Saturday, November 25, 2023
அகத்தியப்பெருமான் அருள் வாக்கு - மதுரை அகத்தியர் ஆலயம் பற்றி!
உலகத்திலேயே ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் அருளும் ரகசியம்- மதுரை வாசிகளின் பொக்கிஷம் இந்த ஆலயம்!
யான் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே. இப்பொழுது நீங்கள் எதை என்று கூறாமலே தம் வலம் வந்து அங்கே யானும் லோபாமுத்திரையும் பின் எவை என்று கூற இன்னும் பல சித்தர்களும் அப்பனே வந்து வந்து சென்றார்கள் அப்பனே அங்கு. மூலனும் வந்தானப்பா. அவைமட்டும் இல்லாமல் இன்னும் ஏராளமான சித்தர்களும் அங்கேயே (மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில்) தான் தங்கி இருக்கின்றார்கள். அவை மட்டும் இல்லாமல் அருணகிரிநாதனும் பரிபூரணமாக (அங்கேயே நிரந்தரமாக தங்கி உள்ளார்) அப்பனே எதை என்று கூற இன்னும் பெருமாளும் சக்தியும் *அப்பனே இவர் எல்லாம் எப்படி வந்தார்கள் என்று எதிர் பார்க்கின்றீர்களா? அப்பனே அகத்தியன் இருக்கும் இடத்தில் அனைவரும் வந்து விடுவார்கள். அப்பனே. இதை யார் அறிவார் அப்பனே? ஆனாலும் மனித ஜென்மங்களுக்கு உண்மை நிலை புரியவில்லை அப்பனே.
இவ்வாறே வாழந்திட்டு வாழந்திட்டு இன்னும் ஏராளமான பிறவிகளை தேடிச்சென்று கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment