Wednesday, October 30, 2024

சத்குரு நாதா சண்முக நாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம ❤️❤️❤️

பிரம்ம முகூர்த்த ரகசியம்

(பிரம்ம முகூர்த்தம் என்பது நாம் இரவை சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான காலமாகக் கருதினால், இரவின் கடைசி காலாண்டு பிரம்ம முஹூர்த்த நேரமாகும் - அதிகாலை 3:30 முதல் 5:30 அல்லது 6:00 வரை, அல்லது எந்த நேரமாக இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன்பாக மிச்சம் இருக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும்.... இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் சந்திரனிலிருந்து சூரியனை நோக்கி கிளம்பிச் செல்லும் ஒளி ஆனது செல்லும்பொழுது மீதி உள்ள கிரகங்களின் தாக்கத்தை வலுவிழக்க செய்து விடும். அந்த நேரத்தில் கிரகங்களின் பாதிப்புகள் ஏற்படுவதில்லை அதனால் தான் அந்த நேரத்தில் இறைவனுக்கு பூஜை செய்து வேண்டிக் கொள்வது தியானம் செய்வது!! யோகாசனம் உடற்பயிற்சிகள் செய்வது பிராணாயாமம் செய்வது பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது அதாவது மாணவர்கள் கல்வி படிக்கும்பொழுது மனப்பாடம் எளிதில் ஆகிவிடும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இப்படியே செய்து கொண்டு வரும் பொழுது எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்துவிட முடியும்)