Thursday, November 7, 2024
ரகசிய வாக்கு ஐந்து
Wednesday 6 November 2024 சித்தன் அருள் - 1723 - அன்புடன் அகத்தியர் - காசி
வாக்கு! குருநாதர் புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 5 அப்பனே மனிதனும் ஒரு
இயந்திரம் தானப்பா!!! இப்பொழுதுதான் அப்பனே இயந்திரங்களை கண்டுபிடித்தான்
கண்டுபிடித்தான் என்றெல்லாம் சொல்லுகின்றார்கள் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே பின்
மனிதன் ஒரு இயந்திரம் தானப்பா. ஆனாலும் அப்பனே அதில் தன் அப்பனே எக்கிரகங்களையும்
கூட எவ் நட்சத்திரங்களையும் கூட அப்பனே சற்று அப்பனே ஒளி (கதிர்வீச்சுக்கள்)
குறைகின்ற பொழுதுதான் அப்பனே நோய்களும் கூட அப்பனே வயதும் ஆகிவிடுகின்றது அப்பனே
தொல்லைகள் வருகின்றது அப்பனே இறந்தும் விடுகின்றான் என்பேன் அப்பனே அப்பனே
அதனால்தான் அப்பனே தன் நட்சத்திரத்தில் அப்பனே சரியாகவே அப்பனே ஒவ்வொரு
திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே அங்கு நலமாகவே அப்பனே ஒவ்வொரு ராசி
தன்னிற்கும் கூட அப்பனே ஒவ்வொரு திருத்தலங்கள் அப்பனே!!! ஆனாலும் அங்கு சென்றாலும்
ஏன் நடப்பதில்லை என்பதெல்லாம் அப்பனே.. அனு தினமும் கூட அப்படி எதை என்று புரியாமல்
அனுதினமும் எதை என்று அறியாமல் கூட ஆனாலும் சரியாகவே அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே அதாவது அப்பனே பின் நிச்சயம் அதாவது ஒவ்வொரு பின் கிரகத்திற்கும் கூட
சரியாகவே அப்பனே பின் எதை என்று அறிய அறிய தானியங்கள் உள்ளது என்பேன் அப்பனே... அதை
சரியாக தன் நட்சத்திரத்தில் கூட அதாவது ராசி பின் எடுத்துக்காட்டாக ஒன்று
இருக்கின்றது என்பேன் அப்பனே... அதற்கு சரியானது அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே
பின் நிச்சயம் உட்கொண்டாலே போதுமானது அப்பா நோய்கள் அண்டாதப்பா அப்பனே
நவகிரகங்களுக்கும் கூட... நவகிரகங்களுக்கும் கூட அப்பனே நவ தானியத்தை எடுத்து
வந்தாலே போதுமானதப்பா!!! அப்பனே இவ்வாறு பின் நல் விதமாகவே அப்பனே நீரில் ஊறவைத்து
நன் முறைகளாகவே உட்கொண்டாலே போதுமானதப்பா... கிரகங்களின் தாக்கமும் ஏற்படாது
நோய்களும் ஏற்படாது என்பேன் அப்பனே!!! அப்பனே முன்னொரு காலத்தில் அப்பனே அது
போலத்தான் அப்பனே இவ்வாறெல்லாம் என்பேன் அப்பனே.... அவையெல்லாம் பச்சையாகவே அப்பனே
பின் பறித்து அப்பனே நல்விதமாகவே அப்பனே நீரில் இட்டு ஊறவைத்து அப்பனே பின்
அதிகாலையிலே அப்பனே வெறும் வயிற்றிலே கூட அப்பனே அருந்தினார்கள் என்பேன் அப்பனே...
அதனால்தான் நோய்கள் இல்லாமல் சக்திகளாகவே வாழ்ந்து வந்தனர் என்பேன் அப்பனே
ஆரோக்கியமாக அப்பனே யோகங்களாகவே!!! ஆனாலும் இன்றைய அளவு அப்பனே பின் யாரும் அதை
உட்கொள்ளுவதே இல்லை என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே நோய்களின் தாக்கம்
அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்பேன் அப்பனே!!! அப்பனே அவை மட்டுமில்லாமல் பின்
நிச்சயம் துளசி இலைகளிலும் கூட வில்வ இலைகளிலும் கூட அருகம்புல்லில் கூட அப்பனே
சரியாகவே சம அளவில் எடுத்து அப்பனே அதிகாலையிலே அப்பனே அதன் சாற்றை பின் நிச்சயம்
சிறிதளவு நிச்சயம் அப்பனே அருந்தி வந்தாலே போதுமானதப்பா... பின் அதாவது அனைத்து
நட்சத்திரங்களையும் கூட அப்பனே அதாவது பின் எதை என்று கூட பின் ஒவ்வொரு
நட்சத்திரத்திற்கும் கூட எவை என்று கூட ஒவ்வொரு நோய் பின் எதை என்று அறிய அப்பனே
பின் அவை தன் அதிகமாக தாக்குகின்ற பொழுது நோய் உருவாகும் அப்பா.... இதை நிச்சயம்
அருந்தி வர அருந்தி வர அப்பனே அவ் நிச்சயம் அதிக அளவு தாக்காதப்பா... நோய்களும்
வராதப்பா!! இதுதான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே இன்னும் ரகசியத்தை
சொல்லப் போகின்றேன்!!! (வணக்கம் அகத்தியர் அடியவர்களே 27 நட்சத்திரங்கள் 12
ராசிகள். 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி அதிபதி தனித்தனி
ரத்தின கற்கள் தனித்தனி கோயில்கள் தனித்தனி தானியங்கள் மரங்கள் நாடி பறவைகள்
விலங்குகள் என தனி தனியாக இருக்கின்றது இதில் குருநாதர் 27 நட்சத்திரங்களுக்கும்
தானியங்கள் மற்றும் 12 ராசிகளுக்குரிய தானியங்களையும் உண்டு வரவேண்டும் என்று கூறி
இருக்கின்றார் 1கிரகம்: சூரியன் (ஞாயிறு) ஸ்தலம்: சூரியனார் கோவில் தானியம்:
கோதுமை 2. கிரகம்: சந்திரன் (திங்கள்) ஸ்தலம்: திங்களூர் தானியம்: அரிசி 3கிரகம்:
செவ்வாய் ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில் தானியம்: துவரை 4. கிரகம்: புதன் ஸ்தலம்:
திருவென்காடு தானியம்: பச்சைபயறு 5. கிரகம்: குரு (வியாழன்) ஸ்தலம்: ஆலங்குடி
தானியம்: கொண்டை கடலை 6. கிரகம்: சுக்கிரன் (வெள்ளி) ஸ்தலம்: கஞ்சனூர் தானியம்:
மொச்சை 7. கிரகம்: சனி ஸ்தலம்: திருநள்ளாறு தானியம்: எள் 8. கிரகம்: ராகு ஸ்தலம்:
திருநாகேஸ்வரம் தானியம்: உளுந்து 9. கிரகம்: கேது ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
தானியம்: கொள்ளு என நவதானியங்களும் அந்தந்த கிரகங்களுக்குரிய நாட்களிலும் கொண்டு
வரலாம் அனுதினமும் நவதானியங்களை ஊறவைத்தும் உண்டு வரலாம்... வெறும் நட்சத்திர
கோயில்களுக்கும் நவகிரக கோவில்களுக்கும் செல்வது மட்டுமில்லாமல் முறைப்படி
நட்சத்திரங்களுக்கு உரிய நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை உண்டு வரும் பொழுது
நோய்களும் தீரும் நவகிரகங்களின் சக்தி நட்சத்திரங்களின் சக்தி கிட்டும் யோகங்களும்
ஏற்படும். நட்சத்திரம் தானியம் அஸ்வினி. கொள்ளு பரணி. மொச்சை கிருத்திகை. கோதுமை
ரோகினி. நெல் மிருகசீரிடம். துவரை திருவாதிரை. உளுந்து புனர்பூசம். கடலை பூசம். எள்
ஆயில்யம் பச்சைபயறு மகம். கொள்ளு பூரம். மொச்சை உத்திரம். கோதுமை ஹஸ்தம். நெல்
சித்திரை. துவரை சுவாதி. உளுந்து விசாகம். கடலை அனுஷம். எள் கேட்டை. பச்சைபயறு
மூலம். கொள்ளு பூராடம். மொச்சை உத்திராடம் கோதுமை திருவோணம் நெல் அவிட்டம். துவரை
சதயம். உளுந்து பூரட்டாதி. கடலை உத்திரட்டாதி எள் ரேவதி. பச்சை பயறு. இவை
நட்சத்திரங்களுக்குரிய தானியங்கள் ஆகும். நட்சத்திரங்களுக்குரியதிருத்தலங்கள்
அஸ்வினி - கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர்
கோயில், திருத்துறைப்பூண்டி. பரணி நட்சத்திரம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்,
திருப்புகலூர், கார்த்திகை நட்சத்திரம் - ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை.
ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும்
ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல். மிருகசீரிடம் - ஸ்ரீ முருகன்
ஆலயம் - எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர்.
திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு. திருவாதிரை - ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம்,
அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர். புனர்பூசம் -
ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி. பூசம் -
ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும்
சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம்.
ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில்.
ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம். மகம் -ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்
கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,
திருவெண்காடு, சீர்காழி. பூரம் - ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம்,
புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்.
உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர்
கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு. அஸ்தம் - ஸ்ரீ
கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை. சித்திரை - ஸ்ரீ
சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர்
திருக்கோயில், திருவையாறு. சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை,
பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர். விசாகம் - ஸ்ரீ
முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப்
பெருமாள் ஆலயம், கபிஸ்தலம். அனுஷம் - ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம்,
திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில்,
(நாச்சியார்கோவில்) கும்பகோணம். கேட்டை - ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர்.
மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம். மூலம் - ஸ்ரீ
சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை.
பூராடம் - ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ.
தொலைவு. மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர்
ஜீவ சமாதி ஆலயம்) உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை.
மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம். திருவோணம் - ஸ்ரீ பிரசன்ன
வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்
கோயில் திருமுல்லைவாயல், சென்னை. அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம்,
கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு. சதயம் - ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம்,
திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர். பூரட்டாதி - ஸ்ரீ திருவானேஸ்வரர்
ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்,
திருக்குவளை. உத்திரட்டாதி - ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார்
கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம். ரேவதி -
ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ
நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை ) 12 ராசிகளுக்கு உரிய
கோயில்கள் 1,மேஷம் - ராமேஸ்வரம் 2,ரிஷபம் --திருப்பதி 3.மிதுனம் - பழனி 4,கடகம் -
ராமேஸ்வரம் 5,சிம்மம் - வாஞ்சியம் 6,கன்னி-திருக்கழுக்குன்றம் 7.துலாம் - திருத்தணி
8,விருச்சிகம் -காஞ்சிபுரம் ஏகாம்பரம் 9,தனுசு-மயிலாடுதுறை 10,மகரம் - சிதம்பரம்
11.கும்பம் - தேவிப்பட்டினம் 12,மீனம் - வைத்தீஸ்வரன் கோவில்,) அப்பனே அது மட்டும்
இல்லாமல் அப்பனே நெல்லிக்கனியையும் கூட அனுதினமும் உட்கொண்டு வந்தாலே
போதுமானதப்பா!!! அப்பனே நிச்சயம் எவ் நோயும் ஏற்படாது என்பேன் அப்பனே!!! அப்பனே அது
மட்டும் இல்லாமல் வாரத்திற்கு இருமுறையாவது அப்பனே எலுமிச்சை சாற்றினை பருகி
வந்தாலே போதுமானதப்பா அப்பனே இன்னும் அப்பனே அதில் அப்பனே அதாவது கிரகங்களில்
இருக்கும் சக்தி அதிகமாக உள்ளதப்பா... அதை நிச்சயம் அறிந்து வந்தாலே
போதுமானதப்பா... அப்பனே நல் யோகங்கள் அப்பனே பெருமப்பா!!! அப்பனே அதனால் அப்பனே
பின் அதாவது அப்பனே பின் அவ் எலுமிச்சை செடியின் கூட சரியாகவே சரியான இடத்தில் தான்
அப்பனே அதிகமாக கிரகங்களின் பின் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட சக்திகள்
விழுகின்றதோ அங்கு தான் வளருமப்பா!!! அப்பனே இதற்கு சரியான சான்று என்னவென்றால்
அப்பனே நிச்சயம் அப்பனே பசுவும் கூட பசு மாடுகள் கூட அப்பனே நல் விதமாகவே அப்பனே
எங்கு பின் சரியாகவே முன்பெல்லாம் அப்பனே புல்லை சரியாகவே அப்பனே.. அதாவது
நவகிரகங்களின் கூட அப்பனே சக்திகள் விழுகின்ற இடத்தில் தான் அவை தன் நிச்சயம்
உட்கொள்ளும் என்பேன். அப்பனே இதனால் அப்பனே பின் மாடுகள் அவ்விடத்தில் புற்களை
உட்கொள்ளும் பொழுது நிச்சயம் அதாவது பின் அவை தன் உள்ளே நவகிரகங்களின் சக்திகளும்
பின் உள்ளே போகுமப்பா!!! அப்பனே அவ்வாறு நிச்சயம் வெளிவரும் பொழுது அப்பனே அவை தன்
மருந்தாக செயல்பட்டது என்பேன் அப்பனே. (கோமியம் மற்றும் பசுஞ்சாணி) இப்போதெல்லாம்
அவை மாறிவிட்டது என்பேன் அப்பனே!!! அப்பனே மனிதன் தெரியாமல் பின் ஆன்மீகத்தை அப்பனே
குறிப்பிடுகின்றான் என்பேன் அப்பனே ஆனால் அதில் என்ன லாபம்??? என்பேன் அப்பனே!!!
குருநாதர் கூறிய புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 6 ல் தொடரும் ஓம் ஸ்ரீ
லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment