Friday, January 24, 2025

அகத்திய பெருமானின் விளக்கம்

பூமிக்கு மேலே இருக்கும் கிரகங்களில் எல்லாம் வேற்று கிரக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் புண்ணியங்கள் அடிப்படையில் மேலே சந்திரனிலும் மற்ற கிரகங்களிலும் மேலே லோகங்கள் இருக்கின்றது அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே பல வாக்குகள் தந்திருந்தாலும்... சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் விநாயகர் உருவம் போன்று ஒரு புகைப்படம் தெரிந்தது அருகிலேயே கற்களால் ஆன ஆலயம் போன்றும் இருந்தது இது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இதன் உண்மை தன்மையை குறித்து குருநாதரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட முறையில் கேள்வியாக கேட்ட பொழுது அப்பனே மேலோகத்தில் கிரகங்களில் எல்லாம் சித்திரக்குள்ளர்கள் ஞானிகள் ரிஷிகள் அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே சந்திரன் செவ்வாய் அங்கும் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே அங்கு திருத்தலங்கள் இருக்கின்றது அதாவது கிரகங்களில் . ஆனால் புண்ணிய நதிகள் அங்கு இல்லை . அதனால் கீழே இங்கு வந்து மானசரோவர் கங்கோத்திரி காசி கங்கா காவேரி தாமிரபரணி புஷ்கர் புனித ஏரி நர்மதா தபதி சிந்து மற்றும் புனித நதிகள் அனைத்திலும் நீராடி செல்வார்கள் பிரம்ம முகூர்த்தத்தில்...

No comments: