Friday, January 24, 2025

அன்புடன் அகத்தியர் - புடா புஷ்கர் வாக்கு!

Friday, 24 January 2025 சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா. 8/1/2025 அன்று திருமூலர் சித்தர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பனன் இந்தோனேஷியா. பாரெங்கும் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் இறைவா போற்றி!!! போற்றியே நின் தாள் பணிந்து பின் பரப்புகின்றேன் மூலனவனே!!! நமச்சிவாய! நமச்சிவாய!! நமச்சிவாயனே!!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!! அல்லலன்றி போகும்போது உன்னையன்றி யாரும் இல்லை நமச்சிவாயனே!! அன்பு என்ற சொல்லுக்கு அடைக்கலமானவனே!!! உண்மைப் பொருளுக்கு விளக்கமானவனே!! துயரம் துன்பம் போக்குபவனே நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!! அன்பு கருணை நிறைந்தவனே நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!! அன்பு தன்னில் காட்டி தன்னை அணைத்துக்கொள்ளும் நமச்சிவாயனே!!! இருளை நீக்கி ஒளியை புகுத்தும் நமச்சிவாயனே உலகத்தை காத்தருளும் நமச்சிவாயனே துன்பம் அதை போக்கி நின்று இன்பத்தை அளிக்கும் நமச்சிவாயனே!! அன்பு உள்ளம் கொண்டவனே நமச்சிவாயனே ஊழி எங்கும் நின்றபோதிலும் நமச்சிவாயனே இன்பம் துன்பம் யாவையும் நமச்சிவாயனே இன்பத்தை அளிப்பவனே நமச்சிவாயனே துன்பத்தை அழித்து பின் இன்பத்தை கூட்டிடும் நமச்சிவாயனே ஆறு எங்கும் ஏழு எங்கும் எட்டு எங்கும் நவ என்பது என்னவென்று புரிந்த தந்தையே புரிந்த பொழுதும் மக்களுக்கு புரியவில்லையே உன்னை தாள் வணங்கியும் என்று மக்களுக்கு புரியவில்லையே.. நமச்சிவாயா என்று சொல்லி உன்னை அழைக்கவே!!! உன்னை அழைக்கவே!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!! பல மக்கள் உன்னைப் தொழுது நமச்சிவாய மந்திரத்தை ஓதுகின்றனர். ஆனாலும் புத்தி கெட்டு அறிந்து உண்மை தெரியாமல் பேசுகின்றனர். அன்பை மட்டும் உன்னிடத்தில் செலுத்தினால் மட்டும் போதுமே நமச்சிவாயனே வேறொன்றும் தேவையில்லை என்று உணர்வதில்லையே மனிதனே மனிதனே அனைத்தும் வேண்டும் அனைத்தும் வேண்டும் என்று உன்னிடத்தில் வருகின்றார். நமச்சிவாயா நமச்சிவாய அன்பு நிறைந்தவனே. அனைவரும் வந்து உன்னை தொழுதெய்தினால் நமச்சிவாயம் அனைத்திலும் இருப்பவனே வேறொன்றுமில்லை அனைத்தும் நீயே என்று மனிதர் இருந்தால் மட்டும் போதுமே அனைத்தையும் கருணை மிகுந்து அளித்திடும் நமச்சிவாயனே!! அன்பு கொண்டு நமச்சிவாயம் என்று ஓதுமே அனைத்தும் கொடுத்து அருளிடுவான் நமச்சிவாயனே மனதில் என்ன நினைத்தாலும் அதை தன்னை கொடுத்திடாது நமச்சிவாயனே... அன்பு மட்டும் போதும் என்று நமச்சிவாயனே!! அன்பு மட்டும் போதும் உன்னை மட்டும் தொழுகையில் எந்தனுக்கு எதுவும் தேவையில்லை என்று வணங்கினால் மட்டும் போதுமே போதுமே நமச்சிவாயனே கருணை மிகுந்தவனே நமச்சிவாயனே மானிடர்கள் எல்லாம் உன்னை நினைத்து நினைத்து நமச்சிவாய நமச்சிவாய என்று தொழுது ஒன்றுமில்லாமல் நீயும் கூட அமைதி காத்திடுவாய். ஏன் எதற்கு என்று மனிதன் தெரிவதில்லையே!!! அறிவதில்லையே!!! புரிவதில்லையே!!! நீ மட்டும் காதினால் அன்பை மட்டும் செலுத்து என்று அவர்களுக்கு ஓதிட அவர்கள் அவ் பக்தியில் நிலையில்லாமல் அதைக் கேட்காமல் நிச்சயம் தன்னில் எங்கெங்கோ ஓட!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!! உலகத்தை தன் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் நமச்சிவாயனே சூல்வினை பெருமூளை பெரு குடல் சிறு குடல் அனைத்தும் இயக்குபவனே. பெருங்குடல் சிறுகுடல் அங்கே இருக்கும் நமச்சிவாயனே.. அதிலிருந்து அனைத்தும் தரும் நமச்சிவாயனே மனிதனை படைத்து மனிதனை இயக்கி மனிதனை அழிப்பதில் வல்லமையானே கொடுப்பதிலும் வல்லமையானே கொடுப்பதில் வல்லமை உள்ளோன்தானே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே உண்மை பொருளே நமச்சிவாயமே உண்மை பொருள் நமச்சிவாயமே பாவங்களை கொடுத்து தன் புண்ணியங்களை தீர்ப்புடன் சரியாக பாவம் தனையும் புண்ணியம் தனையும் சேர்த்து தன்னை பின் நல்லோர்க்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் நமச்சிவாயனே நமச்சிவாயனே பாவம் ஆயினும் புண்ணியம் ஆயினும் இவை இரண்டும் நிச்சயம் தன்னில் மனிதனை தாக்கும் என்பதை நிரூபித்து சரியான போக்கை காட்டி உய்ய வைத்திடும் நமச்சிவாயனே உயர்வு தன்னை மக்களுக்கு கொடுத்திடும் நமச்சிவாயனே படைத்தலும் காத்தலும் அழித்தலும் நமச்சிவாயனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே கிரகங்களை ஆட்டிப்படைக்கும் நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!! உலகமெங்கும் அன்பு பெருக... அன்பு தனில் இருந்தால் அனைத்தையும் வெல்லும்.. சாதனையை கொடுக்கும் நமச்சிவாயனே திறமையே நமச்சிவாயனே திறமையை நமச்சிவாயனே வெற்றியே நமச்சிவாயனே அன்பனே நமச்சிவாயனே நண்பனே நமச்சிவாயனே அகால மரணம் அடைந்திருந்தும் தன் கருணையால் வந்து நின்று நிச்சயம் இல்லாதவர்களை தன் பால் அணைக்கும் சொந்தக்காரனே... சொந்த பந்தங்கள் அனைத்தும் விட்டொழித்தாலும் கட்டி அணைத்து கொள்ளுபவன் அன்பு நிறைந்த நமச்சிவாயனே. மக்களுக்கு புரியாமல் அலைந்து திரிந்து நமச்சிவாயனே... புத்தி கெட்ட மனிதர்கள் தன்னை நமச்சிவாய நமச்சிவாய!! என்று புரியாமல் அழைக்கின்றார்களே!! புரியும்படி நிச்சயம் தன்னில் நீயும் தன்னை பல மடங்கு நிச்சயம் தன்னை பல ஆண்டுகள் நமச்சிவாயனே நமச்சிவாயன் என்ற நாமத்தை சொல்லி சொல்லி பக்குவங்கள் பட்டுப்பட்டு அன்பு என்னும் உள்ளத்தில் உதிக்கும் நமச்சிவாயனே உதித்த பிறகு ஒன்றும் தேவையில்லை என்று மனிதன் நின்ற பொழுது அப்பொழுதுதான் அனைத்தும் தருவாய் நமச்சிவாயனே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே. நிற்பதும் நடப்பதும் உன் செயலாலே!! உயிரையும் இயக்குவது உன் செயலாலே!! அள்ளிக் கொடுப்பதில் வல்லமை படைத்த அருளாளனே நின் மனதில் பரிசுத்தமானவனே பிரபுவே! கீர்த்தியே! நமச்சிவாயனே! உண்மை பொருள் என்பது மெய்ப்பொருள் காண்பதே நமச்சிவாயனே அன்பனையும் கந்தனையும் ஒன்று சேர்த்து பின் பொறுத்த போதிலும் நமச்சிவாயனே படைத்தலும் காத்தலும் அழித்தலும் இதனை ஒன்றாக சேர்த்து தொழில் செய்யும் நமச்சிவாயனே எவ் நிலையில் மனிதன் இருந்தாலும் மோட்சத்தை அளிக்கும் நமச்சிவாயனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே. துன்பம் ஒன்றை போற்றி அதன் மூலம் வெற்றியை கொடுக்கும் நமச்சிவாயனே இன்பம் ஒன்றை கொடுத்து வாழ்க்கை ஒன்றும் இல்லை என்று தீர்மானித்த பிறகும் அனுபவிக்கும் வல்லமை பின் கொடுப்பதில் வல்லமையானவனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே எங்கும் நிறைந்த நமச்சிவாயனே எதிலும் நிறைந்த நமச்சிவாயனே அகிலம் நிறைந்த நமச்சிவாயனே கடலில் நிறைந்த நமச்சிவாயனே சூரியனே சந்திரனே ராகுவே கேதுவே குருவே புதனே நமச்சிவாயனே செவ்வாயே சனியே நமச்சிவாயனே சுங்கனே நமச்சிவாயனே மாந்தியே நமச்சிவாயனே மனிதர்கள் ஜாதகங்கள் எப்படி என்று அறியாமல் தெரியாமல் பின் உலவுகின்ற போதிலும் நமச்சிவாயனே மாந்தி ஒன்று மறைமுகமாக செயல்படுகின்றது என்று தெரியாமல் போனதற்கு காரணங்கள் பல உண்டு நமச்சிவாயனே!!!! மாந்தியை சொருகியே மனிதன் சொல்வதெல்லாம் உண்மை என்று நிரூபிக்க ஜாதகத்தில் மாந்தியை புகுத்துபவனே!! வகுத்தவனே வல்லமையில் வல்லமைக்காரனே!!! வல்லமை தள்ளாமை நேர்மையை பிடித்த போதிலும் இதன் தன்மை நிச்சயித்த வாழ்க்கை தன் அமைக்க முடியவில்லையே ஏன் இந்த மாற்றங்கள் என்றெல்லாம் மனிதனுக்கு தோன்றுகின்ற பாதையில் மனிதனே அன்பை காட்டி அணைத்து கொண்டமை.. அணைத்து கொண்டு அனைத்தும் தருபவனே நமச்சிவாயனே!! ஈடு இணை இல்லாத வல்லமை கொண்டவனே அன்பு மட்டும் போதும் என்று இங்கே அமர்ந்தாய்!! அன்பு மட்டும் போதும் என்று இங்கே அமர்ந்தாய்!! ஏதும் எனக்கு தேவையில்லை அன்பு மட்டும் காட்டி என்னை தொழுவோருக்கு ஆசிகளை வழங்கி இன்னும் பன்மடங்கு உயர்வுகள் கொடுக்கும் நமச்சிவாயனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!! உன்னிலே யான் இருந்தபோது அனைத்தும் நீ காட்ட நமச்சிவாயனே ஊழ்வினை அகற்றுபவனே நமச்சிவாயனே இன்பமும் துன்பமும் ஆணும் பெண்ணும் அனைத்தும் நமச்சிவாயனே!! இரவும் பகலும் நமச்சிவாயனே!!