Monday, August 3, 2020

சிவசக்தி ரூபம்                                                                  சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை இவை இரண்டும் இல்லை என்றால் இவ்வுலகில் யாரும் இல்லை    ஓம் அகத்தீசாய நம .

அகத்தியன் அறிவுறை


மோட்சமது பெறுவதற்கு சூட்சஞ் சொன்னேன்
மோகமுடன், பொய் களவு கொலை செய்யாதே
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு; காசினியிற்
புண்ணியத்தைக் கருத்திக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே; பாழ்போகாதே - பலவேத சாஸ்திரமும் பாருபாரு
ஏச்சலில்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம் 
என் மக்கா ளெண்ணி யெண்ணிப்பாரீர் நீரே!
பொருள்:-
மோட்சம் என்கிற விடுதலை பெறக்கூடிய வழியை சொல்கிறேன். ஆசை, களவு, கொலை செய்யாதீர்கள். கோபத்தை தள்ளி விடுங்கள். உலகத்தில் புண்ணியத்தை, நல்வினையை எண்ணி செயல்படுங்கள். பாபங்கள் - தீய செயல்களை செய்யாதே, என்று பல சாஸ்திரங்கள் கூறுவதைப் பாருங்கள். பழிச்சொல் இல்லாதவர்கள் வழியை எண்ணிப்பாருங்கள். நல்லோர் வழியில் செல்லுங்கள்.

அகத்தியரின் அருள் வாக்கு:-

மனிதனாக பிறந்தவன், இறைவனே இறங்கி வந்து தவறு செய்யச் சொல்லினும், திடமான மனதுடன் மறுத்து, அதர்ம வழியில் நான் செல்ல மாட்டேன் என்ற எண்ணத்தில், அவ்விடத்தை விட்டு விலகி விடவேண்டும், அதர்மத்துக்கு துணை போகக்கூடாது, செய்யக்கூடாது. குறிப்பாக எம் சேய்களுக்கு ஆன அறிவுரை இது என்று உரைத்துள்ளார், முன்னரே.
  
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஏன் குருநாதரின் இந்த பாடலும், விளக்கமும், அருள் வாக்கும் இப்போது இங்கு தொகுக்கப்படுகிறது என பலரும் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள்.

நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு, காரியமும் உண்டு. இது முன் செய்த வினை. யாரோ ஒருவர் இறையை பழிப்பதால், இறைக்கு அவதூறு சேர்வதில்லை. அந்த பழிப்பை மனதுள் இருத்தி, இறையை குருநாதரை வணங்க வேண்டிய நல்லநேரத்தை, நாம் அவர்களுக்காக விரயம் செய்யக்கூடாது/செலவிடக்கூடாது. இதை விட்டு விலகி மனதளவில் விருப்பு வெறுப்பு இன்றி, வெகு தூரம் சென்று விடவேண்டும். அதுவே நம் உயர்விற்கு, வழிவகுக்கும்.

இன்று இருக்கும் நிலை ஏன் என்று நந்தீசர் நாடியில் உரைத்தார். இறை சுத்தம் செய்ய இறங்கி வரும் பொழுது, அவருக்கு வேலை மிகவே எளிதாகும். சரியான காரணமும் அமைந்துவிடும்.

நாம் காரணமாகவோ, எதிர்காரணமாகவோ இருக்க வேண்டாம் என்பதே, சித்தன் வாக்கு!

சித்த மார்கத்தின் எளிய அறிவுரை:-

இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும். தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

Sunday, August 2, 2020

 அனைவருக்கும் அடியேனின் காலை வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடியேன் பதிவை தொடர்கிறேன் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது .ஓம் அகத்தீசாய நம.