Saturday, March 15, 2025

திருப்பதி வாக்கு❤️

Saturday, 15 March 2025 சித்தன் அருள் - 1813 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! 12/3/2025 மாசி மகம் அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். அப்பனே நல்விதமாகவே அப்பனே வரும் காலத்தில் அப்பனே பின் பெயர்ச்சிகள் (சனிப்பெயர்ச்சி முதலான கிரக பெயர்ச்சிகள்) அப்பனே ஏன் ? எதற்கு? என்று தெரியாமலும் கூட. அப்பனே அவை இவை என்றெல்லாம்........... சொல்லி அப்பனே மனக்குழப்பத்தை ஏற்படுத்துவான் என்பேன் மனிதன் என்பேன் அப்பனே. (சனி பெயர்ச்சிக்கு முன்பாகவே ஜோதிடர்கள் சில மனிதர்கள் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த கிரகத்திற்கு இப்படி அந்த கிரகத்திற்கு அப்படி என்று பல்வேறு கணிப்புகள் பயமுறுத்துதல் பரிகாரங்கள் ஆலோசனைகள் என சொல்லி வருகின்றார்கள்) இதனால் நிச்சயம் ஒரு பயனும் இல்லையப்பா!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கிரகங்கள் பின் அதாவது கொடுக்க தயாராகிக் கொண்டே !!! அப்பனே பின் ஈசன்!!! பின் அதாவது கட்டளையாக கொடு !!என்று!!! அதாவது ஈசன் கொடு என்று! ஆனாலும் அப்பனே பின் அவ் பெயர்ச்சி அப்பனே எதை என்றும் புரிய இதனால் அப்பனே... பல பெயர்ச்சிகள் அப்பனே.. எப்பொழுது பின் ஏது? நடக்கும்? என்பவையெல்லாம் மனிதனால் அப்பனே... நிச்சயம் வரும் காலத்தில் உணர முடியாதப்பா. இதனால் அப்பனே கலியுகத்தில் மாறி மாறி அப்பனே பெயர்ச்சிகள் ஆகுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட தவறாக அப்பனே பலன்களை பின் ஏற்படுத்தி அப்பனே.. மனிதனே மனிதனுக்கு மனக்குழப்பங்கள் செய்வானப்பா. இதனால் அப்பனே பருவ நிலைகள் மாறி அப்பனே.. பின் மாறி மாறி அப்பனே வரும் அப்பா. அப்பனே இதனால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை சார்ந்து அப்பனே சரியான பின் தர்மத்தையும் கூட அப்பனே நிச்சயம் கூட நீதி நேர்மையையும் கூட அப்பனே... கடைப்பிடித்து சென்றாலே... அப்பனே பின் இறைவன் வந்து... அப்பனே பல வழிகளிலும் கூட.. உண்மை நிலைகளை சொல்வானப்பா. இதனால் அப்பனே நீங்கள் என்ன அப்பனே எதை என்று அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது பின் செய்வீர்களானால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட கிரகங்களும் கூட அவ்வாறே செய்யுமப்பா! அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் கூட தர்மத்திற்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அப்பனே பின் உங்களுக்கு எதிராகவே அப்பனே பின் கிரகங்களும் செயல்படுமப்பா!! சொல்லிவிட்டேன் அப்பனே. இதனால் அப்பனே பின் சரியாகவே அப்பனே பின் அதாவது தன் தாம் யார் என்று தெளிந்து தெரிந்து நல்விதமாகவே அப்பனே பின் சென்று கொண்டே இருந்தால் அப்பனே பின் தெளிவடையும். அப்பனே. பின் கிரகங்களும் கூட ஒன்றும் செய்யாதப்பா. இதனால் அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எங்கெங்கு? ஏதேது? என்று அறிந்தும் கூட அப்பனே பின் கிரகங்கள் அப்பனே.. அதாவது அனைத்தும் பின் நல்லது தான் செய்யுமப்பா!! ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட... இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே.. அவை தன் (கிரகங்கள்) தன் பாதையில் இருந்து சிறிது அப்பனே விலக்கங்கள்!! (கிரகங்கள் பூமி சுற்றுவது வேகம் குறைந்ததால் கிரகங்கள் தம் தன் இடத்தில் இருந்து விலகி பாதை மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை ஏற்கனவே குருநாதர் வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார்) அப்பனே பின் ஆகிவிட்டது என்பேன் அப்பனே.. இதனால் அப்பனே பின் அங்கும் இங்கும் அதனால் அப்பனே எப்படி வேண்டுமானாலும் அப்பனே பின் நகர்ந்து அப்பனே அதாவது பின் அதிவிரைவாகவே அப்பனே... அங்கு நகர்ந்து இங்கு நகர்ந்து அப்பனே கடைசியில் பின்.. எவை? அவை தன் தாக்கும் என்பதையெல்லாம் அப்பனே வரும் வரும் வாக்கியத்தில் எடுத்துரைக்கும் பொழுது புரியுமப்பா!!! தெளிவு பெறுங்கள் அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே. தெளிவு பெறவில்லை என்றால் அப்பனே.. நிச்சயம் கஷ்டங்களோடு வாழ்ந்து அப்பனே பின் நிச்சயம் கஷ்டத்தோடு இறந்து.. மீண்டும் அப்பனே கஷ்டத்தோடு வந்து.. அப்பனே பின் கஷ்டத்தோடு வாழ்ந்து.. அப்பனே என்ன பிரயோஜனம்??? என்பேன் அப்பனே!!! இதனால் அப்பனே உண்மை நிலைகளை தெரியாமல் அப்பனே இவ் ஆன்மா.. அப்பனே பின் சென்றால்.. எதை என்று அறிய அறிய மீண்டும் மீண்டும் பிறப்புகள் பின் பெருகிக்கொண்டே இருக்கும் அப்பனே. இதனால் அப்பனே நிச்சயம் என்ன? பின் எவ் விஷயத்திற்காக இவ்வுலகத்திற்கு வந்தோம்?? என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே!!... அப்பனே மோட்ச கதி!!! அப்படி இல்லையென்றால் அப்பனே... அதனால்தான் அப்பனே பின்.. மனிதனை பக்குவப்படுத்தி பக்குவப்படுத்தி பின் புண்ணியங்களை செய்ய வைத்து செய்ய வைத்து அப்பனே எதற்காக வந்தோம்? என்பதையெல்லாம்... வாக்குகளாக யாங்கள் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் தந்து கொண்டே இருக்கின்றோம். அப்படி இல்லை என்றாலும் அப்பனே சில பாவங்கள் அவந்தனை கூட அப்பனே நிச்சயம் தடுக்கும் என்பேன் அப்பனே. ஏனென்றால் அப்பனே ஆன்மா.. மறுபிறவி மறுபிறவி என்று எடுக்க துடிக்க பார்க்கும் என்பேன் அப்பனே இதனால் அப்பனே பின் அவந்தனுடைய பின் பாவத்தையும் கூட.. எப்படி பின் போக்குவது?? சில வழிகளிலும் கூட அவ் பாவத்தை போக்கித்தான் அப்பனே... சிறிதளவு புண்ணியத்தை பெருக்கி தான்... எங்களாலும் பின் வாக்குகள் செப்ப முடியுமப்பா!! அப்பனே பின் நிச்சயம் அங்கு செல்க!!! இங்கு செல்க!!! அறிந்தும் தீபங்கள் ஏற்றுக!!!... என்பவையெல்லாம் அப்பனே... சொல்லிச் சொல்லி அப்பனே பின்.. எவை என்று அறிய அறிய... அதாவது முட்டுக்கட்டையாக (தடையாக) இருக்கும் பாவத்தை சிறிது விலக்கி அப்பனே... நிச்சயம் புண்ணிய பாதையில் அப்பனே.. பின் செல்ல வைத்தால் அப்பனே... அப்பனே நன் முறைகளாகவே.. விளக்கங்கள் எங்களால் சொல்ல முடியுமப்பா!! அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்றெல்லாம்... தெரிந்து கொண்டு அப்பனே தேர்ச்சி பெற்றால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மோட்சம் கிடைக்கும் என்பேன் அப்பனே. அப்படி தேர்ச்சி பெறவில்லை என்றால் அப்பனே. ஆனாலும் அப்பனே பின் மாயையில் சிக்கிக் கொண்டு.. மாயத்தை அதாவது மாய வலையை நோக்கி நோக்கி..... ஆனாலும் வேண்டாம் வேண்டாம் என்று அப்பனே அதற்கும்... பதில் யாங்கள் தந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. ஆனாலும் அப்பனே உண்மை நிலைகள் இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் வரும் காலத்தில் அப்பனே.. சரியாகவே அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின் அறிந்தும்... நவ அதாவது அப்பனே நவ.. (கிரகங்களை) கட்டுப்படுத்த பின் கோளாறு பதிகங்களை கூட அப்பனே பின்.. அங்கங்கு அப்பனே திருத்தலங்களுக்கு சென்று... பாடிட்டு வந்தாலே போதுமானதப்பா. அப்பனே நவகிரகங்களால் அப்பனே ஏற்படும் பின் சில சில அப்பனே பின் புதுமையான நோய்களையும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அதை சார்ந்து அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே... இப்பொழுது வாயில் அசைகின்றோமோ..(கோளாறு பதிகத்தை வாயால் பாடுவது) அப்பனே வாயில் அசைத்து... அதாவது அப்பனே கோளாறு பதிகத்தை பாடுகின்றோம் அல்லவா அப்பனே பின் அதற்கும் கூட.. தகுந்தார் போல் அப்பனே பின்.. கிரக நிலைகள் அப்பனே.. அதாவது அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே கட்டுப்படுத்துமப்பா!!! (கோளாறு பதிகத்தை திருத்தலங்களில் வாய்விட்டு பாடி தொழும் பொழுது ஏற்கனவே குருநாதர் உதாரணத்திற்கு புரட்டாசி மாதத்தில் விநாயகர் அகவலை படித்து வந்தால் கேது கிரகத்தின் அணுக்கள் உங்கள் உடம்பில் இருக்கும் அவை அதிர்ந்து விநாயகர் அகவலை உச்சரிக்கும் பொழுது கேது கிரகம் நன்மையே செய்யும் என்று வாக்குகளில் கூறி இருக்கின்றார் அது மட்டும் இல்லாமல் தமிழ் உயிர் எழுத்துக்கள் ஆகட்டும் மெய்யெழுத்துக்கள் ஆகட்டும் தமிழில் இருக்கும் பதிகங்கள் அனைத்திற்கும் சக்தி இருக்கின்றது அவற்றிற்கும் இறைவனுக்கும் நவ கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது.. இப்படி நேரடியாக நவகிரகங்களை கட்டுப்படுத்துவதற்கு கோளாறு பதிகத்தை ஓதி வந்தால் அதிர்வுகள் ஏற்பட்டு நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் ஏற்படாது நவ கிரகங்களும் கட்டுப்படும்) ஒவ்வொரு அப்பனே பின் வினைக்கும் செய்வினை அறிந்தும் கூட... செய்யும் வினை அதாவது... அறிந்தும் கூட அனைத்திற்கும் உண்டு என்பேன் அப்பனே. (ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப மறுவினை உண்டு) அதாவது வாகனத்தை இயக்கும் பொழுது.. அப்புறம் நீங்கள் வாகனத்தில் உள்ள அனைத்தையும் பயன்படுத்துகின்றீர்கள் என்பேன் அப்பனே!! (வாகனத்தை இயக்குவதற்கு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு வேகத்தை குறைப்பதற்கு நிறுத்துவதற்கு என கருவிகளை பயன்படுத்தி இயக்குகின்றோம் அல்லவா அதுபோல்) அதே போல் அப்பனே இதனால் அப்பனே.. அறிந்தும் கூட இவையும் கூட சரியாக செயல்படுகின்றது. அதேபோல் அப்பனே நிச்சயம் அப்பனே கிரகங்களையும் கூட நல்விதமாகவே அப்பனே அறிந்தும் கூட... துகள்கள் உடம்பில் இருக்கின்றதப்பா!!(நவகிரகங்களின் துகள்கள் மனித உடம்பில்) அப்பனே கோளாறு பதிகத்தை அப்பனே பாடிக் கொண்டே இருக்கும் பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அவை தன் அசைகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அதாவது பின்.. அதாவது பின் எதிரொலிக்கும் தன்மை.. அங்கிருந்து (மேலே நவகிரகங்களில் இருந்து) பின் அறிந்தும் கூட தாக்குகின்ற பொழுது அப்பனே... அப்படியே விலகி நிற்குமப்பா. இதனால்தான் அப்பனே சொல்கின்றோம் அப்பனே... அறிந்தும் கூட இதனால்தான் அப்பனே... முன்னோர்கள் அழகாக அப்பனே... பின் இவை செய்க!!!! என்றெல்லாம்... அப்பனே அவை மட்டும் இல்லாமல்.... அப்பனே!! """"அபிராமி அந்தாதிக்கும் கூட!!!!.... அவ் சக்திகள் அப்பனே பன்மடங்கு உண்டப்பா!!! இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட இன்னும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... ஒரு ரகசியத்தை இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே!!! மலையை அப்பனே அதாவது மலைமீது (மலையில் இருக்கும் திருத்தலங்களுக்கு செல்லும் பொழுது) ஏறுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அபிராமி அந்தாதியை அப்பனே பின் பாடல்களை பாடிக்கொண்டே ஏறினால் அப்பனே... அதாவது ஏறும் வரை அனைத்து பாடல்களையும் கூட பாடி முடித்து விட்டால் அப்பனே இவ்வாறு... சில மாதங்கள் செய்தால் அப்பனே... நினைத்தது அப்பனே சரியாகவே நிறைவேறும்ப்பா. அவை மட்டும் இல்லாமல்.. பாவங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் தொடர்ந்து வராமல்... அப்படியே அப்பனே பின் கருகி அப்பனே பின் நல்விதமாக புண்ணியங்கள் ஏற்பட்டு... அப்பனே பின் இன்னும் அப்பனே பல வகையிலும் கூட... அப்பனே நிச்சயம் உண்மை நிலைகள் தெரியும் அப்பா. அப்பனே இன்னும் இன்னும் என் பக்தர்களை பக்குவப்படுத்தி அப்பனே... பல ஆசிகள் தந்து அப்பனே... பல வாக்குகளை அப்பனே நிச்சயம்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் தான் அப்பனே பின் தெரியாமல்... வாக்குகள் செப்பினாலும் அப்பனே... ஏனோ!? தானோ!? என்று விட்டுவிடுவார்கள் என்பேன் அப்பனே. ஏன் இவ்வுலகத்திற்கு வந்தீர்கள்?? அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட ஏன்? பின் உலகத்தில் வாழ்கின்றீர்கள்??? என்பதையெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொண்டால்... அப்பனே ஏன் இறைவனை.. வணங்க வேண்டும்?? அப்பனே என்பதையெல்லாம் அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே பின்... கேள்விகள் அதாவது கேள்விகள் வரவேண்டும்??? ஏன்? எதற்கு? என்றெல்லாம் அப்பனே!! இப்படி வந்தால் தான் அப்பனே நிச்சயம் மோட்ச கதியை அடைய முடியும்... அப்படி இல்லையென்றால் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அப்படியே அதாவது... உணவோ!!!... பின் பணமோ!!... எதுவும் தேவையோ?? மனிதனுக்கு... அப்பனே நிச்சயம் அதையும் இறைவன் கொடுப்பானப்பா!!! ஆனாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அதனால் தான் சித்தர்கள்... இன்னும் இன்னும் அப்பனே என்னுடைய பக்தர்களுக்கு... அப்பனே ஆசிகள் கொடுத்து... அப்பனே பக்குவ நிலையை ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே பின்... இறைவனை நிச்சயம் காட்டுவேன்!! என்பேன் அப்பனே. இதனால் குறைகள் இல்லை... நன் முறைகளாகவே இதனால் அப்பனே வரும் வரும் காலத்தில் அப்பனே நிச்சயம்.. கலியுகத்தில் அப்பனே அதாவது அப்பனே மாதங்கள் பின் செல்ல செல்ல அப்பனே புது புது புது புது புதுமையான விஷயங்களை அப்பனே மனதை தாக்கி... மனக்குழப்பங்கள் அப்பனே இன்னும் நோய்கள் அப்பனே.. இன்னும் கண் பார்வை மங்குதல்... அப்பனே இன்னும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட... ஒரு கிரகத்தின் பார்வை அப்பனே பின்... நிச்சயமாய் அப்பனே... மனிதன் மீது அதிகமாக விழுகின்ற பொழுது... கண்பார்வை மங்குமப்பா. இதனால் அப்பனே பின் அதற்கும்... சரியான தீர்வுகளாக அப்பனே... நிச்சயம் பல மூலிகைகளை யான் எடுத்துரைத்து விட்டேன்!!! எடுத்துச் சொன்னேன் என்பேன் அப்பனே நிச்சயம். நிச்சயம் ஒவ்வொரு மூலிகைக்கு கூட அப்பனே சமமான நிச்சயம்.. உண்டு என்பேன் அப்பனே!!! எதை என்று யான் தெரிவிக்க??? அப்பனே!!! (கண் பார்வை குறைபாடுகளுக்கு குருநாதர் ஏற்கனவே பொன்னாங்கண்ணி கரிசலாங்கண்ணி உள்பட மூலிகைகளை எடுத்துக்கொள்ள சொல்லி இருந்தார் இன்னும் 32 மூலிகைகள் கலந்த லேகியம்) சொல்லிக் கொண்டே வருகின்றேன்!! அப்பனே!! போக போக... உங்களுக்கும் புரியும் என்பேன் அப்பனே.. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இன்னும் அப்பனே பின் அங்கங்கு பின் நிச்சயம் மனிதனைக் கூட அப்பனே பின் திருத்தி அப்பனே நல்வழிப்படுத்தி.. அப்பனே அவனை அதாவது ஒருவனை நல்வழிப்படுத்தி விட்டால்.. அவந்தன் குடும்பமே செழிப்பாகும் என்பேன் அப்பனே. இன்னும் தெரியாமல் அப்பனே பணங்கள்.. பணங்கள் என்று போய்க்கொண்டே.. இருக்கின்றார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே அறிந்தும் கூட... பின் அதாவது கர்மா... அதாவது பாவ வினையை பின்.. அப்பனே தொட்டுவிட்டால் அப்பனே.. அனைத்தையும் இழக்க நேரிடும் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதனால்தான் அப்பனே பக்குவங்கள் படுத்தி.. படுத்தி அப்பனே எதனை முதலில் செய்ய வேண்டுமோ... அதை முதலில் செய்ய வேண்டும். அப்பனே அதை நிச்சயம் தன்னில் கூட பக்குவமாக செயல்படுத்திக் கொடுத்தால் போதுமானதப்பா!!! அனைத்தும் தானாக வந்துவிடும் என்பேன் அப்பனே. எம்முடைய ஆசிகள்!! அப்பனே!! ஏழுமலையானின் ஆசிகளும் கூட அப்பனே.. என் பக்தர்களுக்கு பெற்று தருகின்றேன்.. அனைவருக்குமே அப்பனே.. ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!! வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! நவக்கிரக தீபங்கள் என் பக்தர்கள் ஏற்றி வர வேண்டும் என்று ஐப்பசி மாதத்தில் குருநாதர் உத்தரவு தந்திருந்தார் மாசி மாதம் வரை ஏற்றச் சொல்லி தன்னலம் பாராது எதையும் நினைக்காமல் ஏற்றி வர சொல்லி இருந்தார். சமீபத்தில் குருநாதர் நவகிரக தீபங்களை குறித்து குருநாதர் கூறிய வாக்கு அதாவது மாசி மாதம் முடியப்போகின்றது. மாசி மாதம் வரை தீபங்களை ஏற்றினால் போதுமானதா?? என்று குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு அப்பனே நிச்சயம் பின் எவை என்று கூற எவை என்று அறிய அப்பனே நன்று என்பேன். அப்பனே.. பங்குனி திங்களிலும் கூட அப்பனே... அவரவர் இஷ்டம் போல அப்பனே!! என்று குருநாதர் வாக்குகள் நல்கினார். அதாவது மாசி மாதம் முடியும் வரை ஏற்றலாம் இன்னும் பங்குனி மாதம் வரை தொடர்ந்து தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்... அவரவர் இஷ்டம் போல செய்து கொள்ளலாம் என்று குருநாதர் பதில் வாக்குகள் கூறினார். தனி நபர் வாக்கில் ஒரு அடியவர் குருநாதரிடம் கேட்ட கேள்விக்கு நம் அனைவருக்குமான பதிலை குருநாதர் தந்தார். அவை ஒரு அகத்திய பக்தர் அவருக்கு குருநாதர் பல உபதேசங்களை சொல்லி அதை எல்லாம் பின்பற்றி வருமாறு பல வாக்குகளில் அவருக்கு கூறியிருக்கின்றார். வீட்டில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ன செய்ய வேண்டும் எப்படி என்பதெல்லாம் மற்றும் அவருக்கான மந்திர உபதேசமும் செய்து மந்திர ஜெபமும் செய்து வர வேண்டும்.. அவர் செய்ய வேண்டியது தியானங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் என முழுமையாக குருநாதர் அவருக்கு பல வாக்குகளில் பல விஷயங்கள் வாக்குகளாக உபதேசம் செய்திருக்கின்றார். அந்த அடியவர் மீண்டும் குருநாதரிடம் சில ஆலயங்களுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டார் குருநாதரிடம்.. அதாவது திருவண்ணாமலைக்கும் கும்பகோணத்திற்கும் செல்வதற்கு எனது மனம் பிரியப்படுகின்றது நான் எப்போது செல்ல வேண்டும் அதாவது எந்த மாதத்தில் எந்த திதியில் செல்ல வேண்டும்??? என்று கேட்டார். முதலில் நான் எப்பொழுது திருவண்ணாமலை செல்ல வேண்டும் ஏனென்றால் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு தங்களுடைய அனுமதி வேண்டும் என்று கேட்டார் அதற்கு குருநாதர் அப்பனே முதலில் யான் கூறியவற்றை முதலில் செய்து வா அப்பனே பின்பு நீ எப்பொழுது செல்ல வேண்டும் என்பதை யான் உரைக்கின்றேன் . என்று கூறியிருந்தார். மீண்டும் அவர் கும்பகோணத்திற்கும் செல்வதற்கு மனம் பிரியப்படுகின்றது கும்பகோணம் நான் எப்பொழுது செல்ல வேண்டும் ?? என்று கேட்டார். அதற்கு குருநாதர்... அப்பனே எதை என்று புரிந்தும் கூட முதலில் யான் சொல்லியதை ஏற்று நட !! என்பேன். அப்பனே!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!! புத்தி இல்லாமல் இருக்காதே!! அப்பனே!! அப்பனே இதைச் செய்யாமல் அதாவது யான் கூறியதை செய்யாமல்.... அறிந்தும் கூட... அகத்தியன் பின்.. சொன்னானே இதை பின் செய்யாமல் அங்கெல்லாம் சென்றாலும் ஆசிகள் நிச்சயம் கிட்டாதப்பா!!! சொல்லிவிட்டேன். ஈசன்.... இவன் அகத்தியன் சொன்னதையே கேட்கவில்லையே..!! செய்யவில்லையே!! இவந்தனுக்கு ஏன்?? ஆசிகள்??? தர வேண்டும் என்று ஈசன் கோபித்துக் கொள்வான்!!!... அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!! இவ் வாக்குகள் அனைவருக்குமே என்பேன் அப்பனே... யான் சொல்லியதை கடைப்பிடித்தால் தான் அப்பனே இறையருளும் கிட்டும் என்பேன் அப்பனே... யான் சொல்லியதை செய்யாமல் பின் எங்கு சென்றாலும்!?!?!?!?!?!?!?!?! பின் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே. (குருநாதர் கூறும் வழிமுறைகளை பின்பற்றாமல் ஆலயங்களுக்கு சென்றாலும் அவ் ஆலயங்களில் உள்ள இறையருள் கிட்டுவது கடினம்) குருவே காம குரோத விரோத எண்ணங்கள் அதிகமாக தலை தூக்குகின்றது இதற்கு என்னதான் செய்வது?? அப்பனே இதனைப் பற்றி உந்தனுக்கு முன்பே தெரிவித்து விட்டேன்... அறு சுவைகளை குறை என்று!! அதாவது அப்பனே உப்பு புளி காரம் அதாவது அப்பனே இவற்றையெல்லாம் அறவே நிறுத்து... உப்பில்லாமல் கஞ்சியை மட்டும் அதாவது... 48 நாட்கள் அதாவது கஞ்சியை மட்டும் அருந்தி வா... பின்பு எப்படி எண்ணங்கள் தலை தூக்குகின்றது என்பதை பார்ப்போம். குருவே இனிப்பின் மீது உள்ள இச்சையை எப்படி போக்குவது??? அப்பனே எப்பொழுதும் வாயில் வெற்றிலை பாக்கை மென்று கொண்டே இரு!!! குருவே என்னுடைய உடல் மிகவும் சூடாக இருக்கின்றது தற்போது வெயில் காலமும் வரப்போகின்றது வெப்பம் அதிகமாகும் என்னுடைய உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நான் எந்த வகையான உணவை உண்ணுவது?? அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய இதற்கெல்லாம் ஒரே பதில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இரவில் நன்றாக அப்படி பின் சமைத்து அப்பனே பின் அதில் கூட அதாவது சில மிளகு சீரகங்களை அதாவது அவ் அன்னத்தில் மிளகு சீரகம் இவை தன் இட்டு அப்பனே அதிகாலையில் அருந்தி வர நிச்சயம் அப்பனே பின் உந்தனுக்கே தெரியுமப்பா போகப்!!! போக!! இதை ஒரு 15 நாட்கள் தொடர்ந்து செய்... உடலில் மாற்றம் ஏற்படும் என்பேன். பின்பு மேலும் விவரமாக யான் குறிப்பிடுகின்றேன் அப்பனே. (இரவு சோற்றை நன்றாக குழைவாக வேக வைத்து அது ஆறிய பின் தண்ணீர் சேர்த்து அதில் சிறிதளவு மிளகு, சீரகம் சேர்த்து வைத்துவிட்டு அதை அதிகாலையில் அருந்தி வர உடல் சூடு குறையும்) குருவே சில நேரங்களில் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தாலும் சில நேரங்களில் வித விதமான உணவுகளை உண்ணுவதற்கு மனம் விரும்புகின்றது!!! அப்பனே விதவிதமான ஆசிகளை யானும் தந்து கொண்டே இருக்கின்றேன்!!! ஆனாலும் அப்பனே விதவிதமான உணவுகளை உண்டால் அப்பனே விதவிதமான நோய்களும் உடம்பில் வருமப்பா உந்தனக்கு சம்மதமா???? குருநாதர் 108 மூலிகைகள் இட்டு யாகங்கள் செய்யலாம். செய்து அதில் வரும் சாம்பலை எடுத்து நெய்யில் கலந்து மையாகவும் இட்டுக் கொள்ளலாம் அதாவது நெற்றியில் இட்டுச் செல்லலாம் என்று குருநாதர் இதனை பற்றி ஏற்கனவே கூறியிருந்தார். நூற்றி எட்டு மூலிகைகள் சுத்தமான மூலிகைகளை இட்டு செய்யும் யாகத்தில் மீதி வரும் சாம்பலை சுத்தப்படுத்தி அதை சிறிதளவு அதாவது (சிறிதளவு மட்டுமே) நீரில் கலந்து அருந்தியும் வரலாம்! அதை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும் செய்யலாம் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் இதுவும் ஒரு கூடுதல் தகவல் குருநாதருடைய வாக்குகளில் இருந்து!! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!

அகத்தியர் பெருமான் உத்தரவு ❤️

சமீபத்தில் அகத்தியர் அடியவர் ஒருவர், குருநாதர் உத்தரவின் பேரில் வீட்டில் 9 விளக்கு ஏற்றுவது பற்றி வினவியிருந்தார். அவர் கேள்வியும், அதற்கான குருநாதரின் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது. "அகத்தியர் அய்யா உத்தரவுப்படி, நவகிரக தீபம், மாசி மாசம் கடைசிவரை, செய்யச் சொன்னார். நாளைக்கு பங்குனி மாசம் பிறக்கிறது அய்யா! ஏதேனும் தகவல் (குருவிடமிருந்து) உண்டா? "கிரகங்களால் உங்களுக்கு அதிக தொல்லை வராமல் இருந்ததற்கு, சிறப்பாக விளக்கேற்றி, கோளறு பதிகம் பதினமும் படித்து வந்ததால் தான். இனி வரும் காலங்களில் நிறைய தொல்லைகள் தான் கிரகங்களால் இவ்வுலகத்துக்கு வரப்போகின்றது. ஆகவே, விளக்கேற்றி கோளறு பதிகம் வாசிப்பதை இன்னும் நீட்டிக்கலாம், அதுவே நல்லது" என்கிறார் அகத்தியர். ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Monday, March 3, 2025

அகத்தியர் பொது வாக்கு ❤️

Monday, 3 March 2025 சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! நம் குருநாதர் அகத்திய பெருமான் தனி நபர்களுக்கு உரைக்கும் வாக்குகளிலும் பல்வேறு ரகசியங்களை உரைக்கின்றார். அதில் தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து விட்டு பொதுவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் இன்னும் மனிதர்களுக்கு தெரியாத தெய்வ ரகசியங்களை இயற்கை மருத்துவ குறிப்புகள் எல்லாம் குருநாதர் வெளிப்படுத்தும் பொழுது அவை அனைவரும் அறிந்து கொள்வதற்கும் பதிவு செய்யப்படுகின்றது! சமீபத்தில் விஷ்ணு பக்தர் ஒருவருக்கு அவருடைய புண்ணியத்தின் பலனாக காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளை உரைத்த பொழுது!! கூறிய நாராயண ரகசியம்!! அப்பனே நல்விதமாக ஆசிகள் அப்பா!! இறைவன் அருளால்தான் நீ செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்பேன் அப்பனே. இனிமேலும் நாராயணன் உன்னை நகர்த்துவான் (இயக்குவார்) என்பேன் அப்பனே!! நாராயணன் அருள் பரிபூரணம்!! அப்பனே நாராயணன் அருள் பரிபூரணமாக இருக்கின்றது !!! அப்பனே நிச்சயம் இவை என்று அறிய அறிய நிச்சயம் ஏழுமலையான் உன்னை அழைப்பான் என்பேன் அப்பனே!!! அப்பொழுது அப்பனே சந்திரனின் அப்பனே எவை என்று கூட இன்னும் அதிகரிக்கும் பொழுது.. இன்னும் அப்பனே மனநிலைகள் அப்பனே பின் எவ்வாறு என்பது கூட மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. அப்பனே பின் நிச்சயம் பின் சந்திரன் உன்னை அங்கு அழைப்பான். அப்பனே நிச்சயம் சந்திரனும் நாராயணனும் அப்பனே சுக்கிரனும் அனைவரும் ஒன்றே!!! அப்பனே சந்திரனும் கூட சுக்கிரனும் கூட அப்பனே ஒன்றாக இணைந்தது தான் அப்பனே நாராயணனே!!! அப்பனே சந்திரனும் சுக்கிரனும் இணைந்தது அப்பனே புதன்!! அப்பனே புதன் தான் அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் பெருமான்(ள்). (புதன் கிரகத்தின் அதிபதி மகாவிஷ்ணு) அப்பனே இவ்வாறு நிச்சயம் இருக்கும் பொழுது நாராயணன் அருள் பரிபூரணமாக இருக்கும் பொழுது கவலைகளை விடு நன்மைகளாகவே முடியுமப்பா!! இதனால்தான் அப்பனே மனிதர்களை புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்றெல்லாம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!! தாம் தன் செய்த புண்ணியங்களுக்கு ஏற்பது யாங்கள் சித்தர்கள் அழகாகவே வந்து காத்து அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே. ஆசிகள்!! ஆசிகளப்பா!! குஜராத்தைச் சேர்ந்த ஒரு அகத்தியர் பக்தர் ஒருவருக்கு குருநாதர் கூறிய ஏக முக ருத்ராட்ச ரகசியம் பக்தர்: குருவே ஒருமுக ருத்ராட்சம் என்ற பெயரில் முந்திரி பருப்பு வடிவத்தில் இன்று சமூகத்தில் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றது. ஒரு முகம் ருத்ராட்சம் உருண்டை வடிவில் இருப்பது எங்கு கிடைக்கும்??? அப்பனே எதை என்று அறிய அறிய உந்தனுக்கு அதெல்லாம் தேவையில்லை என்பேன் அப்பனே!! யான் எங்கு இருக்கின்றது என்று சொல்லிவிடுவேன் ஆனாலும் நீ அங்கு செல்ல மாட்டாய் என்பேன் அப்பனே. அதனால் யான் சொல்லியும் செய்யவில்லை என்றால் அதுவும் பாவமாக ஏற்படும் என்பேன் அப்பனே!!! (குருநாதரிடம் ஒரு விஷயத்திற்காக கேட்டு அதை குருநாதர் சொல்லி அதை பின்பற்றாவிட்டால் பாவங்கள் ஏற்படும்) ஆனால் நிச்சயம் சொல்வேன் ஆனால் நீ செய்யப் போவதில்லை என்பேன் அப்பனே அதனால்.. எத்தனை முகம் ஆனாலும் சரி ஏதாவது ஒரு ருத்ராட்சத்தை பயன்படுத்து மீதியை யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே. குருவே நான் ஒருமுக ருத்ராட்சத்தை அணிய விரும்புகின்றேன் அது எங்கு கிடைக்கும்?? குருநாதர் அகத்திய பெருமான். அப்பனே அதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர... நிச்சயம் அது யார் கையிலும் இல்லையப்பா!! (இதுவரை உண்மையான ஒரு முக ருத்ராட்சம் எவருக்கும் கிடைக்கவில்லை) அப்பனே எவை என்று அறிய அறிய அப்படி இருந்தாலும் அப்பனே ஈசனே அதை மறைத்து விடுவான் என்பேன் அப்பனே. ஏனென்றால் பின் அதை அதாவது அவ் ருத்திராட்சம் கைக்கு வந்து விட்டால் இவ்வுலகத்தையே வசியப்படுத்தி விடலாம் என்பேன் அப்பனே. ஒரு அடியவருக்கு குருநாதர் கூறிய வாக்கில் அவரது குடும்பம் முழுவதும் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருக்கின்றது அதற்கு தீர்வாக குருநாதர் கூறிய வழிமுறைகள். அப்பனே நல்முறையாக இல்லத்தில் பைரவனை வளர்ப்பது சிறந்தது. வீட்டில் கருங்காலி கட்டையை ஏதாவது ரூபத்தில் வைத்து விடு அப்பனே அப்பனே ஏலக்காய் பச்சை கற்பூரம் அப்பனே கிராம்பு இவற்றை நசுக்கி (பொடியாக்கி) அப்பனே வெற்றிலை பாக்கில் வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொண்டால் இவையெல்லாம் வராதப்பா!!! துணியில் சுற்றி எடுத்து கொண்டு செல் அப்பனே!! (ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு இவற்றை பொடியாக்கி வெற்றிலை பாக்கில் வைத்து மடித்து ஒரு சிறிய துணியில் கிழி போல சுற்றி வெளியே செல்லும் பொழுதும் தொழில் மற்றும் எல்லா காரியங்களுக்கும் செல்லும் பொழுதும் தன்னுடன் வைத்துக்கொண்டு சென்றால் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அண்டாது.. தினமும் இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.. ஆற்றிலோ குளத்திலோ இவற்றை எறிந்து விட வேண்டும்) அது மட்டும் இல்லாமல் பேய் விரட்டிம் மூலிகையும் கூட வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே அது மட்டும் இல்லாமல் அடிக்கடி உணவில் வெண்பூசணியை சேர்த்துக் கொண்டே வந்தால் அப்பனே கண்திருஷ்டி அண்டாதப்பா!!! உடலில் நோய் நொடிகள் வராமல் உடல் சீராக இருப்பதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய ரகசியம் அப்பனே ஏதாவது பழமையான சிவாலயங்களுக்கு சென்று அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை குடித்து வந்தாலே போதுமானதப்பா... அப்படி இல்லை என்றால் அப்பனே பஞ்ச லோகத்தினால் ஆன சிவலிங்கத்தை வீட்டில் பூஜித்து அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை அருந்தி வரவேண்டும் என்பேன். அப்பனே இதனால் பல குறைகள் தீரும் என்றும் அப்பனே.. உடலில் யூரிக் ஆசிட் அதிகப்படியாக உற்பத்தி ஆவதால் உடல் பருமன் மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய மருத்துவ ரகசியம் அப்பனே நல்முறையாக அனுதினமும் உணவில் சுரைக்காயை சேர்த்துக்கொள் அப்பனே. இதை தன் உணவில் சேர்த்து வந்தாலே இதற்கு நல்ல தீர்வு கிட்டும் என்பேன் அப்பனே... அனுதினமும் நிச்சயமாக நீ சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் மாறும் அப்பனே. குருவே நான் சுரைக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் ஏற்படுகின்றது குருவே !! அப்பனே நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய அறிய அவை தன் (சுரைக்காய்) கூட எடுத்துக் கொண்டே வா!! அப்பனே கவலைகளை விடு!!! அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட இதற்கு (ஜலதோஷத்திற்கு) பதிலாக பின் திரிகடுகம் எடுத்துக் கொள்!!;; ஒரு அடியவர் சில தவறான தீய பழக்கத்தினால் அவருடைய வயிற்றில் பிரச்சனை உறக்கமின்மை கல்லீரல் வீக்கம் அடிக்கடி கட்டுப்பாடு இன்றி சிறுநீர் கழித்தல் போன்ற குறைபாடுகள் இருக்கின்றது.. அதற்கு குருநாதர் கூறிய தீர்வு அப்பனே முதலில் பாகற்காய் சாற்றினை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே இதனால் பல கழிவுகள் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறும் என்பேன் அப்பனே. முதலில் இதைச் செய்..அப்பனே....உன் பழக்கங்களை எல்லாம் உடனடியாக நிறுத்து அப்பனே!!!!... ஒரு பெண் அடியவருக்கு மாந்திரீகத்தால் சில தேவையில்லாத உணவுப் பொருட்கள் கொடுத்து அது உடலில் சேர்ந்து விட்டது அது அவருக்கு பல வகையிலும் துன்பத்தையும் தூக்கமின்மை துர் சொப்பனங்கள் அதாவது கெட்ட கனவுகள் உளர்ச்சோர்வையும் நல் முறையாக பக்தியை செலுத்த முடியாமல் செய்தும் பல கஷ்டங்கள் அந்த பெண்மணிக்கு.. குருநாதர் அகத்திய பெருமான் இதற்கு கூறிய தீர்வு அம்மையே அனுதினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அதாவது ஒரு மாதம் தொடர்ந்து முள்ளங்கி சாற்றினை பருகி வரவேண்டும்!!! இதனால் சில சில பின் எவை என்று அறிய அறிய பிற அழுக்குகளும் கூட பின் உடலில் எதை என்று கூட தானாகவே வெளியேறும் அம்மையே தொடர்ந்து இதை நீ நிச்சயம் பருகி வர வேண்டும் என்பேன்!! உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி அவருடைய இளம் வயது மகனும் இதே உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் இருவரும் உடல் பருமன் உடையவர்கள் குருநாதரிடம் உடன் பருமன் மற்றும் மிக ரத்த அழுத்தத்திலிருந்து (blood pressure)மீண்டு வர இதற்கான தீர்வினை கேட்டபொழுது இதனால்தான் அனைவருக்குமே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் கோபம் கொள்ளாதீர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று... எதை என்று நிச்சயம் கோபத்தையும் கூட நீ கட்டுப்படுத்த வேண்டும் அம்மையே.. அனுதினமும் தியானங்களை மேற்கொள்ள வேண்டும் அம்மையே.. பின் அமைதியாக இரு!! நிச்சயம் தன்னில் கூட. அம்மையே பின் நிச்சயம் நடைபயிற்சியை விட்டு விடாதே!!!! அனைவருக்குமே சொல்கின்றேன் அறிந்தும் கூட இதனால்.. நிச்சயம் அமைதியாக இருங்கள். குருவே கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு வழி தாருங்கள் அம்மையே யான் சொல்லிவிட்டேன் அம்மையே ஏற்கனவே.. இருந்தாலும் அம்மையே கற்களில் மீது நட!! (கூழாங்கல் அதாவது ஆற்று படுகையில் இருக்கும் உருண்டை கற்கள் மீது அனுதினமும் காலில் செருப்பு அணியாமல் 20 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.. இதனைப் பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார்! சிலருக்கு நரம்பு பிரச்சனை உடல் பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் உடல் வலி கால் வலிகளுக்கு குருநாதர் தீர்வாக இதனைப் பற்றி தெரிவித்து இருக்கின்றார் இதனால் ரத்த ஓட்டம் சீராகி உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். தற்போது பூங்காக்களிலும் இதுபோன்று கற்களைக் கொட்டி நடை பயிற்சியை மேற்கொள்கின்றனர்) குருவே உலகத்தில் தற்போதைய காலகட்டத்தில் இன்னும் பல பேர் பிளட் பிரஷர் நோயால் அவதியுறுகின்றனர் அறிந்தும் கூட இதற்கு சிறந்த பின் அதாவது நிச்சயம்... மிதிவண்டி மிதித்தல் நிச்சயம் தன்னில் கூட ஓடுதல்!! நடத்தல்!! குருவே உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து கொள்ளலாமா தாராளமாக செல்லலாம்!! உயிர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு எந்த? மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் குருநாதா!!! அம்மையே நிச்சயம் ஒரு வாரம் என் தொடர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் முள்ளங்கி எனும் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தி வா... சில கழிவுகள் உள்ளே இருக்கின்றது அதை முதலில் வெளியே அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் குருவே முதலில் இதைச் செய்யுங்கள் இதன் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும் என்பேன். குருவே என்னுடைய மகனுக்கு இளம் வயதிலேயே இந்த உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டது இதற்கு தீர்வு வேண்டும் அருளுங்கள்!! (அவருடைய மகன் துரித உணவு எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு கடைகளில் கிடைக்கும் உணவு வகைகளை செயற்கை உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் உடையவர்) அப்பனே நீ உண்ணுவதெல்லாம் நிறுத்த வேண்டும்.. பின் கீரை வகைகளை உட்கொள்ள நன்று!!! அதாவது அப்பனே பொன்னாங்கண்ணி கரிசலாங்கண்ணி காசினிக்கீரை மணத்தக்காளி எனும் மூலிகைகளையும் கூட கொள்ளு எனப்படும் அப்பனே எதையென்று அறிய அறிய யான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன் அப்பனே பல உரைகளிலும் கூட!! பச்சை காய்கறிகளையும் கூட கீரைகளையும் கூட அப்படியே உண்ண வேண்டும் அப்பனே நல்விதமாகவே. இதனால்தான் சொல்கிறேன் அப்பனே சில செயற்கையானதை உணவுகளை விட்டுவிடு அப்பனே!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... அனைத்தும் எண்ணெயில் தான் உள்ளதப்பா!!! அவையெல்லாம் என்பேன் அப்பனே!!! இதற்கு தன் எண்ணையையும் குறைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!(எண்ணெய்களில் பொறித்த வறுத்த உணவுகள் oily foods) சரியாகவே அப்பனே சில காலம்.. பின் அதாவது தேங்காய் எண்ணெய்... அப்பனே சமைத்து உண்ணுதல் அதிசிறப்பு தரும்!! குருவே நாங்கள் தேங்காய் எண்ணெயில் பழக்கம் இல்லை இயற்கையாக ஆட்டி எடுக்கும் கடலை எண்ணெயை பயன்படுத்தலாமா?? அப்பனே இதையும் உட்கொள்ளலாம். குருவே உடல் முழுவதும் சுத்தப்படுத்துவதற்கும் உடலில் உள்ள குறிப்பாக வயிறு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு என்ன செய்வது??? அப்பனே அறிந்தும் கூட ஒன்றைச் சொல்கின்றேன்!!! அதிகாலையிலே எழுந்து முருங்கை இலைகளை கூட கசக்கி அப்பனே அதாவது பின் நல்விதமாகவே அப்பனே நிச்சயம் அப்படியே நிச்சயம் கரைத்து அப்பனே பின் அருந்த நன்று!!! என்பேன் அப்பனே.. இதை நாளை பொழுதிலிருந்தே இவன் செய்ய வேண்டும். (முருங்கை இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து அதை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்) குருவே என்னுடைய மகளுக்கும் தோலில் கைகளில் தோல் உரிதல் அலர்ஜி பிரச்சினை இருக்கின்றது அப்பனே இதற்கும் காரணம் எண்ணைய் தானப்பா!!! உணவில் எண்ணெயை குறைத்துக் கொண்டாலே நோய்கள் வராதப்பா. செயற்கையை நாடி நாடி அனைத்தையும் மனிதர்கள் நோய்களை வரவழைத்து கொள்கின்றார்கள் என்பேன் அப்பனே!! யான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புற்று மண்ணை.. உடம்பில் பின் அதாவது ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள்.. பூசி ஊறவைத்து நிச்சயம் தன்னில்.. கூட... அவை மட்டும் இல்லாமல் வேம்பு (வேப்பிலை அரைத்து உடலில் பூசி) இலைகளையும் கூட பின் நன்முறையாகவே அறிந்தும் கூட அதை தன் கூட ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் பின் உடம்பில் பின் அதாவது.. கசக்கி அதாவது பின் அதாவது ஊறவைத்து நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகளால் ஆன.. பொடிகளை!! (ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு பொடி துளசி பொடி வில்வ பொடி வேப்பிலை பொடி பயத்த மாவு கடலை மாவு பூலாங்கிழங்கு உள்ளிட்ட ஸ்நான பொடி) நீரில் விட்டு நீராடி வந்தாலே நிச்சயம் பின் நீராடி வந்தாலே போதுமானது. பின் இதை ஏற்கனவே உரைத்தேன்... நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல் சூரியன் பின் அதாவது சூரிய வெளிச்சத்தில் நிச்சயம் அதாவது அனுதினமும் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டே வந்தால்.. இதனால் நிச்சயம் தன்னில் கூட மாற்றங்கள் ஏற்படும் என்பேன்... அதிகாலையில் எதை என்று சூரியன் முன்பு நின்றால் அம்மையே!!! சூரியனின் வெளிச்சத்தில் இருந்து வரும் சக்திகள் தோலில் படும் பொழுது அவை மாறும்!! என்பேன்!! அதிகாலையில் சூரியனை பார்த்து நின்று வந்தாலே போதுமானது. அம்மையே அதுமட்டுமில்லாமல் இது அனைத்து நோய்களுக்கும் பின் தீர்வு. சொல்லிவிட்டேன். குருவே!!! என் மகளுக்கு அடிக்கடி கண்திருஷ்டி தோஷம் ஏற்படுகின்றது!! இதற்கு தீர்வினை தாருங்கள்!! யான் ஏற்கனவே அதாவது வெள்ளை பூசணிக்காயை கூட.. நல்விதமாக அதாவது அனுதினமும்... முடியாவிடிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது.. நிச்சயம் தன்னில் கூட பின் இதை தன் அதாவது அதன் சாற்றினை... அதாவது அப்பனே வெள்ளை பூசணி யின் சாற்றை அருந்தி வர சிறப்பு தரும் என்பேன். யான் கூறியதை கடைபிடித்தாலே போதுமானது என்பேன் அப்பனே...குறைகளே வராதப்பா .. நிச்சயம் தன்னில் கூட...... ஆனாலும் யான் சொல்லியதை.. சில விஷயங்களை கூட அதாவது சிலவற்றைக் கூட மறந்து விடுகின்றார்கள் கடைப்பிடிப்பதில்லை அப்பனே.. அதனால்தான் நிச்சயம் நீண்ட வாக்குகள் யான் செப்புவதில்லை அப்பனே... இதனால் இதை செய்திட்டு வந்தால்.. என்னென்ன? ஏது? என்றெல்லாம் பின் யான் செப்பி உயர வைப்பேன் அப்பனே.. ஆசிகள்!! ஆசிகள்! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சித்தன் அருள்.....தொடரும்!