Sunday, May 14, 2023

சித்தன் அருள் - 1333 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! 16/4/20233 அன்று போகர் சித்த முனி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஐயாரப்பர் சன்னதி திருவையாறு. அகிலத்தை ஆளுகின்ற அகிலாண்டேஸ்வரியையும் காத்து ரட்சிக்க கூடிய ஈசனையும் பணிந்து என் செல்ல குழந்தையான முருகனையும் பணிந்து பின் வாக்குகள் ஈகின்றேன் போக முனி!!!!!! அறிந்து அறிந்து அறிந்து எதனையும் என்பதையும் கூட அறியாமலே மனிதன் திரிந்து வாழ்ந்து வருகின்றான்!!!! ஆனால் வாழ்ந்து வருகின்றான் என்ற எண்ணமே!!!!! ஆனாலும் திரிந்து திரிந்து என்ன லாபம்???????? என்ன லாபம் திரிந்தாலும் என்னதான் ஆகின்றது என்பதையும் கூட ஆகாமல் போய்விடுமா என்ன வாழ்க்கை!!!!! வாழ்க்கையின் ரகசியத்தை கூட நிச்சயம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!!!! ஆனாலும் அவ் ரகசியத்தை மனிதன் கடைப்பிடிக்க கடைப்பிடிப்பதாக இல்லை அதனால் இன்னும் வருத்தங்கள் தான் ஆகப் போகின்றது என்பது நிச்சயம்!!!! ஏனென்றால் எதன் எதனையோ பக்திக்குள் நுழைந்து எதை எதையோ செய்து வருகின்றான் இதனால் ஒன்றும் லாபம் இல்லை!!!! லாபம் இல்லை ஆனாலும் இதனையும் அறிந்து கூட ஆனால் வரும் காலங்களில் மனிதன் நிச்சயம் வாழ்ந்து விடலாம் எப்படியாவது என்பதை எல்லாம் பின் மனதில் எண்ணங்கள்!!! ஆனாலும் மிஞ்சப் போவது நிச்சயம் கஷ்டங்களே!!!!!!!!!
21. குருநாதருக்கும் அன்னைக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள். அன்னையின் அம்சமான நதி காவிரியா அல்லது தாமிரபரணியா என கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். குருவே சரணம் அனைத்தும் நானே! 22. அய்யனே! கால நேர பயணம் என்பது சாத்தியமானதா? இக்கலியுகத்தில் அது நடக்கிறதா? நிச்சயம் இல்லை. கோளறு பதிகத்தை படிக்கச்சொல்~! 23. அய்யா! நல்லவர்கள் ஆட்சி செய்த காலங்களில் அனைவரும் ஆனந்தமாக அமைதியாக வாழ்ந்தனர். இன்று, கெட்டவர்கள் ஆட்சியில் மனிதர்கள் இத்தனை சிரமப்படுகின்றனரே! இது மாற வழியிருக்கிறதா? முதலில் தன்னை உணரச்சொல்! அதன் பின்பு இதற்கான பதிலை உரைக்கின்றேன். 24. அய்யா! சித்தன் அருள் வலைப்பூவை வாசிக்கும் பொழுது. ஒரு சிலருக்கு மட்டும், அகத்தியப்பெருமான், அருள்வதையும். உத்தரவு இடுவதையும், காட்சி கொடுப்பதையும் கண்டுள்ளேன். எங்களை போன்ற அடியவர்களுக்கும் அகத்தியப்பெருமானையும், அன்னை லோபாமுத்திரை தாயையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுமா? அனைவருக்கும் உண்டு, எதை என்று அறிய! அறிய! ஆனால், சரியாக அதை பயன்படுத்த தெரியவில்லை. நிச்சயம். 25. அய்யனே! வீடும், உலகமும் நலமாக இருக்கவும் ஆத்ம பலம் பெருகவும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மரங்கள் யாவை. எதை என்றும் அறிய! அறிய! முதலில் துளசி. நிச்சயம் இதை வைத்துக் கொண்டாலே போதுமானது. முதலில் இதை வைக்கச்சொல், பின்பு பார்ப்போம். 26. அய்யா! மனம் மௌனத்தில் நிலைக்க வழி காட்டுங்கள் ஐயனே. அறிந்து அறிந்து, நிச்சயம் இதை பற்றியும் உரைத்துவிட்டேன். அதிகாலையிலேயே 3 மணிக்கு உணர்ந்து எழச்சொல். அறிந்து! அறிந்து! தியானங்கள் செய்யச்சொல். பின் நீராடச்சொல். பின் மத்திய வேளையிலும் நீராடச்சொல். பின் மாலை வேளையிலும் நீராட, நீராட பக்குவங்கள். அதனால், உடம்பிலுள்ள தரித்திரங்கள் நீங்குவதோடு நிச்சயம் நாள் வழி. உடம்பிலுள்ள அழுக்குகள் தங்க தங்க, கேட்ட எண்ணங்கள் எல்லாம் வரும்.இதை நிச்சயம், எதையும் எதிர்பார்க்காமலேயே , விஞ்சானப்பூர்வாமாக எடுத்துரைப்பேன், நிச்சயம் பொறுத்திருந்தால். 27. ஓம் அகத்தீசாய நம. வெளி நாட்டில் வாழும் எங்களை போன்றோரும் ஜீவ வாக்கு முதலிய அகத்தியர் அப்பாவின் நேரடி வழிகாட்டுதலை பெற அகத்திய பெருமான் மனமிரங்கி அருள் செய்ய வேண்டும். நிச்சயம் உண்டு. எவை என்று அறிய, அறிய! எதை என்று உணர, உணர! இப்பொழுது இதோ இருக்கின்றதே! அதை எடுத்துப் போகச்சொல்! 28. அய்யனே! எல்லோரும் விரும்பும் ஒரு மனிதனாக இருக்க இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? எதுவும் செய்யத் தேவை இல்லை. இறைவனை வணங்கி வந்தாலே, அறிந்து அறிந்து செய்வான். அது மட்டும் இல்லாமல், மௌனத்தை, நாவடக்கத்தை, கோபத்தை, காமத்தை நிச்சயம் பொறுத்தருள நன்று. ஆனாலும் இதனை கூட, இவ்வுலகத்தில் கடமையை செய்யாமல் ஒழிந்து விடுகின்றார்கள். ஏன்! எதனால் என்றெல்லாம் நேரில் கண்டு உரைக்கின்றேன். 29. அய்யனே! இக்கலியுகத்தில், ,முக்தி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்யத் தேவை இல்லை. யாங்கள்தான் தேர்ந்தெடுத்து முக்தியை அருள வேண்டும். நீங்கள் விரும்பியதெல்லாம் கொடுத்துவிட்டால், மனிதன் தான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான். அதனால் தான், பொறுத்திரு! பொறுத்திரு என்றெல்லாம் கூறுகிறோம். அதனால் மனிதனின் ஆட்டங்கள், பின் நினைப்பு வீணாம். இறைவன் நினைப்பு, பலமாம். 30. அப்பா! தங்கள் தரிசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? எதுவும் செய்ய தேவை இல்லை! அன்புதான் மூல காரணம்! அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்! நிச்சயம் யானே வருவேன், தேடி! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்! சித்தன் அருள்..... தொடரும்!