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!! பிரம்மாவே !! விஷ்ணுவே !! முருகனே !! கணபதியே !! சபரியே !! ஈசனே!! போற்றியே !! போற்றியே!! போற்றியே!! போற்றியே!! காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி அனைத்தும் நமச்சிவாயனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!! பைரவனை !!துர்கையை !! நிச்சயம் தன் தலைமுடியில் சுற்றி இருக்கும் நமச்சிவாயனே... வராகியும் அனைத்து உருவையும் காக்கும் ஈசனே அனைத்தும் நிரூபிக்கும் இறைவன் ஒன்றே நமச்சிவாயனே!!!! அனைவரும் ஒன்றே நமச்சிவாயனே!!! அனைத்தும் நமச்சிவாயனே!!! அனைத்தும் நமச்சிவாயனே!!! திறமையும் சோம்பேறித்தனமும் இருந்தபோதிலும் அனைத்தும் இவைதன் கூட்டி நல்முறையாக்க வெற்றியை தருவதில் பின் வல்லவனே!! வல்லவனே!!! இங்கெல்லாம் உனையெல்லாம் காண ஆள் இல்லையே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!! ஆளில்லாமல் நீ இங்கு இன்று தனியாக நிற்க யாங்கள் நிச்சயம் தன்னில் இங்கோ அமர்ந்து நிச்சயம் உன்னை சுற்றி உள்ளோம்.. இதற்காகவாவது வருவாய் காப்பாய் மனிதனை நமச்சிவாயனே.. ஈசனே நமச்சிவாயனே பெருமானே நமச்சிவாயனே அனாதையே நமச்சிவாயனே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!! மனிதர்கள் தவறு செய்வோரை பொறுத்தருளும் நமச்சிவாயனே!!! தந்தை போல் இருந்து காக்கும் நமச்சிவாயனே!! தாயைப் போன்றுதனையும்... நமச்சிவாயனே. அனைவரையும் சமமாக பார்க்கும் நமச்சிவாயனே அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!! அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்! தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 9:47 am 3 comments: Email This BlogThis! Share to X Share to Facebook Share to Pinterest Wednesday, 22 January 2025 சித்தன் அருள் - 1784 - அன்புடன் அகத்தியர் - அர்கா குபாலா. இந்தோனேஷியா 6/1/2025 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்.அர்கா குபாலா. இந்தோனேஷியா. ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!! அப்பனே ரகசியத்தை இப்பொழுது சொல்லப் போகின்றேன் அப்பனே நலன்களாகவே. அப்பனே ஒரு பெரிய கிராமம் அப்பனே இங்கு உண்டு அப்பனே அப்பனே இதை தன் நிச்சயம் அப்பனே அதாவது பின்.. யான் நன்மைக்காக இவ்வுலகத்தின் நன்மைக்காக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே இவை தன் உணர்ந்தேன் அப்பனே. பின் அதாவது இன்னும் இரு வருடம் தான் பின் மிஞ்சி காணப்படுகின்றது. இதனால் பின் நிச்சயம் அனைத்தும் கூட அப்பனே பின் எதை என்று யான் கூற!!!.... அப்பனே இதனால் அப்பனே அறிந்தும் கூட.. பின் இவர்கள் எல்லாம் அழிவார்கள் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே. ஆனால் நிச்சயம் சில விஷயங்களை கூட யான் பின் மறைத்து சொல்ல வேண்டிய சூழ்நிலை. அப்பனே ஏனென்றால் அப்பனே அவையும் கூட சாபமாக போய்விடும்... குருநாதர் இன்றைய சூழ்நிலை வாக்கு அதனால் தான் அப்பனே நிச்சயம் அதிக பேர் அப்பனே பின் ஏன் எதற்கு சரியாக விடை அறிந்தும் கூட...!!! (குருநாதர் அடியவர்களுக்கு வாக்குகள் தரும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யான் பார்த்துக் கொள்கின்றேன்!!! யான் பார்த்துக் கொள்கின்றேன்... என்று கூறுவதன் முழு அர்த்தம் புரியாமல் குருநாதர் சரியான விடையை கூற மறுக்கின்றாரே... என்ற எண்ணங்கள் இருக்கின்றது அதற்கு குருநாதர் கூறிய விளக்கங்கள்) அப்பனே ஏனென்றால் அதை சொல்லி அப்பனே யான் பார்த்துக் கொள்கின்றேன் என்றால்? அப்பனே!!!! பெரிய விஷயங்கள் அப்பனே பின் நிற்கின்றது என்பேன் அப்பனே (பெரிய விஷயங்கள் என்றால் கர்மாக்கள் பாவங்கள்) அதாவது விதி தனில் கூட அப்பனே பெரிய பாவங்கள் நிற்கின்றது. இதனால்தான் அப்பனே அவையெல்லாம் எப்படி? நீக்க வேண்டும்?? ஏது பின் எப்படி? பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் யான் அறிந்து தான் செய்வேன் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே நிச்சயம் பின்.... ஆனால் மனிதர்களோ பின் அவை இவை என்று அதற்குள்ளே அப்பனே!!! நிச்சயம் பின் சென்று அப்பனே தோல்வியை சந்தித்து மீண்டும் வந்து அப்பனே பின் அனைத்தும் இழந்து பின் என்னிடத்தில் வருகின்றார்கள் அப்பனே. (குருநாதர் பொறுத்திரு!! யான் பார்த்துக் கொள்கின்றேன் என்பதை முழுமையாக உணராமல் அங்கு அதைச் சொல்கின்றார்கள் இங்கு இதைச் சொல்கின்றார்கள் அதை பின்பற்றி பல பரிகாரங்கள் செய்து அது தோல்வியில் முடிந்து அதன் மூலம் கர்மாக்களை சம்பாதித்து மீண்டும் குருநாதரிடம் வருகின்றார்கள் இதை தனிநபர் வாக்குகளில் பல பேருக்கு சில தேவையற்ற இடங்களுக்கெல்லாம் சென்று தேவையில்லாத பரிகாரங்களை எல்லாம் செய்ததால் மேலும் கர்மாக்கள் அதிகரித்து விட்டது என்று கூறி இருக்கின்றார் அதன் அடிப்படையில் இங்கு இந்த விளக்கம்) இதனால் அப்பனே என்ன பயன்????? அகத்தியன் பார்த்துக் கொள்கின்றேன் என்றால்.. .(குருநாதர் பக்தர்களுக்கு உரைக்கும் வாக்கில் அப்பனே நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று உரைப்பது) அப்பனே அகத்தியன் பார்த்துக் கொள்வான் என்ற அப்பனே நம்பிக்கை வர வேண்டும் என்பேன் அப்பனே.. இந்தோனேஷியா தேசத்தில் ஏற்கனவே குருநாதர் வந்த பொழுது நடந்த சம்பவம் அப்பனே இதனால் அப்பனே இங்கு வந்து விட்டேன்... அப்பனே இங்கு அனைவருக்கும் போதனைகள் இட்டேன் அப்பனே. இவ்வாறு இருந்தால் நன்மை!!! இதனால் பின் உங்கள் குழந்தைகளோடு வாழலாம் என்றெல்லாம்.. அப்பனே ஆனாலும் அப்பனே யாரும் கேட்கவில்லையப்பா!! ஆனாலும் நிச்சயம் வந்து விட்டான் இவன்...(அகத்தியரை பார்த்து) இவந்தனுக்கு என்ன தெரியும் ?? என்றெல்லாம் சிலர். பின் சிலர் இவன் சொல்வதெல்லாம் பொய்... பின் அறிந்தும் கூட இன்னொருவன் கூட இப்படி எல்லாம் அதாவது இவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட. !!! குருநாதர் இன்றைய சூழ்நிலையில் வாக்கு அதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக உங்களுக்கு பக்குவப்படுத்தி எது உண்மை?? எது பொய்?? என்பதையெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே சரியாகவே பக்குவங்கள் பட்டுவிட்டால்... அப்பனே அனைத்தும் நீங்களே வெல்வீர்களாக!!! இதனால் அப்பனே அனைவரையும் கூட இங்கு இருப்பவர்கள் (இந்தோனேசியாவில் குருநாதர் ஏற்கனவே முன்பு வந்து அவர்களை நல்வழிப்படுத்த அதாவது அழிவை முன்கூட்டியே அறிந்து நல்வழிப்படுத்த) அதாவது அழிவு நிலைக்கு செல்கின்ற பொழுது யான் சொல்லியதை இங்கிருந்தே இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே !! அந்த சமயத்தில் இந்தோனேசியாவில் உள்ள அந்த மக்களுக்கு குருநாதர் கூறிய உபதேசம் அனைவருமே தியானத்தில் சரியாகவே அமர்ந்து பின் மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். வெளியிட வேண்டும். என்பதையெல்லாம் அப்பனே சொன்னேன் அப்பனே. ஏன் இதற்கும் அப்பனே பின் கிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டப்பா. அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே சரியாகவே அப்பனே ஆபத்து காலத்தில் அமைதியாகவே பின் உட்கார்ந்து விட்டால்.. அப்பனே நிச்சயம் அறிந்தும் பின் எதை என்று புரிந்தும்.. நிலைமைகள் கூட அப்பனே அனைத்தும் மாறி விடுமப்பா. இதனால் பின் சில மாதங்கள் அமைதியாக தியானங்கள் செய்யுங்கள் என்று சொன்னேன் அப்பனே. அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் பின் அவரவர் குலதெய்வத்தை எல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் அப்பனே. ஆனாலும் அப்பனே சில ரகசியங்கள் பின் சொன்னேன் அப்பனே. ஆனாலும் யாரும் அதை பொருட்படுத்தவில்லை அப்பா. ஆனாலும் நிச்சயம் அப்பனே.. ஈசன் என்னிடத்தில் முறையிட்டு விட்டான். அகத்தியனே!!!! அழிவுகளை ஏற்ப்படுத்த போகின்றேன்!!! உன்னால் முடிந்தால் தடுத்துக்கொள் என்று!! பின் அழகாகவே. ஆனாலும் நிச்சயம் பின் வந்து விட்டேன் அப்பனே.. குருநாதர் இன்றைய சூழ்நிலை வாக்கு இது போன்று தான் அப்பனே மக்கள் இக்கலி யுகத்தில் அப்பனே... நல்லதை சொன்னால் பின் நம்ப மாட்டார்கள் என்பேன் அப்பனே. தீயவை சொன்னால் நம்பி விடுவார்கள் என்பேன் அப்பனே. அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் முதலில் அப்பனே நிச்சயம் அதாவது மாமிசத்தை உட்கொள்ளாதீர்கள்.. இதை நிச்சயம் நீங்கள் உட்கொள்ளாமல் இருந்தாலே.. நீங்கள் காக்கப்படுவீர்கள் என்று. (பிழைத்துக் கொள்வீர்கள் என்று) ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!! அப்பனே பின் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் கூட அப்பனே.. அதாவது ஒவ்வொரு அறிந்தும் கூட அப்பனே பல வகைகள் அப்பனே பின் அதாவது இன்னும் ஆடுகள் அப்பனே பசுமாடுகள் இன்னும் அப்பனே பின் பல ஜீவராசிகள் உள்ளது என்பேன் அப்பனே. அப்பனே அதற்கு தெரியும் அப்பா... ஒவ்வொரு விதத்திலும் கூட பின் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது... அதை உட்கொள்ளும் என்பேன் அப்பனே.. நிச்சயம் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அதனால்... பலமான உணவுகளை தான் அவை உட்கொள்ளும் என்பேன் அப்பனே. அப்படி உட்கொள்ளும் பொழுது அப்பனே பின் அதனை மனிதன் தின்றால் அப்பனே நிச்சயம் பின் பலமாக உள்ளே மோதல் ஏற்படுமப்பா.. ஆனாலும் பின் பல வாக்குகளிலும் செப்பி விட்டேன் அப்பனே நிச்சயம் அதை தன் கிரகங்கள் கூட அப்பனே!!... (பஞ்சவடி வாக்கு பாகம் 2 சித்தன் அருள் 1225 சித்தன் அருள் 16 42 மீர்காட் காசிவாக்கு சித்தன் அருள் 1662 முன்னேஸ்வரம் வாக்கு இவ் வாக்குகளில் எல்லாம் அசைவம் உண்டால் அந்த ஜீவராசிகளின் அணுக்கள் மனித உடலுக்குள் இருக்கும் அணுக்களோடு சேராமல் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதை புழுக்கள் உருவாகும் என்பதை ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார் அனைவரும் மீண்டும் படித்து உணர்ந்து கொள்ளவும்) அப்பனே பின் அதி வேகமாக இங்கே அப்பனே பின் அதை இயக்குமப்பா!! இவ்வாறு இயக்குகின்ற பொழுது கோபங்கள் காமங்கள் அப்பனே இன்னும் தீய எண்ணங்கள் எல்லாம் பின் மனதில் உதித்து விடுமப்பா இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அவை மட்டுமில்லாமல் பின் அதாவது நீ பக்கத்தில் உள்ளாயா... உன் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அப்பனே சரியான இயக்கத்தில் இயங்க விடாமல் அது வேகமாக இயங்கி கொண்டிருக்கும் என்பேன் அப்பனே. இதனால் அவந்தனுக்கும் அக் கர்மா என்பேன் அப்பனே... (ஒருவர் அசைவம் உண்ணுகின்றவர் அருகாமையில் இருந்தாலும் அவருடைய இயக்கங்கள் மற்றவரையும் தாக்கும் கர்மாக்கள் ஏற்படும்) அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய அப்பனே கெடு!!... நீ மட்டும் கெடு!! அப்பனே மற்றவர்களை கெடுக்காதே!!!... அறிந்தும் எதை என்று புரிய!!! அதாவது அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் தான் இங்கு சொல்லிக் கொண்டிருந்தேன்..(இந்தோனேஷியாவில் முன்பு குருநாதர்) கெடு... மற்றவரை கெடுத்து பின் சாய்க்காதே!! என்றெல்லாம்!! ஆனாலும் அனைத்தும் என்னால் முடியும் அப்பா... அறிந்தும் கூட!! எதை என்று கூட இதனால் அப்பனே ஒருவனை திட்டினேன். (அந்த ஊரில் இருந்த குருநாதர் பேச்சை மதிக்காமல் இருந்த ஒருவனை) நீ மட்டும் பின் சொன்னால் கேட்க மாட்டேன் என்கின்றாய் அதனால் பின் நிச்சயம் நீ மட்டும் விலகிவிடு!!!! என்றெல்லாம்... ஆனாலும் அவனும் கூட நிச்சயம்... எங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் கூட அனைவரும் சொந்தக்காரர்கள் தான். இதனால் நிச்சயம் இவை எல்லாம் ஏற்கப் போவதில்லை என்று!! ஆனாலும் நிச்சயம் பின் ஆடு மாடுகள் பின் அனைத்தையும் வெட்டுவோம் பார்ப்போம் என்று!!... பின் அதாவது அப்பனே வந்தது கோபம்!!!... ஆனாலும் பின் ஈசனோ பின்.... அகத்தியனே!!! பொறுத்திரு!!! பின் இதற்கெல்லாம் விடை நிச்சயம் அறிந்தும் கூட!!! இதனால் தான் இவையெல்லாம் வரும் காலத்தில் இங்கு உள்ளோர்கள் திருந்துவார்கள் என்றெல்லாம். பின் யானும் நிச்சயம் சிவபெருமானே!!!! நிச்சயம் அறிந்தும் கூட பின் பொறுத்திரு!!!... ஏன் எதை என்று கூட பல கோடி அறிந்தும் கூட இவ்வுலகத்தில் மக்கள் இருக்கின்றார்கள்... ஏன் இங்கெல்லாம் விளையாடுகின்றாய்... என்பதையெல்லாம்!! ஈசன் !!! நிச்சயம்.. பின் எங்கெல்லாம் நிச்சயம் அதிகம் என்னுடைய வாகனமான பசு மாடுகளை கொன்று குவித்து வருகின்றார்களோ... அங்கெல்லாம் நிச்சயம் உண்மை இருக்காது... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அறிந்தும் கூட பின் எவ்வளவு படிப்புக்கள் படித்தாலும் அவன்... ஞானம் உள்ளவனாக இருக்க மாட்டான். அவை மட்டுமில்லாமல் பின் எவ்வளவு பின் அறிவுகள் இருந்தாலும் இழி (கீழான )செயல்களை கூட பின் செய்து கொண்டிருப்பான்... என்பவையெல்லாம் அப்பனே... ஈசனே!!! இதனால் தான் அப்பனே ஆனால் பின் ஈசன் சொல்லிவிட்டான். ஆனாலும் சில நேரத்தில் கூட நன்மைகளாக. செய்வேன் விட்டுவிடுவேன் பிழைத்துக் கொள் என்று..(ஈசன் சில நேரங்களில் கருணையோடு விட்டு விடுகின்றார்) ஆனாலும் அதே போல் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது ஈசன் சொன்னான் ஒரு வார்த்தை!!!! அறிந்தும் எதை என்று புரியப் புரிய பின் அகத்திய மாமுனிவரே!!!! நிச்சயம் அறிந்தும் கூட பின் படைத்தவனுக்கு தெரியாதா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் எப்பொழுது படைப்பது??? எப்பொழுது அழிப்பது??... என்று. ஒழுங்காகத்தான் படைத்தேன்... இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று!! நிச்சயம் ஆனால் மீண்டும் யான் அப்பனே நன்மைகளையே சொன்னேன் மனிதனுக்கு. ஆனாலும் இதில் கூட ஒருவன் அவை பொய் இதையெல்லாம் செய்து விடாதே... என்றெல்லாம் அப்பனே...(குருநாதர் செய்த உபதேசங்களை எல்லாம் பொய் என்று) குருநாதர் தற்போதைய சூழ்நிலையில் கூறிய வாக்கு இதனால்தான் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் கூட அப்பனே...... ஆனாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே... ஒருவன் இருக்கின்றான் அப்பா... அவன் அதாவது அவனுக்கு நல்லதை பின் சொன்னேன் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே.... ஆனால் அவன் இவையெல்லாம் நம்பக்கூடாது பொய் என்று அப்பனே... இப்படி இருந்தால் எப்படியப்பா உலகம் திருந்துமப்பா??? அப்பனே அறிந்தும் கூட இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதை சொன்னால்... பின் எதை என்று அறிய அறிய அப்பனே.... யார் வேண்டுமானாலும் எதை என்று கூட நல்லதை சொல்லலாம் என்பேன் அப்பனே. அப்பொழுதெல்லாம் அப்பனே உயர்ந்தவர்கள் நல்லதை சொன்னார்கள் அப்பனே அறிந்தும் கூட பின் உயர்ந்தவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். ஆனால் பின் அப்பனே தீயவைகளை எல்லாம் செப்பி விட்டு சென்று விட்டார்களப்பா!! அதேபோலத்தான் இக்கலி யுகத்தில் கூட யாங்கள் நிச்சயம் தர்மம் ஏந்துபவர்களாக நிச்சயம் அப்பனே ஏதும் இல்லாமல் அப்பனே கிழிந்த சட்டைகளோடு அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... பின் அறிந்தும் கூட அதாவது நீராடாமல் கூட பின் நிச்சயம் வருவோம் அப்பனே.... சில கர்மங்களை கூட எடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம் அப்பனே இன்னும் அப்பனே இப்படித்தான் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய ஒரு பெண்மணிக்கும் கூட அழகாக காட்சியளித்து அப்பனே தந்தேன். சில சில பாவங்களைக் கூட நிச்சயம் யான் இருக்கின்றேன் யான் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அவள் கேட்கவில்லை... அதனால் உண்மையில் சென்று நிச்சயம் அவளிடத்தில் பின் தேநீர் அருந்திவிட்டு அப்பனே சென்று விட்டேன் சில கர்மாக்களையும் கூட எடுத்து சென்று விட்டேன் அப்பனே. இந்தோனேஷியாவில் முன்பு குருநாதர் வந்து அவர்களுக்கு செய்த உபதேசம் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் இங்கே பல மனிதர்களுக்கு கூட இவ்வாறு உரைத்தேன் அப்பனே. ஆனாலும் எவரும் நம்பவில்லையப்பா!! இதனால் அப்பனே நிச்சயம் எதை என்று கூட!!! பின் இவன் சொல்கின்றான்...(அகத்தியர்) இவன் சொன்னால் நாம் கேட்க வேண்டுமா????? என்று நிச்சயம் பின் அனைத்து ஜீவராசிகளையும் கொன்று குவியுங்கள் என்று ஆனாலும் பின் அனைவரும் கொன்று குவித்து ஒரு ஆட்டமே... பின் இட்டிட்டு... பின் வேண்டாம் என்று சொன்னேன் அப்பனே..!!! நிச்சயம் பின் ஆடி பாடி அப்பனே பின் அனைத்தையும் கூட கொன்று விட்டு இவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஈசனுக்கு உடனடியாக கோபம் வந்தது... அனைத்தையும் அழித்து விட்டான் அப்பனே. அப்பனே புரிகின்றதா??? அப்பனே அதனால்தான் மீண்டும் இத் தேசம் அழிந்து கொண்டே செல்கின்றது. அதனால்தான் அப்பனே அங்கங்கு நிச்சயம் அப்பனே பின் என்னுடைய எவை என்று அறிய அறிய அப்பனே சிலைகளை ஏற்படுத்தி அப்பனே நல்வழிப்படுத்த போகின்றேன் அப்பனே நிச்சயம் மாறும் அப்பா.. அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் யான் காத்திட அதாவது எந்தனுக்கும்( சக்திகள் உண்டு)எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய!!! அப்பனே பல வழிகளில் கூட அப்பனே ஈசன் எவை என்று புரிய சொல்லிக் கொண்டே இருப்பான்... இவ்வாறு அழிக்கப் போகின்றேன்!!!.. அவ்வாறு அழிக்கப் போகின்றேன்.. என்று!!! ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஆனாலும் என்னாலும் காக்க முடியும் நிச்சயம் இவ் உலகத்தை அப்பனே எதை என்று புரிய புரிய. ஆனால் அப்பனே மனிதனால் தான் அப்பனே!!! (அழிவுகள்) ஆனாலும் பின் நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றேன் யான்!!! ஆனாலும் கேட்கவில்லையே... என்று அறிந்தும் கூட! இதனால்தான் அப்பனே இன்றளவும் கூட அப்பனே ஏங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... பல பரிசுத்தர்கள்!!! அப்பனே மீண்டும் அவர்களுக்கு அப்பனே பின் ஆன்மாக்களுக்கு (பரிசுத்த ஆன்மாகளுக்கு) அப்பனே பின் முக்தியும் அப்பனே எவை என்று அறிய அறிய பின் புண்ணியத்தையும் கொடுத்து... மீண்டும் இங்கே எல்லாம் பிறப்பெடுத்து உள்ளார்கள் அப்பா. இதனால் அப்பனே அவர்கள் எல்லாம் அப்பனே எவை என்று கூட தீய வழிகளில் செல்வோரை எல்லாம் நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே எவை என்று புரிந்தும் கூட இன்னும் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே. அதனால் தான் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய அப்பனே.. நல் மாற்றங்கள் அப்பனே இன்னும் அப்பனே.. அங்கங்கு அப்பனே நிச்சயம் யானே வந்து அப்பனே தவக்கோலத்தில் அமர்வேன்... அப்பனே அப்படியே கல்லாக மாறிவிட்டு அப்பனே.. பின் சக்திகளை விட்டுவிட்டு சென்று விடுவேன் அப்பனே. வணங்கினால் நன்று!!! அதாவது அப்பனே வணங்கச் சொல்லவில்லை... எதை என்று கூட அதாவது பின் என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டாலே கர்மா நீங்கிவிடும் என்று!!! யான் அமர்ந்து எவை என்று கூட கல்லாகவே!!! சிலர் அப்பனே பிடித்தனர்!!!... தப்பித்துக் கொண்டனர் என்பேன் அப்பனே... சிலர் பிடிக்காததால் அப்பனே வேதனை அடைந்து அப்பனே... எதை என்று கூட இப்பொழுது கூட எதை என்று அறிய அறிய!!..... இதனால் தான் அப்பனே நன் முறைகளாக அப்பனே நிச்சயம் எவை என்று கூட... இன்னும் நோய்களும் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அழிவுகள்.. கூட பின் விபத்துக்குள்ளாவதும் கூட நிச்சயம் அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் அதாவது.... மனிதன் சொல்வதை !!!??????! அப்பனே.... அதாவது ஈசன் கோபம் கொண்டிருந்தான்!... (மனிதர்கள் சொல்வது) பின் நீ சொல்வது நடந்து விடுமா? என்று!! நிச்சயம் அப்பனே அடுத்த வகையில் ஏதோ வகையில் அப்பனே பின் எவை என்று கூட அப்பனே செய்கின்றான் அப்பனே. அதனால் அப்பனே... பின் மனிதர்கள் அப்பனே இன்னும் அவை இவை என்றெல்லாம் நடக்கும் என்று அப்பனே இதெல்லாம் பொய் என்பேன் அப்பனே. நிச்சயம் மனிதனால் அப்பனே பின் எதை என்று கூட எதையும் கணிக்க முடியாதப்பா!!! அனைத்தும் பொய் என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் இன்னும் குறிப்பாக அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே மாற்றம் ஏற்படுவது உறுதி!! ஆனாலும் அப்பனே... நிச்சயம் அப்பனே அழிவுகள் வருவதும் உறுதி. ஆனாலும் அப்பனே நீங்கள் என்ன எதை என்று புரிய.. அப்பனே எதை என்று அறிய அறிய... நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அப்பனே.. நல் முறையாகவே நல்மனதாகவே பின் செயல்பட்டுக் கொண்டிருந்தாலே அப்பனே பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே. எவை என்று அறிய அறிய கவலைகள் இல்லை.. அப்பனே. நிச்சயம் அப்பனே யானும் எவை என்று புரிய அப்பனே எதை என்று அறிய இங்கெல்லாம் மக்களை பின் பண்படுத்தி அப்பனே எப்படி எல்லாம் சிறப்புக்கள்.. இறைவனிடத்தில் பின் எவை என்று.. கூறி காக்க வேண்டுமோ...... அப்பனே அவ்வாறெல்லாம் நிச்சயம் உங்களை காத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. நிச்சயம் அப்பனே. அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதையே கேளுங்கள்!!! அப்பனே பின் அதாவது பின் அதாவது நல்லதை கேளாமல் இருந்தாலும் அப்பனே காதுகளில் நோய்கள் வந்துவிடும் அப்பா... அப்பனே நன்றாகவே நல்லதையே முகர வேண்டும் மூக்கின் வழியே அப்பனே. அவ்வாறு முகரவில்லை என்றால் அப்பனே பின் மூக்கும் எதை என்று அறிய அறிய அதன் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும் அப்பா. அப்பனே நல்லதையே காண வேண்டும் அப்பனே கண்களால் எதை என்று அறிய அறிய இவைகள் எல்லாம்.. சொல்லிவிட்டார்கள் அப்பனே.. மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அவ்வாறே காணாவிட்டால் அவ்வாறே பின் எவை என்று.. அறிய அறிய கண்களில் நோய்கள் வரும் அப்பா. அப்பனே பற்கள் பின் அதாவது நல்லதையே பின் எவை என்று அறிய அறிய பொய்கள் சொல்லக்கூடாது என்பேன் அப்பனே... அவ்வாறு அதற்கு மாறாக சொன்னால் அப்பனே.. பற்களும் கூட விழுந்து விடும் என்பேன் அப்பனே... வயதான காலத்தில் உண்ணவும் முடியாது என்பேன் அப்பனே. நிச்சயம் இதே போல தான் அப்பனே அழகாக திருத்தலங்களை நோக்கி காலடி வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அப்பனே கால்களில் நோய்கள் அப்பனே!! இறைவனை அப்பனே துதித்து பாட வேண்டும் அனுதினமும்... படைத்தவனையும் கூட பின் கையெடுத்து வணங்க வேண்டும் அப்பனே இறைவனை கூட எதை என்று அறிய அறிய!! அதனால் தான் அப்பனே அதாவது... நன்றி அதாவது அப்பனே பின் எதை என்று அறிய... எதை என்று கூட !!! இறைவனை யாரும் வணங்கச் சொல்லவில்லை அப்பனே !!! அதாவது நன்றி கூற வேண்டும் !! நிச்சயம் இறைவா நன்றாக படைத்தாய்!!! என்று!!! என்று அப்பனே நிச்சயம் அப்பனே நன்றாகத் தான் அனைவரையும் படைத்திருக்கின்றான்... ஆனாலும் அப்பனே மனிதன் நிலைப்பாடு !! நிலைப்பாட்டிற்கு மாறாகவே எவை என்று தோன்றி அப்பனே எவை என்று அறிய அறிய அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!! அதனால் இரு கரம் கூப்பி அப்பனே நன்றி செலுத்துதல் வேண்டும் என்பேன் அப்பனே. அவ்வாறு நன்றி செலுத்தாத கைகள் அப்பனே இருந்தும் பயனில்லை... கால்கள் பின் நல்லதை நோக்கி செல்ல.. அப்பனே பின் இயலாமல் அவ்வாறு கால்கள் இருந்தும் பயனில்லை... அப்பனே எவை என்று கூட அனைத்திற்கும்.. இதே போலத்தான் என்பேன் அப்பனே. இன்னும் எப்படி? எல்லாம் நோய்கள் ஏற்படுகின்றது என்பதை எல்லாம் அப்பனே பின் கூர்ந்து அப்பனே பின் எவை என்று கூட பின் எவை என்று கூட கவனியுங்கள் அப்பனே... நிச்சயம் சொல்வேன் என்பேன் அப்பனே.. இங்கெல்லாம் அழிவுகள் அப்பனே எதை என்று... எப்படி எல்லாம் தடுக்கலாம் என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே. யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நோய்களின் காலமப்பா.. நோய்களின் காலமப்பா.. ஆனாலும் அப்பனே அதனைக் கூட எவை என்று புரிய அப்பனே!!! நிச்சயம் அப்பனே அனைவருக்கும் எம்முடைய நல்லாசிகள் என்பேன் அப்பனே.. நிச்சயம் இங்கிருந்தே அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய.. அப்பனே எவை என்று கூட என் பக்தர்களுக்கும் கூட வர முடியவில்லையே... அகத்தியனை பின் காண செல்ல முடியவில்லையே.. என்றெல்லாம் பின் உண்மையான பக்தர்கள் கூட இருக்கின்றார்கள்... அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே தருகின்றேன் என்பேன் அப்பனே. ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!! என்னை நினைத்தாலே போதும்ப்பா! யான் வருகின்றேன் அழகாகவே... ஆசிகளோடு அப்பனே!!.. ஆசிகள்!!! ஆசிகள்!!! ஆசிகள்!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்! தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 9:25 pm 6 comments: Email This BlogThis! Share to X Share to Facebook Share to Pinterest Tuesday, 21 January 2025 சித்தன் அருள் - 1783 - அகத்தியப்பெருமானின் விளக்கம்! அப்பனே! அனைவருக்கும் சொந்தக்காரன் யான் என்பேன். இருப்பவன், இல்லாதவன், பொய் சொல்பவன், பொய் சொல்லாதவன், ஏழை, பணக்காரன், இவ்மதம், அவ்மதம் என்ற வித்யாசம் எந்தனுக்கு இல்லை அப்பா. அனைத்தும் ஒன்றுதான் என்பேன். தவறு செய்தானாலும் தன் பிள்ளையை ஏற்றுக்கொள்ளும் தாய் போல, அவ்வாறே அகத்தியனும் தான். அடியவர்: எங்கோ கேள்விப்பட்டேன், இனி வரும் காலங்களில் சனியவனே, சந்திரனை சார்ந்து தான் வேலை செய்யும் என்று! அகத்தியர்: அதனால் தான் மனிதன் கூட பைத்தியக்காரன் போல் உளறுவான் என்பேன். அதனால் தான் சந்திரனை நெருங்கி வந்த சனியவனை யான் சற்று தள்ளிவிட்டேன். இது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இனி வரும் காலங்களில் மனிதனுக்கு பல புதுமையான விஷயங்களை கற்று கொடுப்பேன். அப்பனே! இவை எல்லாவற்றையும் சுவடிகளில் எழுதி வைத்துள்ளேன். ஆனால், காசுக்காக கைபற்றி வெளிநாட்டவரிடம்......... விற்றுவிட்டார் அப்பா. அதனை கொண்டு புதுப் புது விஷயங்களை கண்டு பிடித்து விட்டார்கள் அப்பா. அப்பனே! யாங்கள் செய்யாதது இவ்வுலகத்தில் ஏதும் இல்லை அப்பா. அப்பனே! மனிதனாக பிறந்து விட்டாலே, குடும்பத்தில் பிரச்சினை வரும், நோய்கள் வரும். இவை எல்லாம் நீங்களே தீர்த்துக் கொள்ளவேண்டும். திருமணம் எப்பொழுது நடக்கிறதோ, அப்பொழுதே பாபம் ஏறிவிட்டது என்று பொருள். ஏதன் மீது நீ ஆசை கொள்கிறாயோ, அதன் வழி பாபத்தை ஏற்படுத்துவான் இறைவன். இப்படியே மனித வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பின் எங்கப்பா, இறைவனை பற்றி யோசிப்பான். ஆகவே, திருமணம் என்பது கர்மா தான். மனிதன் கோபப்பட்டால், உடல் வலுவிழந்து போகும். அப்பனே! கோபப்பட்டால் நீ அடைவது என்ன? அப்பனே அழிவுதான் நிச்சயம். முக்கால் பங்கு அழிவு, கோபத்தினால் தான் வருகிறது என்பேன். இதை யாரும் உணர்வதில்லை அப்பா. உண்மையான ஞானி அறிவானப்பா. பக்தியில் இருந்து கொண்டே கோபபடுபவர் உண்டு. ஆதலால், அவனுக்கே நோய்கள் வரும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வேலை இருக்கின்றதப்பா. அதை தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் அப்பா! இனி வரும் காலங்களில், கூறப்படுவதை யார் யாரோ எடுத்து செல்வார்களப்பா. புத்தகமாக வெளியிடுவார்களப்பா. குடும்பத்தில் இருந்தும், கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்றால், முக்தி கிட்டும். திருமணம் செய்துவிட்டு, அனைவரையும் தவிக்கவிட்டு, கடமைகளை செய்யாமல் சென்றால், அது தான் மிக கொடிய கர்மாவை ஒருவனுக்கு சேர்க்கும். திருமணம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு ஆன்மீக உணர்வே இல்லை என்றால், அப்பொழுது அந்த ஒருவருக்கு தெரியும், இவ்வுலகில் அனைத்தும் பொய் என்று. அப்போது தானாக இறைவனிடம் வந்து தான் ஆகவேண்டும். இறைவனை வணங்கினாலும் கர்மாவை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதே பல ஞானிகளின் வாழ்க்கை உணர்த்துகிறது. ரமண மஹரிஷியின் வாழ்வு அப்படிப்பட்டதுதான். அண்ணாமலையாரிடம் அருகில் இருந்தாலுமா? அப்பனே! இறைவன் நியாயமானவன். தன் பிள்ளையே தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பான். உடம்பை எடுத்துவிட்டால், கர்மாதான். அதேபோல் தான் மனிதன். தன் பிள்ளை தவறு செய்தால், தண்டித்தால், வெற்றி என்பது அப்பிள்ளைக்கு நிச்சயம் உண்டு. மனிதனின் கட்டுப்பாடு கிரகங்கள் கையில் உள்ளது. ஆகவே, கிரகங்கள் விலகி வழிவிட்டால் தான் இறைவனிடமே செல்ல முடியும். இறைவனை நெருங்க நெருங்க, கிரகங்கள் தடுக்குமப்பா. அடித்து போடுமப்பா. அப்படியும் இறைவன் தான் வேண்டும் என்று சென்றால், போய் தொலையட்டும் என்று விட்டுவிடும். அப்பொழுதுதான் உண்மையான பக்தி பிறக்கும், உண்மையான ஞானம் பிறக்கும். தெய்வத்தின் பெயரை வைத்துக்கொண்டு தவறு செய்கிறவனுக்கு கர்மா வேகமாக ஏறும். அதனால் தான் அப்பா! "நாயினும் கடையேன்" என்று சொல்லிவிட்டான் அப்பா. புரிகின்றதா அப்பா? தெய்வத்துக்கும் எனக்கும் பூசை செய்துவிட்டு, புண்ணியத்தை தெடிக் கொள்கிறேன் என்று, யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன், "அகத்தியா எனக்கு இதை அருளேன், இதை கொடேன்!" என்று வேண்டிக் கொள்கின்றனர். இறைவனுக்கும், அகத்தியனுக்கும், எதை எப்போது கொடுக்க வேண்டும் என தெரியும் என்று உணர்வதே இல்லை. அப்பனே! அனைத்தையும் உணர்ந்தவர்கள், சித்தர்கள். யான் தீபம் ஏற்ற சொன்னதே மற்றவர்களுக்காகத்தான். அடியவர்: ஜோதிடம் பார்ப்பவனுக்கு கர்மா வந்து சேரும் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இந்த ரகசியத்தை வேறு யாருமே இதுவரை சொன்னதில்லை, நீங்கள்தான் முதலில் சொல்கிறீர்கள். இப்படிப்பட்ட கலையை ஏன் இறைவன் பூமிக்கு கொண்டுவந்தார்? அதுவுமின்றி, சாதாரண மனிதரிடம் ஏன் இதை படிக்க கொடுத்தார்? அப்பனே! சொல்கின்றேன். முன் காலங்களில் ஜாதகன் 48 நாட்கள் விரதமிருந்து பின்னர் தான் சோதிடனிடம் ஜாதகம் பார்க்க போக வேண்டும். அதுமட்டும் அல்லாமல், நவகிரகங்களின் காயத்ரி மந்திரத்தை உருவிட்டபடி, ஏதேனும் ஒரு உயிரினத்துக்கு தினமும் உணவளித்தபின் செல்ல வேண்டும் அப்பா! அது மட்டும் இல்லாமல் நன் முறைகளாகவே தாய் தந்தையரையும் மதித்து, குரு சொல்வதையும் கேட்க வேண்டும் அப்பனே! இவை எல்லாம் முன்னரே செய்தபின்தான், ஜாதகத்துடன் செல்வார்கள் அப்பா. இதனால், சொல்பவனுக்கு நிச்சயம் கர்மா இல்லை அப்பா. இப்பொழுது அப்படியா நடக்கின்றது அப்பா? அப்பனே கிரகங்கள் கூட, தர்மத்தை கடைபிடித்தால், அனைத்து நன்மைகளையும் செய்யும் அப்பனே. இப்படித்தான் முன் காலங்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்பனே. இவைகளை எல்லாம் சொல்பவன் ஜாதகனிடம் கூறவேண்டுமப்பா! இல்லாவிடில், அந்த ஜாதக தோஷ பலன், சொல்பவன் முதுகில் ஏறுமப்பா. இப்பொழுதெல்லாம் காசுக்காக செய்கிறார்கள், சொல்கிறார்கள். போகட்டும் என்று விட்டு விடுகிறேன் நான். அகத்தியப் பெருமானுக்கு மிக்க நன்றி! விளக்கம் நிறைவு பெற்றது! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்! தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 3:01 pm 5 comments: Email This BlogThis! Share to X Share to Facebook Share to Pinterest Monday, 20 January 2025 சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! 5/1/2025 அன்று கொங்கணர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை வாக்கு வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பானன் காண்டி.இந்தோனேஷியா. அண்ட சராசரத்தை எல்லாம் ஆளுகின்ற ஈசனாரே!!!! உந்தனை பணிந்து அழகாக குருநாதனின் புகழை எடுத்து எடுத்து பின் மனதிலே பின் நின்று பின் அனைத்தும் காக்கும் இறைவா!!!! அகத்தியரே!!! ஞான அகத்தியரே!!!! குருமுனியே அகத்தியரே!! விஷ்ணு அவதாரத்தின் மறு உருவமே!!!! மறு உருவமே!!! ஆனந்த ஆனந்தத்தில் இருக்கும் ஆனந்த பத்மநாபனே!!! இருள் உள்ள வாழ்வை அழிப்பவனே!!! அகத்தியரே!! அகத்தியரே!! துன்பமில்லா பெருவாழ்வு அளிப்பவரே!!! அனைத்திற்கும் காரணமானவராக திகழ்பவரே!!! தொண்டினையே தன் முழு முயற்சியாக கொண்டு அனைவருக்கும் நல்லதை செய்ய காத்திருக்கும் அகத்தியரே!!!! அகத்தியரே குருமுனியே அகத்தியரே!! காசி தன்னில் அழகாக குடி கொண்டிருக்கும் அகத்தியரே!!! மீனாட்சி தன் மடியில் வளர்ந்தவரே அகத்தியரே அண்ணாமலையின் உண்ணாமுலை தேவியுடன் மனமுவந்து மனமுவந்து மடியின் மீது அமர்ந்திருக்கும் அகத்தியரே!!! தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவரே அகத்தியரே!!! அகத்தியரே அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!!! அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!! நினைப்பவர்களுக்கெல்லாம் வந்து அருள்பவரே!! தீய மனதையும் நல்மனதாக்கி அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று வழிகாட்டுபவரே!!! நல்லோரையும் தீயோரையும் ஒரு மனதாக நினைத்து நல்லோரையும் தீயவர்களுடன் இணைத்து அவர்களையும் மாற்றி தரும் மனம் படைத்த குணம் படைத்த அகத்தியரே!!! அகத்தியரே கருணை வடிவான அகத்தியரே பாசமிகு வடிவான அகத்தியரே அன்பு வடிவான அகத்தியரே நினைத்தாலே வந்து அருள் பாலிக்கும் அகத்தியரே இன்பமெல்லாம் கொடுப்பவரே அகத்தியரே துன்பமெல்லாம் நீக்குபவரே அகத்தியரே பாவம் இருந்தாலும் தன் கூடவே இருந்து கடை நாள் வரையிலும் அவர்களுக்கெல்லாம் பின் துன்பம் இருந்தாலும் அதனையும் கூட படிப்படியாக விலக்கும் அகத்தியரே!!! குருமுனியே அகத்தியரே வருவாய் அகத்தியரே பின் உலகம் ஏழேழு உலகம் அழியப் போகின்ற நேரத்தில் கூட மனிதர்களுக்கு நற்செய்திகள் அளிக்கும் அகத்தியரே அகத்தியரே அனைத்திற்கும் காரணமாக விளங்கும் அகத்தியரே இன்பம் எல்லாம் அளிப்பவரே அகத்தியரே துன்பத்தை எல்லாம் போக்குபவரே அகத்தியரே தீய நெஞ்சோடு இருப்பவர்களை எல்லாம் பின் அணைத்து கொண்டு நல்லோர்களாக மாறச் செய்யும் அகத்தியரே!! அகத்தியரே குருமுனியே அகத்தியரே கருணைமிகு அகத்தியரே அண்ணாமலை உண்ணாமலை தேவியுடன் அழகாக பின் திகழும் அகத்தியரே!! அகத்தியரே பழனி தன்னில் வீற்றிருக்கும் அழகாக குருமுனியே!! குருமுனியே செந்தூரில் வீற்றிருக்கும் குருமுனியே திட்டை தன்னில் வாழும் குருமுனியே!! சூரியனார் கோயில் அமைத்து பின் அதில் தங்கி இருக்கும் கிரகங்களுக்கெல்லாம் மோட்சத்தை அளிக்கும் மோட்சத்தை அளித்த குரு முனியே ! ஞானியருக்கெல்லாம் குருமுனியே!! அனைத்து உலகாகும் பின் இயக்கத்தையும் பல வழிகளில் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவரே இந்திரனுக்கும் தலைவரே தலைவரே தேவர்களுக்கும் தலைவரே உன்னை வணங்குபவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி அருள் தந்து...!!! பிரம்மா ஆயினும் விஷ்ணு ஆயினும் ஈசனாயினும் அவர்களிடத்தில் சொல்லிச் சொல்லி கர்மத்தை அழித்து நிச்சயம் பின் மோட்சத்தை அளிக்கும் உனக்கு இணை யாரவரே?????! யாரவரோ???? நெஞ்சில் நிறைந்த குரு முனியே அகத்தியரே!! அகத்தியரே அகத்தியரே அனைத்திலும் காரணமாக விளங்குபவர் அகத்தியரே உலகத்தில் பல மனிதர்களுக்கு எல்லாம் அனைத்தும் செப்பி உலகத்தை மாற்ற வந்த ஞானியே!!! குரு முனியே... விஷ்ணு அகத்தியரே!!! பிரம்மா அகத்தியரே!!! ஈசனே அகத்தியரே!!! கணபதி அகத்தியரே!! முருகா அகத்தியரே!! சபரி அகத்தியரே!! மீனாட்சி அகத்தியரே!! அகத்தியரே அனைத்து சித்தர்களுக்கெல்லாம் இன்னும் இப்படித்தான் மனிதர்களை ஆட்கொண்டு அனைத்து விஷயங்களையும் செப்ப வேண்டும் என்று அழைத்து அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கும் அகத்தியரே!!! ஞான அகத்தியரே மோட்ச அகத்தியரே சக்தி அகத்தியரே சூல அகத்தியரே பல பாவ வினைகளை அகற்றி மனிதனுக்கு புண்ணிய வினைகள் சேர்த்து இதனின்று சிலர் துன்பம் அகற்றி கொண்டு வரும் அகத்தியரே அகத்தியரே குருமுனியே குருமுனியே அருள்வாய் குரு முனியே மக்களெல்லாம் தீய சக்திகளில் கூட தீய மனதாக ஆட்கொண்டு இருப்பினும் இருந்த போதிலும் நல் ஒழுக்கத்தையும் நல் மனதையும் தந்து காத்திடும் அகத்தியரே தந்து காத்திடு கடை நாள் வரையிலும் நிச்சயம் தன்னில் அவர் மனதை திருத்தி உண்மை பொருள் எதுவென்று கூட கூறி அவந்தனையும் உயர்த்தி வைக்கும் அகத்தியனே அகத்தியனே அனைவரையும் சமமாக பார்க்கும் அகத்தியனே!!! அனைவரையும் பின் சேய்கள் என்று நினைக்கும் அகத்தியரே உன் கருணைக்கு எல்லையில்லா அகத்தியரே தந்தையே அகத்தியரே தாயே அகத்தியரே குருவே அகத்தியரே இறைவா அகத்தியரே ஞான அகத்தியரே இன்ப அகத்தியரே துன்ப அகத்தியரே கருணை அகத்தியரே புண்ணிய அகத்தியரே அகத்தியரே பல அரசர்களை எல்லாம் நல்வழிப்படுத்தி இப்படி ஆட்சி செய்தால் மக்களும் திருந்தி உன் வாழ்க்கையும் இன்னும் கூட சிறக்கும் என்று அரசர்களுக்கெல்லாம் உத்தரவிட்ட அகத்தியரே கலியுகத்தில் வந்து உலகை எல்லாம் ஆளப் போகின்ற அகத்தியரே அகத்தியரே ஏழ்மையில் இருந்தாலும் பின் அகத்தியனை நினைப்பவருக்கு வந்து இவன் தன் அறிந்தும் கூட பன்மடங்கு உயர்த்துபவரே உயர்த்துபவரே அகத்தியனை தெரியாதவராயினும் அகத்தியரை திட்டி தீர்ப்பவரையும் கூட நின்று மீண்டும் பின் அவர் தம் மனதில் அன்பை விளைவிக்கும் அகத்தியரே பின் அகத்தியரே காட்டிக்கொள்ளும் அகத்தியரே உயர்ந்தவரே உயர்ந்தவரே மனதில் ஆளும் உயர்ந்தவரே கருணைமிக்க உகந்தவரே தேவாதி தேவருக்கெல்லாம் அருள் தந்த இப்படி நடந்தால் ஞானமும் மோட்சமும் பெறலாம் என்று பின் அருள்பவரே அருள் தந்தையே விஞ்ஞானத்தின் தந்தையே இன்னும் இவ்வுலகத்தில் என்ன என்ன ? பின் நடக்க போகின்றது? என்பதை எல்லாம் உணர்ந்தவரே!!! எல்லா நாட்டவருக்கும் சொந்தங்கள் போன்று அனைவரையும் காப்பவரே எப்படி அழிவு இருக்கும் என்பதை எல்லாம் அறிந்தும் கூட சில கஷ்டங்கள் பட்டு அனைவரையும் மீட்டெடுத்து கரையில் சேர்ப்பவர் அகத்தியரே அகத்தியரே குருமுனியே!! குருமுனியே!! தேவாதி தேவனே தேவாதி தேவர்கள் அன்பாக என் நெஞ்சில் அழகாக குடி கொண்டிருக்கும் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் கூட நீயில் ஒருவனே அகத்தியரே படைத்த அகத்தியரே ஏழ்மை ஆயினும் பின் பிறந்தோருக்கெல்லாம் பின் செல்வத்தை பக்குவங்கள் பட்டு பட்டு பின் இப்படி இருந்தால்தான் வாழ முடியும் என்று சொல்லும் அகத்தியரே அகத்தியனுக்கு இணை யார்?? என்று சொல்ல கூறு?? என்றெல்லாம் பின் பின்... முருகனை வளர்த்தவரே!!! கணபதியை வளர்த்தவரே!!! எங்களுக்கெல்லாம் அருள் நிறைந்த வாழ்க்கையையும் கொடுத்தவரே கொடுத்தவரே கொடுத்தவரே நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தையும் உலகத்தில் சாதிக்கலாம் என்று சொல்பவரே நல் மனதாக இருந்தால் இவ்வுலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம் என்று சொல்பவரே அகத்தியரே குருமுனியே அகத்தியரே குரு முனியே அகத்தியரே ஆனந்த கண்ணீரில் இவையெல்லாம் செப்புகின்றேன் அகத்தியரே உன்னை இன்னும் போற்றி பாட !!!! நீ அதையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் இருப்பவரே குருமுனியே குருமுனியே உயர்ந்தவரே அனைத்து விஷயங்களும் தெரிந்தவரே அகத்தியரே போற்றி ஈசனே அகத்தியரே போற்றி பிரம்மனே அகத்தியரே போற்றி விஷ்ணுவே அகத்தியரே போற்றி துர்கா அகத்தியரே போற்றி பைரவா அகத்தியரே போற்றி போற்றி சித்தர்களே அகத்தியரே போற்றி ஞானிகள் அகத்தியரே போற்றி ரிஷிமார்களின் அகத்தியரே போற்றி போற்றி போற்றி நின் தாள் பணிந்தேன் அகத்தியரே நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!! நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்! தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 11:09 pm 6 comments: Email This BlogThis! Share to X Share to Facebook Share to Pinterest Sunday, 19 January 2025 சித்தன் அருள் - 1781 - அன்புடன் அகத்தியர் - புடா புஷ்கர் வாக்கு! வணக்கம் அகத்தியர் அடியவர்களே.... அஜ்மீர் ராஜஸ்தான் புஷ்கரில் குருநாதர் அகத்தியர் பெருமான்... சாவித்திரி காட் ரத்தனகிரி மலையில் பொது வாக்கு தந்த மறுநாள். 31/12/2024..புடா புஷ்கர் எனும் தீர்த்தக்கரையில் வைத்து குருநாதர் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வாக்குகள் தந்தார் அதன் தொகுப்பு ! குறிப்பு! குருநாதர் சில பக்தர்களுக்கு மட்டும் கூறிய பதில் வாக்காக இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்... குருநாதருடைய வாக்குகளை பெற்றவர்கள்!! அவர்களுக்கு குருநாதர் சொன்ன முற்பிறவி ரகசியங்கள் எல்லாம் அவரவருக்கு தனித்தனியாக கூறியது எல்லாம் அனைவருக்கும் தெரியும் ! அவரவருக்கு சில சந்தேகங்கள் சில கேள்விகள் இருக்கும். குருநாதர் இந்த வாக்கில் கேள்விகளுக்கு பதில் உரைத்த வாக்கு அனைவரின் தன் முற்பிறவி ரகசியங்கள் மற்றும் மனதில் இருக்கும் சந்தேகங்கள் கேள்விகள் குருநாதர் கூறிய வாக்குகளின் சாராம்சத்தோடு பொருந்தி போகும் சந்தேகங்கள் விலகும். அதனால் இதை தனிநபர் வாக்குகளாக பார்க்க கூடாது அதில் உள்ள பொதுவான விஷயங்கள் என்ன என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வாக்கு வெளியிடப்படுகின்றது. அப்பனே என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே.. ஆசிர்வாதங்கள் அப்பனே மிகுந்து கொண்டே போகும் அப்பா... இதனால் அப்பனே எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே.. சில மன மாற்றங்கள் அப்பனே நல்விதமாகவே நிச்சயம் அப்பனே யானே செய்திடுவேன் என்பேன் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!! அப்பனே நிச்சயம் அப்பனே பல வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே அவை அனைத்தும் நிச்சயம் அப்பனே போக போக எவ்விடத்தில் என்பதையெல்லாம் தீர்மானித்து யான் எடுத்துரைப்பேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே பின் அனைத்தும் இப்பொழுது கூட யான் சொல்லலாம்.. ஆனாலும் அப்பனே கேள்விகளாக நீங்கள் கேட்கத்தான் போகின்றீர்கள்... இதனால் கேளுங்கள்!! குருவே முக்தி என்றால் என்ன மோட்சம் என்றால் என்ன இரண்டிற்கும் என்ன வேறுபாடு????? அப்பனே நிச்சயம் அனைத்தும் இழந்தால் முக்தி!!!!...... அப்பனே இதன் மூலம் வருவது மோட்சம்!!! குருவே முக்தி அடைந்த ஆத்மா எங்கு இருக்கும்??? மோட்சம் அடைந்த பின் ஆத்மா எங்கு செல்லும்??? அப்பனே முக்தி ஆன பிறகு அப்பனே நிச்சயம் அப்பனே மனம் இறைவனிடத்தில் சென்றடைந்து விடும் என்பேன் அப்பனே. மோட்சம் என்றால் அப்பனே நிச்சயம் பின் உடம்பும் அப்பனே ஆன்மாவும் தனித்தனி அப்பனே... ஆன்மா நிச்சயம் இறைவனிடத்தில் கூட... அப்பனே அதாவது அப்பனே பின் உடம்பும் கூட அப்பனே பின் இறைவனால் அனுப்பப்பட்ட அப்பனே... சில உயிர்கள் அப்பனே பின் உண்ணும் அப்பா... இதுதான் அப்பனே பின் அதனால் உடம்பும் பின் எவை என்று கூற ஆன்மாவும் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனுக்கு சொந்தமானது அப்பனே... அவனே எடுத்துக் கொள்வான்.... இதுதான் மோட்சம். குருவே மனம் ஆத்மா என்று நீங்கள் கூறுகின்றீர்கள் மனம் மற்றும் ஆத்மாவிற்கு என்ன வித்தியாசம்?? அப்பனே வித்தியாசம் இல்லையப்பா... ஆனால் இவ் ரகசியத்தை இப்பொழுது யான் சொல்லப்போவதில்லை!! குருவே அப்படி என்றால் மனமும் ஆத்மாவும் இறைவனிடத்தில் செல்கின்றதா??? அப்பனே பின் மனமும் கூட ஆத்மாவும் கூட ஒன்றே என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே இப்பொழுது இதை யான் தெளிவுபடுத்தவில்லை!! குருவே எங்கள் வாக்குகளில் மனிதனுடைய ஆத்மா உடலில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் என்று கூறி இருந்தீர்கள் அதைப் பற்றி விளக்கமாக கூறுங்கள்!!! அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய ஒவ்வொருவருக்கும் ஆன்மா உடலில் பல பாகங்களில் இருக்கும் அப்பனே சிலருக்கு கண்களில் சிலருக்கு மூக்கு நுனியில் சிலருக்கு முதுகில் சிலருக்கு வயிற்றில் சிலருக்கு அவரவர் குறிகளிலும் கூட இருக்கும் அப்பனே. அப்பனே இவ்வாறு நிச்சயம் குறிகளில் இருந்தால் அப்பனே பின் அதிக காம உணர்வுகள் வந்து கொண்டே இருக்கும்.. அப்பனே பின் முதுகில் பின்னே இருந்தால் அப்பனே நிச்சயம் பின் அதாவது அனைத்தும் தெரிந்து கொள்வார்கள் அப்பனே ஆனாலும் வெளிகொள்ள மாட்டார்கள். அப்பனே நுனியில் அதாவது மூக்கின் நுனியில் இருந்தால் அப்பனே கோபங்கள் அதிகமாக வரும் அப்பனே நிச்சயம் வயிற்றில் இருந்தால் அதிக அளவு உண்பார்கள் அப்பனே. அப்பனே நிச்சயம் அப்பனே எங்கெங்கும் உள்ளதோ அதன்படியே அப்பனே ஆசைகள் வரும் அப்பா!!! அதை அப்பனே நிச்சயம் அதாவது புருவம் மத்தியில் வைக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே உடலில் அங்கங்கு இருக்கும் ஆன்மாவை புருவ மத்தியில் இவ்வாறு வைத்தால்தான் முக்தியும் கிடைக்கும் மோட்சமும் கிடைக்கும்!! அப்பனே அங்கு வைப்பதற்கு பல கஷ்டங்கள் என்பேன் அப்பனே..... அப்பனே பல தவங்கள் பல தியானங்கள் பல யோகாசனங்கள் இறைவனை வணங்கினாலும் முடியாதப்பா!!!! அப்பனே இவ் ஆன்மா எத்தனை பிறப்புக்கள் எடுத்துள்ளதோ? பின் அத்தனை பிறவிகளில் எங்கெல்லாம் இறைவனை கண்டுள்ளதோ... அவ்வவ் இடங்களுக்குச் சென்றால் தான் அப்பனே தானாக மேலே ஏறுமப்பா!!! ஆனால் இன்றய அளவில் யாரும் செல்வதில்லை... அப்பனே பின் யாரோ ஒருவருக்குத்தான் முக்தியும் மோட்சமும் கிடைக்கின்றது என்பேன். அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அங்கு (புருவ மத்தியில்) வந்து விட்டால்...!!! இறைவன் என்னடா!!!! இறைவன் என்னிடத்தில் இருக்கின்றான்... போங்களடா என்று சொல்லிவிடுவீர்கள் நீங்கள்!! இதனால் அப்பனே நீங்கள் தியானங்கள் என்ன செய்ய வேண்டும்... அப்புறம் நீங்கள் என்ன செய்தாலும் ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே... இதனால் அவை எப்படி பின் வைப்பது என்பதை யான் அறிவேன் அப்பனே. அதனால் உங்களை (திருத்தலங்கள் திருத்தலங்களாக) அலைய வைக்கின்றேன் அவ்வளவுதான். அப்பனே அதனால்தான் அப்பனே உங்களை எங்கெங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் அழைத்துச் சென்று அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது அங்கே தானாகவே எழுந்து விடும் என்பேன் அப்பனே. அப்படி சில சில இடங்களில் கூட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் சக்திகள் அதிகம். அப்பனே கிரகங்களின் சக்திகள் கூட பின் அதிகம்...அவ் இடங்களுக்கு சென்றாலே அப்பனே... சிறிது சிறிதாக அப்பனே... இங்கு வந்து விட்டால் (புருவ மத்தியில்) அப்பனே அனைத்து திறமைகளும் கூட அப்பனே உங்களுக்கு வந்து விடும் என்பேன் அப்பனே அடுத்தவரை பற்றி நீங்களே சொல்லலாம் என்பேன்!! நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா.. பின் அதாவது அடுத்து என்ன நடக்கும் என்று நீங்களே கணித்து விடலாம் என்பேன் அப்பனே!!! அப்பனே இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே இதனால் முன்னே நடப்பது கூட யான் உங்களுக்கு சரியாகவே அப்பனே எப்படியெல்லாம் நடத்திட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே.. அது சுலபம் அப்பா!!! அப்பனே இன்னும் நாட்கள் செல்லட்டும் அப்பனே பின் உங்களுக்கு சொல்லித் தருகின்றேன்... நீங்களே அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நீங்களே பின் கணித்துக் கொள்ளலாம் என்பேன்.அப்பனே அப்பனே இதனால் இறைவன் எவ் வடிவத்தில் ரூபத்தில் வருவான் என்பதை எல்லாம் அப்பனே யானே அறிவேன் அதனால் உங்களுக்கு செப்புவதில்லை... யானே அழைத்து செல்கின்றேன். அப்பனே... அப்பனே இதனால்தான் அப்பனே அனைத்தும் யாம் அறிவோம் அப்பனே கவலையை விடுங்கள்.. அப்பனே பின் நிச்சயம் சொல்லியும் கொடுப்போம். இதனால் அப்பனே மனிதன் தவம் செய்து கொண்டு!!!!.... அப்பனே இன்னும் யோகாசனங்கள் செய்து கொண்டு!!!..... இன்னும் அப்பனே பின் எதை எதையோ செய்து கொண்டு அப்பனே!!!....... பின் நிச்சயம் அவ் ஆன்மாவை எழுப்பாமல் பின் தோல்வி அடைந்து விடுகின்றான் அப்பனே இதனால் மறுபிறப்பும் பின் தோன்றுகின்றது என்பேன் அப்பனே. அப்பனே நிச்சயம் பின் இப்படி ஆத்மா மேலே வந்து விட்டால் எதற்கும் ஆசைப்பட மாட்டான் அப்பா... அமைதியாக உட்கார்ந்து விடுவான் என்பேன் அப்பனே... ஆனாலும் இன்றளவில் தியானங்கள் அவை இவை செய்கின்ற பொழுது மீண்டும் அப்பனே பின் மனிதன் என்ன தவறுகள் பின் செய்கின்றானோ.. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான் என்பேன் அப்பனே... இவையெல்லாம் அப்பனே ஏற்க முடியாது சித்தர்கள் யாங்கள். அப்பனே எங்களால் முடியும் அப்பா... பின் அங்கு எழுப்புவதற்கு (புருவ மத்தியில்)... ஆனால் அப்பனே இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே....அது தன் மாறுவதற்கு பின் நீங்கள் அப்பனே பின் எங்கெங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்... அதை அப்பனே நிச்சயம் சற்று யோசிக்க வேண்டும். அப்பனே இதனால் பின் சிலருக்கு கண்களில் இருக்குமப்பா!!! கண்கள் தவறானதை எல்லாம் பார்க்கும் அப்பா இதனால் அப்பனே நிச்சயம் இன்னும் கர்மா ஏற்படும் அப்பா. சிலருக்கு அப்பனே காதுகளில் இருக்குமப்பா.. ஆனால் காதுகளில் அப்பனே தவறானதை எல்லாம் கேட்கும் அப்பா.. இதனால் அப்பனே இன்னும் கர்மா அதிகரிக்கும் அப்பா... கஷ்டங்கள் அதிகரிக்கும் அப்பா. சிலருக்கு கைகளில் கூட அப்பனே அதாவது வாங்குவதும் செயல்களை செய்வதும்.... சிலருக்கு கால்களில் அப்பா.... மிதிக்காத இடங்களுக்கெல்லாம் சென்று அப்பனே.....(கால்கள் வைக்க கூடாத இடங்களுக்கெல்லாம் சென்று கர்மாவை சம்பாதித்துக் கொள்வது) அப்பனே இன்னும் இருக்கின்றதப்பா... இதனால்தான் அப்பனே பின் எவை தன் பின்... அதாவது அங்கு உள்ளதால் அப்பனே... அதனால் பின் இன்னும் அதிகரித்தால் நோய்கள் வந்து விடுகின்றது அவ்வளவுதான் என்பேன் அப்பனே. உதாரணத்திற்கு மூக்கு நுனியில் சொன்னேன் அப்பனே இதனால் கோபங்கள் அதிகமாக வருமப்பா... இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே.. இல்லையென்றால் கர்மா சேர்ந்து விடும் அப்பா அவ்வளவுதான்... இது பொதுவானவை அனைத்துமே.... (உடலில் ஆத்மா இருக்கும் பாகங்கள் சார்ந்து தவறான செயல்களை செய்யும் பொழுது கர்மா சேர்ந்து விடும்) அப்பனே பின் ஒன்றை அதாவது.. நாளை இவை நடந்து விடும் அவை நடந்து விடும்... என்று சொல்லிவிட்டு செல்லலாம் என்பேன் அப்பனே.. ஆனாலும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.. என்னுடைய கருத்து... அதாவது அப்பனே நீங்கள் கூட... தன் பிள்ளைகள் படிப்பில் நன்றாக அதாவது படிக்க வேண்டும்.. முதல் தரத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா?!!!... அதேபோலத்தான் அப்பனே இத் தந்தையானவனுக்கும்.. நீங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று!!! குருவே நீங்கள் அனைத்தும் எங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள் கூடவே இருக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள் நாங்கள் மனிதர்கள் எங்களால் சில சில தவறுகள் ஏற்பட்டும் விடுகின்றது இதனால் கர்மா சேர்ந்து விடுமோ என்ற பயமும் இருக்கின்றது அப்பனே யான் விடப்போவதில்லை என்பேன் அப்பனே... அதனால்தான் அப்பனே சில விஷயங்கள் நீங்கள் நினைப்பது நடக்காமல் போவதற்கும் கூட யான்தான் காரணம்!!! கர்மா சேரும் எதையும் அப்பனே உங்களை அண்ட விடுவதில்லை என்பேன் அப்பனே. குருவே நீங்கள் வாக்குகளில் ஒரு ஆத்மா பல குறிப்பாக ஆயிரம் பிறவிகளுக்கு மேல் பிறப்பெடுத்து வரும் என்று கூறினீர்கள்... எங்களுக்கும் இதேபோன்று கூறினீர்கள் இதில் ரிஷிகளால் முனிகளால் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் எங்களுக்கு கூறியுள்ளீர்கள்.. முற்பிறவிகளில் பெற்ற இறை தரிசனம் முனிவர்களின் சித்தர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்ற எங்களுடைய. இவ்வளவு தூரம் பயணம் செய்த எங்களுடைய ஆத்மா தற்பொழுது அவற்றில் இருந்து எல்லாம் விலகி கர்மா உள்ள மனிதப் பிறவியாய் ஏன் பிறக்க நேரிட்டது?????! அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே... ஆனாலும் இதற்கெல்லாம் பதில் இப்பொழுது இல்லை... அப்பனே நல் முறையாக... இன்னும் விவரிக்கும் பொழுது அப்பனே... நிச்சயம் அனைத்தும் வரும் அப்பா எதை எப்பொழுது தெரிவிக்க வேண்டும் என்பதையெல்லாம் யான் அறிவேன் அப்பனே அப்பனே இத்தனை ஆண்டுகள் பிறந்து பிறந்து வந்துள்ளதால் தான் அப்பனே... நீங்கள் என்னுடைய அருகிலே இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே. குருவே நீங்கள் வாக்குகளில் எங்களுடைய முற்பிறவிகளில் ரிஷி முனி களோடு இருந்தோம் சித்தர்களோடு இருந்தோம் என்று இறைவன் தரிசனம் எல்லாம் உங்களுக்கு கிடைத்தது என்றெல்லாம் வாக்குகளில் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்... உங்களோடு இருந்த பொழுது ரிஷிமுனிகளோடு இருந்த பொழுது அப்பொழுதே எங்களுக்கு ஏன் முக்தி கிடைக்கவில்லை????! அப்பனே இன்னும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பேன் அப்பனே.... அப்பனே பின் அதாவது யாங்கள் மீண்டும் அனுப்புவோம் என்போம் அப்பனே... சில நபர்களை மட்டுமே அப்பனே!!! மக்களுக்கு சேவையை செய்ய என்பேன் அப்பனே!! அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே புரிந்து கொள்ளுங்கள். குருவே சித்தர்களோடு ரிஷிமுனிகளோடு முற்பிறவிகளில் வாழ்ந்த ஆத்மாக்கள் மனிதப் பிறப்பு எடுத்து வரும் பொழுது அவர்களுடைய ஆத்மா புருவ மத்தியில் இருக்குமா??? மனிதப் பிறப்பு எடுத்து வந்தாலும் அப்பனே பல ஆசைகள் இருந்தால் நிச்சயம் ஆத்மா அவ் அவ் இடத்தில் தான் இருக்கும் என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே எதையும் நினைக்காமல் எதற்கும் ஆசைப்படாமல் இருந்தாலே பின் சுலபமாகவே மேலே ஏறிவிடும் தானாகவே என்பேன் அப்பனே. குருவே முற்பிறவிகளில் இருந்த சித்தர்களின் வாசம்... தற்போது இப்பிறவிகளில் விலகி நிற்க வேண்டிய கட்டாயம் என்ன??? அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே போக போக புரியும் அப்பா... அனைத்து பின் பொருள்கள் மீதும் ஆசை கொண்டாலும் அப்பனே தெரியாதப்பா... முதலில் உங்கள் கடமைகள் விருப்பங்கள் நிறைவேறட்டும்... அதன் பிறகு ஆசையே இல்லாமல் இருக்கும் பொழுது புரியும் அப்பா அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விசுவாமித்திரன் பின் தவத்தை மேற்கொள்ளவே பின் பல ஆயிரம் ஆண்டுகள் அதாவது பல ஆயிரம் பிறப்புக்கள் எடுத்து வந்து தான்... அவந்தன் பெற்றான் என்பேன் அப்பனே... நேற்றைய பொழுதில் சொன்னேன் அல்லவா... அதனால் அப்பனே ஒரே பிறவியில் பின் நிச்சயம் அப்பனே முக்தியும் மோட்சமும் கிடைக்காதப்பா. அப்பனே இறைவனை வணங்குவதற்கே தகுதிகள் வேண்டுமப்பா.. அதாவது பின் பல ஆயிரம் பிறவிகள் எடுக்க வேண்டி பின் வேண்டி வந்தால்தான் அப்பனே... இவை போன்ற இடங்களுக்கெல்லாம் வர முடியும் என்பேன் அப்பனே. குருவே என்னுடைய முற்பிறவியில் சித்தர்களோடும் ரிஷிமுனிகளோடும் பயணப்பட்ட என் ஆத்மா இந்த பிறவியில் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன் என்னுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது அப்பனே நிச்சயம் அப்பனே பல பல முனிவர்கள் கூட தேவர்கள் கூட அப்பனே அறிந்தும் கூட எவ்வாறு வாழ்க்கை இருந்தது இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டாயா அப்பனே அனைத்து சுகங்களும் கிடைக்காதப்பா... பின் காலில் அணிவதற்கு செருப்பு கூட கிடைக்காதப்பா!! அப்பனே பொதுவாக சொல்கின்றேன் உங்களுக்கு வாக்குகள் தரும் பொழுது ஒவ்வொரு படியாக ஏற்றிவிட்டு கொண்டே இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொரு கர்மாவையும் தொலைத்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. குருவே நான் விரும்பும் இறைவனை அடைவது எப்படி???? யான் சொல்லியதை கேட்டு நடந்தாலே இறைவன் உங்களை தேடி வருவான் அப்பனே... இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே... யான் என்ன சொல்கின்றேனோ அதைக் கேட்டு நடங்கள் அப்பனே அப்படியே கடைப்பிடித்து வரும் பொழுது இறைவனையும் காண்பிப்பேன் அப்பனே உங்களை தேடி வர செய்வேன் என்பேன் அப்பனே. அப்படியே நீங்கள் அதாவது மனிதர்கள் அனைவருமே.. விரும்பி விட்டால் வந்து விடுவானா இறைவன்??????????? என்ன??????? அப்பனே.. நீங்களே சொல்லுங்கள் அனைவருமே யோசித்து!!! சொல்ல வேண்டும்!! இதை கேட்ட அடியவர்கள் ஒரு நிமிடம் அமைதிப்பொறுத்து.... உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர் பெருக்கெடுக்க !!; அப்பா அகத்தீசா!!!!! நீங்களே கருணாமூர்த்தி.... இறைவனை விட எங்கள் மீது அன்பும் கருணையும் வைத்திருப்பது நீங்கள் தான் உங்களைத் தவிர எந்த லோகத்திலும் மனிதர்கள் மீது கருணையும் பாசம் காட்டுவதற்கு ஆள் இல்லை அப்பா... உங்கள் பாதங்களே சரணம் அகத்தியப்பா!!! அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைத்தும் செய்வேன் என்பேன் அப்பனே அதாவது பிள்ளைகள் எதை கேட்டாலும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய அப்பனே நல்லவை அப்பனே தீயவை எதை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அதாவது.. உங்கள் பிள்ளைகளுக்கு கூட !! நீங்கள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து விடுகின்றீர்களா ??என்ன நீங்களே சொல்லுங்கள்!!! அப்பொழுது அப்பனே குழந்தைகள் அழும் அப்பா... என் தந்தை இது பின் வாங்கி கொடுக்க வில்லையே என்று... அவ்வாறுதான் நீங்கள் இப்படி!!! அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே உடம்பை மட்டும் விட்டு அப்பனே.. ஆன்மாவை வெளியேற்றுவது எப்படி எல்லாம் என்பதை அப்பனே இன்னும் காலங்கள் செல்லட்டும் சொல்கின்றேன் என்பேன் அப்பனே !!! அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே மற்றொரு தலத்தில் விரிவாகவே விவரிக்கின்றேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்!!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

No comments: