Saturday, March 15, 2025
அகத்தியர் பெருமான் உத்தரவு ❤️
சமீபத்தில் அகத்தியர் அடியவர் ஒருவர், குருநாதர் உத்தரவின் பேரில் வீட்டில் 9 விளக்கு ஏற்றுவது பற்றி வினவியிருந்தார். அவர் கேள்வியும், அதற்கான குருநாதரின் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
"அகத்தியர் அய்யா உத்தரவுப்படி, நவகிரக தீபம், மாசி மாசம் கடைசிவரை, செய்யச் சொன்னார். நாளைக்கு பங்குனி மாசம் பிறக்கிறது அய்யா! ஏதேனும் தகவல் (குருவிடமிருந்து) உண்டா?
"கிரகங்களால் உங்களுக்கு அதிக தொல்லை வராமல் இருந்ததற்கு, சிறப்பாக விளக்கேற்றி, கோளறு பதிகம் பதினமும் படித்து வந்ததால் தான். இனி வரும் காலங்களில் நிறைய தொல்லைகள் தான் கிரகங்களால் இவ்வுலகத்துக்கு வரப்போகின்றது. ஆகவே, விளக்கேற்றி கோளறு பதிகம் வாசிப்பதை இன்னும் நீட்டிக்கலாம், அதுவே நல்லது" என்கிறார் அகத்தியர்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment