Sunday, November 26, 2023
அகத்தியப்பெருமானின் மதுரை வாக்கு!
சித்தன் அருள் தொகுப்பு:1444 ன் தொடர்ச்சியாக, அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!
ஏன்? எதற்க்காக கஷ்டங்கள் வருகின்றதெல்லாம் யான் ஏற்கனவே அப்பனே சொல்லிவிட்டேன்
அப்பனே. மீண்டும் ஒரு முறை சொல்லி வைக்கின்றேன் அப்பனே. அப்பனே விதியில் என்ன
உள்ளது என்பது யாருக்கும் தெரியாதப்பா. ஆனாலும் அதன்படித்தான் நடக்கும் அப்பா.
ஆனாலும் இங்குதான் மனிதர்கள் அப்பனே அதை இதை என்று செய்தால் பின் அனைத்தும் மாறும்
என்பது. ஆனால் நிச்சயம் மாறாதப்பா. அதனால் அப்பனே தர்மம் செய்து கொண்டே இருந்தாலும்
அப்பனே (நீங்கள் செய்த) இவ்தர்மத்தைப்பற்றி பிரம்மாவிடம் எடுத்துரைத்து அப்பனே
விதியை யாங்களே மாற்றுவோம் அப்பனே. இதுதான் உண்மை. மற்றவை எல்லாம் பொய்களப்பா. எதை
என்றும் பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் விதியைக்கூட பின் மதியினால்
வெல்லலாம் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே. இதனையும் கூட பலமுறை யான்
எடுத்துரைத்து விட்டேன். அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்தும். அப்பனே மதி
என்பவனே இறைவன். ஆனாலும் அப்பனே எதை என்றும் புரியப்புரிய நீங்கள் சரியான வழியில்
தர்மத்தின் வழியை கடைபிடித்து வந்தாலே போதுமானதப்மா. தானாகவே விதியும் மாறவிடும்
அப்பனே. அதற்க்கு யாங்கள் உதவிகரமாக இருப்போம் அப்பனே. எதை என்றும் அறிய அறிய
நீங்கள் (தர்மம்/புண்ணியம்) எதுவும் செய்ய வில்லை என்றால் அப்பனே எதை என்றும்
அறிந்தும் அறிந்தும் அப்பனே எங்களாலும் மாற்ற முடியாதப்பா. நீங்கள் ஏதாவது
(புண்ணியம்) செய்தால்தான் அப்பனே அதை பிரம்மாவிடம் கூறி அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே (விதியை) மாற்றி அமை என்பவைஎல்லாம் (கேட்க இயலும்). ஆனாலும் அப்பனே
நீங்களும் கேட்கலாம் பின் ஏன்? (அகத்திய பிரம்ம ரிஷி) உங்களைத்தான் (யான்)
நம்புகின்றேனே நீங்கள் மாற்ற (க்கூடாதா?) எதை என்று அறிய அறிய அப்பனே அது என்னால்
மாற்ற இயலும். அப்பனே அனைத்தும் என்னால் செய்ய முடியும். இவ்வுலகத்தையும் அப்பனே
நிறுத்த முடியும். அப்பனே எவை என்றும் அறிந்தும் கர்மத்தையும் கொடுக்க முடியும்.
அப்பனே எவை என்று கூற கர்மத்தையும் எடுக்க முடியும். ஆனாலும் அப்பனே யார் இடத்தில்
எவ்மதிப்பு உள்ளதோ அவ்இடத்திற்க்கு சென்றால்தான் உத்தமம். இதை ஏற்கனவே தெளிவு
படுத்திவிட்டேன் அப்பனே. மீண்டும் ஒரு முறை உங்களுக்கு தெளிவுபடுத்தவே யான்
எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதனால் அங்கும் இங்கும் அலைந்து
திரிந்து அப்பனே எவை என்று புரியாமல் வந்தாலும் ஒன்றும் இல்லை அப்பா. அப்பனே இறைவன்
எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் எதை எதிர்பார்க்கின்றான் என்று அப்பனே
தெரிந்துவிட்டால் அப்பனே கட்டங்களே வராதப்பா. அப்பனே நீ எதற்க்காக வந்தாய் என்பதை
எல்லாம் தெரிந்து கொண்டாலே அப்பனே கஷ்டங்கள் வராதப்பா. பின் அதை விட்டு விட்டு
அதாவது இவ்வுலகத்திற்க்கு எதறக்காக வந்தாய் என்று அப்பனே தெரியாமல் அப்பனே பின்
அலைந்து திரிந்து வந்தால்தான் பின் கஷ்டங்களப்பா. ஆனால் அதை தெரிந்து கொள்ள
வேண்டுமானால் தர்மம் செய்ய வேண்டும் அப்பனே. பின் அவ்தர்மம் செய்து கொண்டே வந்தால்
அப்பனே பல பல இடையூறுகள் பல கஷ்டங்கள் வரும்ப்பா. ஆனாலும் அதை மீறியும் தர்மங்கள்
செய்தால் அப்பனே யானே உங்களுக்கு நிச்சயம் வந்து அனைத்தும் செய்வேன் அப்பனே. சில
மாற்றங்களை கூட எளிதில் நிகழ்த்திவைப்பேன் அப்பனே. இது பல பல என் பக்தர்களுக்கும்
ஏற்க்கனவே செய்திருக்கின்றேன் அப்பனே. உணர்க அப்பனே. இதனால்தான் அப்பனே தர்மம்
செய், தர்மம் செய் என்று அப்பனே அதாவது எதை என்றும் அறிந்து அறிந்து ஏற்க்கனவே
சொல்லி இருந்தும் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பனே.
தர்மத்தின் பாதையில் செல்லச்செல்ல அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வந்து
கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. எவ்வளவுக்கு எவ்வளவு தர்மங்கள் செய்கின்றீர்கள்
என்றால் அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
ஏன்? எதற்க்காக என்றால் என்பேன் அப்பனே தர்மம் செய்யச்செய்ய அப்பனே புண்ணியங்கள்
உயர்வடைய உயர்வடைய அப்பனே கர்மங்கள் குறைந்து கொண்டே வரும்ப்பா. ஆனால் எதை என்று
அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வளவு தர்மங்கள் செய்கின்றோமே எதற்க்காக? ஏன்? எதை
என்று அறிய அறிய பின் கஷ்டங்கள் வருகின்றது என்று எல்லாம் நீங்கள் எண்ணக்கூடாது
என்பேன் அப்பனே. தர்மங்கள் உயர்வாகினில் கர்மங்கள் குறைந்துவிடும் அப்பனே.
சொல்லிவிட்டேன். இதனால்தானப்பா அனைவருமே அப்பனே எவை என்று கூற அப்பனே ஏற்க்கனவே
சொல்லிவிட்டேன் அப்பனே. அனைத்தும் இப்பொழுது கூட அதைத்தான் சொல்லிக்கொண்டு
இருக்கின்றேன் அப்பனே. அப்பனே எவை என்று கூற ஒவ்வொரு முதுகிலும் கூட அப்பனே கர்மா
மூட்டை அப்பனே சரியாக இருக்கின்றது அப்பா. முதலில் அதை இறக்கிவிட வேண்டும் என்பேன்
அப்பனே. அவை இறக்கி வைப்பதற்க்கு அப்பனே புண்ணியம் என்ற எவை என்று அறிய அறிய ஒன்று
தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அதைச்செய்யாமல் அப்பனே எதை என்று கூற முதுகில்
இருந்து யாரும் எதை என்று அறிய அறிய இறக்கியும் வைக்க மாட்டார்கள் அப்பா. ஆனாலும்
இறக்கி வைக்கின்றேன் , இறக்கி வைக்கின்றேன் என்றெல்லாம் மனிதன் சொல்லலாமே தவிர
அப்பனே மீண்டும் மீண்டும் அது கூடிக்கொண்டேதான் செல்கின்றது என்பேன் அப்பனே
அதனால்தான் தொல்லைகளப்பா. என் பக்தர்களே பல பேர்களை யான் பாரத்துவிட்டேன் அப்பனே.
எதை எதையோ நம்பி, எதை எதையோ செய்து அப்பனே மீண்டும் மீண்டும் பெருக்கிக்கொண்டேதான்
இருக்கின்றார்கள். பின்பு அகத்தியனை நம்பினேனே சுவடிகளை நம்பினேனே என்றெல்லாம்
பிதற்றல் ஆகாதப்பா. அதனால் என் வழியில் வந்து விட்டால் அப்பனே சில சோதனைகள் வரலாம்.
அப்பனே எதற்க்காக சோதனைகள்? எவை என்றும் அறிய அறிய சோதனைகள் கொடுத்தால்தான் உங்களை
பக்குவப்படுத்த முடியும் என்பேன் அப்பனே. சோதனைகள் இல்லை என்றால் எதை என்றும் அறிய
அறிய நீங்கள் ஓடி விடுவீர்கள் என்பேன் அப்பனே இன்பப்பாதைகளுக்கு என்பேன் அப்பனே.
ஆனாலும் அவ்இன்பப்பாதைகளே கடைசியில் துன்பமாக மாறிவிடும் என்பதெல்லாம் மனிதனுக்கு
தெரிவதில்லை என்பேன் அப்பனே. இதனால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. ஏன்?
எதற்க்காக? யான் சில துன்பங்களை உங்களுக்கு வைக்கின்றேன் என்றால் அப்பனே நீங்கள்
இன்பம் அடைவதற்க்கே, அப்பனே சில கர்மாக்களை ஒழிப்பதற்க்கே. ஆனாலும் அப்பனே
அகத்தியனை நம்பினேனே காசுகள் கொடுக்கவில்லையே, இன்னும் பொருள்கள் கொடுக்கவில்லையே ,
இன்னும் திருமணங்கள் செய்யவில்லையே, இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லையே , இன்னும்
எதைஎதையோ , எவை என்று அறிய அறிய ஆனால் எச்சமயம் எதைக்கொடுத்தால் நல்லது என்பதைக்கூட
சித்தர்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே. அப்படி கொடுத்தால்தான் நன்று. அப்படி
இல்லை என்றால் அப்பனே அதனாலே கொடுத்திட்டாலும் அதனாலேயே தீங்கு அப்பா. இப்படித்தான்
உலகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது அப்பனே. இதனால் எதை என்றும் அறிந்தும்
அறிந்தும் கூட இதனால் அப்பனே சோதனைகள் அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டேன் மீண்டும்
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. சோதனைகள் கொடுப்பதே இறைவன்தான் அப்பா.
ஆனால் அவ்சோதனை எதை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே இறைவனிடத்திறக்கே சென்றால்
என்ன லாபம் என்பேன் அப்பனே? அதனால் சோதனை அப்பனே எதை என்றும் அறிய அறிய கொடுப்பது
உங்கள் நல்லவைக்காகத்தான் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. எதை என்றும் அறிந்தும்
அறிந்தும் கூட இதனால் கவலை கொள்ளாதீர்கள் அப்பனே. எதை என்றும் அறிய அறிய சோதனை
ஒன்று இருந்தால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய எதை என்றும் புரிய புரிய
இன்பமும் அங்கே தங்கி இருக்கும் என்பேன் அப்பனே. அனைத்திலும் இறைவன் எதை என்று அறிய
அறிய அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. இதை சரியாக கேட்டுக்கொள்ளுங்கள்.
அப்பனே எவை என்றும் அறிய அறிய வாழ்க்கை இன்பமாகவே இருந்தால் அப்பனே நீங்கள்
இறைவனையே வணங்கமாட்டீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே. அறிந்தும் அறிந்தும்
கூட ஆனால் அப்பனே இறைவன் எதை என்றும் கூற அனைவரையுமே படைக்கின்றான். ஆனாலும் அப்பனே
நீங்கள் பின் இறைவன் விரும்பியது போல் இல்லை. அதனால்தான் அப்பனே எதை என்று கூற ஒரு
கஷ்டத்தை எதை என்று கூற வைத்து பின் இறைவன் விரும்பியதைப்போல்
உங்களைச்செய்கின்றான். இது தவறா அப்பனே?. எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே. என்னை நம்பியவர்கள் கூட நிச்சயம் கஷ்டங்களுக்கு
உட்படுத்துவேன் அப்பனே. யார் ஒருவன் எதை என்று உரிய உரிய நம்பிக்கைவைத்து என்
அகத்தியன் காப்பாற்றுவான் என்று அப்பனே நிச்சயம் வருகின்றானோ அவன்தனக்கு அனைத்தும்
கொடுத்து அப்பனே மேலே உயர்த்திவைப்பேன். அவை விட்டு விட்டு எதை என்றும் அறிய அறிய
இப்படி நம்பினோனே எதை என்றும் அறிய அறிய ஒன்றுமே நடக்கவில்லையே. மீண்டும் அங்கு
செல்வோமா இங்கு செல்வோமா அலைந்து கொண்டிருந்தால் அப்பனே வாழ்க்கையே இப்படித்தான்
அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்பேன் அப்பனே. ஒவ்வொருவருக்கும் அப்பனே ஒரு ஒரு
வாய்ப்பை இறைவன் தந்துகொண்டே இருக்கின்றான். அதை யார் ஒருவன் சரியாக
பயன்படுத்துகின்றானோ எதை என்றும் அறிந்தும் கூட கர்மா சேராதப்பா. ஆனால் சரியாக
பயன்படுத்தவில்லை என்றால் கர்மம் சேரும் அப்பா. அப்பனே இவ்உலகம் கர்மத்தால் சூழந்து
உள்ளது என்பேன் அப்பனே. அதனால் இவ்வுலகத்தில் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்
அவ்கர்மா நீக்கி பின்தான் அனைவரும் நல்லோர் நல்முறையாகவே வாழ முடியும் என்பேன்
அப்பனே. ஆனாலும் நீக்க முடியாது அப்பா. அப்பனே எதை என்று அறிய அறிய புண்ணியங்களை
விட கர்மா அதிகமாக உள்ளதப்பா. அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே.
ஒவ்வொருவருக்கும் கூட கஷ்டங்கள்தான் அப்பனே. இதை தெரியாமல் அப்பனே மனிதன் எதை என்று
கூற நடந்து கொண்டுஇருக்கின்றான் அப்பனே. மனிதன் வாழ்வோம் வாழ்வோம் என்றெல்லாம்
நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது அப்பனே இறைவன் சிரித்துக்கொண்டுதான்
இருக்கின்றான் அப்பனே. எதை என்றும் அறிந்து அறிந்தும் அனைத்தும் எவை என்றும்
புரியாமலும், தெரியாமலும் இவன்தன் வாழ்வு என்பதைக்கூட பின் நின்று பின் வாழ்வோம்
என்று நினைத்துக்கொண்டிருக்கின்றானே பாவம் என்று. ஆனாலும் அப்பனே இதனால்தான் அப்பனே
மனிதனுக்கு சில கஷ்டங்களை உணர்த்திவைத்து அப்பனே இறைவன் பாதை அழைத்து இறைவன்
திருத்துகின்றான் அப்பனே. அதனால் கவலைகள் இல்லை அப்பனே. அனைவரையுமே உங்களை எதை
என்று அறிய அறிய பலமுறையும் யான் பார்த்திட்டேன் லோபாமுத்திரையோடு. எங்கெங்கு எதை
என்றும் அறிய அறிய அங்கெல்லாம் ஆசிர்வாதங்கள் கொடுத்து இருக்கின்றேன் அப்பனே.
இதனால் நலன்களாகும் என்பேன் அப்பனே. குற்றங்கள் இல்லை அப்பனே. குறைகளும் எதை
என்றும் அறிய அறிய அப்பனே சில சில வருத்தங்களும் கூட இதனால் அதை எல்லாம்
நீக்குகின்றேன் அப்பனே. நல்முறைகளாகவே அதனால் அப்பனே தர்மத்தை கடைபிடியுங்கள்
அப்பனே. தர்மத்தைப்பற்றி பேசுங்கள் அப்பனே. தர்மத்தைப்பற்றியும் எப்பொழுதும்
சிந்தனையாக இருங்கள் அப்பனே. அப்பொழுதுதான் கர்மா ஒழியுமே தவிர அப்பனே பின் எதை
என்று அறிய அறிய நீ இறைவனிடத்திறக்கு சென்றாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய
அனுதினமும் இறைவனை வணங்கினாலும் நிச்சயம் கர்மா செல்லாதப்பா. எதை என்றும் அறிந்தும்
அறிந்தும் கூட இதனால் அப்பனே உணரந்தும் கூட இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பனே எதை என்றும் அறிய அறிய இறைவன் மிகப்பெரியவன் என்பேன் அப்பனே. இறைவன்
ஒருஒருவருக்கும் ஒருஒரு வேலை கொடுத்து அனுப்புகின்றான் இவ்வுலகத்திற்க்கு. அதை
செய்திட்டு வா என்று. ஆனால் அதை சரியாக செய்வதில்லை அப்பனே. அதனால்தான் கஷ்டங்கள்.
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே ஒரு தொழிலுக்கு செல்கின்றீர்கள் அப்பனே.
அங்கு நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் அப்பனே அவ் முதலாளியும் உன்னை எதை என்று
அறிய அறிய சென்றுவிடு அப்படியே என்று பின் இல்லத்திற்க்கு அனுப்பி விடுவான். அது
போலத்தான் அப்பனே இறைவன் அனைவருக்குமே ஒவ்வொரு வேலை வைத்திருக்கின்றான் அப்பனே. அதை
யாருமே சரியாக செய்வதில்லை என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவன் கூட கஷ்டத்தை வைத்து
அப்பனே எதை என்று கூற பல துன்பங்களை வைத்து அப்பனே இழுத்து இதுதான் உன் வேலை என்று
அப்பனே தீர்மானிக்க எதை என்று அறிய அறிய இறைவன் பாடுபட்டுக்கொண்டே இருக்கின்றான்
அப்பனே. அறிந்தும், அறிந்தும் ஆனாலும் அவைதன் கூட இறைவன் எதற்க்காக படைத்தான்
என்பதை ஆராய்வதற்க்கு புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. அப்புண்ணியங்கள் எதை
என்றும் அறிய அறிய அப்பனே நீங்கள் செய்து கொண்டே வந்தால், அப்பனே நீங்கள் எங்களை
நோக்கி வரத்தேவையே இல்லை அப்பனே. யாங்களே உங்களை நோக்கி வருவோம் அப்பனே. ஆனால்
அதுதானப்பா ஏற்கனவே அதாவது முன் உரைத்தபடியே படியே அப்பனே யாங்கள் பின் தேர்ந்து
அதாவது பின் வந்து வந்து நல்லோர்கள் இருக்கின்றார்களா? பக்குவப்பட்டவர்கள்
இருக்கின்றார்களா? என்பவை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஆனாலும்
அப்பனே, எதை என்றும் அறிந்தும் கூட அகத்தியன் அதாவது என்னையே வைத்து அப்பனே பின்
யான் தான் அகத்தியன் என்று ஒருவன், இன்னொருவன் அப்பனே எந்தனுக்குத்தான் அனைத்தும்
தெரியும், அப்பனே இன்னொருவன் யான்தான் பெரியவன், அப்பனே என்னைத்தவிர அகத்தியன்
யாருக்கும் வருவதில்லை என்று, இன்னொருவன் அப்பனே எதை என்று அனைத்தும் பொய் யான்
தான் அகத்தியன் என்றெல்லாம், ஆனாலும் இவை எல்லாம் எப்படியப்பா? அப்பனே எந்தனுக்கே
கோபங்கள். ஆனாலும் அவை எல்லாம் பொறுத்துக் கொள்கின்றேன். ஆனாலும் அறிந்தும்
அறிந்தும் கூட இனிமேலும் பின் கஷ்டத்தை கொடுத்தால்தான் அப்பனே திருந்துவான் அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் எதற்கும் அறிய அறிய அப்பனே ஒருவன்
இங்கிருக்கின்றானப்பா. அப்பனே என் சிலையை அவன் வீட்டில் வைத்தானப்பா. தரித்திரம்
நிறைந்துவிட்டதப்பா. ஆனால் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட
அப்பனே மனதில் முதலில் பின் திருத்தலமாக்கு. பின்பு அப்பனே என்னை எப்படி
பின்பற்றுவதென்று யான் தெரிவிக்கின்றேன் அப்பனே. மனதிலே சுத்தமில்லையப்பா. பின்பு
என்னை வைத்தாலும் என்ன லாபம் அப்பனே? இப்படித்தான் இங்கு மூன்று, நான்கு பேர்
வைத்து விட்டார்கள். கர்மம் சூழ்ந்து விட்டது. ஓர் அடியும் அடித்து விட்டது. யான்
பாரத்துக் கொண்டேதான் இருக்கின்றேன் பார்ப்போம் என்று அப்பனே. ஆனால் ஒன்றும்
ஆகவில்லையப்பா. பின் என்ன செய்வது? அப்பனே ஏதோ ஒர் ரூபத்தில் அப்பனே வந்து திருத்தி
வைத்தேன். அதனால் அப்பனே பின் திருத்தலங்களை அமைப்பது எதை என்றும் அறிய அறிய அப்பனே
முதலில் உன் மனதில் அமைத்து விட்டாலே போதுமானது அப்பா. அப்பனே எதை என்று அறிய அறிய
மற்றவை மனதே தூய்மை இல்லை. அப்பனே பின்பு எதை வைத்தால் என்ன லாபம் அப்பா? யானே
பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. என் அதாவது ரூபத்தை கூட இல்லத்தில்
வைத்துவிட்டு சண்டைகளப்பா. பெரும் சண்டைகளப்பா. இல்லத்தவளுக்கும் எதை என்றும் அறிய
அறிய பின் இவன்தனக்கும் பின் அசிங்கமான வார்த்தைகள் யான் பார்த்துக்கொண்டே
இருக்கின்றேன். இப்படி இருந்தால் அப்பனே என்ன செய்வது? யான் எதைத்தான் செய்வது?
அப்பனே நீங்களே கூறுங்கள் அப்பனே. அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒர் அடி
அடித்தால்தான் திருந்துவார்கள் என்பதைக்கூட யான் நன்றாக அறிந்துவிட்டேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே என் பக்தர்களாயினும் அப்பனே சிறு அப்பனே எவை
என்று கூற அப்பனே தவறாக நடந்தாலும் அத்தவற்றை உணர்த்திவைப்பதற்க்கு பல அடி
கொடுத்துத்தான் யான் திருத்துவேன் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் அப்பனே ஆசிரியன்கூட
மாணவனை திருத்தவில்லை என்றால் அப்பனே அவன் சரியாகவே அப்பனே உயர்ந்திட மாட்டான்
என்பேன் அப்பனே. அதனால் எதை என்று அறிய அறிய புரிந்து கொண்டீர்களா இங்கு யான் யார்
என்று? அப்பனே. தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே. எதை என்றும்
புரியாமல்,எதை என்றும் அறியாமல் கூட தெரிந்து வாழ ஒருவர்கூட இல்லையப்பா. அப்பனே
சோதனைகள் வருமப்பா. ஆனாலும் சோதனைகளை எதிர்த்து போராட வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பொழுதுதான் இறைவன் அங்கு நிற்ப்பான் என்பேன் அப்பனே. சோதனைகள் கொடு. எவ்வளவு
சோதனைகளாயினும் (இறைவா) நீ கொடுத்துக் கொண்டே இரு என்றெல்லாம் யார் ஒருவன்
சொல்லுகின்றானோ அவன்தான் பக்குவப்பட்டவன் சொல்லிவிட்டேன் அப்பனே. அறிந்தும்
அறிந்தும் அறிந்தும் கூட ஆனால் எதை என்றும் புரியாமல் கூட ஏற்கனவே யான் ஒருவன்
பற்றி சொல்லிவிட்டேன் அவன் விதியை ஆராயந்தும் ஆனால் அவன் சரியாகவே
செய்யவில்லையப்பா. ஆனாலும் அப்பனே அவனை கஷ்டங்கள் சூழந்து கொண்டது. பல கர்மாக்களும்
சூழந்து கொண்டது. ஆனால் அடியோ அடி. ஆனாலும் என்னையும் வணங்கினான் யான்
காப்பாற்றவில்லை. ஏன் எதற்காக காப்பாற்ற வேண்டும்? என் சொல்லையே மீறிப்போய்விட்டான்
அப்பனே. ஆனாலும் எப்படியோ தொலையட்டும் என்று பின் நல் விதமாக ஆக்கி மீண்டும் அவனை
ஒரு பக்குவத்தை ஏற்ப்படுத்தி கொண்டிருக்கின்றேன். அதனால் நல்விதமாகவே இன்னும்
இன்னும் அப்பனே முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஆசிரியர் ஒரு மாணவனை பின்
அடிப்பதற்க்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆசிரியன் அடித்து விட்டானே! யான்
ஏன் பள்ளிக்குச்சொல்ல வேண்டும்? ஏன் யான் ஓத வேண்டும்? என்று சென்றுவிட்டால் அவன்
வாழ்க்கை அப்படியே போய்விடும் என்பேன் அப்பனே. உயர்ந்துவிட மாட்டான் என்பேன்
அப்பனே. ஆனால் அகத்தியனிடம் வந்துவிட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய இப்படித்தான்
யான் பக்குவப்படுத்துவேன் சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்றும் புரிந்தும்
புரிந்தும் கூட அதனால் அப்பனே எவை என்று கூற இறைவனுக்கு பூசைகள் செய்யலாம், அப்பனே
இறைவனை வணங்கலாம் , அப்பனே பின் எவை என்று கூற படுத்து படுத்து இறைவனை வணங்கலாம்
அப்பனே இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம் ஆனாலும் அப்பனே எதை என்று
அறிய அறிய இதனால் எவை என்று கூற ஒரு புரயோஜனமும் இல்லை அப்பா. புண்ணியங்கள் செய்யச்
செய்ய செய்யச் செய்ய அப்பனே இறைவன் உன்னிடத்தில் தேடி வருவான் என்பேன் அப்பனே. உன்
மனதில் தங்கி விடுவான் என்பேன் அப்பனே. பின்பு எவை என்று அறிய அறிய இறைவன் தானாக
(உன்னை) அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று கூற அப்பனே உன் மனதில் எதை என்றும் அறிய
அறிய குறிக்கோளாக வைத்து அப்பனே செய்ய வைப்பான் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. உலகம் போலியானது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக்
கொண்டே இருக்க்கின்றேன் அப்பனே. இன்னும் கிரகங்களைப்பற்றி்எல்லாம் யான்
எடுத்துரைக்கின்றேன் அப்பனே எவை என்றும் கூற எவை என்றும் புரியாமல் கூட மனிதன்
அப்பனே அழித்துக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. அதனால் யாங்களே சில மனித
கண்டுபிடிப்புகளை இனிமேலும் தோல்வி அடையச்செய்வோம் செப்பிவிட்டேன் அப்பனே. ஓம் ஸ்ரீ
லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment