லாம்!!
இன்னொருவன் இவனை பக்தன் என்று நினைத்தோமே என்றெல்லாம்..
நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் அதாவது நிச்சயம் அறிந்தும் கூட அதாவது ஒரு மரத்தடியில் கட்டி வைத்தனர் இவனை.
நிச்சயம் பின் யார் யாருக்கு?? என்ன? ஏது? என்றெல்லாம் அடித்து இவனை இங்கேயே சாகடியுங்கள் என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய.
ஆனாலும் பின் இதை உணர்ந்தாள் (அறிந்தாள்) இல்லத்தரசி.
பின் ஓடோடி வந்து... பின் மகனே...(பாலகன் ரூபத்தில் வந்த ஐயனை பார்த்து) நீ இங்கேயே நில்லும்!!
ஏதோ ஒரு சிக்கல் இருக்கின்றது என்றெல்லாம்... நிச்சயம் உந்தனுக்காக நிச்சயம் பின் அதாவது.. உணவு இருக்கும்.
நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் யான் சென்று வருகின்றேன் என்று.
ஆனாலும் அதற்குள்ளே நிச்சயம்... அறிந்தும் கூட கற்களை கூட அவன் மீது வீசி... பின் எதை எதையோ செய்து பின் காறியும் துப்பி நிச்சயம்... அறிந்தும் கூட.
அப்பெண்மணியும் ஓடோடி வந்தாள்!!! அறிந்தும் கூட!! ஆனாலும் அனைவருமே பின் இப் பெண்மணியும் திருடி தான்!! நல்லோள் (நல்லவள்) போல் நடித்து.. நிச்சயம் அன்னத்தை ஈகின்றேன் என்று... நிச்சயம் எங்கே எங்கேயோ திருடி கொண்டு இப்படி செய்திட்டார்களே பின் எங்கு? அறிந்தும் எதை என்று கூட... இறைவா!! என்று!!
ஆனாலும் அப் பெண்மணி இறைவனே!!!!
பின் யாங்கள் அப்படி இல்லை... அதாவது என் இல்லதரசன் இப்படி நிச்சயம் செய்திருக்க மாட்டான்.. நிச்சயம் அறிந்தும் என்று.
ஆனாலும் அவர்களும் யாங்கள் பார்த்தோம்!!! அதனால் தான் கட்டி வைத்தோம் என்று!!
ஆனாலும் இல்லத்தரசியோ... ஐயனே!!! அறிந்தும் கூட!!! இப்படி ஒரு சோதனையா????
யாங்கள் என்ன குற்றம் செய்தோம்??!
பின் ஏன்?? எதற்கு இப்படி?? உன்னையே நினைத்து தவங்கள் செய்து கொண்டிருந்து உன்னையே நினைத்துக் கொண்டிருந்து.. அன்னத்தை பின் அனைவருக்கும் ஈந்தது தவறா???
அறிந்தும் உண்மைதனை கூட எப்படி?... ஏது? என்றெல்லாம்!! நிச்சயம் தன்னில் கூட பின்...
அதாவது பின் சபரி ஈஸ்வரனே!!!!... அறிந்தும் கூட வா!!!
நிச்சயம் தன்னில் காப்பாற்ற வா!!! என்றெல்லாம்!!!
ஆனால் மற்றவர்களோ நிச்சயம் யாங்களும்... மணிகண்டனின் பக்தர்கள்.
என்ன அறிந்தும் கூட... நீங்கள் அழைத்தால் மணிகண்டன் வந்து விடுவானா???
யாங்களும் அன்னத்தை ஈகின்றோம் யாங்களும் பல பக்திகளை காட்டியுள்ளோம்.. அதனால் மணிகண்டன் உங்கள் அழைப்பிற்கெல்லாம் வரமாட்டான்... என்று..
நிச்சயம் அப்பனே இப்படித்தான் பக்தி இன்றளவு இருக்கின்றதப்பா!!!
நம்பிக்கை இல்லையப்பா!!
அப்பனே நிச்சயம்... நம்பிக்கை இருக்க வேண்டும்!!!
நிச்சயம் அறிந்தும் கூட..அவ் நம்பிக்கை அப்பனே சில பேர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்பேன் அப்பனே.
பல பேர்களிடம் அப்பனே இருப்பதே இல்லை என்பேன் அப்பனே.
ஏனென்றால் அப்பனே.....
அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... இறைவனை நெருங்க நெருங்க அப்பனே... சில கஷ்டங்கள் வருமப்பா!!!
அக்கஷ்டங்களை எல்லாம் பின் தாண்டி வந்தால்தான் அப்பனே... நிச்சயம் தன்னில் இறைவன் சோதிப்பது அப்பனே நிச்சயம்... நீங்கள் தேர்வில் அதாவது அப்பனே பெரிய இடத்தை பின் வகிக்க வேண்டும் என்றால்... அப்பனே தேர்வில் அப்பனே நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான்.. உயர் பதவிக்கு அப்பனே.
ஆனால் இப்படியே சாதாரணமாகவே.... இப்படியே என்றால் அப்பனே... இறைவனிடத்தில் அப்பனே பின் செல்வது அதாவது அவ்வளவு சுலபமா???
அப்பனே ஆனால் இன்றளவு மனிதன் சுலபமாகவே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!
ஆனால் இவர்கள் அப்பனே நிச்சயம் பல வருடங்கள்.. அப்பனே அன்னத்தையே.. அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட கொடுத்துக்கொண்டு!! கொடுத்துக்கொண்டு!!
இதனால் அப்பனே எப்படியெல்லாம்... நிச்சயம் அப்பெண்மணியும் கூட... தனி ஒருவளாகவே போராடினாள்.
நிச்சயம் விட்டு விடுங்கள்!!! பின் இன்னும்... அவனை கல்லால் அடித்தால் இறந்து விடுவான் என்று நிச்சயம்.
நீயும் இறந்து விடு!! என்று பெண்மணியை பார்த்தும் அவர்கள் நிச்சயம் இவ்வாறு திருடர்களாக நீங்கள் இருப்பதெல்லாம் எதற்கு??? நீயும் இறந்து விடு என்று!
ஆனாலும் அப்பனே அதாவது அவர்களும் ஐயனின் பக்தர்கள் தான் அப்பனே.
ஆனாலும் ஒருவர் கூட உணரவில்லையே அப்பனே
அப்பனே எங்கப்பா?? தர்மம்??
அப்பனே இதுதான் அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே.... நிச்சயம் யோசிக்க மாட்டான் அப்பனே மனிதன் அப்பனே.
சரியா? தவறா? என்று யோசிக்காமல் உடனடியாக பேசி விடுவான் என்பேன் அப்பனே!!
எப்பொழுதும் யோசித்துப் பேச வேண்டும் அப்பனே.
உங்களுக்கும் கூட சொல்கின்றேன் அப்பனே.
இது சரியா??? தவறா??? என்றெல்லாம் அப்பனே பின் ஒரு முறை அல்ல!!! பலமுறை யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!
நிச்சயம் அனைத்திற்கும் காரணம் ஆக இறைவன் இருக்கின்றான்.
அதனால் நிச்சயம் அறிந்தும்... இதன் தன்மையைக் கூட...
இதனால் அப்பனே ஒவ்வொருவரும் கூட யோசித்து அப்பனே நிச்சயம் பேச்சை பேச வேண்டுமே தவிர... அப்பனே ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டு!! உளறிக்கொண்டு!! அப்பனே அப்பொழுது பைத்தியம் தான் ஆவீர்கள் என்பேன் அப்பனே!
அதனால் அப்பனே அதன் மூலம் கூட அப்பனே கர்மா சேர்ந்து விடும் என்பேன் அப்பனே..
பிறர் மனம் புண்படும்படி.. பேசினால் அப்பனே நிச்சயம் பலத்த கர்மா ஏற்படுத்தும் என்பேன் அப்பனே.
நல்லவனோ??!!... அப்பனே தீயவனோ!???.. அப்பனே பின் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!
அவன் அப்பனே பின் தண்டனை வழங்காதது?? அப்பனே.... நீங்களா!?!? அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூட வழங்கப் போகின்றீர்கள்????
அப்பனே யாங்கள் இருக்கின்றோம் அப்பனே!!!
அப்பனே பழமொழியும் உண்டு... அப்பனே பின் அரசன் அன்று தான் கொல்வான் அப்பனே..
ஆனாலும் அப்பனே யாங்கள் பார்த்து பார்த்து அப்பனே... என்ன தண்டனைகள்??? பின் எதை என்று அறிய அப்பனே!!!
ஆனால் இப்பொழுதெல்லாம் அப்பனே தேவையில்லை என்பேன் அப்பனே.
இன்னும் அப்பனே வாக்கியத்தில் யான் சொல்கின்றேன் பலமாகவே!!!
இதனால் அப்பனே இன்னும் அப்பனே... யாருமே நம்பவில்லை பின் அதாவது அப்பனே பின் அதாவது... உண்ட வீட்டிற்கு இரண்டகம்.. இன்னும் அதாவது துரோகம் என்கின்றார்களே... பின் அவர்களும் கூட... பின் அதாவது இப்படித்தானப்பா!!! போட்டி பொறாமைகள் அப்பனே இருந்து கொண்டே... அப்பனே பின் அறிந்தும் கூட!!
அவர்கள் கூட இவர்கள் திருடர்கள் என்று... பின் ஆனால்...அவ் பெண்மணியோ நீங்கள் கூட.. பின் யாங்கள் என்ன தவறு செய்தோம்??? எவ்வளவு கஷ்டங்கள் பட்டுப் பட்டு அறிந்தும் கூட இவ்வாறு செய்தோம் என்று.
ஆனாலும் சரி.. எங்களுக்கு யாருமே உதவவில்லை... நிச்சயம் அறிந்தும் கூட பின்.. ஐயன் தானே!!!
பின் ஐயனே!!!!!.........
உன்னை கூட அறிந்தும்.. எதை என்று கூட... குழந்தையாக யாங்கள் ஏற்றுக் கொண்டோமே!!! உன்னையே நினைத்து!! நினைத்து!!! பக்தர்களுக்காக சேவைகள் செய்தோமே!!!
எங்களுக்கு ஏன் இந்த நிலைமை ??? என்றெல்லாம்!!!...அப் பெண்மணியும் கூட!!!
ஆனாலும் பின் ஆனாலும் நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் நிச்சயம் ஐயனே!!!!
அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் சிரித்துக் கொண்டே வந்தான் நிச்சயம்.. அறிந்தும் பின்.
ஆனாலும் நிச்சயம் பலரும் கூட... இக்குழந்தை யார்.????
நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் பல பேர்.... இவர்களுக்கு குழந்தையே இல்லையே!!!
பின் முறையில்லாமல் பிறந்து விட்டதா... என்றெல்லாம் (தவறாக பேசினர்) பல பேர்களப்பா!!!!! அப்பப்பா!!! இதுதான் வேதனைக்குரியது என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தான் ஐயன் என்பேன் அப்பனே.
இதுதான் இறைவன் என்பேன் அப்பனே!!!
நிச்சயம் அப்பனே அனைத்தும் அப்பனே நீங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்கின்றான் இறைவன் அப்பனே!!!
ஆனால் உடனடியாக தண்டனைகள் கொடுத்து விட்டால் அப்பனே!!! உலகத்தில் ஏதப்பா?? நியாயம்!!??
(இறைவன் தான் தீர்மானிப்பார் தண்டனைகள் எப்பொழுது எப்படி என்ன என்று!! மனிதர்களால் எது சரி எது தவறு எப்படி தண்டனை என்று வழங்கினால் அது நியாயமாகாது இறைவனுக்கு தெரியும் என்ன செய்வது என்று)
இதனால் அப்பனே மனிதன் தான் உடனடியாக கொடுப்பான்!!
ஆனால் இறைவனோ அனைத்திற்கும் சேர்த்து ஒன்றாக... எங்கு பின் அடித்தால்... பின் அடிவாங்கும் இடம் அப்பனே.. பலமாக இருக்கும் என்பதெல்லாம்.. அப்பனே.
இதனால் ஐயன் பார்த்துக்கொண்டே!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் மாற்றத்தை எதை என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட... பின் தவறாகவே பேசினார்கள் என்பேன் அப்பனே ஐயனையே!!
ஆனாலும் அப்பனே இதில் கூட ஐயன் பக்தர்கள் என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே யாருக்குமே புரியவில்லையே!!!
எப்படியப்பா?? புரியும்!!! மாயை வலையில் சிக்கிக் கொண்டால்... அப்பனே இறைவன் நேரில் வந்தாலும் அப்பனே நிச்சயம்... எதை என்று அறிய அறிய.. பின் எவை என்று கூட.. பின் எவை என்று புரியாமலும் போய்க்கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே.
அதனால் தான் அப்பனே இறைவன் பின் இறைவனை அப்பனே பின் அதாவது வணங்கினால் அப்பனே நிச்சயம்... அப்பனே ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் அப்பனே சிறிது நேரமாவது அப்பனே ஆத்மார்த்தமாகவே அப்பனே நிச்சயம்... எதையும் மனதில் நினைக்காமல் இறைவனை மட்டும் நினைத்து வணங்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பொழுதுதான் அப்பனே இறைவன் சென்று கொண்டிருக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் தெரியுமப்பா.
அப்படி இல்லையென்றால் அப்பனே... கடைசி வரை அப்பனே நீங்கள்... உங்கள் மனதை எங்கோ?? வைத்துக் கொண்டு!!... இறைவனை தேடு!! தேடு என்றால் அப்பனே அப்படியே தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே.
இதனால் அறிந்தும் கூட இதனால் அப்பனே... ஐயன் தன் சுயரூபத்தை காட்டினான். அப்பனே ஐயன்... நிச்சயம் தன்னில் கூட!!
இவை எல்லாம் நிச்சயம் பின் ஏதாவது... என்னை உங்கள் பிள்ளையாக ஏற்றுக் கொண்டீர்களே.. நிச்சயம் தன்னில் கூட என்னை... இப்படியா?? என்றெல்லாம் கட்டித்தழுவி யான் தான் ஐயன் என்று.. தன் சுய ரூபத்தை காட்டினான் நிச்சயம் அறிந்தும் கூட.
இதனால்தான் அப்பனே நிச்சயம் கருணை வடிவானவன் ஐயன் என்பேன் அப்பனே.
பின் அனைவரும் கூட ஓடி ஓடி வந்து... அப்பொழுது பின் ஐயனே!!! நீங்களா??? அறிந்தும் எதை என்று கூட எங்களை மன்னித்து விடுங்கள்!! மன்னித்து விடுங்கள் என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் பின் அப்படியே மோட்சத்திற்கு பின் அழைத்து சென்றுவிட்டான்..அவ் இருவரையும் கூட.
அப்பனே இன்னும் அப்பனே ஐயனின் லீலைகள் அப்பனே சொல்லிக் கொண்டே.. இருப்பேன் அப்பனே நிச்சயம்..
இவ்வாறு சொல்லிக் கொண்டு உங்களுக்கு பக்குவங்கள் பிறந்தால்தான் அப்பனே.. அனைத்தும் உணர முடியும் என்பேன் அப்பனே.
பக்குவங்கள் இல்லை என்றால் எதைச் சொல்லியும் பிரயோஜனமில்லை என்பேன் அப்பனே.
முதலிலே அவை நடக்கும் இவை நடக்கும் என்றெல்லாம் அப்பனே அதனால் அப்பனே அனைத்து சக்திகளும் மனிதரிடத்திலே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.
அவை சரியாக இயக்க அப்பனே முதலில் அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
பின் பெரிய பெரிய படிப்பிற்கு அப்பனே பெரிய பெரிய பின் யோகங்கள் அப்பனே பின்.. அறிந்தும் கூட அப்பனே பின் செல்ல அப்பனே நிச்சயம்... முதன்மை பாடத்தை இரண்டாம் பாடத்தை எல்லாம் அப்பனே நீங்கள் கற்று வந்தால் தான் அப்பனே... அடுத்தடுத்த உயர் பதவிகளும் கூட வகிக்க முடியும் என்பேன் அப்பனே.
மனிதன் இப்பொழுது என்ன எண்ணுகின்றான்??? என்றால் அப்பனே உடனடியாக.. அப்பனே மேற்பதவிக்கு சென்று விட வேண்டும் என்று!!!
அப்படி எல்லாம் ஆகாதப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
யாங்கள் கொடுத்த தேர்வில்... அப்பனே முதலில் நீங்கள் மதிப்பெண்கள் பெற்று அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட சரியான மதிப்பெண்கள்.. அதிகமான மதிப்பெண்கள் பெற்று.. அப்பனே நிச்சயம் வந்தாலே...யாங்களே வாக்குகள் சொல்வோம் என்பேன் அப்பனே.
ஆனால் நீங்கள் அனைவருமே பூஜ்ஜியம் தான் என்பேன் அப்பனே.
நிச்சயம் ஒரு அப்பனே இரண்டு அப்பனே நிச்சயம் சதவீதம் கூட.. எடுக்கவில்லையே?? அப்படி எப்படி அப்பொழுது... எப்படியப்பா??? உங்களை மறு வகுப்பிற்கு யாங்கள் அழைத்துச் செல்ல முடியும்????????????
அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே மூடநம்பிக்கைகளில் இருந்து விடாதீர்கள்.
அதனால்தான் சித்தர்கள் வந்து வந்து அப்பனே நிச்சயம் !!!
ஆனால் இன்றையளவில் அப்பனே சித்தர்களை பின் அதாவது இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் ஏமாற்றி!! ஏமாற்றி!!! காசுகளுக்காகவே அப்பனே பின் எதை என்று அறிய அறிய!!!
ஆனாலும் அவை தன் கடைசியில் அடித்தால்.. நோய்களாகவே நிச்சயம் குடும்பத்திற்காகவே அவனவன் செய்த அவர்கள் பின் தண்டனைகள் நிச்சயம் அவனவன் சரியான பாடத்தை நிச்சயம் அவனவனே அனுபவிப்பானப்பா!!
அவ்வளவுதான் அப்பனே
ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே அனைவருக்குமே ஆசிகள் என்பேன் அப்பனே!!
(சேவா அமைப்பு நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு) நல்விதமாகவே அப்பனே ஐயனின் அருள்களைக் கூட நீங்கள் பெற்று அப்பனே முன் ஜென்மத்தில் இருந்தே அப்பனே பின் ஐயனின் அருள்களை பெற்றவர்கள் தான் என்பேன் அப்பனே..அது இச் ஜென்மத்திலும் தொடர அப்பனே.. சில மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்துவது உறுதியப்பா.
கவலையை விடுங்கள் ஆசிகள்!! ஆசிகள்!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!... அன்னதான பிரபு சபரிநாதன் மணிகண்டன் ஐயப்பன் மற்றும் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஜீவநாடியில் வந்து வாக்குரைத்த இடம் ஹரிஹர புத்திரா அன்னதான சேவா அமைப்பு... இந்த இடத்தில் தான் குருநாத அகத்திய பெருமான் கூறிய சம்பவம் நடந்தது.
இந்த அமைப்பினை பற்றி விபரங்கள்.
குறிப்பு: விளம்பர நோக்கத்திற்காக அல்ல அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக!!!
மணிகண்ட சேவா ஆசிரமம் என்றும் அழைக்கப்படும் ஹரிஹரபுத்திர சேவா அறக்கட்டளை, மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பாதை வழியாக புனித மலைக் கோயிலான சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் உன்னத நோக்கத்துடன் 2017 இல் பதிவு செய்யப்பட்டது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிலக்கல் அருகே எருமேலி-பம்பா காட் சாலையில் அமைந்துள்ள பல செயல்பாட்டு மையமான மணிகண்ட சேவா ஆசிரமம், தங்குமிட சேவைகள் மற்றும் சுத்தமான சுகாதார வசதிகள் உள்ளிட்ட சுகாதாரமான தங்குமிடங்களை வழங்குகிறது. ஆசிரமத்தின் அதிநவீன சமையலறை தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும், தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இலவச உணவு மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குகிறது. இரண்டு மாத கால வருடாந்திர யாத்திரை முழுவதும் சராசரியாக 8000-10,000 பக்தர்களுக்கும், ஐந்து நாள் மாதாந்திர பூஜை நாட்களில் தினமும் 4000-6000 பக்தர்களுக்கும் ஆசிரமம் உணவு வழங்குகிறது.
ஹரிஹர புத்திரா சேவா டிரஸ்ட் .Narananthodu, Thulappally(P.O, Perunad, Kerala 686510
வலைத்தள முகவரி
https://www.hariharaputhrasevatrust.org/
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!~
Monday, February 17, 2025
ஸ்ரீ ஐயப்பன் ஜீவநாடி வாக்கு ❤️
Monday, 17 February 2025
சித்தன் அருள் - 1802 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ ஐயப்பன் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு
16/2/2025 அன்று ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் அன்னதான பிரபு ஸ்ரீ ஐயப்பன் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா குருநாதரின் உத்தரவின் பேரில் சபரிமலை யாத்திரை சென்றார்... அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழை உட்பட ஐயப்பனின் திருக்கோயில்கள் அனைத்தும் தரிசனம் செய்துவிட்டு சபரிமலைக்கு சென்றார் சபரிமலையில்... ஐயப்பன் பால் பெரும்பக்தி கொண்ட 36 வருடங்களாக மாதா மாதம் தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரும் ஒரு அகத்திய பக்தருடன் யாத்திரையில் பங்கெடுத்து சபரிமலையில் ஐயப்பன் கருவறையில் ஓலைச்சுவடி கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் திருமேனியில் சிறிது நேரம் வைக்கப்பட்டு தீபாரதனை செய்து வணங்கி விட்டு.
சபரிமலை அடிவாரத்தில் ஹரிஹர புத்திரா சேவா அமைப்பு வளாகத்தில் ஓலைச்சுவடியை திரு ஜானகிராமன் ஐயா வணங்கி விட்டு வாசிக்க
சபரிமலை கருவறையில் ஐயப்பன் கைகளில் இருந்து நேரடியாக பூஜை செய்யப்பட்டு வந்த ஓலைச்சுவடியில்... முதல்முறையாக ஐயப்பன் வாக்குகள் ஈந்தார்.
நம்மை வாழவைக்கும் தெய்வம் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஐயப்பனுக்கு அன்பாக
மணிகண்டன்
அனாதை ரட்சகன்
சபரிநாதன்
ஐயன்
மலையோன்
காடுடையோன்
வேந்தன்
புலியன்... என அன்பாக பெயர்களை இட்டு ஐயனுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து.. மேக்கரையில் இருந்து திருவிளையாடல் புரிந்து ஐயனின் லீலைகளை ஒன்றாக நமக்கு எடுத்துக் கூறி நம்மை வழிநடத்துகின்றார்.
ஐயப்பன் ஜீவனாடியில் வந்து வாக்குகள் தந்த உடன் குருநாதரும் வந்து ஐயப்பனின் லீலைகளை எடுத்துக் கூறினார்
பாகம் இரண்டில் அவை வெளிவரும்.
தற்போது ஐயனின் வாக்குகள்!!!
விதி ஒன்றை சமநிலைப்படுத்த!!
மாற்றி அருளக்கூடிய
அறிந்தும் பிறர் அறியா வண்ணம் இருக்கக்கூடிய
வீர ஐயனே பேசுகின்றேன்!!
எண்ணில் அறிந்தும் உண்மைதனை புரிந்தும்
புரிந்தும் இதனையென்றும் அறியாத மனிதனே!!
உண்மைதனை நெருங்கிய பொழுதும்... பொழுதொன்றும் அறிந்தும்
இதை தன்னைக் கூட தெரியவில்லையே!!!
தெரியவில்லையே!!
விளங்கவில்லையே மனிதனுக்கு!!!
மனிதன் என்றும் அடி நின்றும் பின் காணாத ஒன்றொன்றை பின் பயன்படுத்தினாலும் கிட்டவில்லையே அருள்கள்
மனிதனுக்கு!!
மனிதனுக்கு அருளும் ஈந்து
பின் அருள் கொடுத்துக் கொண்டே!! கொடுத்துக் கொண்டே!!
அதையும் சரியாக பயன்படுத்தவில்லையே மனிதன்.
என்றென்றும் வாழ பிறர் வாழ... பின் தன் கையில் ஏந்திய பின் அனைத்தும் பின் கொடுத்து அனுப்புகின்றேனே!!
அனுப்புகின்றேனே!!
அதையும் கூட பயன்படுத்த வரவில்லையே மனிதன்.
அறிந்தும் இதன் தன்மையையும் கூட உணர்ந்து விட்டால் பின் மோட்ச கதியே!! மோட்ச கதியே!!
வருகிறார்கள் பின் அறிந்தும் என்னிடத்தில் ஓடோடி!!
ஆனாலும் கொடுத்தும் அனுப்புகின்றேனே!!!
அனுப்புகின்றேனே அதையும் கூட சரியாக பயன்படுத்த முடியவில்லையே!!
முடியவில்லையே!! தெரியவில்லையே!!
அறிந்தும் அனைத்து நலன்களையும் கூட பின் கொடுத்து கொடுத்து
என் பக்தர்களுக்கு நிச்சயம் அறிந்தும் கூட என்னிடத்தில் ஓடோடி வந்து வந்து என்னைத் தொழுது!! தொழுது !!
ஆனாலும் அறியவில்லையே உண்மை பொருளை!!
எப்படி? ஏது? என்று சிலர்
விசித்திரமான
கஷ்டங்களை வைத்து பார்க்கின்றேனே... ஆனாலும் பின் திருந்தவில்லையே!!
இதனால் என்ன! ஏது? செய்வது?
கலியுகத்தில் இப்படித்தான் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் பின் பல சக்திகள் பின் இருந்தாலும்
அதை தன் மனிதனுக்கு கொடுத்து கொடுத்து நிச்சயம் தன்னில் உயர்த்தி வைக்கலாம் என்று பார்த்தாலும்!!!.....
மனிதன் திருந்திய பாடு இல்லை!!!
நிச்சயம் அதே தன் சாக்கடையில் போய் விழுகின்றான்.
வந்ததும் போவதும் நினைப்பதும் அறிந்ததும் பின் எது?? எது என்று கேட்டால்!!... ஏதுமில்லையே!!
இதனால் எதற்காகவே பிறந்தோம்?? எதற்காகவே வளர்ந்தோம்?? என்பதை கூட தெரியாமலே சுற்றி!! சுற்றி!!
மனிதா!!! அறிந்தும் இதன் உண்மையைக் கூட.. ஆசைகள் ஆசைகள் பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்பதை எல்லாம்..
இவை தன் கூற பின் சித்தர்கள் எடுத்துரைத்தாலும் நிச்சயம்
தன்னில் கூட அவை தன் கூட மாற!!!
எப்படி மாறும்? என்பதையெல்லாம் யான் உணர்ந்தேனே!!! உணர்ந்திட்டேனே!!!
என்பவை எல்லாம்!!
இன்னும் அநேகாதி பின் சித்தர்களும் இதை அறிவார்கள்
சுற்றி சுற்றி பின் பின் அறிந்தும் ஜீவஜோதியாகவே பின் காண்கின்றார்கள் பின் சித்தர்களும் கூட!!
சித்தர்கள் அறிந்தும் எனை தேடி..வந்தே!! தேடி வந்தே!!....
அறிந்தும் எப்படி ?மனிதர்கள் ஏது? என்று புரியாமல் தவிக்கின்றானே!!!
பின் ஆசைகள் பொங்க பொங்க வந்தாலும் அறிந்தும் மீண்டும் கஷ்டங்கள் கஷ்டங்களில் நுழைந்து அறிந்தும் பின் கொடுக்கவில்லையே !! என்று ஏங்கி!! ஏங்கி!!
இதை தன் பயன்படுத்தி அறிந்தும் கூட பின் கொடுக்க யானே பின் முற்படுத்தி பின் அதாவது.. பந்தளத்தில் இன்னும் பின் எழுதிய பின் சுவடிகள் அறிந்தும் பின் பல கோடி சுவடிகள் அறிந்தும்!!!
அதாவது இட்டிட்டேனே!!!
நிச்சயம் அறிந்தும் இவை தன் புரிய ஒருவரும் ஆளில்லையே என்றெல்லாம்!!!! நிச்சயம் தன் கிணற்றிலே விட்டிட்டேன்!!!
மனிதர்களே நீங்களும் கூட கிணற்றுக்குள்ளே வாழ்ந்து வருகின்றீர்கள்.
மேல் லோகத்திற்கு எப்படி வருகின்றீர்கள் என்பதை எல்லாம் பின் அதாவது பின் உண்மை நிலையை தெரிந்து கொண்டால் தான் கரையை பின் சேர முடியும்.
பின் உலகம் பார்த்தாலும் நிச்சயம் பின் கிணறு என்றே பின் அழகாகவே சமமாகவே பின் கிணற்றுக்குள்ளே அடியிலே நிச்சயம் தண்ணீரில் நீந்தி கொண்டிருக்கும் பொழுது கஷ்டங்கள் தானே!!
அதை தன் எப்பொழுது? பின் எதை தாக்கும்? எப்பொழுது பின் கீழே விழும்? என்பதையெல்லாம் சரிவுகள்.. மண் சரிவுகள் என்பதெல்லாம்!!
ஆனாலும் பின் இறைவனை அடைய பின் கிணற்றிலிருந்து அறிந்தும் சிறிது சிறிதாகவே மேல் நோக்கி.. மேல் நோக்கி ஏற!! ஏற !! பக்குவங்கள் பட!! பட!!
பின் சமநிலை வந்து விட்டால் இறையையும் காணலாம்!!
ஆனால் காண்பதற்கு ஆள் இல்லையே!! காண்பதற்கு ஆள் இல்லையே!! அறிந்தும்!!
இன்னும் பின் பாதாளம் இன்னும் பின் பூலோகம் இன்னும் அறிந்தும் பல லோகங்கள் அறிந்தும் இதை தன் கூட... மனிதன் பின் உணர்ந்திருக்கவில்லையே!
அறிந்தும் ஏதேதோ இன்னும் பின் மேலோகத்தில் கூட
கீழ் லோகத்திலே இருந்து கொண்டு அறிந்தும் பின் அதை சுற்றுகின்ற பொழுது
ஓரிடத்திற்கு அனுப்பி அறிந்தும் பின் அதை பயன்படுத்துகின்ற பொழுது எப்படி இன்னொரு உலகம் தெரியும் என்பதை எல்லாம்?? மனிதனின் கூட பின்... அதாவது புத்தி பின் ஈன புத்தியாகவே தென்பட்டு தென்பட்டு...
அதனால்தான் இறைவன் கண்களுக்கே தெரிவதில்லை!!!
மேலோகம் இப்புவிதன்னிலே மேலோகம் கீழோகம் தன்னில் கூட பின் சுற்றி சுற்றி திரிகின்ற பொழுது
ஓர் இடத்திற்கு பின் அனுப்பும் பொழுது விஞ்ஞானிகள்.
ஆனாலும் இதை தன் பின் என் தந்தை அகத்தியனே நிச்சயமாய் பின் உரைக்கும் பொழுது புரியும்!!! இன்னும் அறிந்தும்!!
இதனால்தான் பின் அதாவது சித்தர்களோ இன்னும் இன்னும் மனிதர்களுக்கு அறிவுகள் எட்டவில்லையே?? எட்டவில்லையே?? என்றெல்லாம்!!
இன்னும் பின் மூட நம்பிக்கைகளிலே ஒளிந்துள்ளார்கள் ஒளிந்துள்ளார்கள் என்றெல்லாம்!!
ஆனாலும் எனக் காண என் பிள்ளைகள் ஓடோடி வந்தாலும்... ஆசைகளை பின் வைத்துக் கொண்டு வைத்துக்கொண்டு... அதற்கு பின் தகுந்தாற்போலே யானும் கொடுத்திட்டாலும் நிச்சயம் அதை சரியாக பயன்படுத்துவதில்லையே பயன்படுத்துவதில்லையே
இதுதான் கலியுகம்... இறைவன் இருந்தும் அறியவில்லையே!!
அனைத்தும் இருந்தும் அறியவில்லையே!!!
அனைத்தும் பின் மனிதனுக்கு கொடுக்க தயாராகவே!!!
அதாவது வரங்களை கொடுத்து அனுப்புகின்றேன் மீண்டும் மாயையில் சிக்கி கொண்டு அழித்து மீண்டும் பின் ஐயனே!!! என்று பின் வந்து பின் மண்டியிட்டு வணங்கினால் யான் என்ன செய்வது????
இதுதான் நிச்சயம் கலியுகம்! கலியுகம்!
அறிந்தும் உண்மைதனை விளக்க யாரும் இல்லையே??
பின் அறிந்தும் பின் யான் எழுதிய சுவடிகளும் கூட இன்னும் அறிந்தும் பின் பந்தளத்தில் பின் தள்ளாடுகின்றது.. அதை படிப்பதற்கும் ஆள் இல்லையே!!!
அதை சரியாக யார் ஒருவன் படித்தால்... பின் இவ்வுலகம் நிச்சயம்.. உலகம் ஒளி பெறும்..
பின் ஆனால் படிக்க ஆள் இல்லையே!!!
எத்தனை?? எத்தனை?? சுவடிகளோ!!!!... அறிந்தும் பின் படித்து அதாவது.. எத்தனையோ தெரியாமல் படித்தும் கூட... மனிதர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர....
ஆனால் உண்மை பொருளை விளங்குவதற்கு யான் அழகாகவே எழுதி வைத்துள்ளேனே!! அறிந்தும்!!
அதை தன் பின் எடுக்க ஆள் இல்லையே!!!
அதை தன் நிச்சயம் எடுத்து பின் ஓதி விட்டால் நிச்சயம் இவ்வுலகம் பின் அறிந்தும்!!!
இதை தன் கூட பின் கட்டளையை மீறி அதாவது ஈசன் கட்டளையே!!!
இவையெல்லாம் பின் படிப்பதற்கு அறிந்தும் கூட!!
யானே அவதாரம் எடுத்து மீண்டும் இதை ஓதி நிச்சயம் அனைவரையும் காப்பேன்!!!
இக்கலியுகத்தில் பின் என்னிடத்தில் இருந்தே சத்தியம்!! அறிந்தும் கூட!!
பின் வந்துகொண்டே இருக்கின்றேன் மக்களோடு மக்களாகவே பின் வந்து கொண்டே இருக்கின்றேன்.
ஆனால் காண முடியவில்லையே!!!....
பின் இன்னும் ஏன் காண முடியவில்லை??
அறிந்தும் பின் பணத்தாசைகள் அதாவது பணத்தாசைகள் என்றும் கூட அதாவது பேயாசைகளே !! என்பதை கூட!! பின் பணத்தின் மீது ஆசைகள்!! ஆசைகள்!!
எப்பொழுது ???
எல்லாம் அவ் ஆசைகள் நீங்குகின்றதோ!!! அப்பொழுதே என்னை காணலாம்!!!
வீசுகின்றார்கள் பின் ஆசைகள் ஆகவே!!! இதை தன் உணர்வதற்கு ஆள் இல்லையே!!!
இதனால்தான் அறிந்தும் அறிந்தும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பிறவிகள் மனிதன் கடந்து கடந்து பின் வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட....
என்னால் பின் விதியையும் மாற்ற இயலும்!!!
ஆனாலும் மாற்றி விட்டு அனைத்தும் கொடுத்தாலும் மாயையில் சிக்கிக் கொண்டு பின் அறிந்தும் பெண்ணாசை!!
பின் பொன்னாசை!!
பின் மண்ணாசை..!!. இன்னும் என்னென்ன ஆசைகளோ!!!... அவற்றையெல்லாம் அனுபவித்து மீண்டும் பின் ஐயனே!!! பின் கொடுத்திட்டாயே!!!.... பின் தவறான வழியில் சென்றிட்டு... நிச்சயம் கர்மத்தை ஏற்றேனே!!! பின் எப்படி என்றெல்லாம் மீண்டும் எனை கேட்கும்பொழுது!!!
யான் ஆறுதல் சொல்லவா???
அறிந்தும் அதாவது பெரிய தவறு செய்து விட்டேனே என்று!!! யான் தான் வெட்கப்பட வேண்டும்!! அறிந்தும்!!
இதைத்தன் தான்.. பின் கூறுகின்றேன்... சிறப்பாகவே பின் ஒழுங்காகவே சரியாகவே எப்பொழுதும் எனை நாடி நாடி வருவோர்களுக்கு எல்லாம்... இப்படித்தான் இருந்தால் பின் நிச்சயம் பின் அனைத்தும் கிடைக்கும் என்பதை எல்லாம் அப்படியே பின் வாழும் வரை... கடைப்பிடித்தாலே போதுமானது.
ஆனாலும் போதுமானது ஆனாலும் இல்லையே!!!
அறிந்தும் கடைப்பிடிப்பதே இல்லையே மனிதன்!!!
ஏதோ அதாவது மனிதனை மனிதனே ஏமாற்றுகின்றான். ஆனால் மனிதன் அதாவது.. இறைவனே ஏமாற்றினால் என்ன?? யாங்கள் என்ன தண்டனை? பின் கொடுப்போம் என்றெல்லாம்!!! நீங்கள் அறிவீர்களா????
தெளிந்து பின் புத்திகள் பெற்று!!!!.....
இதனால் அறிந்தும் பின் எந்தனுக்காக பல வழிகளில் கூட அறிந்தும் கூட பின் இப்படித்தான் இருக்க வேண்டும்.. என்றெல்லாம் நிச்சயம் பின் உணர்ந்தும் உணர்ந்தும்.
ஆனாலும் அப்படி இல்லையே!!!
மனசாட்சிகள் இல்லையே!!!
அறிந்தும் கூட!!! சுத்தம் அதைக் கூட!!! சரியாக பயன்படுத்தி பின் மண்டலம் வரை எப்படி இருந்தீர்களோ..... அப்படியே இருந்துவிட்டால்.. இவ்வுலகத்தில் நோய்களே இல்லை!!!
கஷ்டங்களே இல்லை!
பணத்தட்டுப்பாடும் இல்லை!! நிச்சயம் அறிந்தும் கூட... நீடூழி வாழலாம்! வயது ஆகவே ஆகாது!!! நிச்சயம் தன்னில் எப்பொழுதும் இளைஞனாகவே வாழலாம்!!
ஆனாலும் இப்படி யாரும் இல்லையே!!! யாரும் இல்லையே!!
அறிந்தும் அனைவருமே என் பக்தர்கள்!!! சிறுபிள்ளைகளே அனைவரும்.. என்னிடத்தில்!!
நிச்சயம் அறிந்தும் பின் எப்பொழுதும்.. உறங்கிக் கொண்டே (தவத்தில்) இருக்கின்றேன்! நிச்சயம் இச் சபரி தன்னிலே!!!
அனைவருக்கும் ஆசிகள் கொடுக்க தயாராகவே இருக்கின்றேன்.
ஆனால் மனிதனோ.. பின் நிச்சயம் பல பல வழிகளிலும் கூட நிச்சயம் அறிந்தும் கூட குடும்பத்திற்கே...
குடும்பத்தில் ஒருவர் வந்தால் அக்குடும்பத்திற்கே மோட்சகதியை அளித்திட்டு நிச்சயம் அதன் தன்மையை கூட இன்னும் தெரிந்திருக்க முடியவில்லையே என் பிள்ளைகளே!!!
அறிந்தும் எதை என்று பின் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன்... பல ஆசிகள்!!!
ஆனாலும் பின் நீங்கள் அதை பயன்படுத்த.. அதாவது சரியாக பயன்படுத்துவது இல்லையே!!!
இதனால்தான் இன்னும் கலியுகத்தில் இன்னும் அழிவுகளாகவே இன்னும் அழிவுகளாகவே... இன்னும் என்னென்ன?? நடக்க போகின்றது என்பதை எல்லாம் சித்த பெருமக்கள்.. நிச்சயம் அறிந்தும் கூட..
இன்னும் பின் 18 படிகளும்.. கூட பின் ஏன் ஏறிக்கொண்டு இருக்கின்றோம்?? என்பதை அறியவில்லையே!!
நிச்சயம் பின் என் அவதாரங்களே!!! பின் 18...
ஆனாலும் அதைக் கூட பின் மறைத்திட்டார்களே!!
இதைத்தான் பின் சுவடிகளிலே யான் அழகாகவே எழுதி வைத்துள்ளேன்... பந்தளத்திலே!!
அறிந்தும் இதை தன் கூட!!
ஆனாலும் இதை எதை எதையோ? சொல்லிட்டு மனிதன் பின் அப்படியே பயன்படுத்தினான்... பின் தவறான விஷயங்களை எல்லாம் பரப்பி பரப்பி... அப்படியே ஆயிற்று!!!
எப்பொழுதெல்லாம் என் பின் அதிசயங்கள்.. அதாவது பின் அறிந்தும் கூட பதினெட்டு (படிகளின்) அறிந்தும் இதன் தன்மையைக் கூட உணர்ந்து பின் அவதாரங்களை.. நிச்சயம் பார்க்கின்றானோ... அவனே நிச்சயம் மனிதன் மாமனிதன் ஆக ஆக்கிட்டு அனைத்தும் யான் அருளிடுவேன் நிச்சயம் தன்னில் கூட!!!
அங்கங்கு அவதாரங்கள் பின் அறிந்தும் கூட... இதைத் தன் கூட வரும் காலத்தில் கூட பின் எடுத்துரைக்கும் பொழுது புரியும்.
புரியும் பின் எம்முடைய ஆசிகள்!!
அனைவரையும் கூட அதிகாலையிலே பின் உங்களை சந்தித்தேன்.
பின் பலமுறையும் உங்களை யான் சந்தித்துள்ளேன்.. பின் இப்பிறவியில் மட்டும் இல்லை!!! நிச்சயம் தன்னில் கூட!!
அனைத்தும் யான் கொடுக்கின்றேன்!!
அனைவருக்கும் பின் எம் ஆசிகள்.. பின் ஆணையாகவே!!
(மண்டல காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து எந்த தவறும் செய்யாமல் வேறு எந்த சிந்தனையும் செய்யாமல் இறைவனை நினைத்துக் கொண்டு இருந்து பக்தியுடன் இருப்பதை வாழ்க்கையில் சபரிமலைக்கு மாலை அணிந்து மண்டல காலம் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தால் நோய்களே இல்லை கஷ்டங்களே இல்லை)
சபரிமலையில் இருக்கும் 18 படிகளும் ஐயப்பனின் 18 அவதாரங்களை குறிக்கும் இதை உணர்ந்து வணங்குதல் வேண்டும்)
சுவாமியே சரணம் ஐயப்பா!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப சுவாமி குறிப்பிடும் ஓலைச்சுவடிகள் பந்தளம் அரண்மனையில் இன்றளவும் அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ஐயப்பன் சுவாமி பயன்படுத்திய வில் வாள் திருவாபரணங்கள்.. உடன் ஐயப்பன் தன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இருக்கின்றது.
ஐயப்பன் நீராடிய நீர் சுனையும் இருக்கின்றது!!
பந்தளம் அரண்மனை பத்தனம்திட்டா சுவாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனையில் அவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. அதை அரண்மனை நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு சுவாமி ஐயப்பன் நீராடிய குளம் இருக்கிறது.
Pandalam Palace is located in Pandalam, Kerala, India. The palace is the ancestral home of the royal family of Pandalam, who are the descendants of the Pandya kings.
Here is the address of Pandalam Palace:
Pandalam Palace,
Pandalam,
Pathanamthitta District,
Kerala, India.
PIN - 689501
Note: The palace is open to visitors and offers guided tours. However, please check the current visiting hours and regulations before planning your visit..
குருநாதர் அகத்திய பெருமான் மறுவாக்கில் வந்து உரைத்த வாக்கு பாகம் இரண்டில் வெளிவரும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Sunday, February 16, 2025
அன்புடன் அகத்தியர்
Sunday, 16 February 2025
சித்தன் அருள் - 1801 - அன்புடன் அகத்தியர் - தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்.. மற்றும் சஞ்சீவி ராய மலை குறித்து குருநாதர் ஆலயத்தின் ரகசியம் மற்றும் அனுமனின் அனுக்கிரகம் பற்றி ஏற்கனவே குருநாதர் வாக்குகள் தந்திருக்கின்றார்.
உயிர் காக்கும் சஞ்சீவினி மூலிகை இருக்கும் மலை இந்த மலை இந்த மலையில் இரவில் தங்கி செல்ல வேண்டும் என்றும் 16/8/2022 ல் குருநாதர் வாக்குகள் கூறியிருந்தார்.
சித்தன் அருள் பதிவு எண் அன்புடன் அகத்தியர் சஞ்சீவிராயன் மலைக்கோயில் 1175 .ல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் குருநாதர் சஞ்சீவிராயன் மலைக்கோயிலில் ஆலயத்திற்கு சென்ற சில அடியவர்களுக்கு தனிநபர் வாக்கில் குருநாதர் வாக்குகள் கூறும் பொழுது சில பொது வாக்குகளையும் சில தெய்வ ரகசியங்களையும் கூறினார். அதன் வாக்குகள் பின் வருமாறு.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!.
அப்பனே நல்விதமாகவே இன்றளவும் கூட அப்பனே நாராயணன் நல்விதமாகவே வந்து அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே ஆசிகள் தந்துவிட்டான் என்பேன் அப்பனே.
(இவ் சஞ்சீவிராயன் மலையில் திருப்பதி ஏழுமலையான் அடிக்கடி வந்து செல்வார்.. என்பதை எல்லாம் குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார்)
ஆசிகள் என்பேன் அப்பனே இப்பொழுது கூட அப்பனே நல்லாசிகள் தந்து தான் கொண்டிருக்கின்றான் அனைவருக்குமே அப்பனே
அப்பனே நிச்சயம் கேட்டதை அள்ளி தருவான் அப்பனே அனுமானும் கூட!!
இதனால் அப்பனே நன் முறைகளாகவே... இன்று பின் வந்திருக்கும் அனைவருக்குமே நல் ஆசிகள் தந்து அவரவர் விருப்பப்படியே அப்பனே இன்னும் அப்பனே சூட்சுமங்கள் அப்பனே பின் கடந்து கடந்து... அவை எவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம்.. அப்பனே பின் அதனால் அவனே ஆசிர்வதித்த பொழுது அப்பனே யான் என்ன சொல்வது??
இதனால் அப்பனே நிச்சயம் விருப்பங்கள் அப்பனே பின் மெதுவாயினும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் நிறைவேறும் என்பேன் அப்பனே... நல்ல விதமாக
சில தடை பின் தாமதங்கள் இருந்தாலும் அப்பனே நல்விதமாகவே மாற்றம் ஏற்படுவது உறுதியப்பா.. எம்முடைய ஆசிகளாலும் கூட... லோபா முத்திரையின் அருளாலும் கூட.
அப்பனே நிச்சயம் நான் முறைகளாகவே.. சில சில வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய மனக்குழப்பங்கள் இருந்தாலும் அப்பனே பின் தூரே... எறிந்து விடுங்கள் என்று கூட அப்பனே இடையிடையே மன குழப்பங்கள்... அப்பனே
இவ்வாறு மன குழப்பங்களாகவே போய்க்கொண்டிருந்தால் அப்பனே... என்ன லாபம்???
அப்பனே அவ் மனக்குழப்பங்களை எப்படி பின் சந்தோசமாக மாற்றுவது என்பதையெல்லாம் அப்பனே பின் சிந்தித்து செயலாற்றி அப்பனே மாற்றி அமைத்தால் அப்பனே நிச்சயம் எவ்வாறு மனக்குழப்பம் வந்தாலும் எவ்வாறு துன்பம் வந்தாலும் அப்பனே நிச்சயம் பின் மாற்றிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.
அதாவது அப்பனே பின் பல வாக்குகளும் யான் உரைத்து விட்டேன் அப்பனே .. முன்னோர்களின் வாக்குப்படியே அப்பனே அதாவது அப்பனே துன்பத்தை துன்பத்தாலே அப்பனே பின் எவை என்று கூட... சமாளிக்கும் திறன் யார் ஒருவன்? பின் அமைத்துக் கொள்கின்றானோ? அவன் சிறந்த அதாவது அப்பனே இவ்வுலகத்தில் சிறந்த அதாவது இவ்வுலகத்தில் சிறந்த ஆளாகவே.. அதாவது மாமனிதனாகவே பின் படையெடுக்கின்றான் அப்பனே.
அதனால் தான் அப்பனே தன்னைத்தானே அப்பனே நல்முறையாக தீட்டிக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
அதற்கு நிச்சயம் துன்பம் என்று அதாவது துன்பம் அவசியமாகின்றது என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே பின் உங்கள் வாழ்க்கை இன்பமாகவே இருந்தால் அப்பனே நிச்சயம் ஒன்றும் ஆகாதப்பா.
அப்பனே நிச்சயம் அவை எதை என்று அறிய அறிய கடைசியில் பார்த்தால்.. பாதாளத்தில் பின் அதாவது அறிந்தும் கூட பாழும் கிணற்றில் பின் விழுந்தால் அப்பனே நிச்சயம் பின் எழுந்திருக்க முடியாதபடி அப்பனே அமைத்துவிடும் என்பேன் அப்பனே இன்பம்.
ஆனால் துன்பம் அப்படி இல்லையப்பா.
அப்பனே மீண்டும் பின் கிணற்றில் விழுந்தாலும்
பின் அவை பிடித்து இவை பிடித்து (கொழு கொம்புகளை பிடித்து) அப்படி எப்படியாவது மேலே வந்து விட முடியுமப்பா!!
அதனால்தான் அப்பனே இறைவனே சில நேரங்களில் துன்பங்கள் கொடுப்பதுண்டு என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட மீண்டும் மீண்டும் துன்பத்தை போக்கு !!துன்பத்தை போக்கு !! என்றெல்லாம் இறைவனிடத்தில் நிச்சயம் சென்றால் எவ்வாறப்பா???
ஆனாலும் சிரிப்பானப்பா இறைவன்!
அவ்வாறு தான் மனிதன் கலியுகத்தில் அப்பனே..
அழிவுகள் நிறைந்த அப்பனே உலகமப்பா அப்பனே இவை.. அறிந்தும் கூட.
இதனால் அப்பனே பின் நிச்சயம் மாற்றங்கள் எண்ணற்ற மாற்றங்கள் உண்டு அப்பனே நன் முறைகளாக... ஆனாலும் அப்பனே பின் பக்தன் அதாவது பின் எதை என்று அறிந்தும் கூட கலியுகத்தில் அப்பனே பின் பொய்கள் மனிதனாகவே அதாவது இன்னும் எதை என்று அறிய அறிய பின் மனக்குழப்பங்களாகவே அதாவது அப்பனே..
எப்படி எல்லாம் குறுக்கு வழியில் செல்லலாம் என்று எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே யோசித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன்.
ஆனால் இறைவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே..
நிச்சயம் அப்பனே நேர்மையான எவை என்று அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் நல் முறைகள் ஆகவே இறைவனை வணங்கி வந்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுமப்பா.
இதனால் அப்பனே பின்
எதை என்று அறிய அறிய அப்பனே பின் நல்விதமாகவே.. புரட்டாதி திங்களில் நல்விதமாக சனி தோறும் ஆஞ்சநேயன் அழகாகவே இங்கு வந்து அனைவருக்கும் அப்பனே பின் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே.
ராமனும் பின் அறிந்தும் கூட சீதா தேவியும் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இன்னும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய... ராம அவதாரமும் அப்பனே எவை என்று அனைத்து அவதாரங்களும் கூட அறிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு அவதாரமாக அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூட அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பின் நாராயணனாக!!(ஏழுமலையான்) அப்பனே ஆசீர்வதிக்கின்றானப்பா!! கலியுகத்தில் அப்பனே!!
நிச்சயம் அப்பனே இதனால் இங்கு பின் சக்திகள் பலம் என்பேன் அப்பனே (சஞ்சீவிராயன் மலை)
ஆனாலும் அப்பனே யார் ஒருவன் அப்பனே.. நன் முறைகளாக இங்கு வந்து வந்து வெற்றிகளும் குவிக்கலாம் அப்பனே.
பின் யார் ஒருவர் தீயவனாக மனதில் எண்ணி அப்பனே பின் அழுக்குகளாக..(தீய எண்ணத்தோடு மனம் அழுக்குகளோடு) இருந்தாலும் அப்பனே... அவர்களுக்கு அடிகள் பலமாக விழுமப்பா!!!
அவ்வளவுதான் அப்பனே
சிலரகசியங்கள் அப்பனே அங்கும் இங்கும் இவ் மலையில் கூட அப்பனே மலையில் உள்ளது
. சில மூலிகைகள் அப்பனே பின் கடந்து கடந்து...அவ் மூலிகைகளே அப்பனே போதுமானதப்பா...
அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அதற்கும் கண்கள்!!!
அதாவது அப்பனே பின் மாடுகளுக்கும்.. அதாவது அறிந்தும் கூட அதாவது பைரவ வாகனங்களுக்கும் அதாவது பின் பைரவன்களுக்கும்..(பைரவர் வாகனம் நாய்களுக்கும்)
நிச்சயம் அவ் ஒளியானது தெரியுமப்பா
அப்பனே சரியாகவே அப்பனே ஒளியானது அப்பனே இங்கு எவை என்று கூட பின் அப்படியே... எப்படி என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இங்கு படுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே!!!
அதாவது பின் ஏற்கனவே அப்பனே பின் பல பின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்பனே நன்முறைகளாகவே... அப்பனே அதாவது ஒரு பக்தன் இங்கு வந்தானப்பா நல்முறையாகவே வேண்டி வேண்டி.
ஆனாலும் அப்பனே நல்முறையாகவே கிடைத்திற்று(கிடைத்தது) என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே.. நிச்சயம் அறிந்தும் கூட பின் எவை என்று அறிய அறிய ஆனாலும்... அனுமானும் இதை வைத்துக்கொள்.. எப்பொழுதும் நீ நிச்சயம் அதாவது பின் அதாவது உயிர் உன்னை விட்டு பிரியாது அறிந்தும் கூட.!!
இதனால் இப்படியே நீ வைத்துக் கொள்!! நிச்சயம்.. இதை எப்பொழுதுமே பின் அதாவது பச்சை நிறத்தில் நிச்சயம் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.. என்பதையெல்லாம். !!
(அனுமன் பக்தனுக்கு பச்சை நிறத்தில் ஒரு வஸ்துவை கொடுத்திருக்கின்றார். அது மரகதம் ஆகவும் இருக்கலாம்.. பச்சை குன்றி மணியாகவும் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகின்றது பச்சை குன்றிமணியை குறித்து குருநாதர் ஏற்கனவே சில தனிநபர் வாக்குகளில் அதன் மகத்துவத்தைப் பற்றி கூறியிருக்கின்றார்)
ஆனாலும் அறிந்தும் கூட இதை அதாவது யாரை நீ தொடுகின்றாயோ நிச்சயம்.. அவர்களெல்லாம் அறிந்தும் கூட அவ் பச்சை நிறமானது நிச்சயம் வெளிச்சம் காட்டி அவர்களையும் வாழ்க்கை தரத்தையும் கூட உயர்த்தும் என்பதை கூட.
அப்பனே அதேபோல் அப்பனே அவ் பக்தனும் கூட.. நல் உள்ளம் கொண்டு பின் அனைவருக்குமே!!! நல்லதை செய்து வந்து!!! நிச்சயம் அறிந்தும் கூட !!
அதாவது பின்.. எவை என்றும் கூட இன்னும் பின் உலகத்தில் கடைசி வரை.. வாழவேண்டுமா??? என்றெல்லாம்...
(பச்சைக் வஸ்து தன்னிடம் இருப்பதால் உயிர் பிரியாது என்று அனுமன் வரம் தந்துவிட்டார்.
ஆனால் அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உயிர் மேல் ஆசை இல்லை!
எதற்காக ?? உலகத்தின் கடைசி நாள் வரை வாழ வேண்டும் என்று உயிர் மீது இருக்கும் ஆசையை கூட அவர் துறந்து விட்டார். அதனால் ஆயுளை நீடிக்கும் அந்த பச்சை ஒளி வீசும் பொருளை இந்த மலையில் ஓரிடத்தில் புதைத்து விட்டார்)
ஆனாலும் இங்கு மலையில் ஓரிடத்தில் புதைத்தானப்பா!! நிச்சயம் அவ் பச்சை!!...
ஆனாலும் பின்.. அவந்தன் வேண்டிக்கொண்டான் நிச்சயம்.. நீ எனக்கு கொடுத்தாய் அனுமானே அறிந்தும் கூட
ஆனாலும் நிச்சயம் பின் இவை தன் பின் யார் கண்களுக்கும் தெரியக்கூடாது... அப்படி தெரிந்தாலும்.. இதை சரியான முறையில் பயன்படுத்தாமல்.. தீய வழிகளில் தீய விளைவுகளுக்காக ஏற்படுத்திக் கொள்வான்.. அதனால் இதை நிச்சயம் தெரியாமல்.. (மறைந்தே இருக்க வேண்டும்)
இங்கு வருபவர்களுக்கெல்லாம் அக் பச்சைக் ஒளியானது.. நிச்சயம் அறிந்தும் கூட பின். நிச்சயம் பின் மனிதர்களுக்கு படுகின்ற பொழுது... நிச்சயம் ஆசிகள் அதுதான்.
அவ் பக்தன் அனுமனிடம்!!!
பின் இங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும்... அவரவர் விருப்பப்படி சில கர்மாக்களை... அகற்றி நிச்சயம் வெற்றிகளை தாருங்கள் அனுமானே!!!!!
என்று வணங்கினான்! என்பதெல்லாம் அப்பனே !!!
இதனால் அப்பனே சில திருத்தலங்கள் உள்ளதப்பா.
நிச்சயம் அப்பனே ஆனாலும் அவை தன் அப்பனே எப்படி செல்ல முடியும்? என்பவை எல்லாம் அப்பனே புண்ணியங்கள் இருந்தால் தான் அப்பனே நிச்சயம் செல்ல முடியுமே தவிர அப்பனே...
பாவங்கள் அப்பனே அப்படியே பின் நோக்கி அழைத்துச் செல்லும். என்பேன் அப்பனே.
புண்ணியங்கள் முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நல்விதமாகவே ஆசிகள் நல்விதமாகவே ஆசிகள் அப்பனே... எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே இன்னும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் மாற்றங்கள் உண்டு ஏற்றங்கள் உண்டு நல்விதமாகவே அப்பனே
ஆலயத்திற்கு வந்திருந்த ஒரு அடியவர் குடும்பத்திற்கு
அப்பனே பின் இன்றளவும் கூட முப்பெரும் தேவியர்களும் கூட அப்பனே உன் இல்லத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே முப்பெரும் தேவிகளும் (துர்கா பரமேஸ்வரி ஸ்ரீ லக்ஷ்மி தாயார் சரஸ்வதி தேவியார்) வந்து ஆசிர்வதித்து அப்பனே நிச்சயம்... மெது மெதுவாக!!! உயர்வடையச் செய்வார்கள் அப்பனே
இதனால் அப்பனே எக் குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே.
மனிதன் என்றாலே பெரும் குறை அப்பா.. அப்பனே கலியுகத்தில் மனிதனால் வாழ முடியாத அப்பா என்பதையெல்லாம் யான் உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே அதை கடந்தும் வாழ வேண்டுமென்றால் அப்பனே நிச்சயம் இறை பலம் அவசியமாகின்றது என்பேன் அப்பனே.
ஆனாலும் இறைபலம் அப்பனே பின் மெதுவாகத்தான் கிடைக்கும் என்பதை கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட செப்புகின்றேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இறை பலத்தை நிச்சயம் அப்பனே பிடித்துக் கொண்டால் போதுமானதப்பா.. இறைவன் வழிகாட்டி விடுவான் அப்பா.. கலியுகத்தில் அப்பனே பின் இறைவன் கொடுப்பதற்கு அப்பனே தயாராகத்தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே.
ஆனால் மனிதனுக்கு கொடுத்து விட்டால் அப்பனே அதை தவறாக பயன்படுத்தி க்கொண்டு கடைசியில் பின் இறைவனே இல்லை என்று சொல்லிவிடுவான் என்பேன் அப்பனே
அதனால் அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு.. அப்பனே என்னுடைய அருளால் இன்னும் இன்னும் அப்பனே மாற்றம் அடைய செய்து அப்பனே நல் விதமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் அதாவது நல்விதமாக அப்பனே.. அம்மையே பின் மந்திரங்களை.. துர்கா தேவியின் மந்திரங்களை செப்பிக் கொண்டே இருங்கள் நன் முறைகளாகவே.
அப்பனே அறிந்தும் கூட இதனால் சில மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே இன்னும் இன்னும் ஏற்றங்கள் தான் உண்டு என்பேன் அப்பனே நல்விதமாகவே.
எதை என்று புரிந்தும் கூட எவை என்று அறிந்தும் கூட ஆனாலும்.. பின் தோல்விகள் இருந்தாலும் வெற்றியை நோக்கி தான் நிச்சயம் உண்டு அறிந்தும் கூட.
நிச்சயம் வெற்றியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே பின் நலன்கள் அப்பனே வெற்றிகள் உண்டு உண்டு.
அப்பனே ஒரு வெற்றியை அதாவது அறிந்தும் கூட ஒரு தேர்வானது அப்பனே அறிந்து அதாவது ஒரு மாணவன் எழுதுகின்றான் அப்பனே.
நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் பின் அறிந்தும் கூட இன்னும் இன்னும் அப்பனே பின் அதிக தேர்ச்சி வெற்றி சதவீதம் எடுக்க வேண்டும் என்றால் அப்பனே முயன்று முயன்று பின் கொண்டாலே ஆனாலும் நிச்சயம் அப்பனே மனக்குழப்பங்கள் தான் வரும் அவந்தனுக்கு.. எவ்வாறு என்பதையெல்லாம்.
ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே நன் முறைகளாகவே இன்னும் வெற்றி பெற வேண்டும் இன்னும் அதிக சதவீதம் எடுத்தால் உயர்ந்து விடலாம் என்பதெல்லாம் அப்பனே..
இதனால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே அதே போலத்தான் அனைத்திலும் கூட அப்பனே.
அவ்வாறு ஒருவன் நிச்சயம் அப்பனே பின் முயன்று முயன்று அப்பனே பின் தோல்வி அடைந்தாலும் அப்பனே முயன்று முயன்று சென்றால் அப்பனே ஒரு நாள்... உச்சிக்கு செல்வான் என்பது மெய்யப்பா!!!
அதை யாரும் உணர்வதில்லையப்பா.
அதனால் அப்பனே இறைவன் தம் தன் வாழ்க்கையை தன்னிடத்திலே ஒப்படைத்து விட்டான்...
ஆனாலும் அப்பனே சரியாக பயன்படுத்துவதும் அப்பனே சரியாக பயன்படுத்தாததும் உங்களிடத்திலே உள்ளது என்பேன் அப்பனே.
அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே.
சரியான முறையில் பயன்படுத்தினால் அப்பனே இறைவன் என்றென்றும் காப்பானப்பா
சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே மீண்டும்!!......??? அறிந்தும் அறிந்தும் அப்பனே
இதனால்தான் அப்பனே பக்திக்குள் பின் உள் நுழைந்து உள் நுழைந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.. ஏமாற்றங்கள் அப்பனே அறிந்தும் கூட..
அதனால் அப்பனே நிச்சயம் கலியுகத்தில் நிச்சயம் அப்பனே ஆஞ்சநேயன் பக்கம் பலமாக உந்தனுக்கு இருக்கும் பொழுது அப்பனே நன் முறைகளாக வெற்றிகள் தரும். நன் முறைகளாக இன்னும் இன்னும் சில குழப்பங்கள் வந்தாலும் சில சில அப்பனே எவை என்று அறிந்தும் கூட.. அறியாமல் வந்தாலும் அப்பனே.. மாற்றங்கள் உறுதியப்பா.. உறுதி!!
அப்பனே இதனால் அறிந்தும் அறிந்தும் கூட பின் நல்விதமாகவே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் செப்பும் பொழுது சில விஷயங்களை கூட அதாவது... ரகசியங்களை அனைவருக்குமே சொல்கின்ற பொழுது.. அதை ஏற்றுக் கொண்டு பின் நடந்து வந்தாலே போதுமானதப்பா.
பின் உண்மைகள் பல பல புலப்படும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இதனால்... நிச்சயம் ஓர் நாள் அரங்க நாதனை அதாவது எதை என்று கூற ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரங்க நாதனை பார்த்துவிட்டு வா அப்பனே
சில தோஷங்கள் விலகும் அறிந்தும் கூட.
இதனால் அப்பனே அவந்தன் அரங்கநாதன் மகிழ்ந்து நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும்.. என்ன வேண்டும் என்று கூட அறிந்தும் கூட இவை தன் நிச்சயம் அப்பனே அங்கு செல்ல வேண்டும்!
அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவருக்குமே ஆசிகள் அப்பனே பின் ஆசிகளப்பா!!!
நிச்சயம் அரங்கனை பார்த்திட்டு வா... அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய... சில விஷயங்களை மாற்றுவான் என்பேன் அப்பனே..
நிச்சயம் அங்கு இருக்கும் அப்பனே அறிந்தும் கூட இன்னும் எதை என்றும் புரிந்தும் கூட... அனுமான் இருக்கின்றானே... அவந்தன் அப்பனே சக்தி மிகுந்தவன்..
எவ்வாறு அங்கு சென்றான் என்பதைல்லாம் எல்லாம் அப்பனே
இங்கு எவ்வாறு வந்தான்?(சஞ்சீவிராயன் மலைக்கோயில்) என்பதையெல்லாம் அப்பனே!!
இன்னும் அப்பனே ஓர் ஊர் இருக்கின்றதே இதற்கு அறிந்தும் கூட மேற்காகவே!!!!! (சஞ்சீவிராயன் மலையிலிருந்து மேற்கு திசையில் அமைந்திருக்கும் ஹம்பி கர்நாடகா)
அங்கு எவ்வாறு சென்றான்? என்பதெல்லாம் அப்பனே
பின் திருமலை திருப்பதிக்கும்... எவ்வாறு என்பதையும் கூட
பின் கன்னியா அப்பனே பின் குமரிக்கும் (சுசீந்திரம் கன்னியாகுமரி) அப்பனே எவ்வாறு என்பதைக் கூட அப்பனே
நான்கு வடிவிலும் (திசைகளிலும்) பார்த்தால் அப்பனே சக்கரம் போன்று சுழன்று அப்பனே
பின் சக்தி அப்பனே மதுரை மாநகரில் அப்பனே சக்கரத்தாழ்வான் திருத்தலம் உண்டப்பா!!!
(பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம்
மதுரை – மேலூர் சாலையில், மதுரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருமோகூர். மூலவர் காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் மோகனவல்லித் தாயார்.
இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் நான்கு கைகளிலும் நான்கு சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது. சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.)
அங்கும் சென்று வந்தால் அப்பனே.. நிச்சயம் அப்பனே உயர்வுகள் உண்டு என்பேன் அப்பனே
அங்கு அரை மணி நேரத்திற்கும் அதிகமாகவே அப்பனே நிச்சயம் தியானங்கள் செய்ய வேண்டும் அப்பனே...
சக்கரத்தாழ்வான் மனம் மகிழ்ந்து அப்பனே நிச்சயம் எவ்வாறு விஷயங்களுக்கு என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தொழில் புரிவோர்களுக்கும் கூட அறிந்தும் கூட உண்மை நிலைமைகளை கூட அப்பனே இன்னும் அங்கு சென்று தரிசித்தாலே மாற்றங்கள் உண்டு.. இதை அனைவருக்குமே செப்பி விட்டேன்.
(நம் குருநாதர் ஏற்கனவே.. நிலம் மற்றும் வீடு சம்பந்தப்பட்டவைகளுக்கு திருச்சி மணச்சநல்லூர் பூமிநாதர் ஆலயத்திற்கும்
நீதிமன்றம் வழக்குகள் நீதி நியாயம் கிடைப்பதற்கு காஞ்சிபுரம் வழக்கறுநாதர் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றுவர ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார்.
அதேபோல் தொழில் புரிவோர் மதுரை திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சென்று தியானங்கள் செய்து வணங்கி வந்தால் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றார் இது அனைவருக்கும் பொதுவான வாக்கு)
அப்பனே நன் முறைகளாகவே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அதாவது இறைவனை அப்பனே நிச்சயம் பிடிப்பது அப்பனே பின் எவை என்று கூட கடினம் தான் என்பேன் கலியுகத்தில் அப்பனே
அவ்வாறு நிச்சயம் இறைவனை பிடிப்பது கடினமாக இருந்தாலும் நீங்கள் பிடித்துக் கொண்டால் அப்பனே வாழ்க்கையில் வெற்றியப்பா!!
ஆனாலும் அப்பனே இறைவன் சோதிப்பான் அப்பா நிச்சயம்.. இவன் எவ்வாறு செய்கின்றான்? என்று பார்ப்போம்? என்று!!
ஆனாலும் அப்பனே மனிதன் தோல்வியில்.. வாழ்க்கை என்பேன் அப்பனே.
அதாவது அப்பனே பின் இவ்வளவு வணங்கினேனே.. ஒன்றுமே பின் நடக்கவில்லையே.. என்று நினைக்கும் பொழுது!!
அப்பொழுதுதான் அப்பனே...
இறைவன் கூட.. இவன் எதற்கும் உருப்பட மாட்டான் என்பதை எல்லாம்... அப்பனே!!
(சிறிது காலம் பக்தியை செலுத்தி விட்டு சோதனை காலத்தில் சிலர் வெறுத்து இறைவனை இவ்வாறு வணங்கினேன் அவ்வாறு வணங்கினேன் எத்தனை ஆலயங்களுக்கு சென்றேன் இறைவன் ஒன்றுமே செய்யவில்லை என்று நினைக்கும் பொழுது....
இறைவன்... இந்த சோதனைகளையே நீ தாங்கவில்லை!! எங்கு நீ உருப்பட போகின்றாய் என்று நினைப்பார்)
நிச்சயம் முயன்று இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்று.. இருந்தால் இறைவன் அப்பனே அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே.
அனைவருக்குமே ஆசிகள் கொடுத்து விட்டான் அப்பனே... அவரவர் விருப்பப்படி நிச்சயம்.. அப்பனே பின் மெதுவாக நடந்தாலும் வெற்றிகள் உண்டு அனைவருக்குமே அப்பனே நிச்சயம் அப்பனே..
ஆசிகள்!! ஆசிகளப்பா!!
அப்பனே இங்கு வந்து சென்று கொண்டிருந்தாலே நிச்சயம் மாற்றங்கள் அப்பனே பின் பெரிய அளவில் உருவாகும் அப்பா.
ஆசிகள் ஆசிகள் மீண்டும் செப்புகின்றேன் ஆசிகள் ஆசிகள்.
ஒரு அடியவர் அவருக்கு திருமண தடைக்காக குருநாதர் இடம் தீர்வு கேட்ட பொழுது!!!
அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய அப்பனே பின் புரியாமல் இருந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட உன் முன்னோர்கள் அப்பனே.. பின் எவை என்று அறிந்தும் கூட... பின் அதாவது பின் மாணிக்கத்தை பின் நிச்சயம் காத்துக் கொண்டிருந்த அதாவது நாராயணனின் அறிந்தும் கூட பின் நிச்சயம் இதை என்று புரியாமல் கூட அறிந்தும் கூட இதனால் அப்பனே அதாவது நிச்சயம் அவ் மாணிக்கத்தை பின் காத்துக் கொண்டிருந்த பொழுது... அப்பனே பின் அப் பாம்பை.. அடித்து விட்டு!!!........
எதை என்று புரியாமல் கூட.. சில தோஷங்கள் உந்தனக்கு ராகு கேதுக்களால் அப்பனே!!
(திருமணத்தடை குறித்து கேட்ட அடியவரின் முன்னோர்கள் பெருமாள் கோயிலில்.. நாராயணனின் பொக்கிஷங்களை அதாவது மாணிக்கத்தை காத்துக் கொண்டிருந்த.. சர்பத்தை அடித்துக் கொன்று விட்டார்கள்.. அங்க தோஷம் ராகு கேது தோஷமாக மாறி இவரை தொற்றிக்கொண்டு இருக்கின்றது ஏற்கனவே நம் குருநாதர் பூமிக்கு அடியில் இருக்கும் ஆலயங்களில் பொக்கிஷங்களை சர்ப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது என்று பல வாக்குகளில் கூறியிருக்கின்றார் உதாரணத்திற்கு.... பீமேஸ்வரர் ஆலய வாக்கு சித்தன் அருள் 1678. வன்னிவேடு புவனேஸ்வரி அகத்தீஸ்வரர் ஆலய வாக்கு சித்தன் அருள் 1164. மற்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் நிலவறை பொக்கிஷம் குறித்த கேள்வி பதில் சித்தன் அருள் கேள்வி பதில் வாக்குகள் )
ராகு கேதுக்களால் அப்பனே இதனால் நிச்சயம் அப்பனே இங்கு வந்து சென்று கொண்டே இரு அப்பனே நிச்சயம் அனுமானே உந்தனுக்கு உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே.. ஒருமுறை காளாத்திரி (காளகஸ்தி) நாதனை சென்று தரிசித்து வா!!
அப்பனே எதை என்று புரிய புரிய இதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய...
""பாம்பின் காலம்!! அறிந்தும் கூட....(ராகு கேது தோஷம்)
(அந்த அடியவர் பல ஜோதிடர்கள் கூறியபடி ராகு கேது தோஷத்திற்காக பல பரிகாரங்களை செய்து ஒன்றும் நடக்கவில்லை என்று குருநாதரிடம் கூறினார்)
அதனால் அப்பனே நிச்சயம் பின் முழு முயற்சியோடு அப்பனே ஆஞ்சநேயனை அப்பனே வணங்கிட்டே வா... அப்பனே நிச்சயம் எதை என்று.. அறிய அறிய இதற்கு எப்பரிகாரங்களும் செல்லாதப்பா!!!
ஆனாலும் அப்பனே இறைவன் வழி விட்டு விடுவான்.
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய இவை தான் என்பேன் அப்பனே ராகு கேதுக்களால் தான் பிரச்சனை என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின் அவற்றிற்கு எவ்வளவு பின் எதை என்று அறிய அறிய.. அப்பனே நிச்சயம் பரிகாரங்கள் செய்தாலும்.. அப்பனே பின் செல்லாது என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே பின் ன் அனுமானே துணை. இங்கு வந்து சென்று கொண்டே இரு கவலைகள் இல்லை.
அப்பனே இன்னும் இன்னும் யானும் பரிகாரங்கள் உந்தனுக்கு சொன்னாலும் வெறுத்து விடுவாய் நீ.
அப்பனே நன் முறைகளாகவே ஆசிகள் உண்டு என்பேன் அப்பனே.. முன்னோர்களே அப்பனே பின் அறிந்தும் கூட.. எவை என்று புரிய அப்பனே நிச்சயம்.. அவர்களும் கூட அப்பனே நல்முறைகளாகவே.. அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் தவறுகள் செய்துவிட்டோம் என்று எண்ணி.. அவர்களும் வருந்தி!!! அவர்கள்.. ஆன்மா அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கின்றது அப்பனே.
நிச்சயம் விடிவெள்ளி உண்டு!!!
அப்பனே நலன்களே ஏற்படும் அப்பா கவலைகள் விடு!! கவலைகள் விடு!!
ஆசிகள் ஆசிகளப்பா!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
சஞ்சீவிராயன் மலைக்கோயில். சஞ்சீவிராயபுரம். தித்தியோப்பன ஹள்ளி ஊராட்சி. தம்புரான் மலை அடிவாரம். பாப்பாரபட்டி. பென்னாகரம் தாலுகா. தர்மபுரி மாவட்டம் 636809.
சஞ்சீவிராயன் மலைக்கோயில் தர்மபுரி இரயில் நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாலக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Friday, February 7, 2025
அன்புடன் அகத்தியர் ❤️
Tuesday, 4 February 2025
சித்தன் அருள் - 1794 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் அழுக்காணி சித்தர்!
29/1/2025 மௌனி அமாவாசை கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் அழுக்காணி சித்தர் ஈசனை தொழுது ஆடி பாடி உரைத்த வாக்கு.
உருண்டையை உருட்டுகின்ற ஈசா!! போற்றி!!
(பூமி பந்தை சுழல வைத்து பிரம்மாண்டத்தை ஆளுகின்ற ஈசா!!போற்றி)
பணிந்து செப்புகின்றேன் அழுக்காணி!!!
நின்று நின்று கும்மியடி!!!
கும்மியடி பெண்ணே கும்மியடி நின்று கும்மியடி!!
ஆனந்தத்தில் கும்மியடி!! வைகுண்ட நாதனை கண்டு விட்டோம் என்று கும்மியடி!!!
கும்மியடி!! கும்மியடி!!
கருணை வடிவானவனை கண்டுபிடித்தோம் என்று கும்மியடி!!
கும்மியடி !! கும்மியடி!! ஆனந்தத்தில் நின்று இங்கு கும்மியடி!!!
வருவோருக்கெல்லாம் ஆசிகள் தந்து ஈசனின் இன்னும் பரிபூரண ஆசிகள் தந்து பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் கும்மியடி!! கும்மியடி!! பெண்ணே!! பெண்ணே!!
ஆனந்தம்!!! ஆனந்தம்!!
சித்தர்கள் ஆனந்தம்!! ரிஷிகள் ஆனந்தம்!!
முனிவர்கள் ஆனந்தம்!!
தேவாதி தேவர்கள் ஆனந்தம்!!
இந்திரனுக்கும் இந்திரனுக்கும் ஆனந்தம் ஆனந்தம் கும்மியடி தம்மில் கும்மியடி!! தம்மில் கும்மியடி!!
எந்த ரூபத்தில் வந்தாலும் தம்மில் கும்மியடி!!! மனிதன் வடிவத்தில் வந்து கும்மியடி!!
ஆனந்தக் கண்ணீரில் நனைகின்றோம் சித்தர்கள் யாங்கள் கும்மியடி தம்மில் கும்மியடி!!!
உலகத்தில் நின்று காத்தருளும் கும்மியடி!!! இணைந்து இன்னும் வாழ்க்கையில் பின்னும் வெற்றிகள் தரும் ஈசனாரை பார்த்து கும்மியடி!!!!
கும்மியடி !! கும்மியடி!! தேவாதி தேவர்களும் இங்கு வந்து ஈசனை தேடி தேடி ஆசிகள் பெற்று!!!
கும்மியடி!! கும்மியடி!!
மனிதனே சோம்பேறித்தனம் பட்டு இருந்து அங்கே எப்படி செல்வோம்??? என்று!!
கும்மியடி!! கும்மியடி!!
இந்திரனுக்கும் மேலானவர்கள் எவர்? என்று தெரிந்து கொள்ள கும்மியடி!!
சித்தர்கள் யாங்கள் அனைவரும் இங்கு வந்து சந்தோஷத்துடன் களித்தோம்!!!
இறைவனையும் கண்டோம் கண்டோம்!! தெளிந்தோம்!! தெளிந்தோம்!!
இறைவனை யார் யார் என்று மனிதனுக்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லையே.
கும்மியடி! தம்மில் கும்மியடி!
அனைவரும் இணைந்து பின் கும்மியடி!!
அடி என்று இங்கே என்று எதனை அடி? கும்மியடி என்று யான் சொன்னேனே!!
அனைத்திலும் கும்மியடி!!
அணிந்து உள்ளம் கொண்டவருக்கும் தீய எண்ணங்கள் நீக்கும் திறன் கொண்டவருக்கும் இவ் கங்கை நதியில் நின்று கும்மியடி!!!
கும்மியடி!! கும்மியடி!! ஆனந்த கண்ணீரில் கும்மியடி!!!
பற்று அற்று அற்றவுடன்.. பற்றி நின்று கும்மியடி!!
இணைந்த கைகளால் கும்மியடி!!!
ஊர்ந்த கைகளால் கும்மியடி!!! என்றும் இணைந்து கும்மியடி!!!
பாவங்களை போக்குபவனை கும்மியடி!!
கும்மியடி கும்மியடி!!
புண்ணியங்கள் தரட்டும் கும்மியடி!!!
ஈசனாரும் பார்வதி தேவியும் நின்றிட்டு அழகாக அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து பாவத்தை நீக்கியும்!!!
சிலர் பின் கர்மத்தை அறிந்தும் கூட....
பின் புண்ணியத்தை புகுத்தியும் கும்மியடி!!
கும்மியடி!!
சிலர் பின் இறப்பதற்காகவே இங்கே வந்து இறக்கிறோம் என்று பின் நீரில் அப்படியே போயிட்டவர்களையும் கூட பின் ஈசன் பின் கட்டிக் கொண்டு கொடுத்தான் கும்மியடி!!!
மனிதருக்கு இன்னும் புரியவில்லையே!!!
ஆனந்தக் கண்ணீரில் யாங்கள் நனைகின்றோம்
கும்மியடி!!!
மனிதன் பின் இறைவன் யார்? என்று புரியாத வரை சந்தோஷம் இல்லை கும்மியடி!!!
சந்தோஷம் இல்லை கும்மியடி!!! சந்தோசம் இல்லை கும்மியடி!!
ஏன் அறிந்தும் கூட துன்பம் வருவது எதனால் என்று அறிய முடியாததை கும்மியடி...
அறிந்த பின்பு உணர்ந்த பின்பு இறைவன் என்று யாரென்று தெரிந்து கொண்டு பின் பின் துன்பமே இல்லை என்று கும்மியடி!!!
கும்மியடி!! கும்மியடி!!
ஆனந்தம்!; ஆனந்தம்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Monday, February 3, 2025
அன்புடன் அகத்தியர்
Monday, 3 February 2025
சித்தன் அருள் - 1793 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் சிவவாக்கியர் சித்தர் வாக்கு!
28/1/2025 கும்பமேளாவில் சிவவாக்கியர் சித்தர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திரிவேணி சங்கமம் பிரயக்ராஜ் உத்தர் பிரதேசம்.
ஆதிக்கு ஆதியான ஆதி குருவை நினைத்து மகிழ்வுடனே வாக்கியன் ஈகின்றேன்.
மண்ணில் இந்த ஈசனை துதித்து துதித்து வழிபடு!!
மண்ணில் இந்த ஈசனை துதித்து துதித்து வழிபடு!!
எத்துன்பம் ஆயினும் வந்தாலும் துதித்து துதித்து வழிபடு!!!
எத்துன்பம் வந்தாலும் துதித்து துதித்து அன்புடனே பணிந்திடு!!!
ஈசனே!! இல்லையென்றால் இவ்வுலகில் ஏதுமில்லை அறியேனே...
ஈசன் இல்லையென்றால் இவ்வுலகத்தில் ஏதும் இல்லையடி!!!
ஈசனை நினைத்து நினைத்து வாழ்ந்தோர் கோடி கோடி!!!
பின் துன்பம் ஆயினும் கடைசியில் இன்பம் வருவதே சிறப்பு!!!
ஈசனே உன் பாதம் தொழுதேனே...!!! தொழுதே பல தவங்கள் செய்தேனே!!!!!!.
கடைசியில் நான் யார்? என்று உணர்வதற்கு ஆள் இல்லையே !!!
உனை நினைத்து நினைத்து பின் வந்தாலும் !!!......
கடைசியில் என்னில் நீ பாதி என்றவனே!!!
மண்ணில் இந்த உலகத்தையே படைத்து படைத்து பின் காக்கின்றவனே!!!
இருளிலும் முதுமையிலும் கூட பின் வணங்கியவர் எல்லாம் நிச்சயம் பூந்து அழி தன்னில் கூட.....!!!
அழிவுகாலம் என்ற போதிலும் நிச்சயம் தன்னில் பின் அழகாக காத்து நிற்கும் பின் சித்தனே!!!
சிவ சித்தனே!!!
எங்கெங்கோ? தேடினும் யாங்கள் வந்து பின் அறிந்தும் கூட உன்னை அறிய முடியவில்லையே !!! ஈசனே!!!
அறிய முடியவில்லை ஈசனே!!
பல தத்துவங்கள்!!! பல சாத்திரங்கள்.. பல பல பின் சக்திகள் இருந்தாலும்!!!!
ஈசனே!! உன்னையே தேடி தேடி உங்களை நிச்சயம் எங்களால் உந்தனை கண்டு கொள்ள முடியவில்லையே!!! ஈசனே !!!
ஈசனே !! ஈசனே!! ஈசனே!! எம்மை வந்து அழகாக ஆட்கொள்ளும் ஈசனே !!!
பின் ஈசன் எங்கு இருக்கின்றான்? என்று பல தவங்கள் செய்து செய்து நிச்சயம் தன்னில் கூட முடியவில்லையே!!!
அழுது கொண்டே!!யான் அன்பான ஈசனே!!! எங்கு இருக்கின்றாய் நீ? என்று கூறுகின்ற பொழுது..!!
கண்ணீரில் ஆழ்ந்து ஆழ்ந்து... ஆனந்தக் கண்ணீரில் இருக்கின்ற பொழுது..
உடனடியாக வந்து நீயும் என்னுள் பாதி என்று சொன்னவனே!!!
அப்படித்தான் சித்தர்கள் அனைவரையும் அணைத்து கொண்டவனே!!!
முதல் சித்தனே!!!
உலகத்தின் நாயகனே!!!
பின் ஊழிக்காலம் என்ற போதிலும் மனிதனால் அறிய முடியவில்லையே
ஈசன் யார் என்று!!!
அடி முடி காணாத அண்ணாமலையில் கூட...
இங்கு பின் ருத்ராட்சங்கள் அணிந்தாலும்.. நமச்சிவாயா!! என்று அழைத்தாலும் உன்னை அறிந்து கொள்ள முடியவில்லையே!!! மனிதன் அறிந்து கொள்ள முடியவில்லையே!!!
அதனால் பின் கஷ்டங்கள் வந்து வந்து எவை என்று அறியாமல் இருந்தாலும் இறைவன் என்று இல்லை என்று சொல்கின்றானே!!! சொல்கின்றானே!!!
அனைத்தும் அறிய முடியவில்லையே மனிதனால்!!
எப்பிறப்பு பிறப்பு எடுத்தாலும்!!! எதற்காக? பிறப்பு என்று அறிய முடியாத போதிலும்!!
உனை எப்படி உணர்வார்??? சிவபெருமானே!!
ஆனந்த சந்தோஷத்தில் யாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோமே!!!
வந்து உள்ளோமே!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்??? இதுபோல் வரும் என்று தெரியவில்லையே!!! தெரியவில்லையே!!!
அனைத்தும் சித்தர்கள் உணர்ந்தாயினும் கூட பின் !!....
அனைத்தும் ஈசன் என்று!!!
யாங்கள் சொல்வோமே!!
யாங்கள் கடைசி வரை சொல்வோமே!!
ஏனென்றால் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி ஈசனே!!!! ஈசனே!!!
அதனால் வந்து வந்து பின் எத்தனை உனை தன் எத்தனை உனை தன் அபிஷேகங்கள் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும் உனையே அறிந்து கொள்ள முடியவில்லையே!! சிவபெருமானே!!
என்னில் பாதி உன்னில் பாதி இருப்பவனே!!
இருந்து கொண்டும் பின் இயக்குபவனே!!
அன்னையே!! பராசக்தி ஆதி பராசக்தியே!!
உமை அம்மையே!! உமை அம்மையே!!!
பல ரூபங்கள் எடுத்தாலும் எந்தன் ஈசன் ஒருவனே!!
நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!!!
நமச்சிவாயனே!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அன்புடன் அகத்தியர்
Sunday, 2 February 2025
சித்தன் அருள் - 1792 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் கமலமுனி சித்தர்!
28/1/2025அன்று கும்பமேளாவில் கமலமுனி சித்தர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். நாகேஸ்வர் காட் திரிவேணி சங்கமம் பிரயக்ராஜ் உத்தர் பிரதேசம்.
பரப்பினை ஆளுகின்ற இறைவா போற்றி!!!!
(பரப்பு =புவிப்பரப்பு.)
போற்றியே நின் தாள்
பணிந்தேனே கமல முனியே!!
அன்றியென்றும் இன்றியென்றும் ஓத!!
ஓதாவிடிலும் தன்னை நிலைத்திருக்கும் ஈசா!!
(இருக்கின்றது என்றாலும் இல்லை என்றாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் என்றும் நிலைத்திருக்கும் ஈசனே)
ஈசனே உனை பணிந்து நின்றேனே!!
நின்றேனே உனைப்பணிந்து நின்றேனே!!
அனைத்து சித்தர்களும் வந்து உனை பார்க்க!!
கோடி கோடியாய் தவங்களை மேற்கொண்டோமே!!!
மேற்கொண்டோமே! ஈசனே! ஈசனே! எனை ஆண்ட ஈசனே!!
அன்பனே!! ஈசனே!!
கருணையனே ஈசனே!!
நூதனே!!! மூலனே!!
ஈசனே! ஈசனே! பார்வதி நேசனே!!
நேசனே சிவகாமியின் புதல்வனே!! புதல்வனே!! இன்றியென்று என்றியென்று உண்மைதனை உரைத்த இறைவா!!!
நின் தாளை பணிந்தோமே!!
எப்பொழுதும் உனையே நம்பியே யாங்களும் இருந்தோமே!! இன்று
அன்றின்று இன்றியென்று எவ்வாறென்று மனிதன் தெரியாமல் போனால் இவை தன் உணர்ந்திருக்க நின்றேனே.
நின்றேனே!! உன்னை காண கோடான கோடி ஜென்மங்கள் எடுத்து இங்கு வந்தேனே.
வந்தேனே முழு முதற்கடவுளே. முழுமுதற் இறைவனே நீயே என்று உணர்ந்த பிறகு என்ன வேண்டும்??? எந்தனுக்கு!! கூறு!!
இவைதன் தனை உணர்ந்து விட்டால் இங்கு நியாயங்கள் என்று பேசும் இறைவா!!
இறைவா!!! நீயின்றியென்று உலகத்தில் அசைவேது??? இறைவா!!!
ஈசனே!!! ஈசனே நன்று என்று இருந்து உனைக்காண ஓடோடி யாங்கள் மக்கள் மூலமே வந்து வந்து தொழுதோமே!!
கோடி கோடி பிறப்பு எடுத்து உனைதனை பின் உணர முடியாமல் பின் போனதே!!!
அன்பான ஈசனே ஈசனே இன்னும் யாங்களே தெளிவடையாத போதிலும் இல்லையே!!! மக்கள் எப்படி தெளிவடைவார்கள்?? என்று நினைத்தேனே!!!
ஈசனே ஈசனே பார்வதி நேசனே... எமையாளும்.. நின்று தொழுது இங்கு பின் அழகாக நதியில் ஓடும் பின் அனைத்து பாவங்கள் சுமந்து பின்.. அன்பான ஈசனே!!!!
அழகான ஈசனே!! இளைஞனே!!!
உண்மை பொருள் என்று யாருக்கும் தெரியாத ஈசனே!!
உண்மை பொருள் என்று யாருக்கும் தெரியாத ஈசனே
அன்பனே நீயின்றி என்று எப்பொருள் யார்? யார்? உணர்ந்து நின்றென்று
கண்டென்று உற்றார் என்று இருந்த போதிலும்...!?!?!?
பாவம் என்ற!!!.. பின் அதிலிருந்து தப்ப முடியவில்லையே மனிதன்.
அவை தனும் கூட உணர்ந்து உலகத்திற்கு அப்பாற்பட்டவனாகவே விளங்கும் என் ஈசனே!! மனதில் குடிகொள்ளும் ஈசனே
உனையே நம்பி நம்பி யாங்கள் தவங்கள் புரிந்து புரிந்து அனைவருக்கும் தம் தன் பின் தன்பால் பின் என்னென்ன நினைத்துள்ளோம் என்று பின் அனைத்தும் கொடுத்திட்ட ஈசனே!!!
ஈசனே உன்மேல் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் அன்பை செலுத்துவார்... நீங்களும் என்னைப்போல் இருப்பீர்களாக என்று உத்தரவு கொடுத்த ஈசனே!!
ஈசனே அன்பு மிகுந்த கருணை மிகுந்த ஈசனே
மக்களுக்கு இன்னும் புரியவில்லையே !! தெரியவில்லையே!!
ஈசன் என்று யார்? என்று பின் புரியவில்லையே கோடி கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் ஈசன் என்று யார் ? என்று உணர்ந்து கொள்ள ஆளில்லையே!! இவ்வுலகத்திலே!!!
(ஈசன் நாமத்தை) பெயரும் சொல்லலாம் பின் அவனையும் தொழலாம் பின் பாடல்கள் பாடலாம்
ஆனாலும் ஈசனை கண்டு உணர ஆள் இல்லையே!!!
ஆனாலும் ஈசனை கண்டுணர்ந்த ஆள் இல்லையே!!!
ஏன் இந்த பிறவி என்று யோசிக்கின்ற நேரத்திற்குள் பின் முடிவடைகின்றதே பின் உயிரும் கூட...கூட
உயிரை எப்பொழுது தானம் கொடுத்தீர்களால் அப்பொழுதே அனைத்தும் தந்திட்ட ஈசா!!
ஈசனே சிவகாமி அன்பு அழகான முருகனே இருந்து இழந்து பின் நிற்கின்ற பின் இழப்பினும் பின் கணபதியும் இவர்களை பிரித்திட்ட ஈசா!!
(ஏகன் அனேகனாக அனைத்து தெய்வங்களாக பிரிந்து அவை மீண்டும் ஒன்றே ஈசனே)
பிரித்த பொழுதும் இவர்களும் பார்க்கும் பொழுது... இவர்களும் ஒன்று என்று மக்களுக்கு பின் தெரியவில்லையே!!!
இவை தனும் உணர்ந்து பின் முருகனும் பின் கணபதியும் மணிகண்டனும் மூவரும் சேர்ந்து ஒன்றென்று மக்களுக்கு புரியவில்லையே!!
(கணபதி முருகன் ஐயப்பன் மூவரும் ஒருவரே)
இவை தனை கூட எப்பொழுது ?மனிதன் பின் புரிகின்றானோ? அப்பொழுதுதான் உயர்வுகள் கிட்டுமே தவிர!!
பின்பு என்ன ஏது? என்று பின் பின் எங்கு சென்றாலும் உண்மை நிலை தெரியவில்லையே ஈசனே !!!
ஈசனே அன்பு அன்பு (அன்பே சிவம் ) எங்கு என்று பின் அறிந்தும் அறிந்தும் ஓடுகின்ற ரிஷிகளும் கூட இன்றைய நாளில் உனை காண ஓடோடி வந்து ஓடோடி வந்து பின் தொழுகின்றார் தொழுகின்றார்.
பின் ஆனாலும் மக்கள் பின் மட்ட புத்தியில் இருந்து கொண்டு ஏனென்று இறைவன்? எதற்காக இறைவன்? எதற்காக இறைவன்?என்று சிந்தித்த பொழுது வாழ்க்கையும் முடிகின்றது..
வாழ்க்கையும் தோல்வியில் முடிந்து மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து என்ன லாபம்??
மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து என்ன லாபம்??
அறிந்தும் பின் அறியாமலும் பிறந்த பிறப்பை பின் மோட்சம் அளித்திடும் இறைவா
மோட்சம் அளித்திடும் இறைவா!! உனை மனதில் தாங்கியே யாங்கள் நின்றின்று அறிந்தோமே
நின்று இன்று அறிந்தோமே.
மனிதனே ஒரு சாபக்கேடு!!!
இதில் தன் இறைவனை பின் எப்படி உணர்வான்? என்று தெரியவில்லையே ஈசா!!!
தெரியவில்லையே ஈசா!!!
கலியுகத்தில் அழிவுகள் மிச்சமாகின்ற பொழுது எப்படி மனிதன் எப்படி வாழ்வான்?? ஈசா!!
ஆணும் பெண்ணும் எப்பொழுது ஒருவராக ஒருவரே என்று (அனைவரும் சமம் என்று) எப்பொழுது மனிதன் நினைப்பான்?? இறைவா!!!
அப்பொழுதுதான் நீயும் கூட பின் கருணை வடிவாக வந்து பாவத்தை தொலைப்பாயே!!!
முருகா!! கணபதியே மணிகண்டனே அறிந்தும் கூட பைரவனே அனைத்தும் நீயே நமச்சிவாயனே
அன்பு எங்கு? அங்கு !! குடியிருக்கும் கருணை வடிவான ஈசா!!!
அருவும் உருவும் சொரூபமும் இல்லாதவனே!!
ஆதி உலகை படைத்தவனே ஈசா!!
அறிந்தும் அறிந்தும் மனிதனுக்கு இன்னும் ஏன் பின் கெட்ட குணங்கள் இன்னும் அழிவுக்கு செல்கின்ற மனிதா!!
எப்பொழுது இறைவனை காண்பாய் ?? மனிதா!!
எத்தனை பூஜைகள் செய்தாலும் எத்தனை தர்மங்கள் தானங்கள் தான தர்மங்கள் செய்தாலும் அறியவில்லையே ஈசனை!!
மனிதன் அறியவில்லையே ஈசனை!!
எப்பொழுது அறிவாய்??
என்று இருந்தபோதிலும் அனைத்தும் கொடுத்திட்டும் ஈசா!!!
யானே படைத்தேனே இங்கே இருக்கின்றேனே என்று மனிதனுக்கு உரைக்கின்ற போதிலும்!!!
உணராத பைத்தியக்கார!! மனிதா!! உணராத பைத்தியக்காரனே மனிதா!!
அனைத்தும் தவறுகள் நீயும் செய்திட்டு மீண்டும் இறைவனை வந்தடைந்து என்னவோ? புரியும் மனிதா!
என்னவோ? புரியும் மனிதா!
ஈசனை அழகாக காணலாம்!!
ஆனாலும் மனிதனிடத்தில் பின் புத்திகள் இல்லையே!!
அறிந்தும் உண்மைதனை எடுத்து அழகாக யாங்கள் இங்கு ஈசனை உனை ஓடோடி வந்து காண்கின்ற நேரத்தில்... காண்கின்ற நேரத்தில் ஆனந்தமாய் இங்கு யான் பாடுகின்றேனே சிவபெருமானே!!
அனைத்திலும் நீயே!!
அனைத்தும் உனதென்று இருந்து
அனைத்து உலகையும் காப்பாய் அறிவாய்!!
எத்தனை உலகங்கள் இருக்கின்றது? என்று மனிதனுக்கு எப்பொழுது தெரியும் ? ஈசனே!!
இவையெல்லாம் தெரிந்த பிறகுதான் மோட்சம் அடைவான் மனிதன்.. மோட்சம் அடைவானே மனிதன்.
அப்படி இல்லை என்றால் மோட்சமும் கிடைக்காது முக்தியும் கிடைக்காது சந்தோசம் கிடைக்காது சிவபெருமானே சந்தோசம் கிடைக்காது சிவபெருமானே!!
அனைத்தும் அறிந்து உலகத்திற்கு நீயும் எம் இறைவா!!!
எம் இறைவனே!!! உனை தேடி இங்கு வந்தேனே உம்மை தேடி இங்கு வந்தோமே!!
அழகென்றவனே அமுதென்றவனே
கருணை என்றவனே
பாசம் என்றவனே
பாசம் என்றவனே எங்கும் நிறைந்தோர்க்கு இறைவா !!!
அனைத்தும் கொடுத்தாய்! கொடுத்தருள்வாய்!!
மனிதன் இன்னும் சாபங்களில் இருந்து தப்பிக்க முடியவில்லையே சிவ பெருமானே!! தப்பிக்க முடியவில்லை சிவபெருமானே!!
பணத்தின் மீதும் மோகம் கொண்டும் பின் பெண்ணின் மீதும் மோகம் கொண்டும் பின் என்னென்ன மீதோ?? மோகம் கொண்டும்!!..... மனிதன் இறைவனை அறிந்தில்லை ஈசனே!!! மனிதன் இறைவனை அறியவில்லை ஈசனே!!
இப்படி இருந்தும் ஈசன் எந்தனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே??? என்று புலம்பும் மனிதனே!! கேடுகெட்ட மனிதனே புலம்பும் மனிதனே!! கேடுகெட்ட மனிதனே!!
உண்மை பொருள் ஏது என்று தெரியாமல் அலைந்தாலும் திரிந்தாலும் ஒன்றும் கிட்டாது மனிதா!!! ஒன்றும் கிட்டாது மனிதா!!!
ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Subscribe to:
Posts (Atom)