Thursday, November 7, 2024

ரகசிய வாக்கு ஐந்து

Wednesday 6 November 2024 சித்தன் அருள் - 1723 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! குருநாதர் புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 5 அப்பனே மனிதனும் ஒரு இயந்திரம் தானப்பா!!! இப்பொழுதுதான் அப்பனே இயந்திரங்களை கண்டுபிடித்தான் கண்டுபிடித்தான் என்றெல்லாம் சொல்லுகின்றார்கள் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே பின் மனிதன் ஒரு இயந்திரம் தானப்பா. ஆனாலும் அப்பனே அதில் தன் அப்பனே எக்கிரகங்களையும் கூட எவ் நட்சத்திரங்களையும் கூட அப்பனே சற்று அப்பனே ஒளி (கதிர்வீச்சுக்கள்) குறைகின்ற பொழுதுதான் அப்பனே நோய்களும் கூட அப்பனே வயதும் ஆகிவிடுகின்றது அப்பனே தொல்லைகள் வருகின்றது அப்பனே இறந்தும் விடுகின்றான் என்பேன் அப்பனே அப்பனே அதனால்தான் அப்பனே தன் நட்சத்திரத்தில் அப்பனே சரியாகவே அப்பனே ஒவ்வொரு திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே அங்கு நலமாகவே அப்பனே ஒவ்வொரு ராசி தன்னிற்கும் கூட அப்பனே ஒவ்வொரு திருத்தலங்கள் அப்பனே!!! ஆனாலும் அங்கு சென்றாலும் ஏன் நடப்பதில்லை என்பதெல்லாம் அப்பனே.. அனு தினமும் கூட அப்படி எதை என்று புரியாமல் அனுதினமும் எதை என்று அறியாமல் கூட ஆனாலும் சரியாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே பின் நிச்சயம் அதாவது ஒவ்வொரு பின் கிரகத்திற்கும் கூட சரியாகவே அப்பனே பின் எதை என்று அறிய அறிய தானியங்கள் உள்ளது என்பேன் அப்பனே... அதை சரியாக தன் நட்சத்திரத்தில் கூட அதாவது ராசி பின் எடுத்துக்காட்டாக ஒன்று இருக்கின்றது என்பேன் அப்பனே... அதற்கு சரியானது அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் உட்கொண்டாலே போதுமானது அப்பா நோய்கள் அண்டாதப்பா அப்பனே நவகிரகங்களுக்கும் கூட... நவகிரகங்களுக்கும் கூட அப்பனே நவ தானியத்தை எடுத்து வந்தாலே போதுமானதப்பா!!! அப்பனே இவ்வாறு பின் நல் விதமாகவே அப்பனே நீரில் ஊறவைத்து நன் முறைகளாகவே உட்கொண்டாலே போதுமானதப்பா... கிரகங்களின் தாக்கமும் ஏற்படாது நோய்களும் ஏற்படாது என்பேன் அப்பனே!!! அப்பனே முன்னொரு காலத்தில் அப்பனே அது போலத்தான் அப்பனே இவ்வாறெல்லாம் என்பேன் அப்பனே.... அவையெல்லாம் பச்சையாகவே அப்பனே பின் பறித்து அப்பனே நல்விதமாகவே அப்பனே நீரில் இட்டு ஊறவைத்து அப்பனே பின் அதிகாலையிலே அப்பனே வெறும் வயிற்றிலே கூட அப்பனே அருந்தினார்கள் என்பேன் அப்பனே... அதனால்தான் நோய்கள் இல்லாமல் சக்திகளாகவே வாழ்ந்து வந்தனர் என்பேன் அப்பனே ஆரோக்கியமாக அப்பனே யோகங்களாகவே!!! ஆனாலும் இன்றைய அளவு அப்பனே பின் யாரும் அதை உட்கொள்ளுவதே இல்லை என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே நோய்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்பேன் அப்பனே!!! அப்பனே அவை மட்டுமில்லாமல் பின் நிச்சயம் துளசி இலைகளிலும் கூட வில்வ இலைகளிலும் கூட அருகம்புல்லில் கூட அப்பனே சரியாகவே சம அளவில் எடுத்து அப்பனே அதிகாலையிலே அப்பனே அதன் சாற்றை பின் நிச்சயம் சிறிதளவு நிச்சயம் அப்பனே அருந்தி வந்தாலே போதுமானதப்பா... பின் அதாவது அனைத்து நட்சத்திரங்களையும் கூட அப்பனே அதாவது பின் எதை என்று கூட பின் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கூட எவை என்று கூட ஒவ்வொரு நோய் பின் எதை என்று அறிய அப்பனே பின் அவை தன் அதிகமாக தாக்குகின்ற பொழுது நோய் உருவாகும் அப்பா.... இதை நிச்சயம் அருந்தி வர அருந்தி வர அப்பனே அவ் நிச்சயம் அதிக அளவு தாக்காதப்பா... நோய்களும் வராதப்பா!! இதுதான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே இன்னும் ரகசியத்தை சொல்லப் போகின்றேன்!!! (வணக்கம் அகத்தியர் அடியவர்களே 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள். 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி அதிபதி தனித்தனி ரத்தின கற்கள் தனித்தனி கோயில்கள் தனித்தனி தானியங்கள் மரங்கள் நாடி பறவைகள் விலங்குகள் என தனி தனியாக இருக்கின்றது இதில் குருநாதர் 27 நட்சத்திரங்களுக்கும் தானியங்கள் மற்றும் 12 ராசிகளுக்குரிய தானியங்களையும் உண்டு வரவேண்டும் என்று கூறி இருக்கின்றார் 1கிரகம்: சூரியன் (ஞாயிறு) ஸ்தலம்: சூரியனார் கோவில் தானியம்: கோதுமை 2. கிரகம்: சந்திரன் (திங்கள்) ஸ்தலம்: திங்களூர் தானியம்: அரிசி 3கிரகம்: செவ்வாய் ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில் தானியம்: துவரை 4. கிரகம்: புதன் ஸ்தலம்: திருவென்காடு தானியம்: பச்சைபயறு 5. கிரகம்: குரு (வியாழன்) ஸ்தலம்: ஆலங்குடி தானியம்: கொண்டை கடலை 6. கிரகம்: சுக்கிரன் (வெள்ளி) ஸ்தலம்: கஞ்சனூர் தானியம்: மொச்சை 7. கிரகம்: சனி ஸ்தலம்: திருநள்ளாறு தானியம்: எள் 8. கிரகம்: ராகு ஸ்தலம்: திருநாகேஸ்வரம் தானியம்: உளுந்து 9. கிரகம்: கேது ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம் தானியம்: கொள்ளு என நவதானியங்களும் அந்தந்த கிரகங்களுக்குரிய நாட்களிலும் கொண்டு வரலாம் அனுதினமும் நவதானியங்களை ஊறவைத்தும் உண்டு வரலாம்... வெறும் நட்சத்திர கோயில்களுக்கும் நவகிரக கோவில்களுக்கும் செல்வது மட்டுமில்லாமல் முறைப்படி நட்சத்திரங்களுக்கு உரிய நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை உண்டு வரும் பொழுது நோய்களும் தீரும் நவகிரகங்களின் சக்தி நட்சத்திரங்களின் சக்தி கிட்டும் யோகங்களும் ஏற்படும். நட்சத்திரம் தானியம் அஸ்வினி. கொள்ளு பரணி. மொச்சை கிருத்திகை. கோதுமை ரோகினி. நெல் மிருகசீரிடம். துவரை திருவாதிரை. உளுந்து புனர்பூசம். கடலை பூசம். எள் ஆயில்யம் பச்சைபயறு மகம். கொள்ளு பூரம். மொச்சை உத்திரம். கோதுமை ஹஸ்தம். நெல் சித்திரை. துவரை சுவாதி. உளுந்து விசாகம். கடலை அனுஷம். எள் கேட்டை. பச்சைபயறு மூலம். கொள்ளு பூராடம். மொச்சை உத்திராடம் கோதுமை திருவோணம் நெல் அவிட்டம். துவரை சதயம். உளுந்து பூரட்டாதி. கடலை உத்திரட்டாதி எள் ரேவதி. பச்சை பயறு. இவை நட்சத்திரங்களுக்குரிய தானியங்கள் ஆகும். நட்சத்திரங்களுக்குரியதிருத்தலங்கள் அஸ்வினி - கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி. பரணி நட்சத்திரம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், கார்த்திகை நட்சத்திரம் - ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை. ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும் ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல். மிருகசீரிடம் - ஸ்ரீ முருகன் ஆலயம் - எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர். திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு. திருவாதிரை - ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம், அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர். புனர்பூசம் - ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி. பூசம் - ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம். ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில். ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம். மகம் -ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, சீர்காழி. பூரம் - ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம், புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம். உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர் கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு. அஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை. சித்திரை - ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு. சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை, பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர். விசாகம் - ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், கபிஸ்தலம். அனுஷம் - ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம், திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில், (நாச்சியார்கோவில்) கும்பகோணம். கேட்டை - ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர். மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம். மூலம் - ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை. பூராடம் - ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ. தொலைவு. மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர் ஜீவ சமாதி ஆலயம்) உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை. மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம். திருவோணம் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் திருமுல்லைவாயல், சென்னை. அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம், கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு. சதயம் - ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர். பூரட்டாதி - ஸ்ரீ திருவானேஸ்வரர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருக்குவளை. உத்திரட்டாதி - ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார் கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம். ரேவதி - ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை ) 12 ராசிகளுக்கு உரிய கோயில்கள் 1,மேஷம் - ராமேஸ்வரம் 2,ரிஷபம் --திருப்பதி 3.மிதுனம் - பழனி 4,கடகம் - ராமேஸ்வரம் 5,சிம்மம் - வாஞ்சியம் 6,கன்னி-திருக்கழுக்குன்றம் 7.துலாம் - திருத்தணி 8,விருச்சிகம் -காஞ்சிபுரம் ஏகாம்பரம் 9,தனுசு-மயிலாடுதுறை 10,மகரம் - சிதம்பரம் 11.கும்பம் - தேவிப்பட்டினம் 12,மீனம் - வைத்தீஸ்வரன் கோவில்,) அப்பனே அது மட்டும் இல்லாமல் அப்பனே நெல்லிக்கனியையும் கூட அனுதினமும் உட்கொண்டு வந்தாலே போதுமானதப்பா!!! அப்பனே நிச்சயம் எவ் நோயும் ஏற்படாது என்பேன் அப்பனே!!! அப்பனே அது மட்டும் இல்லாமல் வாரத்திற்கு இருமுறையாவது அப்பனே எலுமிச்சை சாற்றினை பருகி வந்தாலே போதுமானதப்பா அப்பனே இன்னும் அப்பனே அதில் அப்பனே அதாவது கிரகங்களில் இருக்கும் சக்தி அதிகமாக உள்ளதப்பா... அதை நிச்சயம் அறிந்து வந்தாலே போதுமானதப்பா... அப்பனே நல் யோகங்கள் அப்பனே பெருமப்பா!!! அப்பனே அதனால் அப்பனே பின் அதாவது அப்பனே பின் அவ் எலுமிச்சை செடியின் கூட சரியாகவே சரியான இடத்தில் தான் அப்பனே அதிகமாக கிரகங்களின் பின் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட சக்திகள் விழுகின்றதோ அங்கு தான் வளருமப்பா!!! அப்பனே இதற்கு சரியான சான்று என்னவென்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பசுவும் கூட பசு மாடுகள் கூட அப்பனே நல் விதமாகவே அப்பனே எங்கு பின் சரியாகவே முன்பெல்லாம் அப்பனே புல்லை சரியாகவே அப்பனே.. அதாவது நவகிரகங்களின் கூட அப்பனே சக்திகள் விழுகின்ற இடத்தில் தான் அவை தன் நிச்சயம் உட்கொள்ளும் என்பேன். அப்பனே இதனால் அப்பனே பின் மாடுகள் அவ்விடத்தில் புற்களை உட்கொள்ளும் பொழுது நிச்சயம் அதாவது பின் அவை தன் உள்ளே நவகிரகங்களின் சக்திகளும் பின் உள்ளே போகுமப்பா!!! அப்பனே அவ்வாறு நிச்சயம் வெளிவரும் பொழுது அப்பனே அவை தன் மருந்தாக செயல்பட்டது என்பேன் அப்பனே. (கோமியம் மற்றும் பசுஞ்சாணி) இப்போதெல்லாம் அவை மாறிவிட்டது என்பேன் அப்பனே!!! அப்பனே மனிதன் தெரியாமல் பின் ஆன்மீகத்தை அப்பனே குறிப்பிடுகின்றான் என்பேன் அப்பனே ஆனால் அதில் என்ன லாபம்??? என்பேன் அப்பனே!!! குருநாதர் கூறிய புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 6 ல் தொடரும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

ரகசிய வாக்கு நான்கு

குருநாதர் உரைத்த புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 4 சனி தோஷம் நீங்க அனுமான் வழிபாடு ரகசியம் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே எவை என்றும் புரியாமல் மனிதன் தவித்து கொண்டிருக்கின்றான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே பின் ராம அவதாரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே (கஷ்டங்கள் ) நெருங்காமல் இருக்க அப்பனே நிச்சயம் ராமனை அதாவது அறிந்தும் கூட.... அப்பனே எப்படி ஏது என்ன செய்வது என்று என்பதை எல்லாம் அறியாமல் அப்பனே பின் ராமன் சீதா தேவியும் திகைக்கின்ற பொழுது!!! நிச்சயம் அறிந்தும் கூட பின் அனுமான் அப்பனே பின் அதாவது பின் சனி கிரகத்தின் அருகில் இருந்து அப்பனே அதன் கதிர்களை பெற்று வந்து பெற்று வந்து... அப்பனே நிச்சயம் ராமனையும் சீதா தேவியையும் காப்பாற்றினானப்பா!!!! (சனீஸ்வரனால் எப்படிப்பட்ட சோதனைகள் எல்லாம் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஏற்பட்டது என்பதை மகாராஷ்டிரா மாநிலம் நஷ்தான்பூர் சனி மகாராஜ் ஆலய வாக்கில் குருநாதர் உரைத்தது சித்தன் அருள் பதிவு எண் 1229 ல் வெளிவந்துள்ளது) அதனால்தான் அப்பனே நிச்சயம் அதாவது அனுமானுக்கு இன்னும் கூட அப்பனே.... சிரஞ்சீவியாகவே வாழ்ந்து வந்து அப்பனே நிச்சயம் அவனிடத்தில் சென்றால் கூட கதிர்கள் அதிகமாக இருக்கும் பொழுது அப்பனே மனிதர்களின் பிரச்சினைகள் தீருகின்றது என்பேன் அப்பனே!!!! அப்பனே இதனால்தான் அப்பனே பின் அறிகின்ற பொழுதும் கூட அதாவது பின் ராமன் அவனின் கூட சனி கிரகம் தாக்குகின்ற பொழுது இவ்வாறெல்லாம்... அமையும் என்பதெல்லாம் இதனால் அப்பனே நிச்சயம் அங்கு சென்று (சனி கிரகத்திற்கு) கதிர்களைப் பெற்று அப்பனே நிச்சயம் பின் அருகிலே (ராமரோடும் சீதா தேவியோடும்) இருந்தான் ஹனுமான் என்பேன் அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே சில சில பெரிய பெரிய பின் அதாவது அறிந்தும் கூட கஷ்டங்கள் வந்தாலும் நிச்சயம் அதை நிவர்த்தி செய்வதற்கான பின் அறிவுரைகள் அப்பனே பின் நிச்சயம் அனுமானிடம் இருந்தது என்பேன் அப்பனே இதனால் அப்பனே எவ்வளவு மனிதர்களுக்கு இக்காலத்தில் நிச்சயம் அப்பனே குற்றங்கள் குறைகள் அப்பனே இருந்தால் இருந்தாலும் கூட அப்பனே சனீஸ்வரனின் (தோஷம்) கதிர்கள் அதிகமாக இருந்தால்... அப்பிரச்சனைக்கு அவனே நிச்சயம் அப்பனே பின் பிரச்சனையை கூட அப்பனே சுலபமாக தீர்த்து விடுவான் என்பேன் அப்பனே அவ் சக்தி அப்பனே சனி கிரகத்திற்கு உண்டு என்பேன் அப்பனே. அப்பனே இதனால்தான் அப்பனே அனுமான் எவை என்று அறிய அறிய அதாவது சனி ஈஸ்வரனின் பின் நல்விதமாக கதிர்கள் பெற்று அப்பனே உள்ளே குவித்தான் அதாவது பக்கத்தில் இருந்தான் அப்பனே இதனால் அப்பனே சனீஸ்வரனின் கதிர்கள் இருக்கும் வரையில் அதாவது யாரும் ஒன்றும் செய்ய இயலாத அப்பா... அப்படி நிச்சயம் இறப்பினும் அப்பனே பேரோடும் (புகழோடும்) வாழ்வார்கள் அப்பனே!! அதனால் தான் அப்பனே வரலாறு ராமனையும் சீதாவையும் கூட பேசுகின்றது என்பேன் அப்பனே!!! அடியவர்களுக்கு தற்போது குருநாதர் உரைத்த ரகசியங்கள் புரிந்திருக்கும். சனி கிரகத்தால் சில தோஷங்கள் ஏற்பட்டு அதனால் கஷ்டங்களை அனுபவிக்கும் மக்கள் குருநாதரிடம் ஜீவநாடி வாக்கு கேட்கும் பொழுது குருநாதர் அப்பனே அனுதினமும் அனுமன் இடத்திற்கு சென்று தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். என்றும் ஞாயிறு ராகு காலத்தில் வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டு வர வெற்றிகள் உண்டாகும் கஷ்டங்கள் குறையும் என்று பொதுவாக்காகவும் தனிநபர் வாக்குகள் ஆகவும் கூறி இருக்கின்றார்... சனியின் தாக்கங்கள் குறைவதற்கு அனுமான் வழிபாடு செய்வதற்கான ரகசியம் மற்றும் தார்பரியம் என்ன என்பதை இந்த வாக்கில் குருநாதர் விளக்கமாக கூறியுள்ளார். ராமருக்கும் சீதா அம்மாவிற்கும் சனி பகவானால் வரும் கஷ்டங்களை மாற்றுவதற்கு அனுமன் நேரடியாக சனி கிரகத்தின் இடத்திற்கு சென்று அங்கிருந்து கதிர்களை பெற்று வந்து... ராமரோடும் சீதா தேவியுடன் அகலாது இருந்து சனீஸ்வரனின் கதிர்வீச்சுகளை குவித்து அதனை பரவச் செய்ததன் மூலம் தோஷங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். சனிபகவானின் முழுக்கதிர்வீச்சுக்களை அனுமன் தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் சனீஸ்வரனால் ஏற்பட்ட கஷ்டங்களில் இருந்து விடுபட அனுமன் வழிபாடு செய்து அனுமனிடமிருந்து நாம் கதிர்வீச்சுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் ரகசியத்தை கூறியுள்ளார். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!ம்.

Wednesday, November 6, 2024

ரகசிய வாக்கு மூன்று

Tuesday 29 October 2024 சித்தன் அருள் - 1716 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 3! குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த புதுமையான ரகசிய வாக்கு பாகம் 3 குருநாதர் உரைத்த ரகசிய வாக்குகள் சித்தன் அருள் 1710 முதல் பாகம் சித்தன் அருள் 1713 ல் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது அப்பனே நிச்சயம் அப்பனே பூமியானது அப்பனே நிச்சயம் சரியான வேகத்தில் அப்பனே இயங்குகின்ற பொழுதுதான் அப்பனே நிச்சயம் அப்பனே யாருக்கும் எத் தொந்தரவுகளும் வராதப்பா!!! ஆனாலும் அதன் வேகமும் அப்பனே... யான் ஏற்கனவே பின் சொல்லிவிட்டேன் அப்பனே அதன் வேகம் குறைவாகின்ற பொழுது அப்பனே இக்கலியுகம் அதாவது அறிந்தும் கூட அப்பனே எப்பொழுதெல்லாம் குறைந்து நிற்கின்றதோ அப்பொழுதெல்லாம் அப்பனே பல கஷ்டங்களும் கூட அப்பனே பல அழிவுகளும் கூட ஏற்படும் அப்பா!!! அப்பனே இவ் யுகங்கள்!!!! அறிந்தும் கூட அதாவது அப்பனே ஒரு யுகத்தில் சரியான வேகத்தில் அப்பனே நிச்சயம் சுழன்றது என்பேன் அப்பனே.... உயர்தரமான நேர்மை அனைத்தும் இருந்தது என்பேன் அப்பனே அதாவது சற்று குறைந்தது அப்பனே அடுத்த யுகம் வந்துவிட்டது அப்பனே இதனால் சற்று குறைந்து விட்டது ஆனாலும் அப்பனே அடுத்த ஒரு யுகம் வந்துவிட்டது அப்பனே இன்னும் குறைந்துவிட்டது!!!என்பேன் அப்பனே ஆனால் அப்பனே இது இப்படியே குறைந்து குறைந்து அப்பனே எவை என்று கூட கலியுகத்தில் அப்பனே மீண்டும் குறைந்தால் அப்பனே நிச்சயம் மனிதன் என்ன செய்கின்றான்??? என்பதைக் கூட யோசிக்காமல் செய்வான் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே இவை தன் விஞ்ஞானத்தால் கூட பின் சரி படுத்த முடியாது என்பேன். அப்பனே யாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்! மீண்டும் எவ்வாறு புவியின் வேகத்தை இவை தன் அதிகரிப்பது என்பதையெல்லாம் அப்பனே அப்பனே அவை தன் சரியான வேகத்தில் இயங்கினால் தான் அப்பனே அனைவரும் சரியான அப்பனே அதாவது எது நல்லது ??எது தீயது?? என்றெல்லாம் ஆராய்வார்கள் என்பேன் அப்பனே... வேகம் குறைந்தால் அனைவரும் தீயதாகவே யோசிப்பார்கள் என்பேன். அப்பனே. இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எதை என்று கலியுகம் அழிவு நிலைக்கு வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே இதனால் எதற்கு அப்பனே பின் அவ் வேகம் குறைந்து கொண்டே வந்தால் அப்பனே அழிவுகள் அப்பனே வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. அப்பனே நலன்கள் ஆகவே இதனால் தான் அப்பனே யான் பல முறையும் கூட எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே பல பல கிரகங்களையும் கூட... இதனால் அப்பனே அவை தன் குறைகின்ற பொழுது அதாவது அப்பனே மனிதருடைய உடம்பில் கூட சில சில நுண்ணுயிரிகள்... அதேபோல் அப்பனே அனைத்து கிரகங்களின் நுண்ணுயிர்கள் கூட அப்பனே அங்கு இருந்து அப்பனே நல்விதமாக மனிதர்களுக்கு விழுகின்ற பொழுது யோகங்கள் அப்பனே நல்முறையாகவே... முன்பெல்லாம் வாழ்ந்து வந்தான் அப்பனே ஆனாலும் அப்பனே இப்புவியானது அப்பனே வேகம் குறைத்துக் கொண்டால் அப்பனே கிரகங்களின் அதை எதை என்று கூட பின் எவை என்றும் அறிந்தும் கூட அவர் நுண்ணுயிர்கள் அப்பனே அப்படியே பின் அதாவது மனிதனை வந்தடையாமல் அப்பனே பின் மேலே சிறிது அப்பனே தொலைவிலே தேங்கி நிற்கும் அப்பா!!! (நம் குருநாதர் நவகிரகங்களின் துகள்கள் மனிதர்களுடைய உடம்பிலும் இருக்கின்றது!!! என்று ஏற்கனவே வாக்கில் கூறியிருக்கின்றார்!!... பூமி சரியான வேகத்தில் சுற்றுகின்ற பொழுது பூமியின் காந்த புலம் மேலே இருக்கும் நவகிரகங்களின் நுண்ணுயிரிகளை சரியான முறையில் மேலிருந்து கீழே ஈர்த்து மனிதர்களுக்கு அவ் நுண்ணுயிரிகள் கிடைத்து நல்ல முறையில் யோகமாக வாழ்ந்து வந்தார்கள். பூமியின் சுற்றும் வேகம் குறையும் பொழுது காந்தப்புல ஈர்ப்பு சக்தியானது நவகிரகங்களின் நுண்ணுயிரிகளை ஈர்க்க முடியாமல் கிரகங்களிலிருந்து வீழும் நுண்ணுயிரிகள் பூமிக்கு மனிதர்களுக்கு வந்து அடைய முடியாமல் மேலேயே தேங்கி நின்று விடும்) அப்பனே அதனால்தான் ஜாதகங்கள் கூட அப்பனே பொய்யாக போய்க் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. இதனால் அப்பனே பூமியானது சற்று அப்பனே வேகங்கள் குறைந்து கொண்டு வந்தாலே அப்பனே எப்பொழுது சரியாக மாறும் அதாவது... குருவானவன் எப்பொழுது மாறுவான் சனியானவன் எப்பொழுது மாறுவான்???? பின் ராகு கேது எப்போது மாறும்?? என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!! (ஜோதிடர்கள் ஜாதகத்தை அதில் இருக்கும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றது வைத்து பலன்கள் சொல்வார்கள் ஆனால் மேலே அண்டத்தில் கிரகங்கள் பூமியின் சுற்றும் வேகம் குறைந்ததால் கிரகங்கள் இடம் மாறி இருப்பதை தெரியாமல் உனக்கு குரு இந்த இடத்தில் இருக்கின்றார் அதனால் குரு யோகம் உனக்கு ஏற்படும் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள் ஆனால் உண்மையில் குரு மேலே அண்டத்தில் தன்னுடைய இடத்திலிருந்து மாறி இருப்பார் இது எல்லாம் பூமி சுற்றும் வேகம் குறைந்ததால் ஏற்படும் விளைவுகள் அதனால் ஜோதிட பலன்கள் பொய்யாக போய்விடும்) ஆனால் ஜோதிடர்களோ உங்களுக்கு நல்ல நேரங்கள் நல்ல நேரங்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அப்பனே ஆனால் தீயவை நடந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் அவ் ஒளியானது அப்பனே அதாவது மேகத்திலே அப்பனே அங்கேயே அதிகம் தங்கி நிற்குமப்பா!!! இதனால் அப்பனே நிச்சயம் அதிகாலையில் பிராணாயாமம் அப்பனே மூச்சுப் பயிற்சிகள் ஏன் செய்யச் சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட பின் வயிற்றின் அடியில் அப்பனே நல்விதமாகவே அப்பனே அதாவது அனைவருக்குமே ஒரு சக்தி அதாவது அப்பனே பின் வேகம் என்ற சக்தி இருக்கின்றதப்பா அப்பனே அவ் சக்தியை எப்படி இயக்க?? நிச்சயம் அதிகாலையிலே பிரம்ம முகூர்த்தத்தில் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது பலமாக காற்றை உள்ளிழுக்க வேண்டும் என்பேன் அப்பனே (மூச்சுப் பயிற்சியில்) அவ்வாறு உள்ளிழுத்தால் தான் அப்பனே...அவ் மேகங்களில் இருந்து தடைபடும் சிலசில நிச்சயம் அப்பனே எவை என்று கூட சக்திகள் பின் அதாவது வயிற்றில் அடி வயிற்றுக்கு செல்கின்ற பொழுது யோகங்கள் நிகழ்ந்திருக்கும் அப்பா... நோய்களும் வராதப்பா ஆனாலும் அனைத்தும் மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே அப்பனே அவை மட்டுமில்லாமல் பின் மேகங்கள் அப்பனே அதற்கு மேலே... பல வகைகளிலும் கூட அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் அதிகமாக இருக்கும் அப்பா அதனால்தான் சில சில திருத்தலங்களுக்கு சென்று அப்பனே விமானத்தின் மேலே பறக்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அவ் கிரகங்களின் கூட அப்பனே நிச்சயம் அதாவது சக்திகள் பின் மனிதனுக்கு உடம்பில் நுழைகின்ற பொழுது யோகங்கள் பன்மடங்காகும் என்பேன் அப்பனே. அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் அதற்கும் தகுதியானவர்களைத்தான் பின் இறைவன் மேலே பறக்க விடுவான் என்பேன் அப்பனே (நவகிரகங்களின் ஆற்றல்களை ஈர்த்துக் கொடுக்கும் திருத்தலங்களுக்கு மேலே விமானத்தின் மூலம் பறந்து சென்று கிரகங்களின் யோக சக்தியை பெறுவதற்கும் மனிதர்களுக்கு தகுதிகள் வேண்டும் அதை இறைவன் தான் தேர்ந்தெடுப்பார்) அப்பனே அவை மட்டுமில்லாமல் சுக்கிரன் அதிகமாக அப்பனே அதாவது அருகில் இருப்பதால் அப்பனே நிச்சயம் பின் மேலே பறக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே காசுகளை எவை என்று கூட அவன் அருள் பரிபூரணமாக அதாவது அப்பனே அக்கதிர்கள் மனிதர்களுக்குள்ளே நுழையும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே காசுகள் அதிகமாக கிடைக்குமப்பா!!! (விடிவெள்ளி எனப்படும் வெள்ளி நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சுக்கிரனின் ஒளி கதிர்வீச்சுகள் மேலே பறக்கின்ற பொழுதும் மனிதர்களுக்கு அதிக அளவு கிடைக்கும்... இதனால் தன லாபம் மனிதர்களுக்கு ஏற்படும் சுக்கிரனுடைய ஒளியை பெறுவதால்!... விடிவெள்ளியை அதாவது சுக்கிரனை மாலை நேரத்திலும் அதிகாலை வேலையிலும் வானத்தில் தெளிவாக காண முடியும்) சிலர் இங்கு யோசிக்கலாம் விமானத்தில் பறக்கின்றவர்களுக்கு மட்டும் தான் ஆற்றல்கள் கிடைக்குமா என்றால்.. புண்ணியமும் தகுதியும் இதற்கு வேண்டும்... அதுமட்டுமில்லாமல் காடுகளிலும் மலை உச்சிகளிலும் ஏறிச் சென்றால் இறைவனை தேடி அலைந்தும் மலைகளில் மேலே சென்றால் இந்த ஆற்றலை பெற முடியும் என்று ஹரித்வாரில் உள்ள சண்டி மாதேவி சக்தி பீட ஆலயத்தில் விரிவான வாக்குகளை தந்துள்ளார் அந்த வாக்குகள் அதிவிரைவில் வெளியே வரும். ஏற்கனவே இறைவனை தேடி மலைகளிலும் காடுகளிலும் ஏறிச் செல்ல வேண்டும் அப்பனே என்று குருநாதர் வாக்குகளில் கூறியிருந்தார் அதன் ரகசியத்தை வாக்குகளில் கூறியுள்ளார் மேலே அதாவது அண்டத்தில் இருந்து வரும் ஒளிக்கதிர் ஆற்றல் சக்திகளை மலை உச்சியிலும் காடுகளிலும் அதிகம் குவிந்து காணப்படும் அதனால் அங்கெல்லாம் இறைவன் அமர்ந்துள்ளார்.. காடுகளிலும் மலைகளிலும் தேடி அலைந்து திரிந்து சக்தியை பெற முடியும் என்று குருநாதர் கூறியுள்ளார் அந்த வாக்குகள் வரும்பொழுது விரிவான விளக்கம் கிடைக்கும்) அப்பனே இதனால்தான் அப்பனே நிறைய விஷயங்கள் தெரியாது எவை என்று கூட மனிதர்களுக்கு என்பேன் அப்பனே அதனால்தான் மனிதன் அப்பனே இப்படி இருக்கின்றான் இதனால் அப்பனே!!! அப்பனே நீ அறிந்தும் கூட மிகப் பெரிய புண்ணியங்கள் எல்லாம் நீ செய்திருக்கின்றாய் காலங்கள் காலங்களாக... (அகத்தியர் பக்தருக்கு) அதனால்தான் அப்படி சில ரகசியங்களை கூட உந்தனுக்கு சொல்லிவிட்டால் அப்பனே நன்மைகளாகவே எதை என்று அறிய அறிய.. உன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும் கூட அப்பனே.. யான் சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே.... இப்பொழுது தெரியாததை தெரிந்து கொள் மகனே !!! ரத்தின கற்களை ராசி கற்களாக மோதிரமாக அணிந்து கொள்ளும் ரகசியம்!! அப்பனே ஏன்? கற்களை கைகளில் அணிந்து கொள்ள அப்பனே பின் அதாவது ஜாதகர்களும் (ஜோதிடர்கள்) பல வழிகளில் கூட!!! சொல்வார்கள் அப்பனே இதன் உண்மையைக் கூட இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே அதாவது அப்பனே அவர்களுக்கு தெரியாதப்பா ஆனால் இவை அணிந்து கொண்டால் நன்று என்று சொல்வார்கள் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே சரியானதாக அங்கிருந்து அப்பனே சொன்னேனே அவ் நவகிரகங்களிலிருந்து கதிர்வீச்சுக்கள் நல்விதமாக அப்பனே அதாவது மேகத்தில் எவை என்று கூட அங்கேயே தங்கிவிடுமப்பா அதை தன் ஈர்ப்பதற்கே பின் கற்கள் இவ்வாறு அணிந்து கொண்டால் நிச்சயம் நன்று ஆனாலும் எவை என்றும் அறிய அறியாமல் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... உண்மை எதுவென்றால் அப்பனே பின் இக் கற்கள் அதாவது சில கற்கள் சரியாக ஈர்க்குமப்பா யோகத்தை!! இதனால்தான் அப்பனே பின் கைகளில் அணிந்து கொள்கின்றார்கள்!!! அப்பனே நல்விதமாக இதனால் தான் அப்பனே ஆனாலும் அப்பனே சரியாக அணியவில்லை என்றால் அப்பனே... அதுவே கெடுதலாகிவிடும் என்பேன் அப்பனே !!! (தவறான வழியில் தோஷமுள்ள நீலக்கல் ப்ளூ ஜாகர் வைரத்தை ஒருவர் வைத்திருந்ததால் ஒரு குடும்பமே எப்படி பாதிக்கப்பட்டது குருநாதர் அகத்தியர் பெருமான் அகத்தியர் மைந்தன் திருஹனுமதாசன் அவர்கள் காலகட்டத்தில் ஜீவநாடி மூலம் வாக்கு தந்து மீட்டெடுத்ததை சித்தன் அருள் 51 பதிவில் படித்து உணர்ந்து கொள்ளலாம்) அப்பனே இதனால் அப்பனே பின் பூமி ஆனது அப்பனே சரியாக அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே சரியாகவே வேகம் குறைவு பின் அதாவது வேகக் குறைவு அப்பனே பூமி தன் வேகத்தில் இருந்து அப்பனே நிச்சயம் சிறிது தள்ளி போகும் அப்பா இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய கிரகங்கள் அப்பனே பின் அதாவது அப்பனே ஓரிடத்தில் இருந்து ஒரு இடம் மாறுகின்ற பொழுதும் கூட பின் சரியான வழியில் கணிக்க முடியாதப்பா மனிதர்களால் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே ராகு கேதுக்களின் பெயர்ச்சிகளும் கூட குரு பெயர்ச்சியும் கூட அப்பனே சனியவன் பெயர்ச்சியும் கூட அப்பனே பின் சரியாக கணிக்க முடியாதப்பா ஆனாலும் பின் இவ்வாறு மாறுகின்றது என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை வரும் வரும் கலியுகத்தில் அப்பனே (நம் குருநாதர் அகத்திய பெருமான் மற்றும் இடைக்காடர் நவகிரகங்கள் பற்றி!! நவகிரகங்கள் தம் தன் இடத்திலிருந்து இடம் மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்து இருந்தார்கள். சித்தன் அருள் 1663 பூலோக முதல் சொர்க்கம் திருவண்ணாமலை வாக்கில் குருநாதர் அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் அப்பனே ஜாதகங்கள் கூட அப்பனே சக்திகள் இழக்க நேரிடும் என்பேன் அப்பனே!! ஏனென்றால் அப்பனே கிரகங்கள் அப்பனே சரியாக செயல்படாது என்பேன் அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே புவி அப்பனே நிச்சயம் தன் வேகத்தை குறைக்கும் பொழுது அப்பனே எல்லா கிரகங்களும் எவை என்று அறிய அறிய அப்பனே ஈசனை நோக்கியே அப்பனே தவங்கள் செய்யும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அப்பொழுது தீர்வு அதாவது முடிவு ஈசனிடத்திலே என்பேன் அப்பனே!!! சொல்லிவிட்டேன் அப்பனே பல வாக்குகளிலும் கூட அப்பனே இதன் முன்னே வாக்குகளிலும் கூட செப்பி விட்டேன்... மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே) என்று வாக்குகள் கூறி இருந்தார்... நவகிரகங்கள் தன் தம் இடத்தை விட்டு இடம் மாறி நிற்கும் விஷயங்களை சித்தர்கள் மட்டுமே அறிவார்கள். அறிந்து நமக்கு கூறியுள்ளார்கள். ஆனால் ஒரு நபர் தன்னுடைய ஜாதகத்தையோ குடும்பத்தினருடைய ஜாதகத்தையோ ஒரு ஜோதிடரிடம் கொண்டு போய் கொடுத்துப் பார்க்கச் சொல்லும் பொழுது அவர் ஜாதகத்தில் நவகிரகங்களின் இருப்பை குறித்து கணக்குகள் இட்டு உனக்கு இப்பொழுது குரு இங்கே இருக்கின்றார் இதனால் இந்த யோகங்கள் ஏற்படும். சனி இந்த இடத்தில் நிற்கின்றார் அதனால் இந்த யோகங்கள் ஏற்படும் என சொல்வது எல்லாம் பலிக்காது. ஏனென்றால் அண்டத்தில் கிரகங்கள் தடம் மாறி இடம் மாறி நிற்கின்றது பூமியின் சுற்றும் வேகம் குறைந்ததால். அதேபோல் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி இதெல்லாம் மனிதர்களால் ஜோதிடர்களால் கணித்து சொல்வதெல்லாம் பொய்யாக போய்விடும். பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ள இந்த நேரத்தில் நவகிரகங்களை பற்றி யாராலும் மனிதர்கள் யாராலும் கணித்து கூற முடியாது... ஜோதிடர்கள் சொல்லும் பலனும் அதாவது நவகிரகங்கள் இந்த இடத்தில் இருப்பதால் இந்தந்த பலன்கள் நடக்கும் என்பதெல்லாம் பொய்யாகிவிடும் ஏனென்றால் நவகிரகங்கள் மேலே இடம் மாறி இருப்பதை ஜாதகத்தில் கணித்து சொல்ல முடியாது) அப்பனே அதனால்தான் அப்பனே சரியாகவே யாரும் கணிக்க முடியாது என்பேன். அப்பனே வரும் காலத்தில் கூட!! அப்பனே அதே போல் அப்பனே நிச்சயம் அப்பனே சனியின் செல்கள் அதிகமாக இருக்கும் பொழுது அப்பனே பின் ஆனாலும் நல்விதமாக ஏழரை நேரங்களில் தான். (ஏழரை சனியின் காலங்களில்) தான் அதிர்ஷ்டங்கள் கூடி வரும் அப்பா ஆனால் மனிதனோ (ஜோதிடர்) பின் ஏழரை ஆரம்பித்து விட்டது உங்களுக்கு கெடுதல் என்று சொல்வான் அப்பா!! குருநாதர் உரைத்த புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 4 ல் தொடரும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ரகசிய வாக்கு இரண்டு

சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 2 குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த புதுமையான ரகசியங்கள் வாக்கு பாகம் 2 அப்பனே!!!அதற்குத்தான் புண்ணியம்!!! அறிந்தும் கூட!!! புண்ணியங்கள் வேண்டும் புண்ணியங்கள் வேண்டும் என்பதையெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!! இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அதாவது அதனால் தான் அப்பனே பல திருத்தலங்கள் ஏன் செல்ல சொல்கின்றோம் என்றால் அப்பனே அங்கங்கு அப்பனே சில கிரகங்களின் தாக்கம் அதிகரிக்க அப்பனே அங்கங்கே பின் எதை என்று கூட கதிர்கள் விழுகின்றதப்பா!!! அவையெல்லாம் அப்பனே மனிதர் உடம்பில் விழுகின்ற பொழுது அப்பனே அதற்கும் உடம்பிற்கும் சம்பந்தம் உள்ளது என்பேன் அப்பனே!! சரியாகவே அப்பனே நல்விதமாகவே விழுகின்ற பொழுது யோகங்களாக மாறி அப்பனே சில தரித்திரங்கள் நீங்கி அப்பனே நல்விதமாகவே மாற்றங்கள் ஏற்பட்டு அப்பனே அனைத்து பிரச்சினைகளும் தீர்கின்றதப்பா!!! அப்பனே அதே போலத்தான் அப்பனே பல வழிகளிலும் கூட முன்னோர்கள் ஏன் எதற்கு முன்னோர்களின் ஆசிகள் வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துரைக்கின்றார்கள் என்றால் நிச்சயம் அப்பனே அதாவது... ஒருவன் நேற்றைய பொழுதிலே யான் சொன்னேன் அப்பனே ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் அப்பனே அனைவரும் யோகமானவர்கள் இல்லை என்பதை கூட... அதனால் அப்பனே சொல்கின்றேன் இப்பொழுது ரகசியத்தை!!!! நேற்றைய பொழுதில் குருநாதர் கூறிய வாக்கு அப்பனே பல பல மனிதர்கள் ஒரே நேரத்தில் பிறக்கின்றார்கள் என்பேன் அப்பனே பல பல எவை என்று அறிய அறிய அப்பனே அப்படி ஒரே நேரத்தில் பிறக்கின்ற அனைவருக்கும் ஒரே ஜாதகமாக இருக்கும் என்பேன் அப்பனே.... ஆனாலும் அவர்களுக்கு உயர்வுகளும் தாழ்வுகளும் கூட... இப்படி ஏன் வருகின்றது??? என்பதை யோசித்தீர்களா அப்பனே????? புண்ணியங்கள் தான் காரணம் என்பேன் அப்பனே அனைத்திற்கும் என்பேன் அப்பனே!!!... (அடியவர்களே அதாவது ஒரு உதாரணத்திற்காக சென்னையில் ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சரியாக ஆறு மணிக்கு பல குழந்தைகள் பிறக்கும் அவர்களுக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த நேரத்தின்படி ராசி நட்சத்திரம் ஜாதகம் எல்லாம் ஒன்றாக இருக்கும்.... ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கின்றார்களா?? என்றால் இல்லை!! இங்கு ஒருவருடைய பிறப்பும் வாழும் வாழ்க்கையும் அந்த ஆத்மாக்கள் செய்த பாவம் புண்ணியத்தால் தீர்மானிக்கப்படுகின்றது) நேற்றைய பொழுதில் குருநாதர் உரைத்திருந்தார் அதன் ரகசியத்தை இப்பொழுது பார்க்கலாம்!!! அதாவது பின் ஏன் இப்பொழுது கூட நீ உயர்வான இடத்தை அடைந்து உள்ளாய் (வட இந்திய அகத்தியர் பக்தர்) என்பதற்கிணங்க!!!... உன் முன்னோர்களுக்கு முன்னோர்கள் அவ் முன்னோர்களுக்கு முன்னோர்கள் அவ் முன்னோர்களுக்கு முன்னோர்கள் அப்பனே... இவர்கள் எல்லாம் அப்பனே புண்ணிய நதிகளில் நீராடி நீராடி பல திருத்தலங்களுக்கு சென்று சென்று அப்பனே நுண்ணுயிரிகளை அதிகமாக பெற்று கொண்டு அப்படியே அவ் நுண்ணுயிர்கள் கூட அப்பனே அதிகமாகவே அப்படியே அப்பனே பின் உயிரோடு அதாவது அழியாது பாதுகாத்து அப்பனே... அவை தன் அப்படியே பிறக்கும் பொழுது... பிறக்கப் பிறக்க அப்பனே குழந்தைகள் பிறக்க பிறக்க அப்படி நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட!!! (இங்கு நுண்ணுயிர்கள் அறிவியல் பெயரில் அழியாமல் இருப்பது டிஎன்ஏ மரபணுக்கள் குரோமோசோம்கள் ஜெனிடிக் ஜீன்ஸ் என்பதை புரிந்து கொள்க!!! DNA, Genes & Chromosomes) இதனால்தான் அப்பனே அவை பக்குவமாக மீண்டும் அவ் நுண்ணுயிர்கள் இறக்கக் கூடாது அப்படியே அப்பனே நிச்சயம் பல புண்ணிய நதிகளில் கூட நீராட நீராட அப்பனே நிச்சயம் உயர்வுகள் ஏற்படும் அப்பா.. இதுதான் அப்பனே ரகசியம் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே யான் சொல்லியதை நீ கேட்டாய் அதனால் தான் அப்பனே இன்னும் அப்பனே இப்பொழுது ரகசியங்களை எல்லாம் உரைக்கப் போகின்றேன்!!! அப்பனே நல் விதமாக இதற்காகத்தான் அப்பனே முன்பு அப்பனே நல்விதமாக ஆற்றோரத்திலும் அப்பனே கடலோரத்திலும் நல் விதமாக பிரார்த்தனைகள் செய்வார்கள் என்பேன் அப்பனே அதிகாலையிலே என்பேன் அப்பனே அப்பொழுது நுண்ணுயிர்கள் அப்பனே பலமாகவே பின் இவ்வாறு வந்தடைகின்ற பொழுது அப்பனே ஆரோக்கியத்தோடும் அப்பனே அனைத்து நலன்களும் பெற்று வாழ்ந்தனர் ஆனால் இப்போது அது இல்லை அப்பா!!!! பிரம்ம முகூர்த்த ரகசியம். அப்பனே ஏன் ? எதற்கு ? பிரம்ம முகூர்த்தம் என்கின்றார்கள் அப்பனே... சரியான நேரத்தில் அப்பனே அறிந்தும் கூட சந்திரனிலிருந்து அப்பனே நிச்சயம் அப்பனே பின் அனுதினமும் பின் அதாவது பின் கண்ணுக்கு தெரியாத ஒரு ஒளியானது அப்பனே சூரியனை நோக்கி செல்லுமப்பா!!! அப்பனே அப்பொழுது பின் அனைத்து கிரகங்களையும் கூட செயலிழக்க செய்யும் என்பேன் அவ் ஒளியானது.. அப்பொழுது அனைத்தும் அப்பனே இறைவனிடத்தில் வேண்டிக் கொண்டாலும் சரி.... அப்பனே அறிந்தும் கூட என்ன எதை என்று கூட பின் படித்தாலும் அப்பனே பின் வரும் காலத்தில் அப்பனே மிகப்பெரிய வெற்றிகள் காத்திருக்கின்றதப்பா!!!! (பிரம்ம முகூர்த்தம் என்பது நாம் இரவை சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான காலமாகக் கருதினால், இரவின் கடைசி காலாண்டு பிரம்ம முஹூர்த்த நேரமாகும் - அதிகாலை 3:30 முதல் 5:30 அல்லது 6:00 வரை, அல்லது எந்த நேரமாக இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன்பாக மிச்சம் இருக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும்.... இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் சந்திரனிலிருந்து சூரியனை நோக்கி கிளம்பிச் செல்லும் ஒளி ஆனது செல்லும்பொழுது மீதி உள்ள கிரகங்களின் தாக்கத்தை வலுவிழக்க செய்து விடும். அந்த நேரத்தில் கிரகங்களின் பாதிப்புகள் ஏற்படுவதில்லை அதனால் தான் அந்த நேரத்தில் இறைவனுக்கு பூஜை செய்து வேண்டிக் கொள்வது தியானம் செய்வது!! யோகாசனம் உடற்பயிற்சிகள் செய்வது பிராணாயாமம் செய்வது பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது அதாவது மாணவர்கள் கல்வி படிக்கும்பொழுது மனப்பாடம் எளிதில் ஆகிவிடும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இப்படியே செய்து கொண்டு வரும் பொழுது எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்துவிட முடியும்) இதை யாரும் அறிவதில்லை என்பேன் அப்பனே... இதை பின் எவ் விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!! அப்பனே அது தீபம் போல செல்லுமப்பா!!! இதனை தான் அப்பனே வள்ளல் பெருமான் (வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்) கண்டுபிடித்தான் என்பேன் அப்பனே பின் இவ் ஒளியானது தான் அப்பனே இறைவன் என்று அப்பனே அவன் புரிந்து கொண்டான் என்பேன். அப்பனே இப்பொழுது கூட பல பல வழிகளிலும் கூட அப்பனே விஞ்ஞானத்தைப் பற்றி யான் எழுதி இருக்கின்றேன் அப்பனே பல வழிகளிலும் கூட ஆனாலும் அப்பனே பின் திருத்தலங்களில் வைத்திருந்தேன் அப்பனே தஞ்சை தன்னில் கூட அப்பனே (தஞ்சாவூர்) ஆனால் அப்பனே பல பல வழிகளில் கூட அதை தன் அப்பனே பணத்திற்காகவே திருடிவிட்டார்கள் அப்பனே!!! அப்பனே அழகாகவே இதனால் அப்பனே பல வழிகளில் கூட அப்பனே இதனால் தான் தீப வழிபாடு அப்பனே அறிந்தும் கூட அதேபோல் அவை எவை என்று அறிய அப்பனே அவ் ஒளியானது இவ்வாறு செல்கின்ற பொழுது தீபம் போலே செல்லும் அப்பா எரிந்து கொண்டே!!! ஆனால் அவை கண்களுக்கு தெரியாதப்பா... அதற்கும் அப்பனே பிம்பம் இருக்கின்றதப்பா!! அதனை நிச்சயம் மனிதனால் எதை என்று அறிய அறிய நிச்சயம் கண்டுபிடிக்க முடியாதப்பா... இதுதான் அப்பனே ரகசியம் என்பேன் அப்பனே... பின் அதாவது மனிதனுக்கு தெரியாத ரகசியங்கள் இன்னும் அடங்கியுள்ளது என்பேன் அப்பனே உந்தனுக்கு/உங்களுக்கு அனைத்தையும் சொல்வேன் நீ அனைத்தும் கற்றுக்கொள் அப்பனே!! அப்பனே அவை மட்டும் இல்லாமல் சந்திரனின் கிரகத்திலிருந்து அப்பனே அதிகாலையிலே யான் சொன்னேனே... அப்பனே பின் அறிந்தும் கூட... முதலில் கங்கை தன்னில் கூட அப்பனே உற்பத்தியாகின்றதே (கங்கோத்ரி கோமுகி பகுதிகளில்) எதை என்று கூட... அங்கே குள்ளர்கள் வந்து நீராடுவார்கள் அப்பா !!!! அதுதான் அப்பனே அறிந்தும் கூட அவர்களிடத்தில் அப்பனே அவ் அன்பு எதை என்று கூட நிறைந்து...அவ் சந்திரனின் நுண்ணுயிர்கள் அதிகம் அப்பா பின் அனுதினமும் அப்பனே.. பின் அதாவது தட்டில் பறந்து பறந்து வந்து!!! (பறக்கும் தட்டு Unidentified Flying Object' UFO (யுஎஃப்ஒ) (சித்திர குள்ளர்கள் பற்றிய வாக்குகள் குருநாதர் ஏற்கனவே தன் வாக்குகளில் கூறியுள்ளார் சித்தன் அருள் 1613 அம்பாஜி சக்தி பீடம் சித்தன் அருள் 1631 பெங்களூர் சத்சங்கம் .. பதிவுகளில் விரிவாக காணலாம்) அப்பனே வந்து வந்து அங்கே பின் அமர்ந்து தியானங்கள் செய்து அப்பனே நன் முறைகளாகவே நீராடி அப்பனே அவ் நீராடுகின்ற பொழுது அது அப்படியே பின் சந்திரனின் கிரகத்தின் தன்மை அப்பனே நிச்சயம் கங்கையதனில் பின் அப்படியே செல்லுமப்பா!!! இதனால் அப்பனே பின் பைத்தியக்காரர்களும் கூட வரும் காலத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே கங்கை தன்னில் குளிக்கும் பொழுது புத்துணர்ச்சி பெற்று அப்பனே தீர (ஆழ்ந்து )அப்பனே பின் யோசிக்கும் திறன் உண்டாகுமப்பா!!! அப்பனே!!! அப்பனே இதே போலத்தான் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட கடல் தன்னில் கூட அதாவது பின் நீர் எவை என்று அறிய அறிய அப்பனே அதிகாலையிலே நிச்சயம் அப்பனே பல வகையிலும் கூட எதை என்று அறிந்தும் கூட பல நுண்ணுயிரிகள் பல வகையிலும் கூட யோகங்கள் என்பதற்கிணங்க அப்பனே எங்கெங்கு கிரகங்களின் தன்மை அப்பனே கூட இதனால் தான் அப்பனே யோகங்கள் இன்னும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் கூட அப்பனே எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலன்களாகவே இதனால்தான் அப்பனே எதை என்றும் கூட புரிந்து வாழ வேண்டும்... புரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே பின் நிச்சயம் மீண்டும் மீண்டும் அதாவது பூமிக்கு வந்து வந்து அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இறக்கத்தான் வேண்டும். ஆனால் அறிந்தும் கூட. அதனால் பின் அதாவது புண்ணியவான்கள் அப்பனே ஏன் எதற்கு புண்ணியவான்கள் என்கின்றோம் என்று யான் சொல்லிவிட்டேன் முன்பே அப்பனே... நலன்களாகவே அப்பனே இவ்வாறு பின் நுண்ணுயிர்கள் இவ்வாறு கலந்து வந்து கலந்து வந்து பக்திக்குள் நுழைந்து நுழைந்து பல தவங்களும் செய்து செய்து வந்தால் தான் அப்பனே அவ் நுண்ணுயிரிகள் அப்படியே இருக்கும்... தக்க வைத்துக் கொள்ளும் அப்பனே. இதனால் தான் அப்பனே யோகங்கள்... குருநாதர் உரைத்த ரகசிய வாக்குகள் பாகம் மூன்றில் தொடரும் ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

ரகசிய வாக்கு ஒன்னு

Friday 25 October 2024 சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ரகசியங்கள் பாகம் 1 மற்றும் உத்தரவு வணக்கம் அகத்தியர் அடியவர்களே துலாம் மாதமான இந்த ஐப்பசி திங்களில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் என்று குருநாதர் உத்தரவு தந்ததை அனைவரும் அறிவீர்கள்!!! குருநாதர் ஒவ்வொரு மாதத்திலும் என்னுடைய பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும்???? என்பதை தெரிவித்துக் கொண்டே வருகின்றார் அப்பனே யான் வாக்குகளில் செப்பிக் கொண்டே வருவதை அப்படியே கடைபிடித்து வர வேண்டும் அப்பனே நல் மாற்றங்கள் ஏற்படும் என்று குருநாதர் தன்னுடைய வாக்குகளில் சித்திரை மாதம் தொட்டு பங்குனி மாதம் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வாக்குகளில் நமக்கு உபதேசம் செய்து வழி நடத்தி வருகின்றார்.. சித்திரையில் சித்திரகுப்தர் வழிபாடு... ஆடியில் பித்ருக்கள் வழிபாடு ஆவணியில் கணபதி வழிபாடு கன்னி மாதமான புரட்டாசி திங்களில் நவராத்திரி தேவியர் நவகிரக வழிபாடு... ஐப்பசியில் புண்ணிய நதிகளில் நீராடல் அப்படியே கார்த்திகை மார்கழி தை என பங்குனி வரை தன் பக்தர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே வாக்குகள் தந்து அதனை செய்யச் சொல்லி வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி கர்மாக்களையும் பாவங்களையும் குறைத்து கஷ்டங்களிலிருந்து மீண்டு வருவதற்கு பல புண்ணிய காரியங்களை செய்ய சொல்லி குருநாதர் நம்மை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்!! அதன்படி ஐப்பசி திங்கள் துலாம் மாதமான இந்த மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் என்று ஒவ்வொரு வருடத்திலும் யான் உருவாக்கிய நதிகளில் சென்ற நீராட வேண்டும் என்று ஒவ்வொரு வருடத்திற்கும் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என இப்படி படிப்படியாக என்னென்ன செய்ய வேண்டும் என்று வாக்குகளில் உபதேசம் செய்து கொண்டே இருக்கின்றார். புண்ணிய நதிகளில் பச்சைக் கற்பூரத்தை இட்டு நீராட வேண்டும் மூழ்கி மூழ்கி நீராட வேண்டும் நதிகளின் நீரின் உள்ளே கண்விழித்து பார்க்க வேண்டும்... எனவும் 2022 ஆண்டு துருவ நட்சத்திரம் சனி பகவான் ஐப்பசி மாதத்தில் என்ன தொடர்பு? என்பதை பற்றியும் அறிவியல் ரீதியாகவும் புண்ணிய நதிகளில் நீராடி விட்டு அதாவது தாமிரபரணி நதிக்கரையில் குருநாதர் உருவாக்கிய நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் வழிபாடு செய்து வர வேண்டும் என்று குருநாதர் உத்தரவு தந்து இருந்தார். இந்த முறை புண்ணிய நதிகளில் ஒன்பது நாட்கள் நீராட வேண்டும் என்றும்... நவராத்திரியில் நவதானியங்களையும் உப்பையும் வைத்து வழிபாடு செய்யச் சொல்லி அதனை ஐப்பசி மாதம் வரும் அமாவாசையில் கடலிலோ புண்ணிய நதியிலோ சென்று இட்டு விட்டு நீராடி வரவேண்டும் என்று உத்தரவு தந்திருந்தார். திருவனந்தபுரத்தில் பக்தர்களின் கேள்வி பதில் இந்த வாக்கிலும் ஐப்பசி மாதத்தில் புண்ணிய நதிகளில் சப்தரிஷிகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து நீராடுவார்கள்... இதனால் இந்த மாதத்தில் நீங்களும் நீராடினால் சில கர்மாக்கள் குறையும் என்றும் குருநாதர் கூறியிருந்தார். ... புலஸ்தியர் மகரிஷி பொதிகை மலைவாக்கில் ஒருமுறை குருநாதர் அகத்திய பெருமான் இந்த உலகத்திற்கு புதுமையான விஷயங்களை எல்லாம் வந்து சொல்வார் இந்த உலகத்தை மாற்றுவார் என்று சித்தன் அருள் பதிவு 1353 ல் அகத்தியருக்கு புகழ் மாலையாக வாக்குகள் தந்ததில் கூறியிருந்தது நினைவில் இருக்கலாம். அதேபோல் கங்கோத்திரியில் உலகை ஆளும் ஈசனும் பார்வதி தேவியாரும் விவாதம் செய்து வாக்குகள் கூறிய போது ஈசன் குருநாதருக்கு அகத்தியா!!!! புதுப்புது விஷயங்களை கூட இந்த உலகத்திற்கு செப்பு என்று வாக்குகள் கூறி இருந்தார் சித்தன் அருள் பதிவு 1692. இதன்படி குருநாதர் வாக்குகளில்... மனிதர்கள் இதுவரை அறியாத பல ரகசியங்களை குருநாதர்... வாக்குகளில் கூறியுள்ளார். குருநாதரின் வாக்கையே முழுமூச்சாக கவனத்தில் வைத்துக் கொண்டு குருநாதர் சொல்வதை எல்லாம் அப்படியே கடைபிடித்து வரும் வட இந்தியாவில் வசித்து வரும் ஒரு அகத்தியர் பக்தர் குருநாதரின் இந்த வாக்கினை கேட்டு விட்டு அவரால் காவேரி நதிக்கு செல்வதற்கு காலதாமதம் ஆவதால் குருநாதரிடம் வாக்குகள் வாங்கி அதன்படி உடனடியாக அருகில் இருக்கும் கங்கை நதிக்கு சென்று அதாவது ஹரித்துவார் கங்கை நதி உற்பத்தியாகி பிரவாகம் எடுக்கும் இடத்திற்கு சென்று நீராடி விட்டு... கருணை உள்ள குருநாதரே தாங்கள் கூறியபடி அடியேன் நீராடி வந்து விட்டேன் என்று குருநாதரிடம் மகிழ்ச்சியோடு வணங்கி ஆசீர்வாதம் குருநாதரிடம் கேட்ட பொழுது நம் குருநாதர் அகத்திய பெருமான் புண்ணிய நதிகளில் நீராடுவதை குறித்து அதன் தார்பரியம் என்ன அதன் உள்ளே இருக்கும் தேவ ரகசியங்கள்.. என்ன என்பதைப் பற்றி பொறுமையாக விளக்கத்துடன் குருநாதர் எடுத்து கூறினார். குருநாதர் புதுமையான பல விஷயங்களை எடுத்துக் கூறுயதை.... குருநாதர் கூறிய ரகசியங்கள் ஒவ்வொரு பாகமாக வெளியே வரும்!!!.... இதில் குருநாதர் கூறிய ரகசியங்களில் இந்த மாதத்திற்கான ஐப்பசி துலாஸ்நானம் நீராடுதல் குறித்து குருநாதர் உரைத்த வாக்குகளை உத்தரவை முதலில் பதிவு செய்கின்றோம் . துலாஸ்நானம் என்றால் தமிழ் மாதங்கள் 12 சித்திரை வைகாசி வருவதை போல் பன்னிரண்டு ராசிகளையும் வரிசையாக கணக்கிட்டால் ஐப்பசி மாதம் துலாம் மாதமாக இருக்கின்றது குருநாதர் வாக்குகளில் கன்னி மாதம் புரட்டாசி மாதம் தனு மாதம் மார்கழி மாதம் என குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்க. சூரியன் துலாத்தில் சஞ்சரிக்கும் இந்த மாதம் துலாம் மாதம் என அழைக்கப்படுகின்றது துலாம் மாதத்தில் செய்யப்படும் ஸ்நானம் துலாஸ்நானம் எனப்படுகின்றது. அதில் முதலில் புண்ணிய நதிகளில் நீராடுவதன் ரகசியத்தை பற்றியும்.... அடுத்து கந்த சஷ்டி விரதம் இதனை பற்றியும் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் குருநாதர் கூறி இருக்கின்றார்!! குருநாதர் உரைத்த வாக்குகள் பின்வருமாறு!!! ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!! அப்பனே ஆசிகளப்பா!!! ஏன் எதற்கு பின் நலன்களாகவே கங்கை நதியிலும் கூட அதாவது அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது இவ் ஐப்பசி திங்களில் ஏன் அப்பனே நிச்சயமாய் அப்பனே பின் நீராட.... என்னவென்று... எதற்காக என்று எல்லாம் அப்பனே.... இப்பொழுது உந்தனுக்கு/உங்களுக்கு புரிய வைக்கப் போகின்றேன் அப்பனே!!!!! அப்பனே அறிந்தும் கூட இதனை அறிவியல் வழியாகவே.... சில நுண்ணுயிர்கள் (நன்மை பயக்கும் பாக்டீரியாபேஜ் Bps T4 .... இவ்வகையான நுண்ணுயிரிகள் கங்கை நதியில் அதிகமாக காணப்படுகின்றது என்பதை தற்போது அறிவியல் கண்டுபிடித்து இருந்தாலும் இதைல்லாம் சித்தர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து கங்கை நதியின் புனித தன்மையை மகிமையை மானிடர்களுக்கு முன்பே உணர்த்தி இருக்கின்றார்கள்) அப்பனே நுண்ணுயிர்கள் அதாவது கங்கோத்ரி அதன் மேலே இன்னும் அப்பனே... ( அதாவது கங்கோத்திரி கங்கை நதி பகிரதி நதியாக மேலே இன்னும் 19 கிலோமீட்டர் தொலைவில் கோமுகி என்னும் இடம் இருக்கின்றது அங்குள்ள குகையில் இருந்து தான் கங்கை நதி உற்பத்தியாகின்றது என்று ஓரளவு கணக்கு சொல்லி இருக்கின்றார்கள் கங்கோத்திரி வாக்கிலும் ஈசன் என்னுடைய குகை இங்கிருந்து தொலைவில் இருக்கின்றது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்க!!!... கங்கை நதி அங்கு இன்னும் பல ரகசியங்களை உள்ளடக்கி அங்கிருந்து உற்பத்தி ஆகின்றது அப்படியே மேலே சென்றால் மானசரோவரும் கைலாயமும் இருக்கின்றது) சில தொலைவில் கூட அப்பனே பின்... ஈசன் அப்பனே பின் பார்வதி தேவியும் கூட ஒளிந்து நின்று அப்பனே நிச்சயம் அனு தினமுமே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அங்கிருந்தே அவந்தன் (ஈசன்) காலடியில் இருந்தே அப்பனே பின் துவங்குகின்றது (கங்கை நதி) அப்பனே!! இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் அவ்வாறு நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே கங்கை நதி வருகின்ற பொழுது... அவன் காலடியில் இருந்து வருகின்ற பொழுது அப்பனே அவந்தன் இன்னும் அப்பனே அதாவது அப்படி உண்மைதனை கூட எடுத்துரைத்தால் அப்பனே சக்தி மிகுந்தவன் என்பேன் அப்பனே. அதாவது அப்பனே இறைவனை அதாவது நிச்சயம் அப்பனே பின் காந்தகம் என்றும் வைத்துக் கொள்ளலாம். அங்கு ஒரு பெரிய காந்தகம் உள்ளதப்பா!!(கங்கை நதி உருவாகும் இடத்தில்) அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!! அப்பனே அவ் காந்தகத்தில் அடியில் இருந்து தான் கங்கை நதி வருகின்றது என்பேன் அப்பனே!!! அங்கிருந்து துவங்கும் பொழுது நுண்ணுயிர்கள் அப்பனே பல பல வெளிப்படும் என்பேன் அப்பனே.... அப்படியே இங்கு வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே.... நீராடினால் அப்பனே நிச்சயம் நன்மைகள் பல பல என்பேன் அப்பனே அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது கிரகங்கள் அப்பனே பின் மறைமுகமாக இன்னும் அப்பனே... நவ கிரகங்கள் தான் என்று சொல்கின்றார்கள் அப்பனே... இன்னும் அப்பனே பின் அதாவது அண்டத்தில் இன்னும் பல பல கிரகங்களும் கூட இருக்கின்றது அப்பனே இதனால் அப்பனே ஒன்றுக்கொன்று உராயும்!!! அதாவது...இவ் ஐப்பசி திங்களில் கூட ஒன்றுக்கொன்று உராய்கின்ற பொழுது அப்பனே பரிசுத்தமான ஆற்றல் என்பது அப்பனே அதாவது கங்கை நதி உருவாகின்றதே... அதாவது யான் சொன்னேனே அவ் காந்தகத்தில் தான் அப்பனே அதில் உராய்கின்ற பொழுது அப்பனே சில சில அப்பனே அதாவது நுண்ணுயிர்களை இவ் காந்தகம் அப்பனே அப்படியே ஈர்க்கும் அப்பா!! அப்பனே அதாவது இதன் ஈசனையும் கூட பின் சம்மதித்து அதாவது அறிவியலையும் கூட சம்மதித்து உந்தனுக்கு/ உங்களுக்கு சொல்கின்றேன் அப்பனே.... இன்னும் புதுமையான விஷயங்களை உங்களுக்கு எடுத்துரைக்கும் பொழுது இன்னும் புரியுமப்பா!! அப்பனே இவைதன் பின் உராய்கின்ற பொழுது அப்படியே பின் அதாவது இங்கிருந்து அப்பனே எடுத்துக் கொண்டாலே... கங்கை தன்னில் இருந்து அப்பனே கீழே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... காவேரி தன்னில் அப்பனே நிச்சயம் அப்பனே இங்கு பட்டு அதாவது அவ் காந்தத்தில் பட்டு... மீண்டும் அப்பனே எவ்வளவு வேகம் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது காவிரியில் கூட அப்பனே பின் அங்கு படும் அப்பா.... அதாவது அங்கு உருவாகின்றதே அங்கு படும் அப்பா....(குருநாதர் அகத்தியப் பெருமானின் தலமான குடகு தலை காவிரியில் துவங்கி காவிரி நதி கடலில் சென்று சேரும் தலங்கள் முழுவதும்) அதனால் அப்பனே இவ் ஐப்பசி திங்களில் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் அனைத்து... மாதங்களிலும் இப்படி செல்லாதா என்று????...(கேள்வி எழலாம்) ஆனாலும் அப்பனே இவ் மாதத்தில் தான்... அப்பனே சக்திகள் அப்பனே பின் குவிந்து நிற்குமப்பா... போகப்போக அப்பனே அவை குறைவாகிவிடும் என்பேன் அப்பனே!!! அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே இறைவனையும் கூட அறிவியலையும் கூட ஒன்றாக இணைத்தோம் என்போம் அப்பனே அப்பனே அதே போலத்தான் அப்பனே அறிந்தும் கூட அதாவது சில நுண்ணுயிர்கள் அப்பனே நிச்சயம் அதாவது... மனிதர்களின் மூளையை சுற்றி இருக்கும் அப்பா... அப்பனே இதை பின் யாரும் கண்டுபிடிக்க முடியாதப்பா ஆனாலும் அப்பனே இவ் புண்ணிய நதிகளில் நீராடும் பொழுது.... நதிகளில் அங்கு வரும் நுண்ணுயிர்கள் கூட!!... இங்கு இருக்கும் (மூளையை சுற்றி இருக்கும்) நுண்ணுயிர்கள் கூட அப்பனே அதாவது அப்பனே அவ் நுண்ணுயிர்கள் அப்பனே அதாவது அப்பனே அப்படியே நிற்குமப்பா அப்பனே வேலை செய்யாமல்!!! திடீரென்று அப்பனே அவ் சக்திகளான... பின் நுண்ணுயிர்கள் வரும்பொழுது (நதிகளில்) அப்பனே இதை தாக்குகின்ற பொழுது இதற்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டு அப்பனே பின் அப்படியே அப்பனே பின் செயல்பட அதிவேகமாக செயல்படுகின்ற பொழுது அப்பனே யோகங்கள் நடக்குமப்பா!!!! அப்பனே அதற்காகத்தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே... பின் அப்பனே முதலில் மூன்று முறை பின் (நதியில் நீராடும் பொழுது) தலை மூழ்கி அப்பனே கண்களில் கூட நிச்சயம் அப்பனே அப்பனே அவ் நுண்ணுயிர்கள் ஈர்க்கும் பொழுது கண்களில் கூட அப்பனே அதாவது எப்பொழுதும் அப்பனே சக்திகள் இருந்து கொண்டே இருக்கும் அப்பா அப்பனே ரகசியங்கள் யாங்கள் சித்தர்கள் கண்டுபிடித்தோம் அப்பனே ஆனாலும்... அனைத்தும் அப்பனே மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே... இன்னும் ரகசியங்கள் சொல்லப் போகின்றேன் உந்தனுக்கு/ உங்களுக்கு அப்பனே!!! இதனால்தான் அப்பனே கண்களில் கூட அதாவது சிறிது சிறிதாக நுண்ணுயிர்கள் பின் அழிகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் கண்ணும் அதாவது பார்வை குறைபாடும் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே இவ்வாறு புண்ணிய நதிகளில் நிச்சயம் அப்பனே அதாவது அவ் நுண்ணுயிர்கள் அழிந்து கொண்டே போகின்றது இதனால் தான் அப்பனே பார்வை குறைபாடு இதனால் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட நீராட அவ் கண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுடன் நதிகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே ஒன்றாக இணையும் பொழுது அப்பனே இன்னும் அப்பனே பார்வை அதிகரிக்குமப்பா!! அப்பனே இதுதான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!! அப்பனே இதே போலத்தான் அப்பனே பற்களில் கூட இருக்கும் அப்பா... இதனால் அப்பனே நன் முறைகளாகவே முதலில் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சிறிதளவாவது அப்பனே நிச்சயம் எடுத்து அப்பனே பற்களில் தொட... (புண்ணிய நதிகளின் நீரை கொண்டு வாய் கொப்பளித்தல்) அப்பனே இவ் பற்களில் இருக்கும் நுண்ணுயிர்களும் அப்பனே செயல்பட ஆரம்பிக்கும் என்பேன் அப்பனே அதனால் அப்பனே பற்கள் நன்றாகவே இருக்கும் என்பேன் அப்பனே நோய்களும் வராதப்பா!!! அப்பனே அதே போல் அப்பனே கங்கை தன்னில் அப்பனே அதிக நுண்ணுயிர்கள் அப்பா இதனால் அப்பனே பின் அதாவது கங்கை தன்னில் குளித்தாலே பாவம் போகும் என்கின்றார்கள் அப்பனே.. இதனால் அப்பனே நிச்சயம் பல பல நுண்ணுயிர்கள் அப்பனே பின் எதை என்றும் கூட அப்பனே அதாவது மனிதன் வளர்கின்ற பொழுது இறந்து கொண்டே இருக்கும் அப்பா (மனித உடம்பில் இருக்கும் நுண்ணுயிர்கள் செல்கள் மனிதர்கள் வளர வளர அவை இறந்து கொண்டே இருக்கும்) அப்பனே ஆனால் கங்கை தன்னில் நீராடினால் அப்பனே நிச்சயம் அப்பனே மீண்டும் அவ் நுண்ணுயிர்கள் நுண்ணுயிர்கள் கூட அப்பனே அதாவது மனிதர்கள் உடம்பில் இருக்கும் நுண்ணுயிர்கள் கூட நீராடும் பொழுது அப்பனே பின் அதாவது உராய்கின்ற பொழுது அப்பனே மீண்டும் புத்துணர்ச்சி பெற்று அப்பனே பின் இளமை போல் காட்சியளித்து அப்பனே மீண்டும் யோகங்கள் பிறக்கும் அப்பா!!! அப்பனே இதனால்தான் அப்பனை கைலாயம் என்கின்றார்கள் எதை என்று புரிய புரிய அப்பனே அங்கு பின் எவை என்று கூட அனைத்து கிரகங்களும் கூட அப்பனே நிச்சயம் உராய்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இளமை யோகங்கள் அப்பனே அதாவது அறிந்தும் கூட நதிகளில் கூட அப்பனே கங்கை நதியில் கூட நீராடி கொண்டே வந்தால் அப்பனே நிச்சயம் அவ் நுண்ணுயிர்கள் அப்பனே அதாவது பிறக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் கூட பல கோடி நுண்ணுயிர்கள் பின் கண்களுக்கு தெரியாமலே!!! இதனால் அப்பனே சிறிது சிறிதாக அழிகின்ற பொழுது அப்பனே அதாவது அவ் நுண்ணுயிர்கள் சரியாகவே அப்பனே பின் அதாவது அனைத்து நுண்ணுயிர்களும் கூட உயிருடன் இருக்கும் பொழுது தான் அப்பனே... கிரகங்களின் தாக்கங்களும் கூட அப்படியே எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிகின்ற பொழுதும் கூட அப்படியே யோகங்களாக மாறி அப்பனே நிச்சயம் அப்பனே பின் பன்மடங்காக உயரும். இதன் தொடர்ச்சியாக ரகசியங்கள் வாக்கு பாகம் இரண்டில் வெளி வரும். இவ் வாக்கினை அடுத்து 24/10/2024 காசியில் கங்கை நதியில் குருநாதர் அடியவர்களுக்கு தந்த உத்தரவு!! ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!! அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் ஏன் புண்ணிய நதிகளில் நீராடச் சொன்னேன்???? என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் பல பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இவ் ஐப்பசி திங்களில் கூட அப்பனே நன் முறைகளாகவே புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே நிச்சயம் அப்பனே பின் சில பாவங்கள் கரையுமப்பா அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் அறிவியல் ரீதியாகவே யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே (மேலே குருநாதர் கூறிய ரகசிய வாக்கு) இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு அப்பனே பின் நிச்சயமாய் அப்பனே பின் சந்தோசமாகவே பின் நிச்சயம் அனைத்தும் பின் அதாவது செல்களும் கூட அதாவது அப்பனே பின் சிறு சிறு நுண்ணுயிர்களும் கூட அப்பனே அப்படியே ஆடும் பொழுது அப்பனே அதை தக்க வைக்க அப்பனே நிச்சயம் பின் முருக பெருமானை கூட சரியாகவே!!! (கந்த சஷ்டி விரதம்) ( 2/11/2024 ஐப்பசி 16 சனிக்கிழமை முதல் 8/11/2024 ஐப்பசி இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஸ்கந்த சஷ்டி விரத நாட்கள்) அதாவது நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது அப்பனே பின் ஏன் எதற்கு என்று பின் ஐப்பசி மாதத்தில் கூட விரதத்தை அதாவது கந்த சஷ்டி விரதத்தை அப்பனை ஏன் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது...அவ் நுண்ணுயிர்கள் நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு ஆடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் இன்னும் அதிகமாகவே... (உணவுகள்) உட்கொண்டால் அப்பனே இன்னும் அப்பனே உடம்பிற்கு கேடுகளப்பா!!! இதனால் அப்பனே பின் அதிகமாகவே வளரும் தன்மை அப்பனே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே சில சில அப்பனே பின் அதாவது சரியாகவே முருகப்பெருமானை வணங்கிட்டு அப்பனே சரியான உணவுகளை அதாவது பழங்களை கூட எடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே போதுமானதப்பா (கந்த சஷ்டி விரத நாட்களில் அதிக அளவு உணவை உண்ணாமல் இயற்கையான பழங்களை உண்ணுதல் வேண்டும்) அப்பனே தெளிவு பெற யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே அதுமட்டுமில்லாமல் அப்பனே பின் அருணகிரி அழகாக முருகனை நோக்கி!!! அப்பனே பின் பாடி உள்ளான் அப்பனே (திருப்புகழ்) அவ் பாடல்களையும் கூட அப்பனே பின் ஒவ்வொரு நாளும் அப்பனே நிச்சயம் பின் விரதத்தில் பாடி வர நன்று என்பேன் அப்பனே அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் அனுதினமும் அப்பனே பின் அதாவது அறுபடை வீடுகளையும் கூட அதாவது மனதில் வேண்டிக்கொண்டு!!! அப்பனே அங்கு இருக்கும் முருகனை மனதில் மனதார வேண்டிக் கொண்டு அப்பனே பின் நிச்சயம் பின் என்ன?... வரங்கள் எதை என்று அறிய அறிய... சாரும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அழகாகவே இன்னும் இன்னும் அப்பனே... (கந்த சஷ்டி விரத நாட்களில் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்றும் வழிபாடு செய்ய முடியும். அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி அறுபடை வீடு முருகனை நினைத்துக் கொண்டு முருகனை மனதில் நிறுத்தி நமது நியாயமான கோரிக்கைகளை அதாவது வரங்களை வேண்டிக்கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும் ) நிச்சயம் அப்பனே இன்னும் கர்மா தான்... அதாவது பாவம்தான் அப்பனே பின் கலியுகத்தில் அப்பனே அதிகமாக இருக்கின்றது என்பேன் அப்பனே.. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே சில சில பின் அதாவது அப்பனே பின் தகர்வு அதாவது நிச்சயம் அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் அதாவது நீக்கிவிட அப்பனே நல் மாற்றங்கள் ஏற்படும் அப்பா அதாவது அப்பனே பின் சிலசில வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் துன்பங்கள் அப்பனே பின் எவை என்று அறியாமலும் கூட வந்து இருக்கும் என்பேன் அப்பனே அதனால் அவற்றையெல்லாம் அகற்றி நிச்சயம் வாக்குகள் உரைத்து அப்பனே நிச்சயம் உங்களை நல்வழிப்படுத்தி அப்பனே நீங்கள் வேண்டியதை அப்பனே நிச்சயம் யான் கொடுத்திடுவேன் அப்பனே இதனால் குறைகள் ஏதும் இல்லை அப்பா... அப்பனே நிச்சயம் அப்பனே ஆசிரியன் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுக்கின்ற பொழுது அவ் மாணவன் சரியாகவே ஆசிரியன் பேச்சை கேட்டு வந்தாலே போதுமானதப்பா!! அனைத்தும் அப்பனே நிச்சயம் அப்பனே புரிந்து கொள்வான் மாணவன் கூட... ஆசிரியனுக்கும் கூட சந்தோஷங்கள் அப்பனே.. இதனால் அனைத்தும் செய்திடுவான் அவ் ஆசிரியன் கூட இதனால் அப்பனே நிச்சயம் யான் சொல்லியதை பின் சரியாகவே கடைப்பிடித்து வந்தாலே போதுமானதப்பா இன்னும் பலமாக வாக்குகள் செப்பி அப்பனே விதியின் பின் ரகசியத்தைக் கூட எடுத்துரைப்பேன் அப்பனே. இதனை சரியாக செய்க!!!! அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பா இங்கிருந்தே அப்பனே!! ஈசன் ஆசிகளும் பார்வதி தேவியின் ஆசிகளும் கூட அப்பனே நிச்சயம் பின் நிச்சயம் உண்டு உண்டு என்பேன் அப்பனே. அதுமட்டுமில்லாமல் அப்பனே இன்னும் இன்னும் பின் (நவம்பர் 1 ஐப்பசி அமாவாசை) அமாவாசை திதிகளில் கூட இயலாதவர்கெல்லாம் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட இல்லத்தில் கூட அப்பனே நல்விதமாகவே அவர்களுக்கும் உணவை கொடுத்து மகிழ்வீர்களாக!!! (அமாவாசை அன்று நவதானியத்தையும் குப்பையும் கடலிலோ ஆற்றிலோ சென்று கரைத்து விட்டு வழிபாடு செய்து விட்டு வந்து வீட்டில் உணவை சமைத்து இயலாதவர்களை வீட்டிற்கு அழைத்து உணவை பரிமாற வேண்டும்) அப்பனே நிச்சயம் ஆசிகளப்பா ஆசிகள்!!! மீண்டும் பின் விவரிக்கின்றேன் ஆசிகள்!!! ஆசிகள்!!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, November 3, 2024

இறைவனிடம் வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனிபோல, நண்ணிய நின்முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய். - மகாகவி பாரதியார்.